Sunday, January 01, 2017

ஒரு ஸ்ட்ரா, , ஒரு எக்ஸ்ட்ரா,சசிகலா ஆர்க்கெஸ்ட்ரா

ம ந கூ போணி ஆகாது' என, கடந்த சட்டசபை தேர்தலின் போதே, நான் கூறியிருந்தேன்-டி.ராஜேந்தர் # இதுக்கு எதுக்கு ஜோசியம்?எல்லாருக்கும் தெரிஞ்ச ஹாஸ்யம்


===================2  நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கறுப்புப்பணம் ரூ.4732 கோடி பறிமுதல்# சட்டு புட்டுனு மாட்ன ஆளுங்க எல்லாம் 500 ரூ அபராதம் கட்டிடுங்கi
==================3 ஜெ மரணத்தில் மர்மம் உள்ளது - உயர் நீதி மன்ற நீதிபதி # லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டான சந்தேகம்=================
4 ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்துப்போட்ட ஸ்டாலின் இப்போ ஆதரவாப்பேசுவது வெட்கமாக இல்லையா?- விஜயகாந்த் # மீத்தேன் ல கூட அப்டிதான்
==================5 ஜெ மரணத்தில் , சிகிச்சையில் மத்திய அரசு மவுனம் காத்தது ஏன்? நீதிபதி வைத்தியநாதன் கேள்வி # மோடி இந்த விஷயத்தில் மட்டும் மன்மோகன்சிங் ஆகிட்டாரு====================6 அதிமுக பொது செ.பதவிக்கு போட்டியிட யாரும் வரவில்லை

-பொன்னையன் # அப்டி யாரும் வந்துடக்கூடாதுன்னுதானே புஷ்பா புருசனுக்கு படையல் போட்டீங்க


========================

7 சினிமாவில் இருந்து தலைவர்கள் தோன்றுவது இனி குறைந்து விடும். -தமிழிசை # ரஜினி, விஜய்காந்த்,விஜய்னு பல பக்கம் வலை வீசி பலிக்கலை, ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதை


================

 அ.தி.மு.க., அமைச்சர்களில் சிலர், முதல்வரை  மாற்ற வேண்டும் என, பேசி வருகின்றனர்- விஜயதாரணி #எல்லாம் சின்னம்மா சில்மிஷமாத்தான் இருக்கும்=================

 இனி வரும் காலங்களில், அரசியல் களத்தில், லட்சிய தி.மு.க., தீவிரமாக செயல்படும். -டி.ராஜேந்தர் # அரசியலில் ஈடுபடுவது மடமையடான்னு நீங்களே ஒரு டைம் சொன்னீங்க


====================

10 பா.ஜ., அடுத்தவர்களின் பலவீனத்தில் வளரக்கூடிய கட்சி அல்ல-இல.கணேசன்  # எதிரியின் பலவீனம் நம்ம பலம், நம்ம பலம் தான் எதிரியின் பலவீனம் ஃபார்முலா


=====================


11 நிரந்தர பொதுசெயலாளர்னு ஜெயலலிதாவை அன்பினால்பால் மட்டுமே அழைத்தோம் - பொன்னையன் # தனக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சா மட்டும்தான் பச்சோந்தி நிறம் மாறும், மனுசனுக்கு பதவி


====================
12 2 வாரங்களில் கைரேகையில் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் -மோடி # இனி திருடன் நம்ம கட்டை விரலை கட் பண்ணிட்டுப்போய்டுவானோ?

=

===============


13 ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை வழங்க முடியாது: இஸ்லாமியஅமைப்புஅதிரடி ஆக அனுமதி கிடையாதுன்னு பெண்கள் சொல்லிட்டா?


================14 வேட்பாளர்களை மாற்ற முலாயம்சிங் மறுப்பு சமாஜ்வாடி கட்சியில் தந்தை-மகன் இடையே மோதல் முற்றுகிறது # ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி மட்டும்னு சொல்லிடனும், ஆடிப்போய்டுவாங்க பலர்


==============15

15 கட்சி பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், அக்கா உயிரோடு இருந்தப்போதே பதவி பெற்றிருக்க முடியும் சசிகலா கூறியதாக அப்சரா ரெட்டி #ஏன்?எதையும் அவரு நேரடியா சொல்லவே மாட்டாரா?


=======================

16  சின்னம்மா குரல் இனிமையானது - # அப்போ ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்கலாமே, ?அரசியலுக்கு ஏன் வரனும்?


==========================

17 ஜெ. மரணத்தில் உங்கள் பதில் வேண்டும்! முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின் # சசிகலா கிட்டே கேட்டு என்ன சொல்லச்சொல்லுதோ சொல்வாரு

==================

18  முதல்வர் அகிலேஷ் யாதவ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் # அழகிரி, அகிலேஷ்னு 2ம் அ வில் ஆரம்பிக்குதே

==============

19 தற்போதைய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -ராமதாஸ் # பாஜக வுக்குப்போட்டியா?"வெற்றி"இடம் பிடிக்க வெற்றிடம் நிரப்புக?

=============

20 ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம்களில் இனி ரூ.4,500 எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு இருக்கே?என் அக்கவுண்ட்ல 500 ரூதானே இருக்கு?

============

0 comments: