Monday, January 02, 2017

ஏழரை சனியை விட அபாயகரமான கிரகம் எது?

ஜெ நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி # நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.சரண்யா ரேஞ்ச்க்கு பர்பார்மென்ஸ்

==============

2 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை கேலி செய்தால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை # ஜனவரி 2ந்தேதி கேலி பண்ணா விட்டுடுவீங்க்ளா எஜமான்?

==========

3 மணப்புரம் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.8 கோடி தங்க நகை கொள்ளை # ஹால் மார்க் எல்லாம் செக் பண்ணி செலக்டிவா கொள்ளை அடிச்சாங்களாமே?

============

4 தமிழகத்தின் தற்போதைய அவல நிலைக்கு, தி.மு.க., -- அ.தி.மு.க.,வே காரணம்-அன்புமணி:  # அந்த 2 கட்சி கூடவும் கூட்டணி வைக்கும்போது அந்த மேட்டர் தெரியலையா?


==================

5  எங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை முன்னேற்றிக் காட்டுகிறோம்-அன்புமணி #தமிழனின் தாரக மந்திரம், ஆனா திமுக மடம், ஆகாட்டி அதிமுக மடம்,புதுசா எதுக்கு ஒரு தடம்?


=======================

பெரம்பலூரில் சசிகலா கொடும்பாவி எரிப்பு- அதிமுக கிளை கழகங்கள் கலைப்பு # அபாரம்.சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடும் ரோஷமுள்ள ஆளுக போல


=============7 கையெழுத்துடன் கட்சிப் பணியை தொடங்கினார் வி.கே.சசிகலா! கே க்கு ஜனங்க ஓ கே சொல்வாங்களா?அங்கதான் ட்விஸ்ட்டே===============8 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சித் தொடரும்-வி.கே.சசிகலா # ஏழரை சனியை விட அபாயகரமான கிரகம் போல=============9 நாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளது" -மோடி#சந்தைல வித்தை காட்றவன் கடைசி வரை பாம்பையும் கீரியையும் மோத விடவே மாட்டான்.=============10 இன்று விமர்சிப்போரையும் நாளை பின்தொடர வைப்போம்:் சசிகலா உறுதி # மிரட்டல் தொனி தெரியுது
=================11 ஜெ. திடீர் மரணம் பேரிடி-சசிகலா போய் துக்கத்தில் இருப்பவன் மினிமம் 3 மாசமாவது சோகமா இருப்பான்.பதவிக்கு அலைய மாட்டான்==============12 தமிழகத்தை ஆள்வது நம் இலக்கல்ல: அன்புமணி ராமதாஸ் விளக்கம் அரசியல்வாதிகளின் சிறப்புத்தகுதி.அதுக்கு இவரும் விதிவிலக்கல்ல=================13 பாஜக-வுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கக் கூடாது: மம்தா # அப்டி 1 வாக்கு கிடைச்ட்டா மேடம் தன் சொத்தை ஏழைக்கு எழுதி வைப்பார்
=================14 தமிழகத்தில் சாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா கூறியதை வரவேற்கிறோம்:திருமா பாருங்கண்ணே ,பர்பி பர்பி


==============

15 ம ந கூ போணி ஆகாது' என, கடந்த சட்டசபை தேர்தலின் போதே, நான் கூறியிருந்தேன்- டிஆர் # அப்டி யே நம்ம லதிமுக வுக்கும் கிளி கிட்டே எதிர்கால பலன் கேட்டு சொல்லவும்

=============

16 நீதிபதியின் கருத்து ஜெ வின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது: வைகோ # குற்றம் நடந்தது என்ன? புரோக்ராம்ல காமெடி தர்பார் க்ராஸ் ஆகுதே

================

17 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தது ஏன்?: திருமாவளவன் பேட்டி # டெய்லி 4 வீடு பிச்சை எடுத்தாத்தானே பொழைப்பு ஓடும்

=============

18 சீனாவில் சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்த 2 டாக்டர்கள்- 14 பேருக்கு ஜெயில் # அப்போலோ டாக்டர்ஸ்க்கு கதி கலங்கி இருக்குமே?

============

19 சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு: தகவல் # ஜட்ஜுக்கே தெரியாத தகவல் எல்லாம் இவருக்கு தெரியுது

=============

20 சசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா?பரபரப்பு #கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்காம இருந்தா சரி

===============

0 comments: