Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

Tuesday, March 05, 2013

ஹெலிகாப்டர் ஊழல் -இத்தாலி -அதிரடி ( A TO Z SECRETS)


டெல்லி டு இத்தாலி!

கிலி கிளப்பும் ஹெலிகாப்டர் ஊழல்


இந்திய அரசியல் வரலாற்றில் பல புகழ்​பெற்ற ஊழல்கள் பூதாகரமாகத் தோன்றி சாதாரணமாக மறைந்துள்ளன. அதிலும் ராணுவ ஊழல்கள் சுதந்திரம் அடைந்த மறு வருடத்திலேயே தொடங்கியது. கிருஷ்ணன் மேனன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கிய ஜீப் ஊழல் முதல், இப்போதைய ஹெலிகாப்டர் விவகாரம் வரை பட்டியலில் உண்டு. எல்லா ஊழல்களுமே மர்ம​மாகவே முடித்துவைக்கப்பட்டன. இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஹெலிகாப்டர் விவகாரமும் இந்த ரகம்தான்.  


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தூக்கப்போகும் இந்த ஹெலிகாப்டர் ஆயுத விவாதத்தில், பல திருப்புமுனைகள் வர உள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான அதிரடிகள் இதோ...


பூனைக்குட்டி வெளியே வந்தது எப்படி? 


1999-ல் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பைக் கருதி புதிய ஹெலிகாப்டர்களை வாங்க அன்றைய பி.ஜே.பி. அரசு முடிவுசெய்தது. மூன்று ஹெலிகாப்டர்கள் வாங்குவதாக ஆரம்பித்து, பின்னர் எட்டு ஹெலிகாப்டர்களாகி, இறுதியில் 12 வாங்க முடிவு எடுத்து டெண்டர் விடப்பட்டது. இந்த விவகாரம்தான் இப்போது வெடிக்கிறது.51 மில்லியன் யூரோ ஊழல் தொகையாக இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்​பட்டுள்ளது என்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இத்தாலி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய ரூபாய் கணக்கில் 362 கோடி. 2010-ல் முடிவு செய்யப்பட்ட இந்த 12 ஹெலிகாப்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 3,546 கோடி ரூபாய். இதில் 10 சதவிகிதம் கமிஷன் என பேரம் நடந்துள்ளது என்று இத்தாலி அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல்செய்தது.  அந்த ஹெலிகாப்டர் நிறுவனத் தலைமை அதிகாரி கியூசெப் ஒர்சி என்பவர் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்திய ராணுவத்தின் டெண்டரில் கொடுக்கப்பட்ட லஞ்ச விவகாரம் இத்தாலியில் வெடித்தது அதிர்ச்சியை பன்மடங்காக உயர்த்தியது.  2011-ல் இத்தாலியில் பிரதமராக இருந்தவர் சில்வோ ப்ரூல்ஷ்கானி. அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள், செக்ஸ் ஊழல்கள் எல்லாம் சுமத்தப்​படவே, பதவி விலக நேர்ந்தது. அவருக்கு அடுத்துப் பதவி ஏற்றவர் மரியோ மோன்ட்டி. பதவி விலகிய ப்ரூல்ஷ்கானி தன் மீது உள்ள செக்ஸ் வழக்குகள் போன்றவற்றையும் தாண்டி, மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்கினார். 


76 வயதைக் கடந்த ப்ரூல்ஷ்கானி மூன்று தடவை பிரதமராக இருந்தவர். இப்போது மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க, இவருடைய அரசியலுக்கு வைக்கப்பட்ட குறிதான் இந்த ஹெலிகாப்டர் விவகாரம். இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் அரசியல் ஆக்ஷன் இல்லை என்றால், இந்தியர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் பேரம் தெரியவே வாய்ப்பு இல்லை.  இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை சப்ளை செய்த நிறுவனத்தின் பெயர் ஃபின் மெக்கனிகா. இது தனியார் நிறுவனம் என்றாலும், இதில் 30 சதவிகிதம் இத்தாலி அரசின் பங்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை விற்பதில் ப்ரூல்ஷ்கானி செலுத்திய ஆர்வமும் இதில் நடந்த பேரங்கள் குறித்த தகவல்களும் பிரதமர் மரியோ மோன்டியால் கிளறப்படுகின்றன.


இத்தாலி தேர்தல்... இந்தியா ஆர்வம்! ''இத்தாலியின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்... மோசமான நிர்வாகமும் இத்தாலி நிறுவ​னங்களின் பணம் வெளிநாடுகளுக்குத் தவறான வழியில் போவதும்தான்'' என்று கூறி இந்த நடவடிக்கைகளுக்கு மரியோ மோன்ட்டி விளக்கம் சொன்னார்.இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் பதவிக்​காலம் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. 24, 25-ம் தேதிகளில் இத்தாலியில் தேர்தல் நடந்து முடிந்தது. யார் பிரதமராக வருகிறார்களோ அவர்களைப் பொறுத்தே ஹெலிகாப்டர் பேர விவகாரத்தின் தலைவிதி உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகளை இத்தாலி அரசியல்வாதிகள் மட்டுமன்றி, இந்திய அரசியல்வாதிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கடந்த 2012 பிப்ரவரியிலேயே இந்த பேரம் குறித்த தகவல் வெளியாகியும் இந்திய ராணுவ அமைச்சகம் மட்டுமல்ல... எதிர்க் கட்சிகளும் தூங்கிக்கொண்டு இருந்ததுதான் வேதனை.  இந்தியாவும் இத்தாலியும் 


இப்போதைய பிரதமர் மரியோ மோன்ட்டி தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்கிற நோக்கத்​தோடு தொடங்கியதுதான் ஃபின் மெக்கனிகா ஆபரேஷன். ஆனாலும், அவரது ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை சில கட்சிகள் வாபஸ்பெற, கடந்த டிசம்பர் மாதம் மெஜாரிட்டி பலத்தை இழந்தார்.


 மோன்ட்டிக்கு முன்பு பிரதமராக இருந்த சில்வியோ ப்ரூல்ஷ்கானி கூட்டணியில் ஏழுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் நார்த் லீக் என்கிற கட்சியைச் சேர்ந்த லிகா நோர்ட் போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் ஊழல் நடைபெற்றுள்ள இந்த ஃபின் மெக்கனிகாவின் தலைமைப் பொறுப்​பில் இருந்தனர்.


 இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இங்கிலாந்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கீழ்தான் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது கைதாகி இருக்கும் ஃபின் மெக்கனிகாவின் தலைவரான கியூசெப் ஓர்சி, முன்னாள் பிரதமர் ப்ரூல்ஷ்கானிக்கும் லிகா நோர்ட்டுக்கும் வேண்டப்பட்டவர். ஓர்சி லண்டனில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டில் முன்பு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த சமயத்தில்தான் இந்த ஹெலிகாப்டர் டெண்டரும் பேரங்களும் நடந்​திருந்தன. அந்தப் பணத்தைக் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.


முன்னாள் பிரதமர் சில்வோ ப்ரூல்ஷ்கானி ''லஞ்சம் கொடுப்பது இந்தியாவில் வேண்டு​மானால், அது சட்ட விரோதமாக இருக்கலாம். இத்தாலிய நிறுவனங்களில் இதுபோன்ற ஊழல்​களுக்காக டெண்டர்களை ஆய்வுசெய்தால், அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும்'' என ஒரே போடாகப் போட்டு இருக்கிறார்.இன்ஃபார்மர் 


2011-ல் இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடங்கியது. இதில் வந்த முதல் இன்ஃபார்மர் இந்த நிறுவனத்தின் வெளி விவகாரங்களுக்கான முன்னாள் தலைமை அதிகாரி லோரென்சோ போர்கோனி. இவர்தான் முதன் முதலில் டெண்டர்களைப் பெறக் கொடுக்கப்பட்ட கையூட்டு விவகாரங்களை வெளிப்படுத்தினார். பின்னர் இத்தாலிய அரசு வழக்கறிஞர்களிடம் வாக்கு​மூலமாகவே கொடுத்தார்.


 இதில் இந்தியா சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் விவகாரத்தில் 51 மில்லியன் யூரோ வரை கையூட்டு கொடுக்கப்​பட்டது உட்பட பல விவகாரங்களைப் புலனாய்வுத் துறையிடம் கொட்டினார். மற்ற விவகாரங்​களும் ஒவ்வொன்றாகக் குவிந்தன. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் ரால்ப் கைடோ ஹேஸ்செக், கார்லோ ஹெரோஸா, கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் இந்தியாவில் பலன் அடைந்த ராணுவத் தளபதி தியாகி ஆகியோரின் பெயர்களை சொல்ல விசாரணை சூடுபிடித்தது. இதில் ஹேஸ்செக் மற்றும் கிறிஸ்டியன் மிஷெல் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் ரகசியப் பதிவுகள் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்து இத்தாலி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டே ஒப்படைக்கப்​பட்டன.


முதல் பலி 


இப்படி தொடங்கிய இந்த விசாரணையில் ஃபின் மெக்கனிகா நிறுவனத்தின் லண்டன் பிரிவான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்​தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பலோ பஸ்காரி என்பவர்தான் முதன் முதலில் சிக்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் கைது​செய்யப்பட்டார். பிரேசில் மற்றும் பனாமா நாட்​டுக்கு முறையே ராணுவப் படகு மற்றும் ஹெலிகாப்டர் விற்ற விவகாரத்தில் நடந்த கையாடலில்தான் இவர் பிடிபட்டார். இந்தக் கைதுக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஹெலி​காப்டர் ஊழல்களும் தப்பாது என்று தெரிய... நம்ம புள்ளிகளின் வயிற்றையும் கலக்​கியது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஊழல் விசாரணை தொடங்கியதுபற்றி தகவல் வந்தாலும், 'தவறு எதுவும் நடக்கவில்லை என்று ஃபின் மெக்கனிகா நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது’ என்றது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். தொடர்ந்து செய்திகள் வரவே, பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரலில் இத்தாலியில் இந்திய தூதரகத்துக்குக் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்டதே தவிர, விசாரணையில் இறங்கவில்லை. இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் ஆர்டர்களைப் பெற, 362 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வந்துவிட்டது. இத்தாலியின் புலனாய்வு அமைப்பினர் 568 பக்க அறிக்கையை நீதிமன்றத்திலும் தாக்கல்செய்தனர்.லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி இத்தாலி அரசியல்​வாதிகளுக்குச் சென்றது என்றும், மற்றொரு பகுதி இந்தியாவுக்கு வந்தது என்பதும் குற்றச்சாட்டு. பணம் எந்த வழியாக எங்கே போனது என்பதைப் பார்த்துவிட்டு, ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் நடந்த அரசியல் கணக்குக்கு வருவோம்.


அது அடுத்த இதழில்...- சரோஜ் கண்பத்

READER VIEWS


1. பாவம் இப்போது வெளியே வந்தது பூனை குட்டிதான்....ஆம்..அதிலும் 51 மில்லியன் யூரோ....அதில் கமிஷன் தொகை 8 சதவீதம் ம்ம்ம்ம்ம் சும்மார் 280 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்)....

இது வெளி வந்ததில் மிகப்பெரிய பங்கு ரஷ்ய உளவு நிறுவனத்தின் பங்கு அதிகம்....காரணம்.... மிஸ்டர் தியாகி தனது உறவினர்கள் வழியே.....ரஷ்ய மாடல்களை குறித்து அதில் உள்ளவாறு மாற்றங்களை செய்ய சொன்னதுதான்....அவர்கள் பேசியதை பின்மெக்கானிக்கா டேப் செய்தது "லீக்" ஆனதுதான் விபரம் விவகாரமாகிவிட்டது...

அது கிடக்கட்டும்.... சமீபத்திய இங்கிலாந்து பிரதமர் தீடீர் விஜயம்??....

அடுத்து வர இருக்கும் " யானை உழல் " ஆம்..... 126 போர் விமானம் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது..... 2013-ல் இருந்து 1216 - க்குள்.... 2 பில்லியன் டாலர் மதிப்பிலானது.....

அதிலும் ??!!! ஒரு 8 சதவீதம் என்றால் கணக்கிட்டு கொள்ளுங்கள்.....2.பிஜேபி என்ன அடக்கி வாசிக்கிறதுன்னு சொல்லுங்க. அவர்கள்தான் தீவிர விசாரணை வேணும்னு சொல்கிறார்கள். காங்கிரசு போலியாக நாடாளுமன்ற விசாரணை போதும்னு சொல்கிறது. ஏன்னா அவங்க அதில் மெஜாரிட்டி. அப்பத்தான் விசாரணையை அமுக்க முடியும். ஹெலிகாப்டர் வாங்க முடிவு எடுத்தது மட்டும்தான் பிஜேபி. அதில் திருத்தங்கள் செய்தத்து காங்கிரஸ் அரசு. அமெரிக்க நிறுவனத்தை நிராகரித்து இத்தாலிய நிறுவனத்துக்கு கொடுத்தது காங்கிரஸ். ஆதாரம் இல்லாமல் எதையாவது பேசாதீர்கள்.

3. இந்த டெண்டர் குறித்த பேச்சுவார்த்தையின் போதும் ஆர்டர் கொடுத்த போதும் பணம் வாங்கிய போதும் பி.ஜே.பி.ஆட்சியில் இல்லையே, அவர்கள் எதற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்ன சொன்னாலும் காங்கிரஸின் உதவியால் வாழும் மைனாரிட்டிகள் மாறப் போவதில்லை. 

THANX - JU VI 

Tuesday, December 25, 2012

டெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தலைநகரில் பர பரப்பு

டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் - போலீஸ் இடையே மோதல்!
Posted Date : 16:03 (25/12/2012)Last updated : 16:06 (25/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,  காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா  சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.

அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3  அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில்  அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு  வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை  மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார்  கூறியிருந்தார். 
இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்  இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்  ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம்  பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.


டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்  கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை  வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா  தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என கோரியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி  தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை  போலீஸ் அதிகாரிகள்  மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே  ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


thanx - vikatan

டெல்லி கேங்க் ரேப்டு பெண்ணின் தம்பி பர பரப்பு பேட்டி - மீடியாக்கள் தொல்லை ஓவர்

“When a movement is happening, it is sometimes hard to know you are at the epicentre,” says the younger brother of the Delhi bus gangrape victim who continues to battle for her life. Ironically, the 19-year-old adds, nobody lets you forget it either — not the protesters, not the eager internet rumour-mongers, not the politicians, not the police and certainly not the media. In the midst of all, their only concern is a woman who only partly knows the extent of her injuries but senses the worst as the buzz around her grows. 


It’s been a week since the family has been at the bedside of the woman at Safdarjung Hospital. Since then, from the floor of Parliament to the doors of Rashtrapati Bhavan, the story of their tragedy is the only thing they have been hearing. 


“It is like the life we had a week ago never existed. Every day is now passing by in a flash. When I switch on the TV or log on to a social networking site, I see these emotional outbursts about Damini, Amanat, Nirbhaya (the names some media organisations have given the victim). It’s hard to digest that this is my sister they are talking about,” says the brother. 


The first time he saw a pseudonym flashing on TV, he says he raised the issue with doctors and some police personnel. “I thought the channel in question had got my sister’s name wrong, because they said ‘Damini’s condition is deteriorating’ — they addressed her like that. I was reassured from the first day that our names, my sister’s name would not come out. I was furious,” he says. 


He has since learnt the ropes, even the terms for it. “Somebody explained to me it is a phenomenon known as personification. I don’t like it, but they say she is the face of a movement,” he says. However, the Net barrage was something he couldn’t take — he has blocked his Facebook account. 


“Every two hours, there is a new rumour. On social networks, celebrities and many friends flash her obituaries every night. For them it is just an online status they correct in two hours. At the same time, media channels say she has had a two-hour conversation, she has walked, she has smiled, she has hugged UPA chairperson Sonia Gandhi,” he says. 


Last Friday, he saw claims on a TV channel of his sister having “taken a few steps, with brother’s help”, and “walking for the first time after the incident”. She was actually vomiting and complaining of a new abdominal pain that day. “That night, my mother and sister hardly slept. It was a long and bad night for us, and TV channels were flashing that she was on her feet. I was tired and angry,” he recounts. On Sunday, as the protests over the rape turned violent in Delhi, the family faced another pressure. Even as the victim went through one more operation, her brother says the police approached them. “They told us more than 80 people had been injured, that people were getting violent in my sister’s name. They wanted us to make an appeal for peace. We wanted the movement to continue, but we did not want violence,” her brother says. 


Towards the evening, when she was brought back to the ICU after her surgery, her father finally conceded to the demand. The father’s appeal to “Please help the police in maintaining law and order. Pray for my daughter, vandalism can serve no purpose”, rang out through media channels late on Sunday night. 


A day later, the father does not want to interact with the media, despite repeated requests. “My father is scared that a wrong message has gone out. It seems like we don’t want the protests. We are suffering so much, why should we be against the movement? Now, he has decided against speaking to the media. There were more requests from the police, but we told them we don’t want to risk it again,” the brother says. The flood of relatives and neighbours has not made things smooth either. “People want to know what she said, what she wrote in notes, how long she had known her male friend, who was accompanying her. Relatives want us to ask doctors if she will be able to get married and have children. My parents have become tired of answering questions,” he says. 


Politicians have gone so far as to seek a meeting with the girl. “There is a risk of infection, we have said that repeatedly. But the requests continue to pour,” a senior administrative official at Safdarjung Hospital said. 


While some politicians paid solitary visits, others have been calling the family and landing at the hospital every day. “They are protesting outside the hospital, calling us at odd hours, telling us they will pay us for her medical treatment. Each one speaks to the doctor, gets a new update, and calls us. While we appreciate the support, it gets scary sometimes,” the brother says. 


Meanwhile, the family’s efforts are concentrated on keeping the victim as guarded from the hue and cry as possible. While she wants the accused to be hanged, the brother says, she is also scared.
“She does not know her intestines have been removed. She doesn’t even know the extent of the public outcry,” says the brother. “Even when her friends or relatives come to visit, she asks us how much they know. When she hears of politicians coming, she gets scared. She keeps asking my mother if she has told anyone what happened.”


நன்றி -  இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெல்லி அரசு செய்த 6 தவறுகள்

Delhi gangrape protests: The six mistakes of the government

The anti-rape protesters were lathicharged on Sunday as some sections of the crowd turned violent at India Gate. However, those beaten and injured also included women protesters. They complained that there were no warning and the police simply went on to lathicharge protesters. The police also used water cannons and tear gas shells to disperse the protesters. The question is as to where did the government go wrong. Following are the six mistakes of the government while handling the protests:

 
1. Totally misread how widespread anger against quality of policing was fuelling protests 


2. Total absence of quick demonstrative action, except for issuing standard statements 3. The Home Ministry publicly praising the Delhi Police, even as massive protests were on 4. The absence of an acceptable, credible leader who could engage with protesters at India Gate 


5. Lack of uniform, cohesive approach to handling young protesters 6. Using force on peaceful women, youth on Saturday, fuelling more protests on Sunday  நன்றி - IBN LIVE

 


Saturday, December 22, 2012

டெல்லி - குற்றம் நடந்தது என்ன? - மக்கள் கருத்து

ல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து...  ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. 'குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன! 


தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர். உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், 'இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, 'நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் 'நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்து​வ​மனையில் உயிருக்குப் போராடிக்​கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்​டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக் கிறது.
இதுதொடர்பாக  வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ்,  அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இரு​வரைத் தேடி​ வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 'யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்​களை​யும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷ§டன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ''அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை'' எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.


இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ''மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?'' என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ''கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்'' என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.

எங்கே போகிறது இந்தியா... அதுவும் தலைநகர்?

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்


நன்றி - ஜூ வி 
 மக்கள் கருத்து 
1. எல்லாம் சரி.இரவில்,அதுவும் நண்பருடன் அந்தப்பெண் ஏன் திரைப் படத்திற்கு செல்லவேன்டும்? குற்றவாளிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குற்றச்செயலில் ஈடுபட ஏன் வாய்ப்பு தர வேண்டும்? இதை யாருமே பேசமாட்டீர்களா?2. இது பிரச்சனை ஒன்று மட்டுமே இந்தியாவின் தலையாய பிரச்சனை அல்ல என்று மார்க்கண்டேய கட்ஜீ கூறி இருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சனை அவருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால்..... நெறியாளர் இதை வெளியிடுவார் என நம்புகிறேன்.3. உணர்ச்சி வசப்படாமல் நடந்ததை திரும்பி பார்க்கவேண்டும்.

1. அது ரெகுலர் பஸ் கிடையாது.

2. அந்த பஸ்ஸில் ரூட் நம்பர் இல்லை. செல்லும் இடமும் போடவில்லை.

3. அதை ஓட்டியவர்கள் சீருடை அணியவில்லை.

4. வண்டியில் வேறு பயணிகள் இல்லை.

5. வண்டியில் விதிகளுக்கு புறம்பாக கருப்பு கண்ணாடி ஓட்டப்பட்டுள்ளது.

6. முன்பின் அறிமுகம் இல்லாத சிலர் வாகனத்தில் ஏற அழைப்பு விடுத்தால் ஏறலாமா?

7. இரவு சினிமாவிற்கு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு வழி செய்யாமல் படம் பார்க்கலாமா?

8. ஞாயிற்று கிழமை பஸ் எண்ணிக்கை பாதி தான்.

9. ஆட்டோவிற்கு நூறு ரூபாய். டாக்ஸியிற்கு முன்னூறு ரூபாய் பையில் இல்லாமல் ஒரு பெண் இரவு சினிமாவிற்கு செல்லலாமா?

10. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பது தெரிந்தும் இப்படி ரிஸ்க் எடுக்கலாமா?

11. அந்த பெண்ணிற்கு நடந்தது கொடுமையே. அந்த பெண் குணமடைய நாம் கடவுளை வேண்டுவோம்.

12. அந்த கயவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.

13. இங்கு நியூ யார்க் தலை சிறந்த ஊர். ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆண்களே சில இடத்திற்கு செல்ல மாட்டார்கள். சென்றால் பர்ஸோட சேர்த்து கிட்னியும் போய்விடும்.

14. பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இடம் பொருள் நேரம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இது அனைவருக்கும் பொருந்தும்.
4. தயவு செய்து அந்த கயவர்களை சட்டென்று தூக்கில் போட்டுவிடாதீர்கள். தூக்கு தண்டணை எதிர்ப்பாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். கொஞ்ச நாள் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த கயவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை விடுவிக்க போராட ஆரம்பிப்பார்கள். உடனே நமது மென் மனதுக்காரர்கள் அவர்களை மன்னித்து விட முனைவார்கள். இவர்களுக்கெல்லாம், கோவையில் அந்த கைதிகளை அழைத்து சென்று என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது போல் செய்து விட வேண்டும். அதிலும் அனைவரையும் கொன்றுவிடக் கூடாது.......அடுத்தவர்கள் அந்த கொலை பயத்தில் சில நாட்களாவது இருந்து பின் சாகடிக்கப்பட வேண்டும். இப்போதைக்கு அவர்களின் விரல்களை மட்டும் வெட்டி விடலாம்.5. கறுப்புக் கண்ணாடி, திரைகள் பேருந்துகளில் போடுவது குற்றம் செய்வதற்கு அல்ல வெயிலில் பயணம் செய்பவர்களுக்கு அவதிப்படாமல் பயணம் செய்வதற்க்கு அதை விலக்குவதால் சாதரன மக்களுக்கு மட்டுமே பாதிப்பு எம்பி, மந்திரி, டிப்பளமாட், அதிகாரிகள் எல்லாருக்கும் கண்ணாடி, திரைகள் உள்ள வண்டிகளில் தான் எப்பொழுதும் பயணம் செய்கிறார்கள். பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட்டால் குற்றங்கள் குறையும்.


6. இது மாதிரி ஆட்களுக்கு நம்ம சைலேந்திர பாபு தான் சரி.

இன்னொரு சந்தேகம்... ஒப்பந்த பேருந்துக்கும் சாதாரண பயணிகள் பேருந்துக்கும் வேறுபாடு கூடத் தெரியாமலா இந்த இருவரும் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்?


7. இந்தியாவுக்கு மானம்லா இருக்கா?

தருமபுரியில் 3 பெண்களை உயிரோடு கொளுத்திய தேசம் இது

பத்திரிக்கை அலுவலகத்திலே ஊழியர்களை கொளுத்திய தேசம் இது.

இது சூடு சொரணை அற்ற ஜட தேசம்.

இங்கு காசுக்கு மனசாட்சியை விற்று விட்டு , என் தலவன் சின்ன குற்றவாளி, உன் தலைவன் பெரிய குற்றவாளின்னு ஜால்ரா தட்டுற பயல்கள்தான் அதிகம்.8. 635 வழக்குகளில் ஒருவர் மட்டுமே சிறிய தண்டனை அடைந்துள்ளார் - இதுதான் இத்தனை கொடுமைகளுக்கும் அடித்தளம். குற்றத்துக்கு தண்டனை கிடைக்காது, கிடைத்தாலும் பல வருடங்களாகும், அதுவும் ஒரு சிறிய தண்டனையாகவே இருக்கும் என்று குற்றவாளிகள் நினைப்பதுவே அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. ஆனால் நம்மால் ஏன் நீதிமன்றங்கள் வருடத்தில் 150 நாட்கள், தினமும் 3 மணி நேரம் என்ற அளவில் செயல்படுகின்றன, கணக்கில்லா வாய்தாக்கள் வழங்க எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று கேட்க முடியாமல் நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டம். இந்தியா நாசமாவதில் மிக மிக மிக அதிகப் பங்கு நீதித்துறையையே சாரும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றியே ஊழல் புகார்கள் வரும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.9. ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நாஙகள் விழித்து க்கொள்வோம் என்பது நமக்கு வழக்கம் தானே.வெளி நாட்டு டூரிஸ்ட் கள் கதி கேக்கவே வேண்டாம். இந்தியா வரவே பயப்படும் நிலைதான்.10. டெல்லிய்ல் ஒரு பெண் கொடூரப்படுத்தப்பட்டார் என்றவுடன் எல்லா ஊடகங்களும் தங்களுக்குஒரு ஸ்கூப் கிடைத்திவிட்டது என அதை வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். நாடாளுமன்ரத்தையே முடக்குகின்றனர். பல்லாயிரம் உயிர்கள்( விவசாயிகள், கூலிகள், மீனவர்கள், சாதி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள்) செத்தபோது கண்டுகொள்ளவில்லையே.

Wednesday, December 19, 2012

டெல்லி லேடி டாக்டர் ரேப்பிஸ்ட் வாக்குமூலம்

பாடம் கற்பிக்க விரும்பினோம்': டெல்லி சம்பவ குற்றவாளி Posted Date : 18:19 (18/12/2012)Last updated : 18:31 (18/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவிக்கு  பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக கைது  செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்ததாக  காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக  4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு  வருகின்றனர்.


இதனை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த காவல்துறை  ஆணையர் நீரஜ் குமார்,இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்  என்று நீதிமன்றத்தை டெல்லி காவல்துறை கேட்டுக்கொள்ளும் என்றும்,அப்படி  அமைத்தால்தான் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

குற்றவாளிகள் மீது பாலியல் பலாதகார வழக்கு மட்டுமல்லாது, கொலை முயற்சி  வழக்கும் பதிவு செய்யப்படும் என தெரிவித்த நீரஜ் சிங், கைது செய்யப்பட்ட 4  பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி  கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் ஆவர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாடம் கற்பிக்க விரும்பினோம்

இதனிடயே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், அப்பெண்ணுடன் வந்த நண்பரை முதலில்  தாக்கியபோது,அப்பெண் அதனை தடுக்க முயற்சித்ததாகவும்,இதனால் அப்பெண்ணுக்கு  பாடம் கற்பிக்க வேண்டி தாங்கள் இச்செயலை செய்ததாகவும் விசாரணை நடத்திய  போலீஸ் அதிகாரிகளிடம் குற்றவாளி ஒருவன் கூறியதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி  டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்  என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.கற்பழிப்பு தலைநகராகும் டெல்லி!
Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 18:05 (18/12/2012)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு  தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று!

டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர்.
24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்

தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம்  சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.
டெல்லியில்  செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த
டெல்லி காவல்துறை ஆணையர்  நீரஜ் குமார்,  கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவ, மாணவிகள் போராட்டம்

இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம்

இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது.

மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர்.

இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம்

இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு  தலைநகராக இருப்பதில் அல்ல...!
டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
Posted Date : 12:16 (19/12/2012)Last updated : 12:22 (19/12/2012)
புதுடெல்லி: 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான டெல்லி  மாணவியின் சில முக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும்  அம்மாணவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு நேரில் சென்று  பார்த்து, அம்மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள்  பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி  வருகிறார்.

குறிப்பாக அம்மாணவியின் சில அதிமுக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக  சேதமடைந்துவிட்டதாக, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது  மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும்  கூறியுள்ளனர்.  

ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் 


இத்தகைய நிலையில் இருந்தால் அவரது  நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு  செயற்கை  சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி - விகடன் 


டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி கற்பழிப்பு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.
ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.
ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.
ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.
மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.
வசந்தி ஸ்டான்லி ( தி.மு.க.),: இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி கற்பழிப்பு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

திருமாவளவன் பேச்சு -எம்.பி.,க்கள் எதிர்ப்பு:
லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை. வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர்.
டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

ராஜ்யசபா ஒத்திவைப்பு :


ராஜ்யசபாவில் எழுந்த அமளி காரணாமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பஸ்சில் இருந்த ரகசிய காமிரா உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,


மாணவருக்கு ஆபரேஷன்:


இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கும், உடன் இருந்த அவரது நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கற்பழிக்கப்பட்ட மாணவி இன்னும் மயக்கம் தெளியாமல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் பேட்டி:

இந்த கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது மிக முக்கிய விஷயமாக கருதுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் பார்லி.,யில் எழுப்புவோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளிப்பார் என தெரிகிறது,


போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து டில்லி வசந்த்விகார் போலீஸ் ஸ்டேஷனை இப்பகுதி மாணவிகள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி - தினமலர்