Wednesday, November 09, 2011

கோவைக்குசும்பு ஜோக்ஸ்


Worst Face Contest1. மாப்ளை மினிஸ்டர்ங்க!! ஏன் பொண்ணு குடுக்க தயங்கறீங்க?

அவரு பாட்டுக்கு ஜெயிலுக்கு போயிடுவாரு.. என் பொண்ணு தனியா இருக்கனுமே?


-----------------------------------------------------

2. “இன்கம்” புகழ் தலைவருக்கு திடீர்னு  “மவுத் கிவ்” புகழ் தலைவர்னு பட்டம் கிடைச்சது எப்படி?

வாய்தா வாங்கறதுல கோர்ட்டுக்கு  இத்தனை  மனு குடுத்தது உலகத்துலயே இவர்தானாம்.

---------------------------------------------------------

3. டாக்டர், வருஷா வருஷம் எனக்கு குழந்தை பிறந்துட்டே இருக்கு.. நான் என்ன பண்ணனும்?

கேள்வியே தப்பு..என்ன பண்ணக்கூடாதுன்னு கேளுங்க..

-----------------------------------------

4. என் மனைவி என்னை கிள்ளுக்கீரையா நினைக்கறா..

சரி.. உங்க உடம்பு பூரா ஏன் காயமா இருக்கு?

கோபம் வர்றப்ப கிள்ளி கிள்ளி வைக்கறா..

----------------------------------------------


5. என்னை விட என் மனைவி வீட்ல வசதி  ஜாஸ்தி,..

அதனால என்ன?

வீட்டு வேலை எல்லாம் நான் தான் செய்யறேன்.. எனக்கு அசதி ஜாஸ்தி..

--------------------------------------------------

Breadhut
6. டாக்டர்.. எங்களுக்கு மேரேஜ் ஆகி 8 வருஷத்துல 10  குழந்தைங்க.. நாங்க என்ன செய்ய?

உடனடியா கு.க ஆபரேஷன் செய்ங்க..

------------------------------------------------------


7.  மிஸ்.. உங்க நட்சத்திரம் ஆயில்ய நட்சத்திரமா? ராசி மீனமா?

அட, ஆமாம்.. எப்டி கரெக்டா கண்டு பிடிச்சீங்க?

எண்ணெய் வழிஞ்ச முகமா இருக்கே?

---------------------------------------------------


8. மேடம்.. டோண்ட் ஒர்ரி உங்களுது பரணி நட்சத்திரம்,  பரணி தரணி ஆளும்..

அய்யய்யோ ஜோசியரே.. டைரக்டர் தரணிக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு..

---------------------------------------


9. உங்க கட்சி டபுள் மடங்கு வளர்ச்சி அடந்துள்ளதுன்னு எப்டி சொல்றீங்க?

நான் மட்டும் தான் 2 வருஷமா என் கட்சில இருந்தேன்.. இப்போ என் சம்சாரமும் சேர்ந்துட்டாளே?


------------------------------------------


10.என் மனைவி கோவிச்சு நான் பார்த்ததே இல்லை..

ஏன்? உங்களுக்கு கண்  சரியா தெரியாதா?

--------------------------------------------------

11. வீட்ல டைனிங்க் டேபிள் இருந்தும் ஏன்  தரைல உக்கார்ந்து சாப்பிடறீங்க?

என் நட்சத்திரம் திருவாதரை.. சாப்பிடறது புளியோதரை.. அதான்.. ஹி ஹி

------------------------------------------------------

12. மாமியாரும், மருமகளும்  சண்டை போடறதுல லைவ் ஷோ காட்டப்போறாங்களாம்..

என்ன டைட்டில்?

ஃபைட்டுக்கு ஃபைட்டு

------------------------------------------

13. எனக்கு சொந்த ஊர் கோவை.. அதனால தான் கோவக்காரனா இருக்கேன்..

ஓஹோ, அப்போ பாபநாசத்துல பிறந்தா பாவக்காரனா இருந்திருப்பீங்களா?

------------------------------------------

14. என் மனைவி ஒரு இசைப்பிரியை..

நிஜமாவா?

ஆமா, அவ என்ன தப்பு செஞ்சாலும் அவளுக்கே எல்லாரும் ஜால்ரா அடிக்கனும்னு எதிர்பார்ப்பா..

-----------------------------------


15. ஆவின் பால், அமலாபால் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?

ஆவின் பால், அமலாபால் இரண்டும் கவர்ச்சிகரமான பேக்கிங்க்கில் கிடைக்கிறது, ரெண்டுமே ஜில்லுன்னு இருக்கும்

--------------------------------
35 comments:

ஆகாயமனிதன்.. said...

ஈரோடு கோவை குசும்ப பேசுது !
Good Morning

தமிழ்வாசி - Prakash said...

ஈரோடு எப்போ கோவை போச்சு?

தமிழ்வாசி - Prakash said...

ஒரு வேளை கண்ணாடிய போடாம போயிட்டாரோ?

ஆகாயமனிதன்.. said...

7.ஆயில்ய நட்சதிரம்ன்னா...கடக ராசி தான் வரும் !
நம்ம சிபி ஆன்மீகத்துல வீக், பெண்மோகத்துல பீக்...
அட்ராசக்க...தூள் கிளப்புங்க !

கவி அழகன் said...

Yapa kisumu kalakkuthu

ராஜி said...

என்னை விட என் மனைவி வீட்ல வசதி ஜாஸ்தி,..

அதனால என்ன?

வீட்டு வேலை எல்லாம் நான் தான் செய்யறேன்.. எனக்கு அசதி ஜாஸ்தி. >>> சொந்த அனுபவம் போல

koodal bala said...

7 வது -பயங்கர கண்டுபிடிப்பு

வெளங்காதவன் said...

ஹா ஹா...
வாய் விட்டு சிரித்தேன்...

♔ம.தி.சுதா♔ said...

குழந்தைக்கட்டுப்பாடு சம்பந்தமாக வந்த நகைச்சுவை நகைச்சுவை உணர்வை கிளறுவதாகவும் கொஞ்சம் நெருடவதாகவும் இருக்கிறது நன்றி சீபி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

veedu said...

கண்டுபிடிங்க சிபி 1லட்சம் பரிசு தருகிறார்

http://veeedu.blogspot.com/2011/11/blog-post_08.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதுதான் கோவை குசும்புன்றதா...?

உமக்குதான்ல ஓவர் குசும்பு...

ரமேஷ் வெங்கடபதி said...

அடிக்கடி கோவை வாங்க! குசும்பு பத்தல!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//என் மனைவி என்னை கிள்ளுக்கீரையா நினைக்கறா..

சரி.. உங்க உடம்பு பூரா ஏன் காயமா இருக்கு?

கோபம் வர்றப்ப கிள்ளி கிள்ளி வைக்கறா..
//
அப்ப அவ பெயர் கிள்ளி வளவி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல ஜோக்s

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்

விக்கியுலகம் said...

14th நச்!

சே.குமார் said...

Kovai Kusumpu Erodil irunthu...
KUSUMBU... KALAKKAL...
KALAKKAL... KUSUMBU...

கணேஷ் said...

அந்த 3வது ஜோக்கில்தான் ஒரிஜினல் கோவைக் குசும்பு பளிச்சிடுகிறது. மத்ததெல்லாமும் ரசிக்க வைத்தது. அருமை.

josiyam sathishkumar said...

ஆயில்ய நட்சத்திரம்னா கடக ராசி வரும் ;-)) தொழில் பக்தி

MANO நாஞ்சில் மனோ said...

கோவை குசும்பு நல்லாயிருக்கே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அசதி ஜாஸ்தியா அப்போ அடி பின்னப்போறாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

கடைசியா சொன்னது சூப்பரு மச்சி....

நிரூபன் said...

மதிய வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

விளம்பரங்கள் எல்லாம் குறுக்கே ஓடி மவுஸின் நகர்விற்கு சவால் விடுதே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

மனைவி கோபம் வர்றப்போ கிள்ளுவது செம கடி..

நிரூபன் said...

கோவை கோவக்காரன்..
தமிழி புகுந்து விளையாடுதே..

அசத்தலான நகைச்சுவைகள் பாஸ்.

K.s.s.Rajh said...

1,5,14,15 மிகவும் ரசித்தேன் அதிலும் அமலா பால் மேட்டர் சூப்பர்......

இரண்டாவது படம் அருமையாக உள்ளது

சசிகுமார் said...

இன்னைக்கு ஜோக்ஸ் செம டாப்பு...

கும்மாச்சி said...

ஆவின் பால், அமலாபால் ஹூம் ரொம்பதான் குசும்பு.

NIZAMUDEEN said...

நல்லா, இரசிக்க வைத்தன.

சென்னை பித்தன் said...

கோவை என்ன ஈரோடு என்ன எல்லாம் ஒண்ணுதான்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
துரைடேனியல் said...

ha...ha...

Philosophy Prabhakaran said...

முதல் படத்துல இருக்குறவங்க எல்லாம் கோவைப்பெண்களா சாரே....

Ramani said...

அருமை அருமை
மன்ம் திறந்து ரசித்து சிரிக்க முடிந்தது
குறிப்பாக கடைசி ஜோக்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 14

dhasarathy said...

kovai kusumbu 4vadhu padaththil theriyudhu