Thursday, September 08, 2011

பிரபுதேவா எனக்கு சகலை முறையா? சிம்பு காட்டம்

Santa Cruz
1.காதல்காரன், காய்ச்சல்காரன் இருவருக்கும் இதழ்கள் இனித்த நிலையிலும், விழிகள் பனித்த நிலையிலும் இருக்கும்

--------------------------

2. ஒவ்வொரு தனி மனிதனும் தினமும் குறைந்த பட்சம் 4 பொய்கள் வீதம் வருடம் 1460 பொய்கள் சொல்கிறான், மேக்சிமம் சொல்ற பொய் “ ஐ ஆம் ஃபைன்”

-------------------------

3. வலிகளைப்பரிசாகத்தருவதில் உனக்கு நிகர் யாருமில்லை.தந்தது நீ என்பதால் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு நிகர் யாருமில்லை

-----------------------------

4.  ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததால் முதல்வர் தலையிட முடியாது: ஜெ. விளக்கம் # பரிந்துரை செய்யலாமே?மனம் இருந்தால் மார்க்கமுண்டு

--------------------------

5.எல்லோருடைய வாழ்விலும் 2 காதல்கள் உண்டு 1. சொல்லாத காதல் 2. சொல்லி நிறைவேறாத காதல்

----------------------------


Neuquén
6. உன் மனதில் நான் இல்லை என்பது தெரிந்த பின்பும் உன் மீதான என் அன்பு குறைந்த பாடில்லை

---------------------------

7. தினசரி 4 காட்சிகள் போட்டா அது சினிமா தியேட்டர், தினசரி 4 கட்சிகள் மாறுனா அது ராம்தாஸ் வழிகாட்டல்

-----------------------------

8. அன்பு மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சொத்து, சந்தேகங்கள் மட்டுமே உன் மனதில் படிந்திருக்கும்  ஒரே வித்து

-------------------------------

9. என் எல்லா சோகங்களுக்கும் நீ ஆறுதல் சொல்வாய்!ஆறுதலே யாரும் சொல்ல முடியாதபடி நீயே என்னை பிரிந்து கொல்வாய்!

-----------------------

10. நீ எனக்கு துரோகம் செய்வாய் என நான் நினைத்ததில்லை,என் கண்ணீர் உன்னை காயப்படுத்திவிடுமோ என்றுதான் என் கண்களைக்கூட நனைத்ததில்லை

--------------------11. "திமுகவின் தோல்விக்கு பெண்கள் தான் காரணம்''- ஸ்டாலின் #  அ தி.மு.க.,வின் வெற்றிக்கு கலைஞர்,ஆ ராசா போன்ற  ஆண்கள் தான் காரணம்  - ஜெ

-------------------------

12. என் காதலுக்கு நீயே விளிம்பாக இருக்கிறாய், என் காயங்களுக்கு களிம்பாக ஏன் மறுக்கிறாய்?

-----------------------


13. உன் சமீபம் என்னை மென்மை ஆக்குகிறது, உன் அன்பு என்னை மேன்மை ஆக்குகிறது

----------------------------


14. இதே பிரச்சனை சசிகலா குடும்பத்தில் யாருக்காவது வந்தால் இதே போல் அதிகாரம் இல்லை என சொல்வாரா? ஜெ?

-------------------


15. காதலை முதலில் சொல்வது பெரும்பாலும் ஆண்களே!காதலில் கடைசி வரை கொல்வது பெரும்பாலும் பெண்களே!

---------------------------16. சிம்பு என் நண்பன் இல்லை-ஜீவா  #  பிரபுதேவா என் சகலை அல்ல - சிம்பு @ இமேஜினேஷன்

-----------------------------

17. மூன்றெழுத்தில் நம் மூச்சு இருக்கும் ,அது கடமை,மூன்று உயிர்கள் காப்பாற்ற கோருவோம், அது நம் உரிமை

----------------------------


18. ஒரு உயிர் பிறந்ததும் உதிர்க்கும் முதல் வார்த்தை அம்மா,இந்த மூன்று உயிர்கள் பிழைத்தால் பல ஆயிரம் உயிர்கள் உச்சரிக்குமே அம்மா உன் பெருமையை

-----------------------------

19. நீ இடம் மாறுகிறாய் , தடம் மாறுகிறாய், ஆனால் என் இதயம் மட்டும் மாறவே இல்லை

----------------

20. ஒரு தோல்விக்குப்பின் 1000 காரணங்கள் இருக்கும், ஆனால் ஒரு வெற்றிக்குமுன் 1000 தோல்விகள் இருக்கும்

---------------21. அமைவதுதான் வாழ்க்கை என்று எண்ணாமல், அமைத்துக்கொள்வதுதான் வாழ்க்கை என எண்ணுங்கள் # லவ் மேரேஜ்

-------------------


22. தவறான 100 நபர்களை நேசிப்பதால் இழப்பு ஏதும் இல்லை,ஆனால் சரியான நபர் ஒருவரை வெறுப்பது வாழ்க்கை முழுதும் உன் இதயத்தை தொந்தரவு செய்யும்

-----------------------


23.  பாடலின் நாயகி பாட்டுடைத்தலைவி ஆகும்போது ட்வீட்டின் நாயகி ட்வீட்டுடைத்தலைவி ஆகமாட்டாளா?

---------------------------

24. எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை. என் வாழ்வின் எதிர்பார்ப்பு உன் அன்பு, என் வாழ்வின் அர்த்தம் நீ

--------------------


25. உன்னை நீயே எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டாய்! யாராவது ஒருவரால் அன்பு காட்டப்பட்டு ஆகர்சிக்கப்படும்வரை

----------------
37 comments:

விக்கியுலகம் said...

வணக்கம்

Riyas said...

பொண்ணுங்க படத்திற்கு பதிலா இயற்கையின் படம்,,

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

No 16 மட்டும்தான் தலைப்புக்கு பொருத்தம்,, ஹ்ம்ம்ம்

மதுரன் said...

தமிழ்மணத்தில இணையுங்கப்பா

நாய்க்குட்டி மனசு said...

காயச்சல்காரனுக்கு இதழ்கள் கசந்த நிலையில் அல்லவா இருக்கும்.
நிறைவேறிக் கொல்லும் என்றொரு காதலும் உண்டு
வீட்டுடைத் தலைவியாய் ஆகாத வரை ஆபத்தில்லை
நீங்க சினிமாவுக்கு வசனம் எழுத முயற்சி செய்யலாம் செந்தில். வெற்றி பெறுவீர்கள் என்று தோன்றுகிறது

RAMVI said...

எல்லாமே நன்றாக இருக்கு குறிப்பாக 2,20 ம் சூப்பர்.
படங்கள் அருமை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

7 th twitt is super and true

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Photos super

Raazi said...

Good continue

காந்தி பனங்கூர் said...

ஐ ஆம் ஃபைன்

நிலவை தேடி said...

nice lines

கணினியில் இருந்து உங்களின் நோக்கியா சாதனத்தை இடை நகர்த்த நோக்கியா Ovi சூட் மென்பொருள்
http://murugananda.blogspot.com/2011/09/nokia-ovi-suite-31190.html

நிலவை தேடி said...

nice lines

கணினியில் இருந்து உங்களின் நோக்கியா சாதனத்தை இடை நகர்த்த நோக்கியா Ovi சூட் மென்பொருள்
http://murugananda.blogspot.com/2011/09/nokia-ovi-suite-31190.html

F.NIHAZA said...

பழுத்த அனுபவம் sir உங்களுக்கு

வெளங்காதவன் said...

குஞ்சாங் குஞ்சாங்....

#ட்வீட்டுடைத் தலைவி...

ஜூப்பர்....

தமிழ்வாசி - Prakash said...

நல்லா முறை வச்சிருக்காங்கப்பா...

Mohamed Faaique said...

////தவறான 100 நபர்களை நேசிப்பதால் இழப்பு ஏதும் இல்லை. ஆனால் சரியான ஒரு நபரை வெறுப்பது வாழ் நாள் முழுவதும் உன் இதயத்தை தொந்தரவு செய்யும்////

superb..
இதை என் ஃபேஸ் புக் ஸ்டேடஸ் ஆக்கி விட்டேன்..

இந்திரா said...

மூணாவது புகைப்படத்தில் இருப்பது என்ன?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள தலைப்பு நச்.

சென்னை பித்தன் said...

பின்றீங்க!

kovaikkavi said...

நிறைய எழுதியதால் எல்லாம் உள்னே புக பஞ்சிக் படுகிறது. ஆனால் 1ம்-5ம் சிரிப்ப வந்திட்டுது....நல்லது.
வேதா. இலங்காதிலகம்.

MANO நாஞ்சில் மனோ said...

17 ம் 18 ம் மிகவும் கவனிக்கப் படதக்கவை, நம் உரிமையும், அம்மா ஜெயலலிதாவும்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா எதுக்குடா சிம்பு'வை வம்புக்கு இழுக்குறே ராஸ்கல்....

kobiraj said...

சிம்பு மேட்டர் சூப்பர் .ஓட்டு போட்டாச்சு

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இது தான் காதல் வேட்டையா ஹா ஹா ஹா

அனைத்தும் அருமை..

கடம்பவன குயில் said...

8. அன்பு மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சொத்து. சந்தேகஙகள் மட்டுமே உன் மனதில் படிந்திருக்கும ஒரே வித்து//

அதுதான் சார் பொசசிவ்னெஸ் உடன் உள்ள உண்மையான காதல் இதுதான் நல்லாயிருக்கு

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார், கும்புடுறேனுங்க! எல்லாமே சூப்பரா எழுதியிருக்கீங்க! சார்! எனக்கு 20 வது ரொம்ப பிடிச்சிருக்கு!

அப்புறம் கெளம்புறேன் ஸார்! கும்புடுறேனுங்க!

KANA VARO said...

15ஆவது பிடிச்சிருக்கு.

ராஜி said...

காதல்காரன், காய்ச்சல்காரன் இருவருக்கும் இதழ்கள் இனித்த நிலையிலும், விழிகள் பனித்த நிலையிலும் இருக்கும்
>>>
அப்போ காதலும் காய்ச்சலும் ஒண்ணுன்னு சொல்றீங்களா?

ராஜி said...

ஒவ்வொரு தனி மனிதனும் தினமும் குறைந்த பட்சம் 4 பொய்கள் வீதம் வருடம் 1460 பொய்கள் சொல்கிறான், மேக்சிமம் சொல்ற பொய் “ ஐ ஆம் ஃபைன்”
>>>
இப்போ அதை விட நாமலாம், சொல்ற பொய் "ந்ல்லதொரு பதிவு, அருமையான கவிதை, பகிர்வு நன்றி" என்பதுதான்

ராஜி said...

அன்பு மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சொத்து, சந்தேகங்கள் மட்டுமே உன் மனதில் படிந்திருக்கும் ஒரே வித்து
>>>
இப்படியே, ட்வீட்டா சொல்லிக்கிட்டு இருந்தால், ஓங்கி மூக்குல ஒரு குத்து.

ராஜி said...

ஒரு தோல்விக்குப்பின் 1000 காரணங்கள் இருக்கும், ஆனால் ஒரு வெற்றிக்குமுன் 1000 தோல்விகள் இருக்கும்
>>
சரியா சொலியிருக்கீங்க சார்

ராஜி said...

பாடலின் நாயகி பாட்டுடைத்தலைவி ஆகும்போது ட்வீட்டின் நாயகி ட்வீட்டுடைத்தலைவி ஆகமாட்டாளா?
>>>
பிளாக், ஃபேஸ்புக், ஆர்குட், பஸ் லாம் ஏன் விட்டுட்டீங்க சிபி சார்?

செங்கோவி said...

ட்வீட்டர்லயும் அண்ணன் தான் நம்பர் ஒன்னு!

Nesan said...

கலக்கல் பதிவு அழகான படம்10,11 ஜோடிக்கவைக்கிறது!

நிரூபன் said...

காதல், சினிமா அரசியல் என அனைத்து டுவிட்ஸ்களும் அசத்தல் பாஸ்..

உங்களுக்கு சிங்கம் புலி மீது பயங்கரப் பிரியம் இருக்கும் என்று நினைக்கிறேன்..
அவ்...........

மகேந்திரன் said...

22 வது துணுக்கு
மனத்தைக் கவர்ந்தது நண்பரே.

Barath said...

Nayanthaaravin photo illaamal vandha indha pathivai naan purakkanikiraen.

ரெவெரி said...

எல்லாமே நன்றாக இருக்கு...