Wednesday, April 27, 2011

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?




புது காரில் புகை! என்ன செய்வது?

1. அடகுக் கடைகளில் ஆங்கிலத்தில் கண்டிஷன் களை எழுதி கையெழுத்து வாங்குகிறார்கள். இதை தமிழில் எழுதித் தரவேண்டும் என்று கேட்க முடியுமா?

-ஆனந்த் ராஜ், போரூர்
.
''நிச்சயம் கேட்க முடியும். காரணம், இன்றைக்கு பட்டித்தொட்டிகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன அடகுக் கடைகள். கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கேற்ப அடகு வைக்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 பான் புரோக்கர் என்று சொல்லப்படும் சிறிய அடகுக் கடைகளாகட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகட்டும், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில்தான் கையெழுத்து வாங்குகிறார்கள்.
நம் மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் இது மாதிரியான அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள். அவர்கள் எளிதில் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்துத் தந்தால், பிற்பாடு ஏற்படும் சச்சரவுகள் உருவாகாமலே தடுக்க முடியும். மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் விதிமுறைகள் இந்தியில் அச்சடிக்கப்பட்டு கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழில் அச்சடித்துக் கொடுக்க முடியாது? ஆனால், அடகு வைக்கிறவர்கள் இதை வாய் திறந்து கேட்டால் மட்டுமே கிடைக்கும்.''


2. வாஷிங்மெஷின் ரிப்பேராகி விட்டது. இப்போது கேட்டால் அந்த மாடலை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது என்கிறார்கள். இவர்கள் மாடலை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக நான் பாதிப்படைய முடியுமா?

-பிரபாகர், காரைக்கால்
.
''உங்கள் வாதம் சரியானதே. வாஷிங்மெஷினில் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட தங்களுடைய இஷ்டத்துக்கேற்ப பல மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. சில மாடல்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு நிறைய விற்பனையா கின்றன. இன்னும் சில மாடல்கள் கன்ஸ்யூமர் களிடம் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது.

 ஆனால், திடீரென  உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால், பழைய வாஷிங்மெஷினையோ, வாகனத்தையோ வாங்கிக் கொண்டு புதியதை கொடுக்கும்படி கேட்கும் உரிமை கன்ஸ்யூமர்களுக்கு நிச்சயம்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.''


3. கடந்த ஜூலை மாதம் முதல் எனது செல்போனில்  நெட்வொர்க் பிராப்ளம் என்று வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ முறை புகார் செய்தும், மெயில் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. என் குறை தீர என்ன செய்வது?

-அன்பு, கும்மிடிப்பூண்டி
.
''டிராய் என்று சொல்லப்படுகிற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும்  நோடல் ஆபீஸர் என்று ஒருவரை நியமித்திருக்கிறது. இந்த நோடல் ஆபீஸர்களின் வேலையே செல்போன் நிறுவனங்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே. ஏர்டெல் நிறுவனத்துக்கு சென்னை சாந்தோமில் அலுவலகம் இருக்கிறது.

 ஏர்செல் நிறுவனத்துக்கு கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி என பல நகரங்களில் நோடல் ஆபீஸர்கள் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் புகுந்து தேடினாலேயே இந்த நோடல் ஆபீஸர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி, அவர்களின் போன் நம்பர் என அனைத்தும் கிடைத்துவிடும். செல்போன் சர்வீஸ் தொடர்பான எந்த குறையாக இருந்தாலும் இந்த நோடல் ஆபீஸரிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.''


4. சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கினோம். வாங்கிய மறுநாளே காரிலிருந்து புகை வந்தது. இதுபற்றி புகார் செய்து, பத்து நாளைக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்கள். இதோ, அதோ என்று நான்கு நாட்கள் இழுத்தடித்துதான் சரி செய்து கொடுத்தார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு புது காரை வாங்கினோம் என்கிற மகிழ்ச்சியே எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் என்ன செய்ய?
-லலிதா, வளசரவாக்கம்
.
''இது மாதிரியான விஷயங்களில் நம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். புத்தம் புதிய காரை முதல் முறையாக வெளியே எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து புகை வருகிறது என்றால் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, கார் வாங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து, உடனடியாக வந்து காரை சரி செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.

 அவர்கள் வந்து சரி செய்து கொடுக்கும்வரை காரை அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டேன் என்று சொன்னால், வேறு வழியில்லாமல் ஓடிவருவார்கள். அப்படி வந்து சரி செய்து கொடுப்பதோடு பிரச்னையை விட்டுவிடக்கூடாது.

'காரிலிருந்து மீண்டும் புகை வராது என்பதை உறுதிப்படுத்த 100 கி.மீட்டருக்காவது தன்னோடு பயணம் செய்ய வேண்டும்’ என்று கேளுங்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னால், இந்த காரை எடுத்துக் கொண்டு புது காரை கொடுக்கும்படி கேளுங்கள். இப்படி கேட்பது கார் நிறுவனம் வேண்டுமானால் அநியாயம் என்று நினைக்கலாம்.

 ஆனால், கன்ஸ்யூமரை பொறுத்தவரை, இதெல்லாம் நியாயமான கோரிக்கைகளே. இந்த விஷயத்தை நீங்கள் இப்படி டீல் செய்யும் பட்சத்தில் நீங்கள் புகார் செய்தவுடன் உங்களைத் தேடி வந்து பிரச்னையை சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அநாவசியமாக நீங்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது!''

நன்றி - மோட்டார் விகடன்

56 comments:

Speed Master said...

முத வெட்டு

நிரூபன் said...

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?//

இப்போ, அவங்க grand daughter வைச்சிருக்காங்க...

ஹி..ஹி...

Speed Master said...

பதிவ பார்த்து ஏதாவது கிளுகிளுப்பா இருக்கும்னு வந்தா



இருங்க மைனஸ் ஓட்டு போடுறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்பீடு எல்லாத்துலயும் ஸ்பீடு போல..

Unknown said...

பயனுள்ள கேள்வி பதில் பதிவு போட்டதற்கு திரு, சிபிக்கு நன்றிகள்!

Speed Master said...

தமிழ் 10 இண்டலி ல மைனஸ் ஓட்டு எப்படி போடுவது என விளக்கவும்>?????????????

சி.பி.செந்தில்குமார் said...

>> நிரூபன் said...

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?//

இப்போ, அவங்க grand daughter வைச்சிருக்காங்க...

ஹி..ஹி...

அதையும் ஆராய்ந்தாகி விட்டதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Speed Master said...

//
சி.பி.செந்தில்குமார் said...
ஸ்பீடு எல்லாத்துலயும் ஸ்பீடு போல..

April 27, 2011 3:59 PM

எதோ நம்மாள முடிந்தது

சி.பி.செந்தில்குமார் said...

>> Speed Master said...

தமிழ் 10 இண்டலி ல மைனஸ் ஓட்டு எப்படி போடுவது என விளக்கவும்>?????????????

சொந்த செலவுல சூன்யம்? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

பயனுள்ள கேள்வி பதில் பதிவு போட்டதற்கு திரு, சிபிக்கு நன்றிகள்!

April 27, 2011 3:59 PM

தக்காளி மப்புல இருக்கான் போல.. நன்றி எல்லாம் சொல்றான்

Thirumalai Kandasami said...

அடுத்த மாசத்துல இருந்து விகடன் subscription கட் பண்ணிடலாம் போல..

Unknown said...

சொப்பன அடை !

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

பயனுள்ள கேள்வி பதில் பதிவு போட்டதற்கு திரு, சிபிக்கு நன்றிகள்!

April 27, 2011 3:59 PM

தக்காளி மப்புல இருக்கான் போல.. நன்றி எல்லாம் சொல்றான்"

>>>>>>>>>>>

மப்பு என்பது வானம் என்ற பொருள் படும் வார்த்தை அன்பரே!

நிரூபன் said...

தமிழ் நாட்டில், தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் படிவங்களைத் தமிழில் வழங்கினால் பல சிரமங்களைத் தவிர்க்கலாம் எனும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

பயனுள்ள கேள்வி பதில் பதிவு போட்டதற்கு திரு, சிபிக்கு நன்றிகள்!

April 27, 2011 3:59 PM

தக்காளி மப்புல இருக்கான் போல.. நன்றி எல்லாம் சொல்றான்"

>>>>>>>>>>>

மப்பு என்பது வானம் என்ற பொருள் படும் வார்த்தை அன்பரே!

அய்யோ அம்மா.. தமிழ்ல விளையாடரானே

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

சொப்பன அடை !

டபுள் மீனிங்க் மாதிரி தெரியுது>?

நிரூபன் said...

சகோ, சிபி...

கட்டணம் செலுத்தாத விளம்பரம் ஒன்றை உங்கள் பதிவில் போடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

அடுத்த மாசத்துல இருந்து விகடன் subscription கட் பண்ணிடலாம் போல..

ஹி ஹி ஹி

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு
உள் நுழைய தூண்டில் போட்ட விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>> Speed Master said...

தமிழ் 10 இண்டலி ல மைனஸ் ஓட்டு எப்படி போடுவது என விளக்கவும்>?????????????

சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு நினச்சேன்.. நிஜமாவே போட்டுட்டாரே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

பதிவர்களுள், இப்படியும் மனிதர்களா! பதிவர்களே விழிப்படையுங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

Ramani said...

பயனுள்ள பதிவு
உள் நுழைய தூண்டில் போட்ட விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

அப்பாடா.. பாசிட்டிவ் கமெண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

சகோ, சிபி...

கட்டணம் செலுத்தாத விளம்பரம் ஒன்றை உங்கள் பதிவில் போடலாமா?

இதெல்லாம் நீங்க கேட்கனுமா? நம்மாள் ஆச்சே நீங்க/

Unknown said...

இறுமாப்பு கொள்ளும் நண்பா....யார்ரா அது தண்ணி தெளிச்சி எழுப்பினது.........ஒ ஆபீஸ் டைம் முடிஞ்சி போச்சா ஹிஹி!

நிரூபன் said...

மோட்டார் விகடனில்.. வாங்கிய மறு நாளே புகை வரும் கார் மேட்டர்..

அவ்.....நம்பவே முடியலை..

எங்களைப் போன்ற விகடன் படிக்க முடியாத வாசகர்களுக்கு இவை ஒரு பயனுள்ள பதிவு தான். !

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இறுமாப்பு கொள்ளும் நண்பா....யார்ரா அது தண்ணி தெளிச்சி எழுப்பினது.........ஒ ஆபீஸ் டைம் முடிஞ்சி போச்சா ஹிஹி!

உன் பதிவுதான் மூடாந்தரமா இருக்குதுன்னு பார்த்தா கமெண்ட்டும் அப்ப்டியே இருக்கே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வந்தேன்...

என் கிட்டே டூ - வீலர் தான் இருக்கு...
அதற்கு தினமும் 2 ரூபாய் கொடுத்து காற்றடிக்கிறேன்..

எம்மாமெரிய செலவு...

நாங்களும் சிரிப்போம்ல...
ஹி....ஹி...ஹி..ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இறுமாப்பு கொள்ளும் நண்பா....யார்ரா அது தண்ணி தெளிச்சி எழுப்பினது.........ஒ ஆபீஸ் டைம் முடிஞ்சி போச்சா ஹிஹி!

உன் பதிவுதான் மூடாந்தரமா இருக்குதுன்னு பார்த்தா கமெண்ட்டும் அப்ப்டியே இருக்கே?"

>>>>>>>>>>>>

அதெல்லாம் உன்ன மாதிரி ப்ளூ சர்ட்டு போட்டவங்களுக்கு புரியாதுய்யா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்தேன்...

என் கிட்டே டூ - வீலர் தான் இருக்கு...
அதற்கு தினமும் 2 ரூபாய் கொடுத்து காற்றடிக்கிறேன்..

எம்மாமெரிய செலவு...

நாங்களும் சிரிப்போம்ல...
ஹி....ஹி...ஹி..ஹி

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் அடிக்கறப்பவே காத்தும் அடிச்சுக்கிட்டா பைசா மிச்சமே #ஐடியா

ராஜி said...

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்ததை இன்னிக்குதான் சிபி நிறைவேத்தியிருக்கீங்க.

ரஹீம் கஸ்ஸாலி said...

சொப்பன சுந்தரின்னா யாரு

Unknown said...

"ரஹீம் கஸாலி said...

சொப்பன சுந்தரின்னா யாரு"

>>>>>>>>>>>

அண்ணே வாங்கன்னே நீங்க பெரிய அரசியல்வதின்னே ஹிஹி!

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்தேன்...

என் கிட்டே டூ - வீலர் தான் இருக்கு...
அதற்கு தினமும் 2 ரூபாய் கொடுத்து காற்றடிக்கிறேன்..

எம்மாமெரிய செலவு...

நாங்களும் சிரிப்போம்ல...
ஹி....ஹி...ஹி..ஹி

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் அடிக்கறப்பவே காத்தும் அடிச்சுக்கிட்டா பைசா மிச்சமே #ஐடியா
>>
அப்படியா??!! இத்தனை நாள் இது தெரியாம‌
காசை வீணடிச்சுட்டேனே. உருப்படியான தகவல் ஒண்ணு தந்ததுக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

சொப்பன சுந்தரின்னா யாரு

April 27, 2011 4:23 P

ரிப்பன் முந்திரியோட அக்கா

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்ததை இன்னிக்குதான் சிபி நிறைவேத்தியிருக்கீங்க.

April 27, 2011 4:20 PM

ஹி ஹி ஹி

சசிகுமார் said...

சுமார் 20 வருடமாக ஆராய்ச்சி செய்து சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா என்று கண்டறிந்து கொடுத்த சிபிக்கு இந்த தமிழ் உலகம் மிகுந்த கடமை பட்டுள்ளது.

சக்தி கல்வி மையம் said...

தலைப்பு நச்சுன்னு இருக்கு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! இன்னுமா அந்த சொப்பன சுந்தரி வயசாகி கிழவியாகலியா?

உணவு உலகம் said...

ம்ஹூம். இந்த தலைப்பு பிரச்சினை பெரிசா இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

ம்ஹூம். இந்த தலைப்பு பிரச்சினை பெரிசா இருக்கே!

ஏன்னே? சரி இல்லையா?

Admin said...

இங்கன வட கெடக்குமுனு சொன்னாஹ, வந்து பாக்குமுன ஊசிப்போன வடையாள இருக்கு.. ஹ்ம்ம். நா அப்புறமேட்டு வாரேன்.

ராஜகோபால் said...

பழைய இரும்பு சாமானுக்கு இய்யம் பித்தாளைக்கு பேரிச்சம் பழம்

கிடைக்கும் இடம்
சி பி சிந்தில் குமார் ப்ளாக்ஸ்பாட்

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

காங்கேயம் P.நந்தகுமார் said...

கேள்வி-பதில் அருமை. ஆனா ஏன் விகடன் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுத்தி வர்றீங்கன்னு புரியமாட்டீங்குது.

டக்கால்டி said...

Present Sir...In office now..he he...so comment u later

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால காப்பி பேஸ்ட் பண்ணிட்டு அலையிற மூஞ்சியப் பாரு....
அப்புறமா இவருதுல யாருமே காப்பி பேஸ்ட் பண்ண கூடாதாம். இருடி உனக்கு வச்சிருக்கேன் ஆப்பு ஹக்காங்....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

///சொப்பன சுந்தரி வச்சிருந்த கார இப்ப யாரு வச்சிருக்கா ///

கார யாரு வச்சிருக்காங்கன்னு தெரியல ஆனா சொப்பன சுந்தரிய நம்ம சி.பி.அண்ணே வச்சிருக்காங்கன்னு ஈரோடுல பேசிக்கிறாங்களாம்னே

Unknown said...

இந்த பதிவுக்கு யாருயா அது மைனஸ் ஓட்டு போட்டது

சென்னை பித்தன் said...

ஆகா!பதிவுக்குப் பொருத்தமான தலைப்புதான்!
மோட்டார் விகடன் என்று ஒரு பத்திரிகை இருக்கா?இன்னும் என்ன விகடன் எல்லாம் இருக்கு?

Unknown said...

ஆமா அவள் விகடன்,மசாலா விகடன் ,ஜிலு ஜிலு விகடன் எல்லாம் கிடைக்காதா பாஸ்??
ஓர் வெயிட்டிங் லிஸ்ட்'டு??

Unknown said...

நாஞ்சில் மனோ ஒரு கொலை வெறியோட தான் அலையுராப்புலே!!


என் வழியில் மங்குனி அமைச்சர்!!

http://kaviyulagam.blogspot.com/2011/04/blog-post_27.html

செங்கோவி said...

விகடனுக்குக் கட்டுன காசு வேஸ்ட் போல இருக்கே..

செங்கோவி said...

இதுக்குமா மைனஸ் ஓட்டு?

ஹேமா said...

சிபி தலைப்புத்தான் ... பிரயோசனமான கேள்விகளும் பதில்களும் !

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... விகடன் குழுமத்தில் இருந்து கூடிய விரைவில் வக்கீல் நோட்டிஸ் அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன்...

டக்கால்டி said...

தூற்றுவோர் தூற்றட்டும்...தொடருங்கள் உங்கள் பா(ப)ணியை...