Showing posts with label கார். Show all posts
Showing posts with label கார். Show all posts

Saturday, September 10, 2011

மிடில் கிளாஸ் மக்களுக்கான டாப் 10 லோ பட்ஜெட் கார்கள் - ஒரு அலசல் கட்டுரை

http://www.ridelust.com/wp-content/uploads/booth-pros-of-paris.jpg 
 
டாப் 10 சிக்கனகார்கள்
 
'என் வருமானத்துக்கு ஏற்ற சிறந்த கார்’ என்கிற தேடலில்தான் பலர் ஷோ ரூம் ஷோ ரூமாக ஏறி இறங்குகிறார்கள். விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுக்குத்தான் நம் நாட்டில் டிமாண்ட் அதிகம்!

காரின் விலையை மட்டும் பூதக் கண்ணாடி கொண்டு அலசி ஆராய்ந்து வாங்கினால் போதுமா? காரை வாங்கிய பிறகு பெட்ரோல், சர்வீஸ், இன்ஷூரன்ஸ் என்று எவ்வளவு செலவு வைக்கும் என்பதையும் அலச வேண்டாமா? இந்தியாவில் தற்போது அதிகமாக விற்பனையாகும் விலை குறைவான 10 கார்களை இப்படி அலசி ஆராய்ந்தோம்.


'காஸ்ட் ஆஃப் ஓனிங் தி கார்’ விவரங்களைக் கணக்கிடுவதற்கு, பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் உத்தேசமாகக் கணக்கிட்டு இருக்கிறோம். இந்த மூன்று ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் எதுவும் இல்லை என்றால், முதலாண்டு பிரீமியத் தொகையில் இருந்து 20 சதவிகிதமும், இரண்டாவது ஆண்டு தொகையில் இருந்து 25 சதவிகிதமும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும்.


பொதுவாக, புதிய காருக்கு எக்ஸ் ஷோ ரூம் விலையிலிருந்து 5 சதவிகிதம் கழித்து 'ஐடிவி’ அதாவது Insured Declared Value தொகை நிர்ணயிக்கப்படும். அதனால், முதல் வருட இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆன்-ரோடு விலையைக் கணக்கிட்டுள்ளோம். அதேபோல், காரின் பெட்ரோல் செலவைக் கணக்கிட... ஆண்டுக்கு 10,000 கி.மீ பயணம் செய்வோம் என்ற யூகத்தின் அடிப்படையில், இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 67.50 என கணக்கில் கொண்டு காருக்கான பெட்ரோல் செலவைக் கணக்கிட்டுள்ளோம்!


 1. மாருதி ஆல்ட்டோ

நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பயணிக்கும்போது, ஆல்ட்டோ பொதுவாக லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ தூரம் பயன்படுத்துவோம் என்ற வகையில், மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக மட்டும் நாம் செலவிடும் தொகை 1,33,221 ரூபாய். ஆல்ட்டோ காரை வாங்கும்போது நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை 8,678 ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக நாம் செலவு செய்யும் தொகை மொத்தம் 22,129 ரூபாய்.
மாருதியைப் பொறுத்தவரை மூன்று இலவச சர்வீஸ் உண்டு. முதல் சர்வீஸை கார் வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். இது பொதுவாக சாதாரண செக்-அப்பாக மட்டுமே இருக்குமே தவிர, காரில் எதையும் மாற்ற மாட்டார்கள்.

இரண்டாவது சர்வீஸ், 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற 1,800 ரூபாய் செலவாகும். மூன்றாவது சர்வீஸ், 10 ஆயிரம் கி.மீ அல்லது ஒரு ஆண்டுக்குள் சர்வீஸ் செய்ய வேண்டும்.  மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 1000 கி.மீ இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கும் சுமார் 1,800 ரூபாய் செலவாகும். அடுத்தடுத்த 10,000 கி.மீ சர்வீஸ்களில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் சர்வீஸ் செய்வதற்கு 3,000 ரூபாய் செலவாகும். அப்படிப் பார்க்கும்போது, 3 ஆண்டுகளில் மாருதி ஆல்ட்டோ காருக்காக நீங்கள் செலவிடும் தொகை 1,64,950 ரூபாய்!

2. மாருதி ஸ்விஃப்ட் 


இந்தியாவில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கப்படும் கார், மாருதி ஸ்விஃப்ட். இது பொதுவாக, லிட்டருக்கு 11.5 கி.மீ  மைலேஜ் தருகிறது. ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஸ்விஃப்ட் காருக்கு பெட்ரோல் நிரப்ப 1,76,086 ரூபாய் செலவு செய்கிறோம். ஸ்விஃப்ட்டைப் பொறுத்தவரை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1,000 கி.மீ; இரண்டாவது சர்வீஸ் 6 மாதங்கள் அல்லது 5,000 கிமீ; மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ என்பதுதான் சர்வீஸ் இடைவெளி. ஆனால், அதன் பிறகு ஸ்விஃப்ட்டில் இருப்பது 'கே-சீரிஸ்’ இன்ஜின் என்பதால், பத்தாயிரம் கி.மீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது. ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை மாற்ற 2,000 ரூபாயும், பத்தாயிரம் கி.மீ-க்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்ய அதிகபட்சமாக 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி காரின் பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டும் நீங்கள் செலவு செய்யும் தொகை சுமார் 12,000 ரூபாய். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் ஸ்விஃப்ட் காருக்காகச் செலவு செய்யும் தொகை 2,20,446 ரூபாய்!


3. டொயோட்டா எட்டியோஸ் லிவா 

டொயோட்டா அறிமுகப்படுத்தி இருக்கும் சின்ன கார் எட்டியோஸ் லிவா. இது பொதுவாக, லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு இன்றைய விலையின்படி நீங்கள் 1,44,642 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுவீர்கள்.

எட்டியோஸ் லிவாவை வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இது இலவச சர்வீஸ் என்பதோடு, ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் எதுவும் மாற்றமாட்டார்கள் என்பதால், சர்வீஸ் செலவு எதுவும் இருக்காது. அடுத்து நேராக 10,000 கிமீ அல்லது 1 ஆண்டில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். 10,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 2,000 ரூபாய் வரை செலவாகும். மூன்றாவது சர்வீஸ் 2 ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். மூன்று இலவச சர்வீஸ் உண்டு என்பதால், இப்போதும் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்றும் செலவு மட்டும்தான்.

மூன்றாவது சர்வீஸ் 30,000 கி.மீ-ல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு உத்தேசமாக, ஜெனரல் சர்வீஸ் என்றால் 5,000 ரூபாய் செலவாகும். ஆக மொத்தம், நீங்கள் மூன்று ஆண்டுகளில் எட்டியோஸ் லிவாவுக்காகச் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,94,845 ரூபாய்!

4. ஹூண்டாய் ஐ10

மாருதி கார்களுக்கு மாற்றாக, வேறு பிராண்ட் கார் தேடுபவர்களின் முதல் சாய்ஸ் ஹூண்டாய் ஐ10. இது லிட்டருக்கு பொதுவாக 14 கி.மீ மைலேஜ் தரும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காகச் செலவிடப்படும் தொகை 1,44,642 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் பொறுத்தவரை, முதல் சர்வீஸ் 2 மாதங்கள் அல்லது 2,000 கி.மீ இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது சர்வீஸில் இருந்து பணம் செலுத்திதான் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி ஆறு மாதங்கள் அல்லது 5,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்தடுத்த சர்வீஸ்கள் 10,000 கி.மீ இடைவெளிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி பணம் செலுத்தி செய்யப்படும் ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்!


5. டாடா நானோ

இந்தியாவின், உலகின் விலை குறைவான கார் டாடா நானோ. இது பொதுவாக லிட்டருக்கு 17.3 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,17,051 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு க்ளெய்ம் எதுவும் செய்யாமல் இருந்தால், உத்தேசமாக 13,191 ரூபாய் செலவு செய்வோம். டாடா நானோவை 1,000 கி.மீ அல்லது 1 மாத இடைவெளிக்கு முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் பிறகு 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்கு சர்வீஸ் செய்ய வேண்டும். 5000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு 1,200 ரூபாய் செலவாகும். மூன்று சர்வீஸ்களுக்குப் பிறகு ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாய் செலவாகும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு டாடா நானோவுக்காக நீங்கள் செலவு செய்யும் உத்தேசமான தொகை 1,44,642 ரூபாய்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD-CH78tf-3RGNkqHW7UTzp2Z4MsbmXuq85AO4HBzWuIQw1TnJEB9nJINcZ1c5QYAIwUhM8umhGR1MrGAazE46Ty11Gnxen8cA_CSLWqi_Zxzoq-NQh7QVDkUUMzsQVLaQsvrF4I8xLReH/s1600/woman+driving.jpg


6. மாருதி வேகன்-ஆர்

வேகன்-ஆர் காரிலும் கே-சீரிஸ் இன்ஜின்தான். மாருதியின் இந்த கார் லிட்டருக்கு, பொதுவாக 14.7 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,37,754 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுகிறோம். மாருதி ஸ்விஃப்ட்டின் அதே சர்வீஸ் ஷெட்யூல்தான் மாருதி வேகன்-ஆர் காருக்கும் பொருந்தும். ஆனால், வேகன்-ஆர் காரை பணம் செலுத்தி சர்வீஸ் செய்ய (பெய்டு சர்வீஸ்) அதிகபட்சமாக 4,000 ரூபாய் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு காரை சர்வீஸ் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். இதன்படி மாருதி வேகன்-ஆர் காரின் மூன்று ஆண்டுகளுக்கான மொத்தச் செலவு 1,75,878.


7. ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கும் கார் ஃபிகோ. இந்த பெட்ரோல் கார் பொதுவாக லிட்டருக்கு 13.15 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோல் செலவு 1,53,992 ரூபாய் செலவாகும். இன்ஷூரன்ஸ் செலவுகளைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 36,516 ரூபாய் செலவாகும். ஃபோர்டு ஃபிகோவின் புத்தம் புதிய இன்ஜினை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல் சர்வீஸ் 2,500 கி.மீ அல்லது 3 மாதங்கள் இடைவெளியில்தான் செய்ய வேண்டும். அதேபோல், ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை 10,000 கி.மீ இடைவெளியில்தான் மாற்ற வேண்டும். ஃபிகோவில் 20,000 கி.மீ அல்லது இரண்டு ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகை உள்ளது. இதன்படி மூன்றாவது ஆண்டில் இருந்துதான் பெய்டு சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் சர்வீஸுக்கு 2,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம், மூன்று ஆண்டுகளுக்கு 2,00,508 ரூபாய் செலவாகும்!


8. ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாயின் விலை குறைவான சின்ன கார் சான்ட்ரோ. இந்த காரைப் பொருத்தவரை பொதுவாக, லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு சான்ட்ரோவுக்கான பெட்ரோல் செலவு ரூ.1,33,221. மூன்று ஆண்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் செலவு உத்தேசமாக 32,154 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் போலவேதான் ஹூண்டாய் சான்ட்ரோவின் சர்வீஸும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் செலவுகளைப் பொறுத்தவரை சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் செலவு 10,000 ரூபாயைத் தாண்டும். பெட்ரோல், இன்ஷூரன்ஸ், சர்வீஸ் செலவுகளைச் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கான செலவு மொத்தம் 1,75,375 ரூபாய்!


9. செவர்லே பீட்

மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் என்ற உத்திரவாதத்துடன் விற்பனையாகும் கார் செவர்லே பீட். இது பொதுவாக லிட்டருக்கு 13.4 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவு சுமார் 1,51,114 ரூபாய். இன்ஷூரன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35,797 ரூபாய். சர்வீஸைப் பொறுத்தவரை கார் வாங்கும்போதே மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகைக்காக 16,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ-க்கு ஆயில், ஆயில் ஃபில்டர் உள்பட அனைத்து செலவுகளையும் இலவசமாகவே செய்து கொள்ளலாம்!


10. டாடா இண்டிகா

டிராவல்ஸ் மார்க்கெட்டில் மட்டுமல்ல, பயணிகள் கார் மார்க்கெட்டிலும் இண்டிகா அதிகமாக விற்பனையாகும் கார். பயணிகள் கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை பெட்ரோல்தான் அதிகமாக விற்பனையாகும் கார். டாடா இண்டிகா ஸெட்டா, பொதுவாக லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,44,642 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு உத்தேசமாக 26,574 ரூபாய். டாடா இண்டிகாவை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்த சர்வீஸ் 5000 கி.மீ அல்லது 6 மாதங்களில். அடுத்து 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ-ல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாயும் செலவாகும். இண்டிகாவைப் பொறுத்தவரை 4 இலவச சர்வீஸ்கள் உண்டு. நான்காவது சர்வீஸுக்கு 3,700 ரூபாயும், ஐந்தாவது ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 14,000 ரூபாய் சர்வீஸுக்கென்று செலவாகும். மூன்று ஆண்டுகள் முடிவில், நீங்கள் காருக்காகச் செலவு செய்த தொகை 1,85,216 ரூபாய்!

thanx - nanayam vikatan

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzP10nJqiBzgd_e7qUqumF219-kbcnD_1_t0G79vwvx-9e_xfCe7xzE2oNPT4Ky24w6WYq9OkT80kmXKDElXEj3ChYgalaTyQl79udwuwmVj0B22r2Q6_MnHrLOzki-1Pksb1P0QBbsNmK/s1600/Beautiful+car+and+a+Beautiful+Women+In+Automotive+Cars.jpg

Saturday, July 02, 2011

ஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி?

நீங்கள் காரோட்ட லைசென்ஸ் வைத்திருக்கலாம். காரும் நன்றாக ஓட்டத் தெரிந்திருக்கலாம். ஆனால், தவறிழைக்காமல் கார் ஓட்டுகிறீர்களா என்று கண்டுபிடிப்பது எப்படி? அதற்காக, காரைக் கையில் கொடுத்து, 'தவறு செய்யாமல் கார் ஓட்டுங்கள் பார்ப்போம்’ என்று ரிஸ்க் எடுக்க முடியாது! 


ஆனால், டிரைவிங் சிமுலேட்டரில் உட்கார வைத்தால், நீங்கள் எப்படிப்பட்ட டிரைவர் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இது உங்களைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அல்ல... உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும், உண்மையில் கார் ஓட்டும்போது இன்னும் கவனமாக இருக்கவும் டிரைவிங் சிமுலேட்டரில் பயிற்சி எடுப்பது நல்லதுதான்.

கார் ஓட்டக் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும், ஏற்கெனவே கற்றுக் கொண்டவர்களுக்கும் தினசரி அரை மணி நேரம் வீதம் மொத்தம் 5 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறது சென்னை அண்ணா சாலையில் இருக்கும் AASI அமைப்பு (ஆட்டோமொபைல் அசோஸியேஷன் ஆஃப் சவுத் இந்தியா). டிரைவிங் சிமுலேட்டர் மூலம் பயிற்றுவிக்கப்படும் இந்த கோர்ஸை முடித்துவிட்டால், சாலையில் காரோட்டும்போது பயம், படபடப்பு போன்ற டென்ஷன் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் இருக்க இந்தப் பயிற்சி நிச்சயம் உதவும். 

'எனக்கு நன்றாக காரோட்டத் தெரியும்’ என்று சவால் விட்ட சிலரை டிரைவிங் சிமுலேட்டரில் அமர வைத்து ஓட்டிக் காட்டச் சொன்னபோது....

''நான் கார் டிரைவிங் முறையா முடிச்சவன். இந்த சிமுலேட்டர்ல ஓட்டினா எந்தத் தப்பும் இல்லாமல் ஓட்டுவேன்'' என்று கூறிவிட்டு முதலில் களம் இறங்கினார் சரவணன். உட்கார்ந்த உடனே கியர் மாற்றி கிளம்பியவர் இரண்டே நிமிடங்களில் ஒரு காரில் மோதினார் (ஸ்கிரீனில்தான்). இருந்தாலும். இரண்டாவது முறையும் முயல... மீண்டும் ஒரு அட்டாக். மூன்றாவதாக, மெதுவாக ஓட்டியபடி செல்ல... கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் வரை எந்த சிக்கலும் இல்லாமல் சென்று பயணத்தை நிறைவு செய்தார்.


''நான் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறேன். நிறைய பேருக்குப் பலதரப்பட்ட கார்களை வைத்து டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால், இந்த சிமுலேட்டரில் உட்கார்ந்து ஓட்டிய பிறகுதான் தவறு செய்வது தெரிகிறது'' என்று நல்ல பிள்ளையாக ஒப்புக்கொண்டார் சரவணன்.

ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் லட்சுமி ஒருவித நடுக்கத்தோடு வந்தமர்ந்தாலும், இரண்டு மூன்று சிக்னல் வரை மிகச் சரியாக டிரைவ் செய்தார். 20 கி.மீ தூரம் எந்தத் தடங்கலும் இல்லாமல் ஓட்டிச் சென்றவர், சிமுலேட்டரில் இருந்து மனமில்லாமல் இறங்கினார். ''எப்பவுமே பரபரப்பா, வேகமாதான் காரை டிரைவ் பண்ணுவோம்.

 

ஆனா, இங்க எந்தவிதமான டென்ஷனும் இல்லாம கவனமா நான் ஓட்டினதாலதான் இவ்வளவு தூரமும் எந்த ஒரு இன்ஸிடன்ட்லேயும் மாட்டாம வந்திருக்கேன். ஸோ, மித வேகம் மிக நன்று!'' என சீரியஸாக லெக்சர் கொடுத்தார்.

அடுத்ததாக களம் இறங்கினார் சீனு (சாஃப்ட்வேர் டீம் லீடர்), சிமுலேட்டரில் உட்கார்ந்த உடனே கடமை கண்ணாயிரமாக சீட் பெல்ட்டை மாட்டியவர், சீட்டை அட்ஜஸ்ட் செய்தபடி, ''நான் டிராஃபிக்லதான் கார் ஓட்டுவேன்'' என அடம்பிடிக்க... சிமுலேட்டர் டிரெய்னர் சோமநாதன் டிராஃபிக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துத் தந்தார். ஆரம்பத்தில் அழகாக கார் ஓட்டியவர், இரண்டாவது கியர் மாற்றிப் போகும்போதே ஒரு திருப்பத்தில் இருந்து ஒரு கார் வர... பயந்து போய் சட்டென பிரேக் போட்டார். 

எல்லோரும் 'சபாஷ்’ என அவரைத் தட்டிக்கொடுக்க... சிறிது நேரத்தில் அவருடைய டார்கெட் தூரத்தை நிறைவு செய்தார். ஆனால், அவர் இரண்டாவது கியரைத் தாண்டவே இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

''என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட சிட்டியில காரை டிரைவ் செய்யும்போது, டாப் கியர் வரைக்கும் நல்ல ஸ்பீட்ல ஓட்டி இருக்கேன். இப்போதான் புரியுது, அது எவ்வளவு பெரிய தவறுன்னு! சிட்டி டிராஃபிக்ல நிதானமான வேகத்துல போனாலே போதும். நம்மை நாம பாதுகாத்துக்கணும்னா கவனமா இருக்கணும்ங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றா£ர் சீனு.

பயங்கர பில்டப்போடு சிமுலேட்டரில் ஏறினார், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான சாய்கிருபா. ''நானும் சிட்டி டிராஃபிக்லதான் ஓட்டுவேன். எனக்கு ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி!'' என டயலாக் விட்டபடி சிமுலேட்டரில் அமர்ந்தார். ''கியர் ஒழுங்காக அமைந்தாலும், சடர்ன் டிராஃபிக் மற்றும் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதால், இரண்டு முறை விபத்து ஏற்படுத்தினார். 

இருந்தாலும், ''வீராங்கனைக்கு இதெல்லாம் சகஜம்ப்பா!'' என்றபடி மீண்டும் ஸ்பீடு எடுத்து 10 கி.மீ வரை சென்று ''வெற்றி வெற்றி'' என சந்தோஷக் கூச்சலிட்டார்.

சிமுலேட்டர் டிரெய்னரான சோமநாதன் இதன் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் விளக்கினார்.

'புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இந்த சிமுலேட்டர். ஆனால், கார் ஓட்டுவதில் ஏற்படும் தவறுகளைக் களைவதற்காக கற்றுக்கொள்ள வருபவர்கள் அதிகம்.

இதில் காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இருப்பதால், உண்மையாகவே காரோட்டுவது போன்ற ஃபீல் இருக்கும். முன் பக்கம் ரோடு அமைந்திருக்கும் வழியைப் போலவே, மானிட்டரில் ஒவ்வொரு பாதையும் அமைந்திருக்கும். அதனால், ஏற்கெனவே டிரைவிங் தெரிந்திருந்தாலும் இதில் பழகுவதன் மூலம் நமது டிரைவிங் ஸ்டைலை மெருகேற்றலாம்!'' என்று கூறி முடித்தார்.


thanx-motor vikatan

Wednesday, April 27, 2011

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?




புது காரில் புகை! என்ன செய்வது?

1. அடகுக் கடைகளில் ஆங்கிலத்தில் கண்டிஷன் களை எழுதி கையெழுத்து வாங்குகிறார்கள். இதை தமிழில் எழுதித் தரவேண்டும் என்று கேட்க முடியுமா?

-ஆனந்த் ராஜ், போரூர்
.
''நிச்சயம் கேட்க முடியும். காரணம், இன்றைக்கு பட்டித்தொட்டிகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன அடகுக் கடைகள். கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கேற்ப அடகு வைக்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 பான் புரோக்கர் என்று சொல்லப்படும் சிறிய அடகுக் கடைகளாகட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகட்டும், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில்தான் கையெழுத்து வாங்குகிறார்கள்.
நம் மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் இது மாதிரியான அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள். அவர்கள் எளிதில் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்துத் தந்தால், பிற்பாடு ஏற்படும் சச்சரவுகள் உருவாகாமலே தடுக்க முடியும். மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் விதிமுறைகள் இந்தியில் அச்சடிக்கப்பட்டு கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழில் அச்சடித்துக் கொடுக்க முடியாது? ஆனால், அடகு வைக்கிறவர்கள் இதை வாய் திறந்து கேட்டால் மட்டுமே கிடைக்கும்.''


2. வாஷிங்மெஷின் ரிப்பேராகி விட்டது. இப்போது கேட்டால் அந்த மாடலை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது என்கிறார்கள். இவர்கள் மாடலை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக நான் பாதிப்படைய முடியுமா?

-பிரபாகர், காரைக்கால்
.
''உங்கள் வாதம் சரியானதே. வாஷிங்மெஷினில் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட தங்களுடைய இஷ்டத்துக்கேற்ப பல மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. சில மாடல்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு நிறைய விற்பனையா கின்றன. இன்னும் சில மாடல்கள் கன்ஸ்யூமர் களிடம் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது.

 ஆனால், திடீரென  உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால், பழைய வாஷிங்மெஷினையோ, வாகனத்தையோ வாங்கிக் கொண்டு புதியதை கொடுக்கும்படி கேட்கும் உரிமை கன்ஸ்யூமர்களுக்கு நிச்சயம்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.''


3. கடந்த ஜூலை மாதம் முதல் எனது செல்போனில்  நெட்வொர்க் பிராப்ளம் என்று வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ முறை புகார் செய்தும், மெயில் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. என் குறை தீர என்ன செய்வது?

-அன்பு, கும்மிடிப்பூண்டி
.
''டிராய் என்று சொல்லப்படுகிற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும்  நோடல் ஆபீஸர் என்று ஒருவரை நியமித்திருக்கிறது. இந்த நோடல் ஆபீஸர்களின் வேலையே செல்போன் நிறுவனங்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே. ஏர்டெல் நிறுவனத்துக்கு சென்னை சாந்தோமில் அலுவலகம் இருக்கிறது.

 ஏர்செல் நிறுவனத்துக்கு கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி என பல நகரங்களில் நோடல் ஆபீஸர்கள் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் புகுந்து தேடினாலேயே இந்த நோடல் ஆபீஸர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி, அவர்களின் போன் நம்பர் என அனைத்தும் கிடைத்துவிடும். செல்போன் சர்வீஸ் தொடர்பான எந்த குறையாக இருந்தாலும் இந்த நோடல் ஆபீஸரிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.''


4. சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கினோம். வாங்கிய மறுநாளே காரிலிருந்து புகை வந்தது. இதுபற்றி புகார் செய்து, பத்து நாளைக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்கள். இதோ, அதோ என்று நான்கு நாட்கள் இழுத்தடித்துதான் சரி செய்து கொடுத்தார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு புது காரை வாங்கினோம் என்கிற மகிழ்ச்சியே எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் என்ன செய்ய?
-லலிதா, வளசரவாக்கம்
.
''இது மாதிரியான விஷயங்களில் நம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். புத்தம் புதிய காரை முதல் முறையாக வெளியே எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து புகை வருகிறது என்றால் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, கார் வாங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து, உடனடியாக வந்து காரை சரி செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.

 அவர்கள் வந்து சரி செய்து கொடுக்கும்வரை காரை அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டேன் என்று சொன்னால், வேறு வழியில்லாமல் ஓடிவருவார்கள். அப்படி வந்து சரி செய்து கொடுப்பதோடு பிரச்னையை விட்டுவிடக்கூடாது.

'காரிலிருந்து மீண்டும் புகை வராது என்பதை உறுதிப்படுத்த 100 கி.மீட்டருக்காவது தன்னோடு பயணம் செய்ய வேண்டும்’ என்று கேளுங்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னால், இந்த காரை எடுத்துக் கொண்டு புது காரை கொடுக்கும்படி கேளுங்கள். இப்படி கேட்பது கார் நிறுவனம் வேண்டுமானால் அநியாயம் என்று நினைக்கலாம்.

 ஆனால், கன்ஸ்யூமரை பொறுத்தவரை, இதெல்லாம் நியாயமான கோரிக்கைகளே. இந்த விஷயத்தை நீங்கள் இப்படி டீல் செய்யும் பட்சத்தில் நீங்கள் புகார் செய்தவுடன் உங்களைத் தேடி வந்து பிரச்னையை சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அநாவசியமாக நீங்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது!''

நன்றி - மோட்டார் விகடன்