Friday, March 04, 2011

சிங்கம் புலி - லேடி சபலிஸ்ட் கதை - சினிமா விமர்சனம் 18 பிளஸ்


http://www.tamilcinemanews.in/wp-content/uploads/2010/12/singam_puli_posters_wallpapers_01_thumb.jpg 
படத்தோட முதல்  2 ரீல் ஓடுனதுமே பயந்துட்டேன்.. வாலி படக்கதைதானோன்னு..நல்ல வேளை இயக்குநர் சுதாரிச்சு திரைக்கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் குடுத்து கதையின் போக்கையே மாற்றி டபுள் ஆக்ட் ஆள்மாறாட்டக்கதை லேபிள்ல இருந்து லேடி சபலிஸ்ட் ஆண்ட்டி ஹீரோவின் கதையா மாத்தி படத்தை காப்பாத்தீட்டாரு.

ஒரு ஜீவா கள்வனின் காதலி எஸ் ஜே சூர்யா மாதிரி,கண்ணுல படற பொண்ணுங்களை எல்லாம் பிராக்கட் போட்டு கரெக்ட் பண்ணி ,பூஜையை முடிச்சுட்டு கழட்டி விட்டுடுவாரு..இன்னொரு ஜீவா நேர்மையானவரு.நேர்மையான ஜீவாவோட காதலியை வில்லன் ஜீவா ஏதாவது பண்ணிடுவாரோ?ன்னு ஆடியன்ஸ் கிட்டே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு  வேற மாதிரி கதையை கொண்டு போயிடறாரு.

முதல் கண்டனம் இயக்குநருக்கு....காதலை,பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு.... ஹீரோயினை முதன் முதலா பார்க்கற ஹீரோ காதல் வசப்படற கண்றாவியைக்கூட மன்னிச்சிடலாம்,ஆனா 2வது முறை பார்க்கறப்ப பிரா 2 டஜன் கிஃப்ட்டா வாங்கித்தர்றதும்,3வது சந்திப்புலயே அந்தப்பொண்ணு தேடி வந்து ஐ லவ் யூ சொல்றதும் சகிக்கல..

(எந்தகாதலனாவது ரோஜா குடுக்காம பிரா தருவானா?)

அப்புறம் இயக்குநர் செஞ்ச 2வது தப்பு கதையை நல்லவனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போகாம வில்லனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7H5v2UHyPoMDZQ-HMWZ3NbENZllvUrGQ92ozFyJrvxR2wP1I0SLGq33N8DY0P-YIM9FeBXIoJ5cx4AhPPmFaZOh2Bf-VSFleWcFdjcjdn3iT8IK7BOr24dczNROuDj7ScKz4FgSOjVk8/s1600/tamil+movie+Singam+Puli00-16.jpg
ஆனா சந்தானம் காமெடியும்,பல சுவராஸ்யமான காட்சிகளும் படத்தை காப்பாத்திடுது.படத்தோட ஓப்பனிங்க் சீன்ல தர்மத்தின் தலைவன் ரஜினி (பேராசிரியர் கேரக்டர்) மாதிரி பக்திப்பழமா வர்ற ஜீவா வீட்டை விட்டு வெளில கிளம்புனதுமே தடால்னு ஆப்போசிட் கெட்டப் & கேரக்டரா மாறும் சீன் செம கலகல...

சந்தானம் நிறம் மாறாத பூக்கள் விஜயன் கெட்டப்ல வரும்போது தியேட்டரே அதிர்கிறது கைதட்டலால்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஜீவா டம்மியாக தெரிவது இயக்குநரின் தவறல்ல... அதே போல் சந்தானம் வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குநர் சொல்லிக்கொடுத்துப்பேசுவது மாதிரியே இல்லை...எஸ் வி சேகர் இயக்கும் நாடகங்களில் அவர் அதீத ஆளுமை செலுத்துவது போல் (OVER DOMINATION) சந்தானம் செலுத்தும் டாமினேஷன் வளரும் நகைச்சுவை நடிகர்கள்,குறும்பட இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று... 

ஹீரோ- ஹீரோயின் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளில் ஹீரோயினுக்கு காதல் உணர்வு வந்த மாதிரியே தெரியவில்லை.விரக தாபம் வந்த அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சனா மாதிரி அவர் செய்யும் மூவ்மெண்ட்ஸ்,முக பாவனைகள் (FACE EXPRESSIONS) டூயட் காட்சிகள்,காதல் காட்சிகள் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கான பாடம்.

இடைவேளை வரை தட்டுத்தடுமாறிய இயக்குநர் படத்தின் பின் பாதியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.தான் தப்பிப்பதற்காக உடன் பிறப்பையே ஆள் வைத்து போட்டுத்தள்ள வில்லன் ஜீவா முடிவு எடுத்த பிறகு படம் ஸ்பீடாகிறது.அப்புறம் வழக்கமான ஆள்மாறாட்டம்,குழப்பம் என படம் மாமூல் மசலா பாணியில் போகிறது.

http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/12/Singam-Puli-Movie-Stills-20.jpg
வசனகர்த்தா பாராட்டு பெறும் இடங்கள்

1.  எப்படி என் தார்மீக சிந்தனை..?

சந்தானம் - டேய்.. தர்பூஸ் மணடையா...நீ எல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சுட்டியா?

2. அப்பா.. அப்போ நான் வீட்ல இருக்கறது உனக்கு பிடிக்கலை?

ஆமா....

அப்போ... நீ வீட்டை விட்டு போயிடு....

ஹூம்.. உன்னைப்பெத்ததுக்கு நான் தூக்குல தாண்டா தொங்கனும்...

எங்கே.. சொல்லீட்டு இருக்கே,. செய்ய மாட்டேங்கறியே...

3, சந்தானம்- பசங்க சூசயிடு பண்ண பத்து ரூபா குடுத்து பாய்சன் வாங்கறது எல்லாம் அந்தக்காலம்..ஒரு ரூபா குடுத்து ரோஜாப்பூ வாங்கி ஒரு ஃபிகர் கைல குடுத்து ஐ லவ் யூ சொன்னான்னு வெச்சுக்கோ.. மேட்டர் ஓவர்.. அவளே அவனை கொன்னெடுத்துடுவா...
 

4.ஜொள்ளு ஜீவா  - எப்படிங்க.. இப்படி..? எதெது எங்கே எங்கே இருக்கனுமோ அதது அங்க அங்கே இருக்கு...நான் தெரியாம தான் கேட்கறேன் ,நீங்க பிரம்மா பெத்த பொண்ணா?

5.  ஜொள்ளு ஜீவா - காதல்ங்கறது  ஒரு தடவை தாண்டா வரும்... இப்பவாவது நம்பறியா? நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்னு..?

சந்தானம்-லவ் டுடே டயலாக்கை பேசினா யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா?
http://www.movieupdates.in/wp-content/uploads/2010/12/04_singam_puli_posters_wallpapers_jeeva_divya_spandana.jpg
6.  ஜொள்ளு ஜீவா  - எனக்காக இந்த உதவியை செய்டா.. என் காதலை அவ கிட்டே சொல்டா...

சந்தானம்- உனக்காக இல்லைன்னாலும்,ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களோட கற்பை காப்பாத்தவாவது உதவறேன்...

7.  ரிசப்ஷனிஸ்ட் - உங்களுக்கு என்ன வேணும்? அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவங்க பிஸியா இருக்காங்க...

சந்தானம்- அப்போ நீங்க ஃபிரீயா மிஸ்....

8. சந்தானம்-  ஒன்றரை டஜன் பிரா குடுங்க... என்ன.. எல்லாம் வெள்ளைல தர்றீங்க.. கலர் கலரா குடுங்க... ஏன்னா அது ஒரு கலர் ஃபுல் ஃபிகரு

9. எதுக்காக எனக்கு பிரா வாங்கித்தந்தீங்க?

நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)


10. டியர்.. உன்னைத்திட்டுனாக்கூட எனக்கு வலிக்குமேன்னு உன்னை ஒண்ணும் சொல்றதில்லை...உன்னை நினைச்சு சாவேனே தவிர மறந்துட்டு வேற ஒரு பொண்ணு கூட வாழ மாட்டேன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmlUbRQ40Bo5vBEmx4qaJkgyqjFBkLnr_PW6AL57DCUmtQgWchohVhRs7HaC39XSmCoFyOyzbAiS722xYZQc6ibSU893daSFzxlz5_iBbrmhJhnGMLEorvh5V7IZz7IHtt4C8CLGgaZg/s400/Singam-Puli-Movie-Stills-2.jpg
11. ஹூம்.. எங்கப்பன் என்னைப்பற்றி நல்லது சொன்னாலே நம்ப மாட்டான்...

12..லேடி போலீஸ்  - (லாக்கப்பில்) டேய்.. டிரஸ்ஸை கழட்டுடா....

சந்தானம்-  மேடம்.. கை வசம் காண்டம் இல்லை.. ஓக்கேவா?

13. சந்தானம்- இவன் கிட்டே இருந்து ஊர்ப்பெண்களைக்காப்பாற்ற போலீஸ் கிட்டே புகார் பண்ணுனோம்..ஆனா இவன் அந்த லேடி போலீஸையே கரெக்ட் பண்ணீட்டானே..?

14.. ஹீரோயின் - என்னது வந்தது.. நீங்க இல்லையா? அவனா? அப்பவே நினைச்சேன்..

ஹீரோ - ஆமா.. இப்போ சொல்லு.. நனைச்சேன், காயப்போட்டேன்னு...

15. மேடம்.. முருங்கைக்காய் ஃபிரஸ்சா இருக்கு வேணுமா?


ஆஹா கஸ்டமரை என்னமா கவர் பண்றாண்டா....

16.   மேடம்.. வெறும் டீ மட்டும் தானா? டிஃபன் கிடையாதா?

இருந்து ஃபுல் மீல்ஸே சாப்பிட்டுட்டு போங்க...

http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_29539.jpg
17. மிஸ்.. இந்த ஃபோன் டச் ஃபோனா?                    ஆமா....

ஃபிரஸ் பீஸா?                                                                     ம்.. பார்த்தா எப்படி தெரியுது?

18.என்னது ?இவங்க லேடி போலீஸா? யூனிஃபார்ம் போட்டுட்டு ஏன் வர்லை?

சந்தானம்-  ம்.. துவைக்கறதுக்காக அவங்க புருஷன் கிட்டேகுடுத்துட்டு வந்திருக்காங்களாம்.. யாருக்கு தெரியும்..? ஹூம்.. விதி வீணை வாசிக்கும்போது,செக்கிங்க் ஷேர் ஆட்டோல வந்துடுச்சு....

19. சந்தானம்-  (பெட்டிக்கடைக்காரரிடம்) டேய்.. சிகரெட்டை எடு...

காசு?

சந்தானம்- - காசு வேணாம்,சிகரெட் மட்டும் குடு  போதும்

20. சந்தானம்- - சரக்கு அடிக்கறதே தப்பு.. இதுல எதுக்கு தண்ணீரை கலக்கனும்?உடம்புக்கு கெடுதல். அப்படியே சாப்பிடலாம்.

21. சந்தானம்- டேய் மாப்ளே.. என் மூஞ்சில ஒருத்தன் நலங்கு வெச்சுட்டான். ஃபோனை வெச்சுட்டு உடனே வாடா...

22. ஹீரோயின் - அவனை அணைச்சிட்டு வாழறதுதான் வாழ்க்கைன்னு இல்லை.வாழ்நாள் முழுதும் நினைச்சுட்டு வாழ்றதுதான் வாழ்க்கை.

23. சந்தானம்- (பெண் வேஷத்தில்) நான் லவ் பண்ற பொண்ணை எங்கே இவன் உஷார் பண்ணீடுவானோன்னு பயந்தா இப்போ என்னையே உஷார் பண்ணீடுவான் போல...

24. தூக்குல தொங்கிடுவேன்,மாத்திரை சாப்பிட்டுடுவேன்ன்னு சொல்லி இன்னும் எத்தனை லவ்வர்ஸை கொல்ல நினைக்கறீங்க?இப்படி மிரட்டி மிரட்டி லவ்வை சாகடிக்கறதே பெற்றோர்களுக்கு பொழப்பா போச்சு.

25.சந்தானம் - என்னது? அவர் ஜெண்டில்மேனா? அப்போ நான் குஞ்சு மோகனா?

உங்களை அவர் கிட்டே சொல்லி தோலை உரிக்க சொல்றேன்..

சந்தானம்-  ஆமா.. நான் என்ன வாழைப்பழமா?


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/hansikamotwani-1.jpg

பாடல் காட்சிகளில்  ஃபாரீன் ஃபிகர்களை இளசாக இறக்கி ஆட விட்டதில் இயக்குநரின் ரசனை தெரிகிறது.ஃபிகரு கிடைச்சுட்டா கூசாம பொய் சொல்லுடா பாட்டு ஓப்பனிங்க் அசத்தல்

பூவே பூவே போதை ஏற்று பூவே செம கிக்கான பாட்டு

வர்றாளே வர்றாளே ஜில் ஜில் சிங்காரி பாட்டு செம டப்பாங்குத்து.

ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப்பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல்.பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.அந்த ஃபிகரையும் ஹீரோ கரெக்ட் பண்றார்..(!!)

ஜொள்ளு ஜீவா கேரக்டர் ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி மேத்தமேட்டிக்ஸ் முடிச்சு கிளம்பறப்ப அந்த ஆண்ட்டியின் மகள் வருவதும் அவள் ஹீரோ ஏற்கனவே கரெக்ட் பண்ணுன ஃபிகர் என ஹீரோவுக்கு தெரிவதும் தியேட்டரில் கை தட்டலைப்பெற்று தந்தாலும் கலாசார சீர்கேட்டுக்கு வித்திடுன் சீன்.

அந்தக்கொடுமை போதாதென்று அந்த சீனில் ஒரு ஆள் மாடு,கன்னுக்குட்டி ரெண்டையும் ஓட்டிட்டுப்பொற மாதிரி காட்சி வைத்து கே பாலச்சந்தர் ரேஞ்சுக்கு டைரக்‌ஷன் டச் வைத்து விட்டதாய் இயக்குநர் மனதில் நினைத்திருந்தால் .....சாரி...

ஜீவாவுக்கு இது வித்தியாசமான 2 வேடம்.நல்லா பண்ணி இருக்கிறார். வக்கீலாக,மீன் விற்பவராக 2 கேரக்டரில் வருபவர் பல இடங்களில் ஒரே மாதிரி சேரி பாஷையில் பேசுவது கேரக்டர் ஸ்டடி இன்னும் பத்தாது என்பதையும்,அர்ப்பணிப்பு உணர்வு இன்னும் தேவை என்பதையும் காட்டுகிறது.

ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

54 comments:

Thirumalai Kandasami said...

வெற்றிகரமா ஒரு தமிழ் படம்( சிங்கம் புலி ),குஜராத் வடோதராவில் ரிலீஸ் பண்ணிட்டாங்க..மொக்க படமா இருந்தாலும் நான் பொய் பாப்பேன் .
தமிழுக்காக..

Speed Master said...

//நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)


தகவல் களஞ்சியம் நீங்கள்

Thirumalai Kandasami said...

குஜராத் - வடோதரா நண்பர்களுக்கு,,இந்த படம் fatehgunj - செவென் சீஸ் மால் - fame ல ரிலீஸ் பன்னிருக்காங்க ...என்ஜாய்..

Unknown said...

தல 3 மணிக்குன்னு சொல்லிட்டு 4 மணிக்கு போஸ்ட் போடறீங்களே? நியாயமா????

செங்கோவி said...

படம் பார்க்கலாமா..வேணாமா..//பார்க்கறப்ப பிரா 2 டஜன் கிஃப்ட்டா வாங்கித்தர்றது// என்னங்க இது..மறுபடியுமா..பதிவுலகை நிம்மதியா இருக்கவிட மாட்டாங்க போலிருக்கே...

Unknown said...

வாங்க ப்ரொபசர் நடத்துங்க ப்ரோபாசர் ஹி ஹி!

என்னடா பள்ளிக்கூடத்துக்கு போன புள்ளைய இன்னும் காணுமேன்னு பாத்தேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>>இரவு வானம் said...

தல 3 மணிக்குன்னு சொல்லிட்டு 4 மணிக்கு போஸ்ட் போடறீங்களே? நியாயமா????


சாரி.. சைட் அடிக்க்றப்ப....சாரி எகெயின்... டைப் அடிக்கரப்ப லேட் ஆகிடுச்சு, இதுக்காக வலை உலகம் சார்பா பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கறேன்...( நற நற)

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வாங்க ப்ரொபசர் நடத்துங்க ப்ரோபாசர் ஹி ஹி!

என்னடா பள்ளிக்கூடத்துக்கு போன புள்ளைய இன்னும் காணுமேன்னு பாத்தேன் ஹிஹி!

பய புள்ள மைனஸ் ஓட்டு போட்டும் அடங்கமாட்டேங்குதே

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

குஜராத் - வடோதரா நண்பர்களுக்கு,,இந்த படம் fatehgunj - செவென் சீஸ் மால் - fame ல ரிலீஸ் பன்னிருக்காங்க ...என்ஜாய்..

துரை இங்கிலீஷ்ல பேசுது.. நான் எஸ்கேப்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் வித்தியாசமான வியூவ்ல எழுதி இருக்கீங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சபலிஸ்ட் னு ஒரு ஆங்கில வார்த்தையா? புதுசா இருக்கே! அப்போ கமல் ரசிகன கமலிஸ்ட் னு கூப்பிடலாமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹீரோ- ஹீரோயின் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளில் ஹீரோயினுக்கு காதல் உணர்வு வந்த மாதிரியே தெரியவில்லை.விரக தாபம் வந்த அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சனா மாதிரி அவர் செய்யும் மூவ்மெண்ட்ஸ்,முக பாவனைகள் (FACE EXPRESSIONS) டூயட் காட்சிகள்,காதல் காட்சிகள் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கான பாடம்.

அப்டீன்னா நான் படம் பார்க்க மாட்டேன்!

Unknown said...

ஓஹோ அந்தளவுக்கு படம் ஒடப்போகுதா??

Unknown said...

ஆமா அவங்க யாரு கீழ அவித்து போட்டு ஆடுறாங்க ??

Unknown said...

இன்னிக்கு ஓசில சான்ஸ் கிடைச்சும் நான் போகல பாஸ்..

அசின்+சல்மான்+விஜய்+ஓட்டு+ஓட்டுறாங்க
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post.html

Unknown said...

//அவனை அணைச்சிட்டு வாழறதுதான் வாழ்க்கைன்னு இல்லை.வாழ்நாள் முழுதும் நினைச்சுட்டு வாழ்றதுதான் வாழ்க்கை.//
நல்ல வாழ்க்கைடா சாமியோவ்

செல்வா said...

இதுலயும் இயக்குனருக்குக் கண்டனமா ? ஹி ஹி .. சரி சரி ..

Riyas said...

//ஒரு ஆள் மாடு,கன்னுக்குட்டி ரெண்டையும் ஓட்டிட்டுப்பொற மாதிரி காட்சி//

ஆஹா இப்டி காட்சியெல்லாம் இருக்கா அப்போ ஓலகப்படம்ன்னு சொல்லுங்க..

செல்வா said...

//நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)//

உங்க நியாபக சக்த்திக்கு ஒரு அளவே இல்லாம போச்சு அண்ணா !!

Riyas said...

ஹீரோயினை பத்தி ஒன்னும் சொல்லல்லயே

இதை வண்மையாக கண்டிக்கிறோம்..

செல்வா said...

இது என்ன வெறும் சந்தானம் வசனமாவே இருக்கு ... ஒருவேளை சந்தானம்தான் ஹீரோவா ? ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

present

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

Unknown said...

//படத்தோட முதல் 2 ரீல் ஓடுனதுமே பயந்துட்டேன்.. வாலி படக்கதைதானோன்னு//

//அதே போல் சந்தானம் வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குநர் சொல்லிக்கொடுத்துப்பேசுவது மாதிரியே இல்லை...எஸ் வி சேகர் இயக்கும் நாடகங்களில் அவர் அதீத ஆளுமை செலுத்துவது போல் (OVER DOMINATION) சந்தானம் செலுத்தும் டாமினேஷன் வளரும் நகைச்சுவை நடிகர்கள்,குறும்பட இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று... //


எதுக்காக எனக்கு பிரா வாங்கித்தந்தீங்க?

//நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)//

//ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப்பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல்.பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.//

//ஜொள்ளு ஜீவா கேரக்டர் ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி மேத்தமேட்டிக்ஸ் முடிச்சு கிளம்பறப்ப அந்த ஆண்ட்டியின் மகள் வருவதும் அவள் ஹீரோ ஏற்கனவே கரெக்ட் பண்ணுன ஃபிகர் என ஹீரோவுக்கு தெரிவதும் தியேட்டரில் கை தட்டலைப்பெற்று தந்தாலும் கலாசார சீர்கேட்டுக்கு வித்திடுன் சீன்.//

//அந்தக்கொடுமை போதாதென்று அந்த சீனில் ஒரு ஆள் மாடு,கன்னுக்குட்டி ரெண்டையும் ஓட்டிட்டுப்பொற மாதிரி காட்சி வைத்து கே பாலச்சந்தர் ரேஞ்சுக்கு டைரக்‌ஷன் டச் வைத்து விட்டதாய் இயக்குநர் மனதில் நினைத்திருந்தால் .....சாரி...//

கலக்கல் விமர்சனம் !

சந்தானம் காமெடிக்காக evening ஷோ போலாம்ன்னு இருந்தேன்...
டயலாக்கைப் போட்டு இங்கயே சிரிக்க வச்சிடீங்க CPS

தமிழ் 007 said...

படம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனம் நல்லா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//முதல் கண்டனம் இயக்குநருக்கு....காதலை,பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு....//

இதை நீரே சொல்வதால் நம்புறோம்....

சி.பி.செந்தில்குமார் said...

@ யோவ் மனோ அதென்னா நீரே...நான் அவ்வளவு கேவலமா?

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா இப்பிடி விமர்சனம் போட எவளவு கமிஷன் வாங்குனீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
@ யோவ் மனோ அதென்னா நீரே...நான் அவ்வளவு கேவலமா?//

அவளவு கேவலமா நீரு சொல்லவே இல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
இது என்ன வெறும் சந்தானம் வசனமாவே இருக்கு ... ஒருவேளை சந்தானம்தான் ஹீரோவா ? ஹி ஹி//

உன் ரசனையே தனிதாம்டே மொக்கையா....

MANO நாஞ்சில் மனோ said...

//Speed Master said...
//நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)


தகவல் களஞ்சியம் நீங்கள்//

குண்டாந்தடி அடி வாங்கிட்டு இவரு ஆஸ்பத்திரி'ல இருக்கும் போதும் இதே மாதிரி கமெண்ட்ஸ் போடுங்க மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//ஓட்ட வட நாராயணன் said...
சபலிஸ்ட் னு ஒரு ஆங்கில வார்த்தையா? புதுசா இருக்கே! அப்போ கமல் ரசிகன கமலிஸ்ட் னு கூப்பிடலாமா?//

மண்டைய பொலந்துருவேன் ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

//மைந்தன் சிவா said...
ஓஹோ அந்தளவுக்கு படம் ஒடப்போகுதா??//

அதெப்பிடி கால் முளச்சிருச்சோ

சக்தி கல்வி மையம் said...

தோ... நானும் வந்துட்டேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாளைக்கு போறன்

சக்தி கல்வி மையம் said...

tamil10 வேலை செய்யலையே..

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by a blog administrator.
சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

tamil10 வேலை செய்யலையே..

ஏதோ எரர்

மாணவன் said...

விமர்சனம் நல்லாருக்குங்க பாஸ்

:))

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாளைக்கு போறன்//

ஏன் இப்படி ஒரு கொலை முயற்சி :)

Jana said...

பார்க்கத்தான் வேணும். கொலை முயற்சி என்றாலும் பறவாய் இல்லை. சி.பி.செந்தில்குமாருக்காக..ஹி..ஹி..ஹி..

Anonymous said...

உங்க தொழில் பக்திக்கு அளவே இல்லையா..மொத்த வசனத்தையும் எழுதிட்டீங்களே?

Anonymous said...

சந்தானம் ,கவர்ச்சி இருந்தா போதும் தமிழ் சினிமா இப்போ ரெடி

சுதர்ஷன் said...

//ரிசப்ஷனிஸ்ட் - உங்களுக்கு என்ன வேணும்? அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவங்க பிஸியா இருக்காங்க...

சந்தானம்- அப்போ நீங்க ஃபிரீயா மிஸ்...//

சந்தானத்தோட டயிமிங் வசனம் முழுக்க எழுதி இருக்கீங்க போல ? கொஞ்சம் வாசிக்காம வைச்சிருக்கேன் ..பாக்கணும் ..எல்லாத்தையும் விமர்சிச்சிடீங்க :)

http://ethamil.blogspot.com/2011/03/3.html

எல் கே said...

//லேடி போலீஸ் - (லாக்கப்பில்) டேய்.. டிரஸ்ஸை கழட்டுடா....

சந்தானம்- மேடம்.. கை வசம் காண்டம் இல்லை.. ஓக்கேவா?
/

இது எப்படி சென்சாரில் தப்பியது ??

ம.தி.சுதா said...

///உனக்காக இல்லைன்னாலும்,ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களோட கற்பை காப்பாத்தவாவது உதவறேன்.////

பயபுள்ள சரியாத் தான் பறைஞ்சிருக்கான்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

கோவை நேரம் said...

உங்களுக்காகவே படம் பார்க்கணும் போலிருக்கு .விமர்சனம் அருமை ...

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணே சிங்கம் புலி படத்தை பற்றி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சுட்டீங்க. காங்கேயம் பி.நந்தகுமார்

அன்பரசன் said...

ஞாயிற்றுக்கிழமைக்கு டிக்கெட் போட்ட நேரத்துல நல்ல ஒரு விமர்சனம்.

அன்பு said...

/நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது) ஞாபக சக்தியில்
ஹாய் மதனை'யே மிஞ்சிட்டீங்க...

டக்கால்டி said...

பாஸ்...உண்மையாலுமே, வரிக்கு வரி உங்க எழுத்துக்களில் தெரிகின்றது உங்கள் அர்ப்பணிப்பு...பழைய ஆ.வி ஜோக் எழுதுனவங்க பேரை கூட போட்டிருக்கீங்க...பிரமாதம்...அப்புறம் மாடு கன்னுக்குட்டி சீன் விளக்கம் பஞ்ச்..

டக்கால்டி said...

சபலிஸ்ட் னு ஒரு ஆங்கில வார்த்தையா? புதுசா இருக்கே! அப்போ கமல் ரசிகன கமலிஸ்ட் னு கூப்பிடலாமா?//

அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிங்களே...

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13

R. Gopi said...

\\எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40\\

38

Rafeek said...

நீங்க தான் மாஞ்சு மாஞ்சு ஆனந்த விகடன் மார்க் போடுறிங்க.. அவுங்க விமர்சனமே போடுறதில்லை .. இரண்டு வாரமா..

ஆடு புலி,
நடுநிசி நாய்கள்
சீடன்

என மூன்று படங்களுக்கும் no விமர்சனம்.