Saturday, October 02, 2010

நாட்டுநடப்பும் நையாண்டி சிரிப்பும்

1.  முதல்வர் கருணாநிதி: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள, வெள்ளைப் புலிக் குட்டிகள் மூன்றில் ஆண் புலிக்குட்டிக்கு, செம்பியன் என்றும், பெண் புலிக் குட்டிகளுக்கு இந்திரா, வள்ளி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.

நையாண்டி நாரதர் - தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.என்ன கோபமோ காங்கிரஸ் கூட.

2.  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இனி தமிழகத்தை, "தமிழ்நாடு என்ற குடிகார நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை வெளியிடப்படும்.நையாண்டி நாரதர் - முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.

3.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா. பாண்டியன் பேச்சு: டில்லியில், நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக துவக்கத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், காங்கிரசுக்குள்ளிருந்து கூட எதிர்ப்பு வந்ததால், 71 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆனாலும், பாலம் இடிகிறது, மேற்கூரை சரிகிறது. அந்தளவிற்கு ஊழல் நடந்துள்ளது. குற்றத்தை மூடி மறைப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

நையாண்டி நாரதர் -விடுங்க,காமன்வெல்த்னா என்ன ?காமனா (common) யார் யாருக்கு வெல்த் (wealth) பார்க்கறதுதானே.

4.  தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி பேச்சு: தகவல் கேட்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்றால், அதை ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்கப்படுவது என்பது ஒரு குற்ற நிகழ்வு. இது குறித்து போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்குப் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்.

நையாண்டி நாரதர் -மனசுக்குள்ள ஈரோடு என் கே கே பி ராஜானு நினைப்பா?அண்ணனே இப்ப ஆஃப் ஆகி இருக்காரு,உங்களுக்கென்ன?
5.  ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: மக்களின் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையில், சட்டத்தின் அளவுகோலை மட்டும் வைத்து தீர்வு காண இயலாது. எனவே, அயோத்தி தீர்ப்பில் வெற்றி பெற்று விட்டோம் என்று ஒரு தரப்பினர் கொண்டாடுவதோ, விழா எடுப்பதோ நிரந்தர சமாதானத்துக்கு குந்தகம் ஆகிவிடக் கூடாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைதான், இந்தியாவின் எதிர்கால அமைதிக்கு அடிப்படை என்பதை நினைவில் கொண்டு இரு தரப்பினரும் செயல்பட வேண்டும்.

நையாண்டி நாரதர் - அதெல்லாம் இருக்கட்டுங்க,2011 ல உங்களுக்கு எத்தனை சீட்னு அம்மாகிட்ட பேசீட்டீங்களா?

6.  இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து: நாட்டின் அமைதிக்கும், ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்காமல், இரு தரப்பினரிடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு உள்ளது. தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம் என்பதும் ஜனநாயக கண்ணோட்டத்தில் பாராட்டத்தக்கது. மதச் சார்பற்ற நாடு இந்தியா என்பதற்கு முன்னுதாரணமாக விளங்க இந்த தீர்ப்பு வழிவகை செய்யும்.

நையாண்டி நாரதர் - மதச் சார்பற்ற நாடு இந்தியாஎன்பது சரிதான்,ஆனா இங்கேதானே மதத்துக்காக அடிச்சுக்கறாங்க?
7  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு பார்வையாளராக இருக்கக் கூடாது. மத்திய அரசில், மாநில அரசும் அங்கம் வகிக்கும் சூழலில், இந்த பிரச்னையை துரிதமாக முடிவிற்கு கொண்டு வருவது தமிழக அரசிற்கு நல்லது

நையாண்டி நாரதர்   -பார்வையாளர் என்பதற்கு ஆங்கிலத்தில் ஆடியன்ஸ் எனில் கலைஞர் இதில் ரிப்பீட் ஆடியன்சாக இருப்பார்.கூட்டணி முடிவாகும்வரை.

8.  வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி அறிக்கை: தி.மு.க., அரசின் தொடர் மின் வெட்டால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச மின் மோட்டார் என்ற அரசின் அறிவிப்பு விவசாயிகளின் காதில் பூ சுற்றும் வேலை. அரசு வழங்கும் மின் மோட்டார்களை, "3 பேஸ்' மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும் என்று, மின் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தும் மோட்டாருக்கு, "2 பேஸ்' மின்சாரம் இருந்தால் போதும்.

நையாண்டி நாரதர்   - அரசியல்வாதிகளும் மின்சாரம் போல பல ஃபேஸ்கள் உண்டு.அவங்களோட மறுமுகம் எலக்‌ஷன் முடிந்த பிறகு தெரியும்.9. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன்: குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரும் தமிழக அரசின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலையோடு ஒப்பிடும்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ஒதுக்கியுள்ள தொகையைக் கொண்டு, கோழிக்கூண்டு அல்லது புறாக்கூடு கட்டுவதற்கு கூட முடியாது.

நையாண்டி நாரதர்   - பேர் சொல்ல திட்டம் கொண்டுவருவதை விட சும்மா பேருக்குதான் நிறைவேத்தறாங்க.10. எந்திரன் பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மொட்டை அடித்தனர். _சன் டி வி செய்தி.

நையாண்டி நாரதர்   - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே  மொட்டை அடிச்சு விடறாங்களே/?
22 comments:

Cool Boy கிருத்திகன். said...

//காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.//

//அதெல்லாம் இருக்கட்டுங்க,2011 ல உங்களுக்கு எத்தனை சீட்னு அம்மாகிட்ட பேசீட்டீங்களா?//

//அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே//

சான்ஸே இல்லை...
சூப்பர் சார்..
பதிவுலகில் நிலவிவரும் காமடிப்பஞ்சத்தை நீக்குகிறீர்கள்..
வாழ்த்துக்கள்.

புரட்சித்தலைவன் said...

good allignment.
good jokes.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

joke joke. no politics.

யாதவன் said...

கலகிடிங்க தல

ஜெகதீஸ்வரன். said...

வள்ளி முருகன் பொண்டாட்டி பெயரு, இந்திரா இந்திரனின் பொண்டாட்டி பெயரு.அதை ஏன் வைச்சாரு.

KayKay said...

///////////
10. எந்திரன் பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மொட்டை அடித்தனர். _சன் டி வி செய்தி.

நையாண்டி நாரதர் - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே/?
//////////

Kalakiteenga.... :))))))))))))))

Madhavan said...

//KayKay said...
"நையாண்டி நாரதர் - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே" ?//

Repeatoi..

சி.பி.செந்தில்குமார் said...

Cool Boy கிருத்திகன். said...

//காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.//

//அதெல்லாம் இருக்கட்டுங்க,2011 ல உங்களுக்கு எத்தனை சீட்னு அம்மாகிட்ட பேசீட்டீங்களா?//

//அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே//

சான்ஸே இல்லை...
சூப்பர் சார்..
பதிவுலகில் நிலவிவரும் காமடிப்பஞ்சத்தை நீக்குகிறீர்கள்..
வாழ்த்துக்கள்.

wநன்றிசார்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

good allignment.
good jokes.

வாங்க புரட்சி,எந்திரன் பாத்தாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

joke joke. no politics.

யோவ்,சிரிப்பூபோலீஸு,நீங்க தி மு க வா?

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

கலகிடிங்க தல

நன்றி யாதவன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜெகதீஸ்வரன். said...

வள்ளி முருகன் பொண்டாட்டி பெயரு, இந்திரா இந்திரனின் பொண்டாட்டி பெயரு.அதை ஏன் வைச்சாரு.

October 3, 2010 12:38 AM

அட ,இது என்ன புது பூகம்பம்?

சி.பி.செந்தில்குமார் said...

KayKay said...

///////////
10. எந்திரன் பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மொட்டை அடித்தனர். _சன் டி வி செய்தி.

நையாண்டி நாரதர் - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே/?
//////////
நன்றி கே கே

சி.பி.செந்தில்குமார் said...

Madhavan said...

//KayKay said...
"நையாண்டி நாரதர் - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே மொட்டை அடிச்சு விடறாங்களே" ?//

Repeatoi.

ஓகே தாங்க்ஸ் மாதவன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க//
நல்லாருக்கு..உங்களுக்கு எது நல்லா வருமோ அதை ஃபாலோ பண்ணுங்க..இந்த ஸ்டைல் நல்லா வருது ஃபாலோ பண்ணுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க//
நல்லாருக்கு..உங்களுக்கு எது நல்லா வருமோ அதை ஃபாலோ பண்ணுங்க..இந்த ஸ்டைல் நல்லா வருது ஃபாலோ பண்ணுங்க

ஓகே சதீஷ் நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்,அப்படியே எது வர்லைங்கறதையும் சொல்லிட்டா அதை நிறுத்திடுவேன்

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளன சில மிகவும் ரசிக்க வைக்கிறன.

நாகராஜசோழன் MA said...

அரசு வழங்கும் மின் மோட்டார்களை, "3 பேஸ்' மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும் என்று, மின் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தும் மோட்டாருக்கு, "2 பேஸ்' மின்சாரம் இருந்தால் போதும்.// எல்லா மோட்டார்களும் 3 phase இல் தான் இயங்கும். ஆனால் நமது ஆட்கள் கண்டேன்சர் பயன்படுத்தி 2 phase இல் இயங்குமாறு செய்து விடுகின்றனர்.

karthik said...

தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.என்ன கோபமோ காங்கிரஸ் கூட/// இதனை நாளா நீங்க எங்க இருந்தீங்க உங்களத்தான் இந்த பதிவுலகம் தேடிக்கிட்டு இருந்துது

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளன சில மிகவும் ரசிக்க வைக்கிறன.

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

அரசு வழங்கும் மின் மோட்டார்களை, "3 பேஸ்' மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும் என்று, மின் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தும் மோட்டாருக்கு, "2 பேஸ்' மின்சாரம் இருந்தால் போதும்.// எல்லா மோட்டார்களும் 3 phase இல் தான் இயங்கும். ஆனால் நமது ஆட்கள் கண்டேன்சர் பயன்படுத்தி 2 phase இல் இயங்குமாறு செய்து விடுகின்றனர்.

October 4, 2010 12:10 AM

தகவலுக்கு நன்றி சார்,நீங்க அமைதிப்படை ரசிகரா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthik said...

தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.என்ன கோபமோ காங்கிரஸ் கூட/// இதனை நாளா நீங்க எங்க இருந்தீங்க உங்களத்தான் இந்த பதிவுலகம் தேடிக்கிட்டு இருந்துது

நன்றி கார்த்தி.உதை குடுக்காம இருந்தா சரி