Monday, October 18, 2010

சம்சாரம் என்பது வீணை (வீணே?!)

 

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொரு  கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள்.


டிஸ்கி 1 - இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.


டிஸ்கி 2 - நயன்தாரா ஃபோட்டோ சும்மா கிளாமருக்கு,அவருக்கோ அவரது தற்போதைய காதலருக்கோ அட்வைஸ் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை


டிஸ்கி 3. - லைப்ரரில இருந்து புக் சுடுவது எப்படி? புக் எக்ஸிபிஷனிலிருந்து புக் சுடுவது எப்படி? எனது அடுத்தடுத்த பதிவுகளாக வர இருக்கிறது,கபர்தார்

21 comments:

Unknown said...

நாங்க தான் முதல்ல

Unknown said...

மனைவி சொல்லே மாணிக்கம்

சி.பி.செந்தில்குமார் said...

யார் அந்த மாணிக்கம் சார்?

சி.பி.செந்தில்குமார் said...

முத வடயைப்பெற்ற புது பதிவர்

வால்பையன் said...

கள்ளக்காதல்னா என்ன?

குடும்பத்திற்கும், காதலுக்கும் என்ன சம்பந்தம்!?

வால்பையன் said...

கள்ளக்காதல்னா என்ன?

குடும்பத்திற்கும், காதலுக்கும் என்ன சம்பந்தம்!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.//

அந்த பயம் இருக்கணும்

NaSo said...

வீட்டுலே ரொம்ப அடி வாங்கிட்டீன்களோ?

Chitra said...

சுட்ட பழம்! உங்க நேர்மையை பாராட்டுறோம்.

Philosophy Prabhakaran said...

கடுமையான பாதிப்பு போல... தங்களுக்கு திருமணம் நடந்தேறிவிட்டதா...

சி.பி.செந்தில்குமார் said...

வால்பையன் said...

கள்ளக்காதல்னா என்ன?

குடும்பத்திற்கும், காதலுக்கும் என்ன சம்பந்தம்!?


நீங்க இவ்வளவு அப்பாவியா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.//

அந்த பயம் இருக்கணும்

என்ன தான் மாமூல் குடுத்தாலும் போலீசைக்கண்டா திருடனுக்கு பயம் இருக்கத்தான் செய்யும்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

வீட்டுலே ரொம்ப அடி வாங்கிட்டீன்களோ?

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Chitra said...

சுட்ட பழம்! உங்க நேர்மையை பாராட்டுறோம்.

ஹி ஹி செய்யறது திருட்டு,இதுல நேர்மை என்ன வேண்டி கிடக்கு,இருந்தாலும் உங்க பாராட்டை ஏத்துக்கறேன்.(யார் பாராட்னாலும் ஏத்துகறது என் பாலிசி)

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

கடுமையான பாதிப்பு போல... தங்களுக்கு திருமணம் நடந்தேறிவிட்டதா...

ஹி ஹி நான்கே முறைதான் ஆஹியுள்ளது (நன்றீ எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடக வசனம்)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யோவ், யாருய்யா சொன்னது... சம்சாரங்கிறது வீணே-ந்னு? என்னைப் பொறுத்தவரை சம்சாரங்கிறது கடவுளுக்கு சமம். தெரியுமா?... சின்ன வீடே கதின்னு கிடக்கிற உமக்கெல்லாம் அவங்க அருமை எங்கே தெரியப் போகிறது?...(அப்பாடா, ஒரு குவாட்டருக்கு வீட்ல அடிப் போட்டாச்சு. தண்ணிப் போட்டுட்டு ராத்திரிக்கு வச்சிக்கிறேன் கச்சேரியை)

சி.பி.செந்தில்குமார் said...

ராத்திரி கச்சேரி எங்கே ,?உங்க வீட்டிலா?சின்ன வீட்டிலா?சின்ன வீட்டில் என்றால் கேமராவுடன் வருவேன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கேமராவுடன் ஆளை உள்ளே விட நான் என்ன ஏமாந்த சோனாங்கிரி நித்தியானந்தம்ன்னு நினைச்சுட்டிங்களா பாஸ்?

MANO நாஞ்சில் மனோ said...

நயன்தாரா படத்தை போட்டு லந்தா பண்றீங்க.........
சிம்பு அண்ணன் சிலிப்பிகிட்டு வந்தா, பதிவர் நிர்வாகம் பொறுப்பல்ல.....வர்ட்டா

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கேமராவுடன் ஆளை உள்ளே விட நான் என்ன ஏமாந்த சோனாங்கிரி நித்தியானந்தம்ன்னு நினைச்சுட்டிங்களா பாஸ்?


oஓ உஷார் பார்ட்டியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாஞ்சில் மனோ said...

நயன்தாரா படத்தை போட்டு லந்தா பண்றீங்க.........
சிம்பு அண்ணன் சிலிப்பிகிட்டு வந்தா, பதிவர் நிர்வாகம் பொறுப்பல்ல.....வர்ட்டா

பத்த வெச்சுட்டு கேள்வியபாரு