Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.

சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.

சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.

ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?

113 comments:

பொன் மாலை பொழுது said...

எதுக்கும் ஜாக்ரதையா இருக்கோணும்! புரியுதா?
யாரு கையிலாவது மாட்டினா "கைமா" தான் கண்ணு !

சி.பி.செந்தில்குமார் said...

வங்க மாணீக்கம்,முதன்முதலா நம்ம பிளாக்குல முத வட உங்களுக்கெ,நீங சப்போர்ட்டா இருந்துட்டா எனக்கென்ன கவலை?

எல் கே said...

auto vara porathu confirm

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

auto vara porathu confirm

பெரியப்பா,இத் யூகமா?சாபமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சாதா பதிவர் யாரு?//

ஒரு வேலை சதாவோட ரசிகரோ? நூறுக்கு வாழ்த்துக்கள். மச்சி 90 சொல்லேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

சின்ன வயசுலையே டாக்டர் க்கு படிக்கணும்னு ஆசை. அதுக்கு அறிவு வேணும்னு சொன்னதால இவரால படிக்க முடியலை. அதனால எந்த டாக்டரா இருந்தாலும் இவருக்கு கோவம் வந்து கலாய்ப்பாரு..
சரிதான சி.பி.செந்தில்குமார் சார்

செல்வா said...

///வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?///

அவ்வளவு நல்லவரா நீங்க ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.//

அடப்பாவிகளா இத எங்க பாஸ் பாத்தா என்ன ஆகும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி உண்மையே என்று பட்டபட்டி மற்றும் பன்னிகுட்டி மீது சத்தியம் செய்யவும்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சாதா பதிவர் யாரு?//

ஒரு வேலை சதாவோட ரசிகரோ? நூறுக்கு வாழ்த்துக்கள். மச்சி 90 சொல்லேன்

நன்றி ரமேஷ்.சாரி நோ 90.ஒன்லி அருண் ஐஸ் கிரீம்

செல்வா said...

//ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.//
//

போய் சொல்லுறாருங்க .. போன பதிவுல மூணாவது ஆள தான் வந்தார் ..!

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

சின்ன வயசுலையே டாக்டர் க்கு படிக்கணும்னு ஆசை. அதுக்கு அறிவு வேணும்னு சொன்னதால இவரால படிக்க முடியலை. அதனால எந்த டாக்டரா இருந்தாலும் இவருக்கு கோவம் வந்து கலாய்ப்பாரு..
சரிதான சி.பி.செந்தில்குமார் சார்

யோவ் பன்னிக்குட்டி ,இந்தாளு சொல்றது நிசம்மா?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

///வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?///

அவ்வளவு நல்லவரா நீங்க ..?

ஹி ஹி நீங்க கோபின்னு சொன்னாங்க.முன் கோபியா?

செல்வா said...

///நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை//

வாழ்த்துக்கள் ..!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி உண்மையே என்று பட்டபட்டி மற்றும் பன்னிகுட்டி மீது சத்தியம் செய்யவும்

ஆன்லைன்ல இருக்கற உங்க மேல சத்தியம்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.//
//

போய் சொல்லுறாருங்க .. போன பதிவுல மூணாவது ஆள தான் வந்தார் ..!

அப்போ ஏன் லேட்டுன்னா அண்ணன் பிட்டு படம் பாத்திட்டிருந்தாரு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.//

அடப்பாவிகளா இத எங்க பாஸ் பாத்தா என்ன ஆகும்?

ஹி ஹி எங்க எய்ம் அது தானே?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

///நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை//

வாழ்த்துக்கள் ..!!

நன்றி செல்வா

செல்வா said...

//ஹி ஹி நீங்க கோபின்னு சொன்னாங்க.முன் கோபியா?//

இதுக்கு என்ன கமெண்ட் போடலாம் .?

வெங்கட் said...

நல்ல கலகல காமெடி..!!
வாழ்த்துக்கள் சிபி.,

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//ஹி ஹி நீங்க கோபின்னு சொன்னாங்க.முன் கோபியா?//

இதுக்கு என்ன கமெண்ட் போடலாம் .?

கோபியர் கொஞ்சும் செல்வாவா?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

நல்ல கலகல காமெடி..!!
வாழ்த்துக்கள் சிபி.,

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க ,வெங்கட் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டார்,ந்நானும் பிரபல பதிவர் ஆகிட்டேன்

செல்வா said...

//கோபியர் கொஞ்சும் செல்வாவா?//

ஆமாங்க ., கோபில இருக்கறவங்க எல்லோருமே கொஞ்சுவாங்க ..!!

செல்வா said...

//,வெங்கட் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டார்,ந்நானும் பிரபல பதிவர் ஆகிட்டேன்//

எங்க தல வந்து உங்களை பாரட்டுனதால இன்று முதல் நீங்க பிரபல பதிவர் என்று அழைக்கப்படுவீர்கள்.. அதுவும் VAS ஆல் பாராட்டப்பட பிரபல பதிவர் என்று அன்புடன் அழைக்கப்படுவீர் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.///
ஏன் நேரடி தெலுங்கு படத்திலும் அதே காட்சிகள்தான இருக்கும். விளக்கவும்?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//கோபியர் கொஞ்சும் செல்வாவா?//

ஆமாங்க ., கோபில இருக்கறவங்க எல்லோருமே கொஞ்சுவாங்க ..!!

oohoo ஓஹோ சதிஷ்,வண்டியை எடு சித்தோட்லயே ஃபிகர் பாத்து போர்டிக்குது,கோபி போலாம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//,வெங்கட் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டார்,ந்நானும் பிரபல பதிவர் ஆகிட்டேன்//

எங்க தல வந்து உங்களை பாரட்டுனதால இன்று முதல் நீங்க பிரபல பதிவர் என்று அழைக்கப்படுவீர்கள்.. அதுவும் VAS ஆல் பாராட்டப்பட பிரபல பதிவர் என்று அன்புடன் அழைக்கப்படுவீர் ..

வெங்கட் உங்க தலயா?அப்போ ரமேஷ் யாரு?யோவ் சி நா போனா கவனிய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.///
ஏன் நேரடி தெலுங்கு படத்திலும் அதே காட்சிகள்தான இருக்கும். விளக்கவும்?

நேரடி தெலுங்கு படம் நான் பார்ப்பது இல்லையே(போதுமாய்யா விளக்கம்?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//,வெங்கட் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டார்,ந்நானும் பிரபல பதிவர் ஆகிட்டேன்//

எங்க தல வந்து உங்களை பாரட்டுனதால இன்று முதல் நீங்க பிரபல பதிவர் என்று அழைக்கப்படுவீர்கள்.. அதுவும் VAS ஆல் பாராட்டப்பட பிரபல பதிவர் என்று அன்புடன் அழைக்கப்படுவீர் ..

வெங்கட் உங்க தலயா?அப்போ ரமேஷ் யாரு?யோவ் சி நா போனா கவனிய்யா/

அது எதிர் கட்சிப்பா

தினேஷ்குமார் said...

வணக்கம் அண்ணே

100வது நாள் வாழ்த்துக்கள்
நல்லா நகைச்சுவையா ஒவ்வொரு பதிவும் கொண்டுபோரிங்க அண்ணே

மறுபடியும் ஒரு வணக்கம் அண்ணன்னே

appoo அப்போ நீ ஆளுங்கட்சியா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

வணக்கம் அண்ணே

100வது நாள் வாழ்த்துக்கள்
நல்லா நகைச்சுவையா ஒவ்வொரு பதிவும் கொண்டுபோரிங்க அண்ணே

மறுபடியும் ஒரு வணக்கம் அண்ணன்னே

நன்றி தினேஎஷ்

karthikkumar said...

நூறாவது நாள் விழாவுக்காக போஸ்டர்ஸ் டிசைன் பண்ணிட்டு இருந்தேன்னா அதான் லேட்டு.

ம.தி.சுதா said...

சி.பி.செ... உமக்க கிட்டடியில் நான் வக்கில் நோட்டிஸ் அனுப்புவேன்... அதுக்கு முன் என் வீட்டக்கு வந்துரணும் இல்லாட்டி கோட்டுக்காக இலங்கை வரவேண்டியிருக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம கலக்கல் தலைவா.... ஆனா பத்திரமா இருங்க.... மோசமான ஆளுங்க இவங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

100வது நாள் வாழ்த்துக்கள்..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வெளுத்துக் கட்டுங்க, பாஸ்!

NaSo said...

நூறாவது நாள் வாழ்த்துக்கள் அண்ணே!!

NaSo said...

இதுல பிரபல பதிவர் யாரு? பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு? எனக்கு ஒண்ணுமே புரியலே!!

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

சொல்ல மறந்துட்டேன் பாருங்க 100 நாள் வாழ்த்துக்கள் சார் அலெக்ஸா ரேங்கில் 1,06878 இருக்கீங்க சீக்கிரம் 1 லட்சத்திற்குள் வரவும் வாழ்த்துக்கள் ஒரே கமெண்டுல ரெண்டு மாங்கா

Unknown said...

நூறாவது நாள் வாழ்த்துக்கள்.....

எஸ்.கே said...

100 நாட்களில் எத்தனை சாதனைகள்! நிறைய நல்ல பதிவுகளை கொடுத்து மற்றவர்களை சிரிக்க வைத்த தங்களுக்கு நன்றிகள் கோடி! இன்னும் பற்பல வருடங்கள் சிறப்பாக எழுத வாழ்த்துக்கல்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எப்போதும் ஜாலியாக கமெண்ட் போடும் என்னை உங்கள் பதிவில் இருந்த வார்த்தைகள் மனம் வேதனை அடைய வைத்தது. என் வீட்டில் நெட் வொர்க் ஆகவில்லை. அதனால் பிரவுசிங்க் சென்டருக்குப் போய் தான் உங்கள் பதிவை படித்து கமெண்ட் போடுகிறேண். லேட்டாக கமெண்ட் போட்டால் உங்களை கேவலப் படுத்துவது மாதிரி நீங்கள் எழுதி இருப்பது பார்த்து உண்மையிலே நான் மிகவும் மனம் நொந்தேன். இது என்னைப் பற்றீ நீங்கள் சொன்ன வார்த்தை இல்லை தான். எனினும் என் மனம் புண் பட்டது. நீங்கள் அப்படி சொல்லியிருக்க வேன்டாமே என்று தோண்றியது.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

-இதை நான் எதிர்பார்க்கவில்லை. மனம் நோகடித்து விட்டீர்கள்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

லேட்டா பதிவுக்கு கமெண்ட் போட்டா அது தவறா?...

movithan said...

உங்க பதிவையும் கமெண்ட்ஸ்சும் படிக்கும் போது கவுண்டமணியும் செந்திலும் கண்முன்னாடி நிற்கிறாங்க சார்.

ஒரே சரவெடி.

Unknown said...

சூப்பரப்பு

அன்பரசன் said...

//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

பிரமாதம்

அன்பரசன் said...

//டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு? //

தல பின்னிட்டீங்க போங்க..
ஒவ்வொரு டிஸ்கியும் சூப்பர்..

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

நூறாவது நாள் விழாவுக்காக போஸ்டர்ஸ் டிசைன் பண்ணிட்டு இருந்தேன்னா அதான் லேட்டு.

oohoo ஓஹோ எங்கே டிசைன்?அசிஅனி ரெடி பண்ற ஆளு டிசைனை ரெடி பண்ணுதா?

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

நூறாவது நாள் வாழ்த்துக்கள்.....

நன்றி பாரதி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சி.பி.செ... உமக்க கிட்டடியில் நான் வக்கில் நோட்டிஸ் அனுப்புவேன்... அதுக்கு முன் என் வீட்டக்கு வந்துரணும் இல்லாட்டி கோட்டுக்காக இலங்கை வரவேண்டியிருக்கும்...

ஓ சாரி,இதோ வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெறும்பய said...

செம கலக்கல் தலைவா.... ஆனா பத்திரமா இருங்க.... மோசமான ஆளுங்க இவங்க...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வெளுத்துக் கட்டுங்க, பாஸ்!

நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாகராஜசோழன் MA said...

நூறாவது நாள் வாழ்த்துக்கள் அண்ணே!!

நன்றி நாகா

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

இதுல பிரபல பதிவர் யாரு? பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு? எனக்கு ஒண்ணுமே புரியலே!!

பிரபல பதிவர் ரமேஷ்,

பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு 2ம் நாந்தான்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சொல்ல மறந்துட்டேன் பாருங்க 100 நாள் வாழ்த்துக்கள் சார் அலெக்ஸா ரேங்கில் 1,06878 இருக்கீங்க சீக்கிரம் 1 லட்சத்திற்குள் வரவும் வாழ்த்துக்கள் ஒரே கமெண்டுல ரெண்டு மாங்கா

ஆமா தெரியுமே ஒரே லவ் லெட்டரை ஜெராக்ஸ் எடுத்து 2 ஃபிகருங்க கிட்டே குடுத்து 2 பேரையும் கரெக்ட் பண்ணுன ஆளாச்சே நீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

நூறாவது நாள் வாழ்த்துக்கள்.....

நன்றி பாரதி,உங்க லோகோவை பார்த்தாலே பயமா இருக்கு,நீங்க ரொம்ப கோபக்க்காரரோ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

100 நாட்களில் எத்தனை சாதனைகள்! நிறைய நல்ல பதிவுகளை கொடுத்து மற்றவர்களை சிரிக்க வைத்த தங்களுக்கு நன்றிகள் கோடி! இன்னும் பற்பல வருடங்கள் சிறப்பாக எழுத வாழ்த்துக்கல்!
நன்றி சார்,உங்க அட்ரஸை அனுப்புங்க,அதை மிஸ் பண்ணிட்டேன்,சாரி,நாளை கூரியரில்ல் அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எப்போதும் ஜாலியாக கமெண்ட் போடும் என்னை உங்கள் பதிவில் இருந்த வார்த்தைகள் மனம் வேதனை அடைய வைத்தது. என் வீட்டில் நெட் வொர்க் ஆகவில்லை. அதனால் பிரவுசிங்க் சென்டருக்குப் போய் தான் உங்கள் பதிவை படித்து கமெண்ட் போடுகிறேண். லேட்டாக கமெண்ட் போட்டால் உங்களை கேவலப் படுத்துவது மாதிரி நீங்கள் எழுதி இருப்பது பார்த்து உண்மையிலே நான் மிகவும் மனம் நொந்தேன். இது என்னைப் பற்றீ நீங்கள் சொன்ன வார்த்தை இல்லை தான். எனினும் என் மனம் புண் பட்டது. நீங்கள் அப்படி சொல்லியிருக்க வேன்டாமே என்று தோண்றியது.

yoov பூங்கதிர்,எதுக்கு டென்ஷன்,அது நான் ரமேஷ்க்கு குடுத்த விளக்கம்.

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

-இதை நான் எதிர்பார்க்கவில்லை. மனம் நோகடித்து விட்டீர்கள்

எனக்கு யார் மனசையும் நோகடிச்சு பழக்கம் இல்லையே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

லேட்டா பதிவுக்கு கமெண்ட் போட்டா அது தவறா?.

இல்ல நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா போடற ஆள் ஆச்சே

சி.பி.செந்தில்குமார் said...

malgudi said...

உங்க பதிவையும் கமெண்ட்ஸ்சும் படிக்கும் போது கவுண்டமணியும் செந்திலும் கண்முன்னாடி நிற்கிறாங்க சார்.

ஒரே சரவெடி.

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சூப்பரப்பு

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

பிரமாதம்

நன்றி அன்பு

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு? //

தல பின்னிட்டீங்க போங்க..
ஒவ்வொரு டிஸ்கியும் சூப்பர்..

நன்றி அகெய்ன் அன்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடடா...போன எடுத்தா நச்சு நச்சூங்கிறானுங்கப்பா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)///

என்னய்யா ரொம்ப டீசன்ட்டான படமா போட்டு என்ன அசிங்கப்படுத்தியிருக்க? ஒரு அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருசன் அப்படின்னு போட்டிருக்க வேண்டாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.///

நேர்மை...நேர்மை.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.////

என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி பி - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க./////

அப்போ மீதி 1600 DVD எங்கேய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.////

படுவா எகத்தாளத்தப்பாரு? இவரு பெரிய சீப் எஞ்சினியரு, அப்ரூவல் கொடுக்குறாரு, ங்கொக்காமக்கா, வேணும்னா, அப்பிடியே எட்ட நின்னு வெறிக்க வெறிக்க பாத்துட்டு ஓடிபோயிரு ஆமா!
இதுதாம்ல நம்ம தீர்ப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை////

என்னா சென்டிமென்ட்டுய்யா? பைதி பை 100வது நாளுக்கு வாழ்த்துக்கள், நம்ம பயல்கள்ட்ட சொன்னா ஏதாவது போஸ்டர் ஒட்டுறது அது இதுன்னு பண்ணுவானுங்கள்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு////

விட்டா 18+ னு கூட போடுவீங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.////

இடை இடையே இந்த மாதிரி ஏதாவது உண்மை பேசுறியே, அது ஏன்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.////

பிகர் ரொம்ப சுமார், பாவம் பட்டா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?///

எல்லாம் எங்கள மாதிரி பன்னாடைகதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

சின்ன வயசுலையே டாக்டர் க்கு படிக்கணும்னு ஆசை. அதுக்கு அறிவு வேணும்னு சொன்னதால இவரால படிக்க முடியலை. அதனால எந்த டாக்டரா இருந்தாலும் இவருக்கு கோவம் வந்து கலாய்ப்பாரு..
சரிதான சி.பி.செந்தில்குமார் சார் ////

போலீசு வேலைக்கும்தான் போகனும்னு ஆசைப்பட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.//

அடப்பாவிகளா இத எங்க பாஸ் பாத்தா என்ன ஆகும்? /////

என்ன ஆகும், டெய்லி தென்றல் சீரியல பாத்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ப.செல்வக்குமார் said...

//ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.//
//

போய் சொல்லுறாருங்க .. போன பதிவுல மூணாவது ஆள தான் வந்தார் ..!

அப்போ ஏன் லேட்டுன்னா அண்ணன் பிட்டு படம் பாத்திட்டிருந்தாரு////

வேற என்னமோன்னுல கேள்விப்பட்டேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி உண்மையே என்று பட்டபட்டி மற்றும் பன்னிகுட்டி மீது சத்தியம் செய்யவும்

ஆன்லைன்ல இருக்கற உங்க மேல சத்தியம் /////

நல்லவேளை அப்போ நான் ஆன்லைன்ல இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.///
ஏன் நேரடி தெலுங்கு படத்திலும் அதே காட்சிகள்தான இருக்கும். விளக்கவும்?

நேரடி தெலுங்கு படம் நான் பார்ப்பது இல்லையே(போதுமாய்யா விளக்கம்?)//////////

நம்ம பாக்குற படத்துக்கெல்லாம் மொழி எதுக்குண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இதுல பிரபல பதிவர் யாரு? பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு? எனக்கு ஒண்ணுமே புரியலே!! /////

உனக்கு இதே வேலையா போச்சுய்யா மாப்பி, பெண் அப்பிடின்னு போட்டுட்டாலே உனக்கு வேற எதுவுமே புரியாதே?

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இதுல பிரபல பதிவர் யாரு? பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு? எனக்கு ஒண்ணுமே புரியலே!! /////

உனக்கு இதே வேலையா போச்சுய்யா மாப்பி, பெண் அப்பிடின்னு போட்டுட்டாலே உனக்கு வேற எதுவுமே புரியாதே?//

இல்லை மாம்ஸ் பெண்ணுக்கு எதாவது பிரச்சனைனா நாம ஒரு உதவி செய்யலாமே, அதான் கேட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடடா...போன எடுத்தா நச்சு நச்சூங்கிறானுங்கப்பா.....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடடா...போன எடுத்தா நச்சு நச்சூங்கிறானுங்கப்பா.....!

நீங்கதான் ஃபோன் நெம்பர் கேட்டா அதெல்லாம் லேடீஸ்க்குதான்னு சொல்லீட்டீப்க்களே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)///

என்னய்யா ரொம்ப டீசன்ட்டான படமா போட்டு என்ன அசிங்கப்படுத்தியிருக்க? ஒரு அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருசன் அப்படின்னு போட்டிருக்க வேண்டாமா?

யோவ் ,இது டீசண்ட்டான குடும்ப பிளாக்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.///

நேர்மை...நேர்மை.....!

ஏன்னா நான் போடற சோப்பே ஹமாம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.////

என்னா ஒரு வில்லத்தனம்?

எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்ட மொள்ளமாரித்தனம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி பி - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க./////

அப்போ மீதி 1600 DVD எங்கேய்யா?

எல்லாம் சிரிப்புப்போலிஸ் கிட்ட இருக்கு,ஆஃபீஸ் பீரோக்குள்ள

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.////

படுவா எகத்தாளத்தப்பாரு? இவரு பெரிய சீப் எஞ்சினியரு, அப்ரூவல் கொடுக்குறாரு, ங்கொக்காமக்கா, வேணும்னா, அப்பிடியே எட்ட நின்னு வெறிக்க வெறிக்க பாத்துட்டு ஓடிபோயிரு ஆமா!
இதுதாம்ல நம்ம தீர்ப்பு!

நாட்டாமை ,தீர்ர்ப்பை மாத்து ,அட்லீஸ்ட் உன் ஆளை மாத்து

சி.பி.செந்தில்குமார் said...

////ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.////

படுவா எகத்தாளத்தப்பாரு? இவரு பெரிய சீப் எஞ்சினியரு, அப்ரூவல் கொடுக்குறாரு, ங்கொக்காமக்கா, வேணும்னா, அப்பிடியே எட்ட நின்னு வெறிக்க வெறிக்க பாத்துட்டு ஓடிபோயிரு ஆமா!
இதுதாம்ல நம்ம தீர்ப்பு!

October 24, 2010 12:42 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை////

என்னா சென்டிமென்ட்டுய்யா? பைதி பை 100வது நாளுக்கு வாழ்த்துக்கள், நம்ம பயல்கள்ட்ட சொன்னா ஏதாவது போஸ்டர் ஒட்டுறது அது இதுன்னு பண்ணுவானுங்கள்ல?

நன்றி ராமசாமி,போன வாரமே உங்க கிட்ட அப்ரூவல் கேட்டேன்,இந்த மாதிரி ஒரு பதிவு உங்க பேரை யூஸ் பண்ணீ போடப்போரேன்னு ,100 வது நாளுக்காக வெயிட்டிங்க்போஸ்டர் வேலையை நம்ம திருப்பூர் கார்த்தி பாத்துக்குவார்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு////

விட்டா 18+ னு கூட போடுவீங்கப்பு!

நீங்க வந்துட்டீங்களே,இனி 36 + அல்லது 54+ அப்படினு போட வேண்டியதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.////

இடை இடையே இந்த மாதிரி ஏதாவது உண்மை பேசுறியே, அது ஏன்யா?

எனக்குத்தெரிஞ்சதெலாம் உண்மை ,எருமை,கருமை,அருமை அவ்வளவுதான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.////

பிகர் ரொம்ப சுமார், பாவம் பட்டா!

யோவ்,எப்பவும் ஃபிகரோட ஃபேஸ் பாக்கக்கூடாது,அவங்க ம ம மனசைப்பாக்கனும்யா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?///

எல்லாம் எங்கள மாதிரி பன்னாடைகதான்!

நீங்க பல ஆடை போட்டு நான் பாத்ததே இல்லையே,ஒரே ஆடைதான் போட்டிருக்கீங்க

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

சின்ன வயசுலையே டாக்டர் க்கு படிக்கணும்னு ஆசை. அதுக்கு அறிவு வேணும்னு சொன்னதால இவரால படிக்க முடியலை. அதனால எந்த டாக்டரா இருந்தாலும் இவருக்கு கோவம் வந்து கலாய்ப்பாரு..
சரிதான சி.பி.செந்தில்குமார் சார் ////

போலீசு வேலைக்கும்தான் போகனும்னு ஆசைப்பட்டேன்!

நீங்க போலிஸ் ஆனா லாக்கப்ல ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்குமே

சி.பி.செந்தில்குமார் said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)//

சின்ன வயசுலையே டாக்டர் க்கு படிக்கணும்னு ஆசை. அதுக்கு அறிவு வேணும்னு சொன்னதால இவரால படிக்க முடியலை. அதனால எந்த டாக்டரா இருந்தாலும் இவருக்கு கோவம் வந்து கலாய்ப்பாரு..
சரிதான சி.பி.செந்தில்குமார் சார் ////

போலீசு வேலைக்கும்தான் போகனும்னு ஆசைப்பட்டேன்!

October 24, 2010 12:53 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.//

அடப்பாவிகளா இத எங்க பாஸ் பாத்தா என்ன ஆகும்? /////

என்ன ஆகும், டெய்லி தென்றல் சீரியல பாத்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான்!

யோவ்,ராமசாமி,உங்களுக்கு மேட்டரே தெரியாதா?ரமேஷ் ஆஃபீஸ் டைம்லயே அதைத்தான் பாக்கறாரு

இம்சைஅரசன் பாபு.. said...

நான் ரொம்ப நாள் கழித்து கமெண்ட்ஸ் போடுறேன் .......சோ........ சாரி
நூறு நாள் என்பது பெரிய விசயமுங்க ............. ஆனாலும் நீங்க தினமும் பதிவு போடுறது பெரிய விசயமுங்க ........

சரி மக்க terror ,செல்வா ,ரமேஷ் ,பட்ட பட்டி எல்லோரும் வாங்க பய புள்ள எந்த சண்டைக்கும் போகம நூறு பதிவு போட்டிருக்கு அடுத்த பதிவுல இருந்து செத்து செத்து விளையாடனும் என்ன ........?

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா பாப்,100வது பதிவுக்கு 100 வது கமெண்ட்,இதுக்காகவே உமக்கு ஒரு டி வி டி தர்றேன்யா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இதுல பிரபல பதிவர் யாரு? பெண் பதிவர் யாரு? சாதா பதிவர் யாரு? எனக்கு ஒண்ணுமே புரியலே!! /////

உனக்கு இதே வேலையா போச்சுய்யா மாப்பி, பெண் அப்பிடின்னு போட்டுட்டாலே உனக்கு வேற எதுவுமே புரியாதே?//

இல்லை மாம்ஸ் பெண்ணுக்கு எதாவது பிரச்சனைனா நாம ஒரு உதவி செய்யலாமே, அதான் கேட்டேன்.

யோவ் அதுக்குத்தான் அண்ணன் ராமசாமி இருக்காருல்ல? நாமெல்லாம் வேடிக்கை மட்டும்தான் பாக்கனும்,ஓக்கே,அண்ணே நீங்க ஒரு ஐஸ் கிரீம் சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி உண்மையே என்று பட்டபட்டி மற்றும் பன்னிகுட்டி மீது சத்தியம் செய்யவும்

ஆன்லைன்ல இருக்கற உங்க மேல சத்தியம் /////

நல்லவேளை அப்போ நான் ஆன்லைன்ல இல்ல!

October 24, 2010 12:57 PM

யோவ்,நீ எந்தக்காலத்துல ஆண் லைன் ல இருந்திருக்கே?எப்பவும் பெண் லைன் தான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.///
ஏன் நேரடி தெலுங்கு படத்திலும் அதே காட்சிகள்தான இருக்கும். விளக்கவும்?

நேரடி தெலுங்கு படம் நான் பார்ப்பது இல்லையே(போதுமாய்யா விளக்கம்?)//////////

நம்ம பாக்குற படத்துக்கெல்லாம் மொழி எதுக்குண்ணே?

ஹி ஹி ஹி ,மொழி இருந்தா இன்னும் கிளு கிளு

முத்து said...

ரமேஷ்,பன்னி வரதுக்கு முன்னாடி என்கிட்டே சொல்லிட்டு வரக்கூடாது இப்போ பாரு நான் கும்மி அடிக்க ஆள் இல்லை

முத்து said...

சி.பி.செந்தில்குமார் said...

நல்லவேளை அப்போ நான் ஆன்லைன்ல இல்ல!

October 24, 2010 12:57 PM

யோவ்,நீ எந்தக்காலத்துல ஆண் லைன் ல இருந்திருக்கே?எப்பவும் பெண் லைன் தான்/////////////

பன்னிகுட்டியை சரியா புரிஞ்சு வைச்சு இருக்கீங்க

'பரிவை' சே.குமார் said...

இதுவும் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.
//

ஹி..ஹி...

தொடர்பு இருந்தாலும் சரி...ஹி..ஹி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா
//

அது வேறையா?.. நடக்கட்டும்... நடக்கட்டும்...ஹி..ஹி

MANO நாஞ்சில் மனோ said...

எலே, யார்லே அங்கே...? எட்றா அருவாளை,
நம்ம கிட்டே கட்ட பஞ்சாயத்துக்கு அட்ரா சக்கைன்னு ஒரு கைப்புள்ள வருதுலே.....,
க்கொக்காமக்கா போட்டு தாளிச்சி கைல உள்ளதெல்லாம் புடிங்கிரனும்லே.....

என்னது நானு யாரா? said...

என்னது இது சின்னபுள்ளத்தனமா சண்டைப் போட்டுக்கிட்டு! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே!

பாஸ்! இந்த சண்டை வளர்க்கிறா விஷயத்தை விட்டுட்டு ஏதாவது உங்க மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை எழுதுங்க! ஆதம திருப்தி கிடைக்கும் இல்லையா?

priyamudanprabu said...

NALLA IRUKKU SIPI

சாமக்கோடங்கி said...

நூறுக்கு வாழ்த்துக்கள்... கன்னிகுட்டி காமசாமி நல்ல கற்பனை..

டபிள் செஞ்சுரி சீக்கிரம் அடிங்க..

நன்றி..
சாமக்கோடங்கி..