Friday, October 01, 2010

சூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்

எதிர்பார்த்ததைவிட எந்திரன் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.ரஜினி ரசிகர்கள்,பொதுமக்கள்,பதிவுலக நண்பர்கள்,பத்திரிக்கை உலக விமர்சகர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி கமெண்ட்ஸ்தான் வருகிறது.அது - படம் சூப்பர்,பின்னிட்டாங்க என்பதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.பிரம்மாண்டமாக எடுத்தாலும் கதையில் சொதப்பி கோட்டை விடுவார்கள்,எடுபடாது என.எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.

கோலிவுட்டில் பல செண்ட்டிமெண்ட்ஸ் இருக்கிறது.அவற்றை எல்லாம் எப்படி எந்திரன் முறியடித்தது என பார்ப்போம்.

1.ஐஸ்வர்யாராய் ஹீரோயினாக நடித்த எந்த தமிழ்ப்படமும் சூப்பர்ஹிட் ஆனதில்லை.ஜீன்ஸ் படம் ஷங்கருக்கே லேசான சறுக்கல்தான்.இருவர் மணிரத்னத்தின் நல்ல முயற்சி என்றாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை.கண்டுகொண்டேன் .கண்டுகொண்டேன் படம் நல்ல கதை ,ஆனால் ஓடலை .முக்கியக்காரணம் அதில் அஜித்துக்கு ஜோடியாக போடாமல் அப்பாஸ்க்கு ஐசை ஜோடியாகப்போட்டது என பலர் சொன்னார்கள்.ராவணன் அட்டர்ஃபிளாப்.இத்தனையையும் மீறி ஐஸ் நடித்த முதல் மெகா ஹிட் தமிழ்ப்படம் எந்திரன்.

2.ஷங்கருக்கு பர்சனாலாக ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.அவருக்கு ராசியான எண் 8.அவர் ரிலீஸ் செய்யும் அனைத்து படங்களையும் 8 அல்லது கூட்டுத்தொகை 8 வரும் தேதிகளில் மட்டுமே ரிலீஸ் செய்வார்.அதாவது  8, 17, 26 இப்படி.ஆனால் முதன் முதலாக 1 ந்தேதில வந்து ஹிட் ஆகி இருக்கு.

3.ஷங்கர் படம் என்றால் இரண்டே ஃபார்முலாதான் ஒன்று ஊழல்,அநீதியை தட்டிக்கேட்கும்ஹீரோவின் கதை(ஜெண்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜி) அல்லது ஜாலியான லவ் ஸ்டோரி(காதலன்,ஜீன்ஸ்,பாய்ஸ்).இந்தப்படம் 2 சப்ஜெக்ட்டும் இல்லை.சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.தமிழில் வந்து ஹிட் ஆன முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

4.அண்ணாம்லை படத்துக்குப்பிறகு ரஜினி பஞ்ச் டயலாக் பேசாத படமே இல்லை.அதற்கு அமோக வரவேற்பு இருந்ததால் அதே ஃபார்முலாவை ஆளாளுக்கு பின்பற்ற ஆரம்பித்தார்கள்.ஆனால் சந்திரமுகியில் பன்ச் டயலாக் இல்லாவிட்டாலும் அவர் பேசிய சூப்பர் ஹிட் டயலாக்கான லகலக லக பன்ச் டயலாக் என்ற கேட்டகிரியில்தான் சேர்த்த வேண்டும்.ஆனால் எந்திரனில் நோ பஞ்ச் டயலாக்.நோ ஸ்டைல்.ஒன்லி கேரக்டர்.
5.அதிக எதிர்பார்ப்பைக்கிளப்பிய எந்தப்படமும் ஹிட் ஆனதே இல்லை,அதே போல் நீண்ட காலத்தயாரிப்பில் இருந்த படங்களும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.(விதிவிலக்கு -கேப்டன் பிரபாகரன்.,இணைந்த கைகள்)ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என கமல் ரசிகர்கள் கிண்டல் அடித்தபோது நான் கூட கொஞ்சம் பயந்தேன்.ஆனால் அனைத்து எள்ளல்களையும் தவிடு பொடி ஆக்கி எந்திரன் ஹிட் ஆகி இருக்கிறது.

1.ஆளவந்தான் (2 வருடங்கள் தயாரிப்பு)ரிசல்ட் டப்பா
2.நாட்டுக்கு ஒரு நல்லவன் (1 வருடதயாரிப்பு) ரிசல்ட் ஃபிளாப்.
3.குற்றப்பத்திரிக்கை(16 வருடங்கள் சென்சார் பிரச்சனை)குப்பை
4.பீமா(3 வருடங்கள் )சுமார் ஓட்டம்
5.ராவணன் (2 வருடங்களுக்கு மேல்) அட்டர் ஃபிளாப்

6.கடந்த 20 வருடங்களில் ஈரோடு அபிராமி தியேட்டர் ரஜினி படத்தை மிஸ் பண்ணியதே இல்லை.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் ரஜினி படம் கண்டிப்பாக எடுத்து விடுவார்கள்.சிங்கம் படம் ஓடும்போது சன்  பிக்சர்ஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எந்திரன் படத்தை எடுக்காமல் கோட்டை விட்டது அபிராமி நிர்வாகம்.செண்ட்டிமெண்ட்டாக அதை சொல்லி சிலர் பயமுறுத்தினார்கள்.அதையும் தவிடுபொடி ஆக்கியது எந்திரனின் மெகா வெற்றி.

7.தீபாவளி,பொங்கல்.தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் வெளிவாராமல் சாதாரணமாக வந்து ஹிட் ஆன படம் என்ற பெருமையும் உண்டு.ரஜினி படம் ரிலீஸ் ஆனாலே அது தான் ரசிகர்களுக்கு தீபாவளி என்பது வேறு விஷயம்.

8.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.(விதிவிலக்கு -உதிரிப்பூக்கள்,தில்லானா மோகனாம்பாள்)அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ இரண்டின் கலவை தான் எந்திரன்.(ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து ஹிட் ஆனது)

1. கல்கி வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

2.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.

3.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.

4.சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.

5.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.

6நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.

7/ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.

8.எழுத்தாளர் லட்சுமி எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.

9.பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.

இப்போது ஒரு எழுத்தாளரின் கதை சூப்பர் ஹிட் ஆகி ஓடுவதில் சந்தோஷம்.அமரர் சுஜாதா ஆத்மா சாந்தி அடையவும்,அவரது குடும்பம் பெருமைப்படவும்,புதிய எழுத்தாளர்களின் கதைக்கு டிமாண்ட் ஏற்படவும் இப்பட வெற்றி துணை புரிந்தால் மகிழ்ச்சி.

45 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

intha ariva padippula kaattirunthaa engayo poyirukkalaam. hehe

அமைதி அப்பா said...

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க சார். இனியாவது செண்டிமெண்ட் பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.அது சரி,விமர்சனம் எப்ப எழுதப் போறிங்க?

உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

எஸ்.கே said...

மிக விளக்கமான அலசல்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நீங்கள் சொல்வது போல் படம் சூப்பர் ஹிட்டா என்று இன்னும் சில நாட்கள் போகட்டும். அப்புறம் சொல்லலாம்!

ILA (a) இளா said...

அபிராமி இல்லைன்னா எந்த திரையரங்கத்துல ஓடுது? ராயல் கடையைச் சாத்திட்டாஙக்ன்னு சொன்னாங்களே

Bruno said...

சில தகவல் பிழைகள் உள்ளன

1. ஜீன்ஸ் சூப்பர் ஹிட்

2.
//.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.//

ஏங்க
கொஞ்சமாவது யோசித்து எழுதுங்க

ப்ரியா - சரி கதையில் பல மாற்றங்கள்

தில்லானா மோகனாம்பாள் ??

Admin said...

படங்கள் பெரிதாக, sidebar-ஐயும் அடைத்துக் கொண்டு தெரிகிறது. அதை Post Editor-ல் சென்று படத்தை க்ளிக் செய்து medium அல்லது large என்பதை க்ளிக் செய்யவும்.

மேலும்,
http://bloggernanban.blogspot.com

Bruno said...

http://www.payanangal.in/2010/10/blog-post.html

தேவமதி said...

SUPER STAR PADATHUKKU SUPER COMMENT... KEEP IT UP

என்னது நானு யாரா? said...

தல! சுவாரஸ்யமான தகவல்களை சும்மா அள்ளி விட்டிருக்கீங்க! படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல்! சினிமா புலியே நீ வாழ்க!

easyjobs said...

எந்திரனின் வீடியோ பாடல்கள் வேண்டுமா? வாருங்கள்

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4924

thamizhparavai said...

படம் உங்களூக்குப் பிடிச்சிருக்கு. ஹிட்டுன்னு சொல்லிக்கலாம். அதுக்காக இப்படியா?.....?
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சூப்பர் ஹிட்டான படம் வரிசையில் ‘கேப்டன் பிரபாகரன்’ சேரும்.(நூறாவது படம் வெற்றிகரமான ஓடின ஹீரோ கேப்டன் தான்)
‘துள்ளுவதோ இளமை’ நீண்ட நாள் தயாரிப்புதான். அது சூப்பர் ஹிட்தான்.
‘கஜினி’ -நீ.நா.த- ஆனால் சூ.ஹி.
‘சேது’ நீண்ண்ண்ண்ட நாள் தயாரிப்புதான் அதுவும் சூப்பர்ஹிட் தான்.
இவ்ளோ ஏன் ‘தசாவதாரம்’ கூட நீ.நா.த தான். அதுவும் சூ.ஹி. தான்

இன்னொன்று ‘சொல்ல மறந்த கதை’- இதன் மூலம் ‘நாஞ்சில் நாடனின்’ -’தலைகீழ் விகிதங்கள்’.
‘அழகி’ ஹிட் என்பதை விட சூப்பர்ஹிட் எனச் சொல்லலாம்.
150 கோடி போட்டு 160 கோடி புரட்டுவதை விட 3 கோடி போட்டு 6 கோடி எடுப்பதே சூப்பர்ஹிட்.
ப்ருனோ சொல்லியது போல ‘தில்லானா மோகனாம்பாள்’-அதன் லேட்டஸ்ட் வடிவம்-’கரகாட்டக் காரன்’
‘உதிரிப்பூக்கள்’ சூப்பர்ஹிட் இல்லையா?
மற்றபடி உங்கள் வாசகன் நான். எந்திரன் விஷயத்தில் மட்டும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டது ஓவராகிப் போய் விட்டது.... :-)

Unknown said...

hai!
soola marantha kathai , i think nanzil nadan wrote that story because that story surrounding with kanyakumari and nagarkovil slang.
but the filim director change slightly to neyveli slang. in original hero goes to tirunelveli for work.

Prasanna Rajan said...

அறைகுறை அறிவு ஆபத்தானதுன்னு எங்கப்பத்தா சொல்லியிருக்கு. 'என் இனிய இயந்திரா','மீண்டும் ஜீனோ'விலிருந்து கொஞ்சூண்டு எடுத்து உபயோகப்படுத்தி இருக்காங்க. ஒங்களுக்கு சந்தேகமா இருந்தா சுஜாதாவோட அந்த நாவல்களை கொஞ்சம் தூசி தட்டுங்க...

Tech Shankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

intha ariva padippula kaattirunthaa engayo poyirukkalaam. hehe

யோவ் சிரிப்புப்போலீசு,ஏத்தமா?நான் படிப்புல தத்திங்கற மேட்டரை இப்படியா பப்ளிக் பண்ணனும்?உங்க பிளாக்குக்கு வந்து வெச்சுக்கறேன் மிச்சக்கச்சேரியை

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அமைதி அப்பா said...

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க சார். இனியாவது செண்டிமெண்ட் பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.அது சரி,விமர்சனம் எப்ப எழுதப் போறிங்க?

உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அப்பா,படம் பாக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கறேன்.பிளாக்ல பாக்கமாட்டேன்.உங்க பாராட்டுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

மிக விளக்கமான அலசல்!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நீங்கள் சொல்வது போல் படம் சூப்பர் ஹிட்டா என்று இன்னும் சில நாட்கள் போகட்டும். அப்புறம் சொல்லலாம்!

October 1, 2010 8:46 PM

பூங்கதிர்,தியேட்டர் எல்லாம் அதிருது,இன்னுமா நீங்க நம்பலை?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ILA(@)இளா said...

அபிராமி இல்லைன்னா எந்த திரையரங்கத்துல ஓடுது? ராயல் கடையைச் சாத்திட்டாஙக்ன்னு சொன்னாங்களே

ஆமா,என் கே கே பி ராஜா ராஜினாமாவுக்குப்பிறகு ராயல் ஓடுது.இப்போ எந்திரன் ஆனூர்,சண்டிகா,கிருஷ்ணா.ஸ்ரீநிவாசா,ராயல்,ஸ்ரீஇலட்சுமி என 6 தியேட்டர்ல பட்டாசைக்கிளப்புது.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger புருனோ Bruno said...

சில தகவல் பிழைகள் உள்ளன

1. ஜீன்ஸ் சூப்பர் ஹிட்

2.
//.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.//

ஏங்க
கொஞ்சமாவது யோசித்து எழுதுங்க

ப்ரியா - சரி கதையில் பல மாற்றங்கள்

தில்லானா மோகனாம்பாள் ??

அடடே,சரிதான்.சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான தில்லானா மோகனாம்பாள் இருக்கா?மறந்துட்ட்டேன்,சாரி சார்.ஆனா ஜீன்ஸ் சூப்பர்ஹிட்டா சார்?எனக்கென்னவோ சுமாரான ஹிட்னுதான் தோனுது.காதலன் ஈரோட்ல 2 தியேட்டர்களில் 75 நாட்கள்,மேலும் ஒரு தியேட்டர்களில் 90 நாட்கள் ஓடின.அதுதான் ஷங்கர் படங்களில் அதிக ஹிட்.ஜீன்ஸ் ஈரோட்ல ஒரே தியேட்டர்ல 60 நாட்கள்தான் ஓடுச்சு சார்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Abdul Basith said...

படங்கள் பெரிதாக, sidebar-ஐயும் அடைத்துக் கொண்டு தெரிகிறது. அதை Post Editor-ல் சென்று படத்தை க்ளிக் செய்து medium அல்லது large என்பதை க்ளிக் செய்யவும்.

மேலும்,
http://bloggernanban.blogspot.com

ஓகே,உங்கள் ஆலோசனைக்கு நன்றி.உங்க பிளாக்குக்கு அரை மணி நேரம் கழிச்சு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger புருனோ Bruno said...

http://www.payanangal.in/2010/10/blog-post.html

வர்றேன் சார்,வெயிட் பிளீஸ்

Bruno said...

//சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான //

ஐயையோ !!!

திருக்குறளை எழுதியது சாலமன் பாப்பையா ஜோக்கே தேவல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger LAKSHMIGANDH said...

SUPER STAR PADATHUKKU SUPER COMMENT... KEEP IT UP

October 1, 2010 11:54 PM

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger என்னது நானு யாரா? said...

தல! சுவாரஸ்யமான தகவல்களை சும்மா அள்ளி விட்டிருக்கீங்க! படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல்! சினிமா புலியே நீ வாழ்க!

October 2, 2010 12:05 AM

நன்றி,புலின்னா உள்ளே போட்டுருவாங்க>

சி.பி.செந்தில்குமார் said...

Blogger easyjobs said...

எந்திரனின் வீடியோ பாடல்கள் வேண்டுமா? வாருங்கள்

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=49

அடடே,விளம்பரமா?ம் ம் ,ம் நடக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ்ப்பறவை said...

படம் உங்களூக்குப் பிடிச்சிருக்கு. ஹிட்டுன்னு சொல்லிக்கலாம். அதுக்காக இப்படியா?.....?
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சூப்பர் ஹிட்டான படம் வரிசையில் ‘கேப்டன் பிரபாகரன்’ சேரும்.(நூறாவது படம் வெற்றிகரமான ஓடின ஹீரோ கேப்டன் தான்)
‘துள்ளுவதோ இளமை’ நீண்ட நாள் தயாரிப்புதான். அது சூப்பர் ஹிட்தான்.
‘கஜினி’ -நீ.நா.த- ஆனால் சூ.ஹி.
‘சேது’ நீண்ண்ண்ண்ட நாள் தயாரிப்புதான் அதுவும் சூப்பர்ஹிட் தான்.
இவ்ளோ ஏன் ‘தசாவதாரம்’ கூட நீ.நா.த தான். அதுவும் சூ.ஹி. தான்

இன்னொன்று ‘சொல்ல மறந்த கதை’- இதன் மூலம் ‘நாஞ்சில் நாடனின்’ -’தலைகீழ் விகிதங்கள்’.
‘அழகி’ ஹிட் என்பதை விட சூப்பர்ஹிட் எனச் சொல்லலாம்.
150 கோடி போட்டு 160 கோடி புரட்டுவதை விட 3 கோடி போட்டு 6 கோடி எடுப்பதே சூப்பர்ஹிட்.
ப்ருனோ சொல்லியது போல ‘தில்லானா மோகனாம்பாள்’-அதன் லேட்டஸ்ட் வடிவம்-’கரகாட்டக் காரன்’
‘உதிரிப்பூக்கள்’ சூப்பர்ஹிட் இல்லையா?
மற்றபடி உங்கள் வாசகன் நான். எந்திரன் விஷயத்தில் மட்டும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டது ஓவராகிப் போய் விட்டது.... :-)

அய்யா மன்னிச்சுக்குங்க,உங்க கால் எங்கே காட்டுங்க,சரண்டர்,நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே,நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்.உதிரிப்பூக்கள் தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத படம்.நான் மறந்துட்டேன்.கேப்டன் பிரம்மாண்ட வெற்றி,அதையும் மறந்துட்டேன்,சாரி.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger jagadeesh said...

hai!
soola marantha kathai , i think nanzil nadan wrote that story because that story surrounding with kanyakumari and nagarkovil slang.
but the filim director change slightly to neyveli slang. in original hero goes to tirunelveli for work.

ஆமா,நீங்க சொன்னதௌ சரிதான்,தப்பு என் மேல தான்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Prasanna Rajan said...

அறைகுறை அறிவு ஆபத்தானதுன்னு எங்கப்பத்தா சொல்லியிருக்கு. 'என் இனிய இயந்திரா','மீண்டும் ஜீனோ'விலிருந்து கொஞ்சூண்டு எடுத்து உபயோகப்படுத்தி இருக்காங்க. ஒங்களுக்கு சந்தேகமா இருந்தா சுஜாதாவோட அந்த நாவல்களை கொஞ்சம் தூசி தட்டுங்க...

ஐயா,நான் இன்னும் படம் பாக்கலை,பாத்தவங்க சொன்னாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Tech Shankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS

நன்றி,வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger புருனோ Bruno said...

//சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான //

ஐயையோ !!!

திருக்குறளை எழுதியது சாலமன் பாப்பையா ஜோக்கே தேவல.

அய்யய்யோ,அதுவும் தப்பா,எனக்கு நேரம் சரி இல்லைனு நினைக்கறேன்

Bruno said...

http://s-pasupathy.blogspot.com/2010/08/1.html

karthikkumar said...

பஞ்ச் டையலாக்னு பெருசா இல்லைனாலும் ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க இன்னும் அந்த ஸ்டைல் அவர்கிட்டே அப்படியே இருக்கு. எல்லோர்க்கும் பிடித்த ஒரு நடிகர்னா நம்ம ரஜினி சர்தான்

Anonymous said...

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//
இந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்தில் வந்துள்ளது
http://sathish777.blogspot.com/2010/09/blog-post_19.html

Anonymous said...

புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது...சுஜாதா வின் டச் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது இதில் டாட் என சுஜாதா பஞ்ச் வந்திருக்கிறது.முற்று புள்ளி என்பதற்கு டாட் ஆம்...எந்திரன் சிட்டி இதை அடிக்கடி சொல்கிறது

Anonymous said...

ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க//
உண்மைதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthik said...

பஞ்ச் டையலாக்னு பெருசா இல்லைனாலும் ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க இன்னும் அந்த ஸ்டைல் அவர்கிட்டே அப்படியே இருக்கு. எல்லோர்க்கும் பிடித்த ஒரு நடிகர்னா நம்ம ரஜினி சர்தான்

நீங்க சொல்றது சரிதான்.படம் பின்னிட்டு இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//
இந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்தில் வந்துள்ளது
http://sathish777.blogspot.com/2010/09/blog-post_19.html

க்ளிக் பண்ணினால் அப்படியே போவது மாதிரி லின்க்கா குடுத்திருக்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//
இந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்தில் வந்துள்ளது
http://sathish777.blogspot.com/2010/09/blog-post_19.html

October 2, 2010 12:51 PM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது...சுஜாதா வின் டச் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது இதில் டாட் என சுஜாதா பஞ்ச் வந்திருக்கிறது.முற்று புள்ளி என்பதற்கு டாட் ஆம்...எந்திரன் சிட்டி இதை அடிக்கடி சொல்கிறது

October 2, 2010 12:54 PM

எந்திரன் சிட்டி என்பது ரோபோ ரஜினியின் கேரக்டர் நேமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க//
உண்மைதான்

படம் பார்த்த மவராசங்க 2 பேரும் பகிர்ந்துக்கறாங்க,நாம எதுக்கு இடையில?

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி டெனிம்

கிருஷ்ணா said...

1. கரையெல்லாம் செண்பகப்பூ கல்கியில் வரவில்லை. ஆனந்த விகடன்

2. நாயகன் பெயர் கணேக்ஷ; இல்லை - கல்யாணராமன்

Ramki said...

சிறை அனுராதா ரமணனின் படைப்பு

அன்பு said...

I just saw this review....... wanted to tell you only one thing,
ENTHIRAN was not a science fiction movie.....