Saturday, October 16, 2010

வாடா - சினிமா விமர்சனம்டாக்டர் ராஜசேகருக்குப்பிறகு “மரியாதை”யாக டைட்டில் வைக்க தமிழில் ஆள் இல்லையே என்ற கவலை விட்டது.இயக்குநர் ஏ.வெங்க்டேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.அதே போல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல்களிலேயே சிறந்த நாவலான தொட்டால் தொடரும் போல் அவர் வசனம் எழுதிய படங்களிலேயே மிக மோசமான படம் என்ற தகுதியும் இதற்கே.

படத்தின் முதல் பாதி முழுக்க ஹீரோ ரவுடியாகவும்,தீவிரவாதி போலும் காட்டப்பட்டாலே நமகெல்லாம் தெரிந்து விடும் இடைவேளைக்குப்பிறகு ஃபிளாஷ்பேக்கில் ஹீரோ ஒரு கலெக்டராகவோ,போலீஸ் ஆஃபீசராகவோ காட்டப்படுவார் என.ஆனானப்பட்ட கேப்டன் நரசிம்மாவில் ஜெயிக்க முடியாத கதை,இளைய தளபதி விஜய் மதுர படத்தில் அடி வாங்கிய கதையை வைத்துக்கொண்டு ஏ வெங்கடேஷ் என்ன தைரியத்தில் படத்துக்கு பூஜை போட்டார் என்றே தெரியவில்லை.

சுந்தர் சிக்கு ஓரளவு மார்க்கெட் இருக்கிறது (ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்)என்பதை ஒத்துக்கொள்ளலாம்,அதற்காக அவர் பாட்ஷா ரேஞ்சுக்கு பாய்வதும்,பஞ்ச் டயலாக் பேசுவதும் ரொம்ப ஓவர்.இனி எந்த ஹீரோவாவது பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றால் அதற்கு மினிமம் குவாலிஃபிகேஷன் 50 படம் முடித்திருக்க வேண்டும்,10 சூப்பர் ஹிட்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என யாராவது கோடம்பாக்கத்துக்கு ரூல்ஸ் போட்டாதான் தமிழ் சினிமா உருப்படும்.

ஜீன்ஸ் பேண்ட்டை இவ்வளவு லோ லெவலில் போட்ட முதல் கோலிவுட் நடிகை என்ற அந்தஸ்தை(!) பெறுகிறார் ஷெரில் ஃபிண்ட்டோ.அவர் உடுத்தும் உடைகள் எங்கே அவிழ்ந்து விடுமோ என நாம் தான் பயந்து கொண்டே படம் பார்க்க வேண்டி இருக்கே தவிர அம்மணி ஒன்றும் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

இயக்குநர் காதலை எவ்வளவு கேலிக்கூத்தாக நினைக்கிறார்,தமிழ் ரசிகர்களை மாங்கா மடையன் ஆக்க நினைக்கிறார் என்பதற்கு ஒரு சாம்ப்பிள்.ஹீரோயின் செப்பல் அறுந்து விடுகிறது,ஹீரோயின் தெனாவெட்டாக ஹீரோவிடம் அதை கையில் எடுத்து வருமாறு கூறுகிறார்.உடனே ரோஷம் பொங்கி எழுந்த ஹீரோ கண்டபடி இங்கிலீஷில் திட்டி விடுகிறார்,உடனே அபரிதமான காதல் வந்து விடுகிறது,டூயட் பாட ஃபாரீன் கிளம்பிடறாங்க,என்ன கொடுமை சார் இது?

படத்தில் சம்பந்தமில்லாமல் பொங்கல் பாட்டு ஒன்று வருகிறது,தெரிந்த உதவி இயக்குநர் ஒருவரிடம் விசாரித்தபோது வந்த தகவல்,இந்தப்படம் 2009 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படமாம்.அட தேவுடா.

படத்தில் பாடல் ஆசிரியருக்கு பணம் தர பட்ஜெட் பற்றவில்லை போல பாரதியார் பாடல்கள்,கண்ணதாசன் பாடல் என ஒப்பேற்றி இருக்கிறார்கள்.அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்தப்படத்தில் ரஜினியே இதுவரை செய்யாத காட்சி ஒன்று உண்டு.வில்லன் குரூப்பில் 5 பேர் நிற்கிறார்கள்.அவர்கள் எதிரே படுத்தபடி அடிபட்டிருக்கும் ஹீரோ தன் தோளில் கிடக்கும் ஈரல் துண்டால் சாய்ந்து கிடக்கும் ஒரு பனை மரத்தையே இழுத்து அதை அவர்கள் மேல் விட்டெரிகிறார்,அவர்கள் அனைவரும் அவுட்.ஈரோடு டெக்ஸ்டைல் சிட்டி என்பதால் ஈரல் துண்டு தயாரிப்பாளர்களிடம் இதன் சாத்தியம் குறித்து விசாரித்தேன்,அவர்கள் அதிசயித்துப்போய் இந்த ஒரு காட்சிக்காகவே அந்தப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்றார்கள்.

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நினைப்பு என்ற நல்ல பாட்டை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து குட்டிச்சுவர் ஆகி இருக்கும் குற்றத்திற்காகவே இயக்குநருக்கு ஒரு வருஷம் படம் எடுக்க தடை விதிக்கலாம்.
மைக்ராஸ்கோப் வைத்து தேடியதில் தென்பட்ட படத்தின் நல்ல அம்சங்கள்

1.கிஸ் குடுத்த பின் காதல் ஜோடியிடம் இந்தியா -சைனா ஒப்பந்தம் எப்படி இருந்தது? என கேட்பது.

2.அதோ ,அஞ்சலி வர்றா.

என்னது அஞ்சரைக்குள்ள வண்டி பட போஸ்டர் மாதிரியே வர்றா?

3.செல்ஃபோன் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சீக்ரட் நெம்பரை விவேக்கிடம் ஃபோனில் ஃபிரண்டு சொல்ல அதைக்கூட இருந்து கொண்டே குறித்து வரும் மனோகர் நன்றிப்பா ரூ 2000க்கு ரீ சார்ஜ் ஆகிடுச்சு என சொல்வது.

4. புது ரூட்ல நிறைய பஸ் விடனும்னு பொதுமக்கள் நிறைய பேர் பெட்டிஷன் குடுத்திருக்காங்க.

பஸ்ங்க நிறைய விடவேணாம்னு தனியார் பஸ் ஓனருங்க பெட்டி குடுத்திருக்காங்களே?

5.கடத்தப்பட்ட தலைவர் கடத்திய ஆளிடம்,”பிளீஸ்,என்னை விட்டுடுஎவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்”
அப்போ கூட இருக்கும் தலைவரின் பி ஏ “ஆஹா,இந்த ஐடியா இத்தனை நாளா எனக்கு தோணாம போச்சே?

6.யோவ்,நான் யாரு தெரியுமா?மந்திரி வணங்காமுடி.

அப்போ நான் யாரு?எம் எல் ஏ தேங்கா மூடியா?

7.பிரைம் மினிஸ்டரே ஒரு ஊருக்கு வரனும்னா அந்த ஊர் கலெக்டரோட பர்மிஷன் வேணும் தெரியுமில்லை?

8.பழைய பேப்பர்காரண்ட்ட பலாக்கொட்டை விக்கறவன் மாதிரி இருக்கே..

நீ மட்டும் என்ன அல்டிமேட் ஸ்டார் அஜித் மாதிரியா இருக்க்கே?நாமெல்லாமே மாயாண்டி குடும்பத்தார் மாதிரிதான்  இருக்கோம்.

9. மினிஸ்டர் பையன் மேல 18 கேஸ் இருக்கு.

யோவ்,மினிஸ்டர் மேல எத்தனை கேஸ் இருக்கு தெரியுமா?

அடப்பாவி,அவன் உன்னை கேட்டானா?ஏன் போட்டு குடுக்கறே?

10. குடம் ரொம்ப அடி வாங்கி இருக்கே,

குடத்தை பாக்காதே,குடத்தை வெச்சிருக்கற பொண்ணை பாரு.

விவேக்கின் காமெடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அவர் சுருளிராஜன் கெட்டப்பில் வந்து அவர் குரலில் பேசி ,அவர் பாணியில் நடித்து அவரும் சிரமப்பட்டு அவர் பெயரையும் கெடுத்து சுருளி பெயரையும்
கெடுத்து குதறி விட்டார்,போதாக்குறைக்கு படம் முழுக்க டபுள் மீனிங்க் டயலாக்ஸ் வேறு.

கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.

படத்தில் புத்திசாலித்தனமாக ஒரு சீன் உண்டு என்றால் அது மினிஸ்டர்  ராஜ்கபூரை ஹீரோ சாதரண டவுன் பஸ்ஸில் பயணிக்க செய்து, ஜி ஹெச்சில் ட்ரீட்மெண்ட் எடுக்க வைத்து ஏழைகளின் இன்னல்களை உணர வைப்பதுதான்.படாத பாடுபடும் அவர் “யோவ்,எம் எல் ஏ சீட்டுக்கு கூட இவ்வளவு நேரம் லைன்ல நிக்கலைய்யா.”என புலம்புவது செம காமெடி.

ஒரு கலெக்டர் புரூஸ்லீ ரேஞ்சுக்குன் சண்டை போடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.ஒரு 35 கிலோ எடை உள்ள இரும்புக்கழியால் வில்லனின் கையாள் ஹீரோவை கை மணிக்கட்டுப்பகுதியில் அடிக்கிறார்,என்ன ஆச்சரியம் ஹீரோவின் கைக்கு எதுவும் ஆகவில்லை,அந்த இரும்புக்கழி உடைந்து விடுகிறது.

அப்பா ,ஆளை விடுங்க ,நான் எஸ்கேப்

54 comments:

எல் கே said...

படம்லாம் நல்லா இருக்கு சித்தப்பு

Anonymous said...

விவேக்கின் காமெடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அவர் சுருளிராஜன் கெட்டப்பில் வந்து அவர் குரலில் பேசி ,அவர் பாணியில் நடித்து அவரும் சிரமப்பட்டு அவர் பெயரையும் கெடுத்து சுருளி பெயரையும்
கெடுத்து குதறி விட்டார்,//RIPEETT

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

படம்லாம் நல்லா இருக்கு சித்தப்பு

ஓஹோ விமர்சனம்தான் சரி இல்லைனு சொல்றீங்களா பெரியப்பா,இருங்க உங்க பிளாக் வந்து பழி வாங்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விவேக்கின் காமெடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அவர் சுருளிராஜன் கெட்டப்பில் வந்து அவர் குரலில் பேசி ,அவர் பாணியில் நடித்து அவரும் சிரமப்பட்டு அவர் பெயரையும் கெடுத்து சுருளி பெயரையும்
கெடுத்து குதறி விட்டார்,//RIPEETT

அப்பீட்டு ஆகிட்டியே சொல்லிட்டூ?

Anonymous said...

விமர்சனம் நல்லாருக்கு கவுரவர்கள் எதிர்பார்த்தேன் டப்பிங் படம் இப்படித்தான் இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

ஓகே நன்றி, கவுரவர்கள் டைப் பண்ணிட்டு இருக்கேன்,ஹி ஹி ஹி

erodethangadurai said...

என்ன செந்தில் ...? இந்த வாரம் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் வாரமா ? நல்லாருக்கு .. !

Philosophy Prabhakaran said...

என்னது நேத்து தொட்டுப்பார்... இன்னைக்கு வாடா... நாளைக்கு கெளரவர்களா.... U R great... பட் அந்த நீங்கள் போடும் அந்த வசனத்தொகுப்பு எனக்கு பிடித்திருக்கிறது... அதற்காகவே எவ்வளவு மொக்கைப் படத்தை பற்றிய பதிவானாலும் படிக்கலாம்...

Unknown said...

ஒரு நாளைக்கு எத்தனை படந்தான் பாப்பிங்க எல்லாம் ஓசி டிக்கெட்டா

Unknown said...

விமர்சனம் படிச்ச என்னாலே முடியலே
உங்களுக்கு பதிவுலகின் சார்பாக
படம் பார்ப்போர் சங்க
தலைவராக
நியமிக்க வேண்டுகிறேன்

ஜானகிராமன் said...

அண்ணே, படத்தைப்பத்தி எர்லி வார்னிங் கொடுத்து, மத்த பயபுள்ளைகளை காப்பாத்தியதுக்கு நன்றியோ நன்றி. (ஆனாலும் உங்களோட, கஷ்டப்பட்டாலும் விமர்சனம் எழுதனும்ன்ற கடமை குணம் சூப்பர்ணே)

புதிய மனிதா. said...

கலக்குங்க தல எந்த ஊர்ல theatre ல பார்தீங்கன்னு சொல்லுங்க ....

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

என்ன செந்தில் ...? இந்த வாரம் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் வாரமா ? நல்லாருக்கு .. !

நன்றி துர

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

என்னது நேத்து தொட்டுப்பார்... இன்னைக்கு வாடா... நாளைக்கு கெளரவர்களா.... U R great... பட் அந்த நீங்கள் போடும் அந்த வசனத்தொகுப்பு எனக்கு பிடித்திருக்கிறது... அதற்காகவே எவ்வளவு மொக்கைப் படத்தை பற்றிய பதிவானாலும் படிக்கலாம்...

நன்றி பிரபாகரன்.அப்படியாவது என் பிளாக்குக்கு அடிக்கடி வாங்க,.

வாழ்க்கை வாழ்வதற்கே said...

ஒரு நாளைக்கு எத்தனை படந்தான் பாப்பிங்க எல்லாம் ஓசி டிக்கெட்டா

ஹி ஹி ஹி ,எப்படி தெரிஞ்சுது?

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

விமர்சனம் படிச்ச என்னாலே முடியலே
உங்களுக்கு பதிவுலகின் சார்பாக
படம் பார்ப்போர் சங்க
தலைவராக
நியமிக்க வேண்டுகிறேன்

உங்களை கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கிறேன்.(ஆனா ஒரு கண்டிஷன் ,கொள்கை என்னன்னு கேக்கக்கூடாது)

சி.பி.செந்தில்குமார் said...

ஜானகிராமன் said...

அண்ணே, படத்தைப்பத்தி எர்லி வார்னிங் கொடுத்து, மத்த பயபுள்ளைகளை காப்பாத்தியதுக்கு நன்றியோ நன்றி. (ஆனாலும் உங்களோட, கஷ்டப்பட்டாலும் விமர்சனம் எழுதனும்ன்ற கடமை குணம் சூப்பர்ணே)

அட ராமா.என்னை பாராட்றீன்களா? நக்கல் அடிக்கறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

கலக்குங்க தல எந்த ஊர்ல theatre ல பார்தீங்கன்னு சொல்லுங்க ...புதிய மனிதா. said...

ஈரோடு தேவி அபிராமி

புரட்சித்தலைவன் said...

(ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்)//
அவ்ளோ பேரா…..??? டிக்கெட் ப்ரியா கொடுத்தாங்களா…?

புரட்சித்தலைவன் said...

என்னது நேத்து தொட்டுப்பார்... இன்னைக்கு வாடா... நாளைக்கு கெளரவர்களா.... U R great... பட் அந்த நீங்கள் போடும் அந்த வசனத்தொகுப்பு எனக்கு பிடித்திருக்கிறது... அதற்காகவே எவ்வளவு மொக்கைப் படத்தை பற்றிய பதிவானாலும் படிக்கலாம்...//

வழிமொழிகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

(ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்)//
அவ்ளோ பேரா…..??? டிக்கெட் ப்ரியா கொடுத்தாங்களா…?

hi hi ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

என்னது நேத்து தொட்டுப்பார்... இன்னைக்கு வாடா... நாளைக்கு கெளரவர்களா.... U R great... பட் அந்த நீங்கள் போடும் அந்த வசனத்தொகுப்பு எனக்கு பிடித்திருக்கிறது... அதற்காகவே எவ்வளவு மொக்கைப் படத்தை பற்றிய பதிவானாலும் படிக்கலாம்...//

வழிமொழிகிறேன்.

நன்றி நவில்கிறேன்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கரும்பை கையில் வச்சுட்டு வேடிக்கைப் பக்கற பாப்பாவுக்கு அதை எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்க சார். யோவ்... யோவ்... தப்பா நினைக்காதேய்யா. அதை எப்படி உரிச்சு சாப்பிடரதுன்னு தான் சொல்லித் தரச் சொன்னேன். புரின்சுதா?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.---இந்த வரிகள் என் தலைவனின் புகழ் பாடிய அற்பத வரிகள். இதை சாருக்கு ஃபார்வார்டு செய்திருக்கிறேன்.

Riyas said...

விமர்சனம் படிச்ச எங்களாலயே தாங்க முடியல்ல நீங்க எப்பிடித்தான் தாங்கினிங்களோ.. u are great c.p

வெறும் மசாலாவை மட்டும் நம்பி படம் எடுப்பவர்களில் வெங்கடேஸ் முதன்மையானவர்.. சுந்தர் சி சொல்லவே வேண்டாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாக்கக்கூடாத படங்களில் இதுவும் ஓன்று அப்பை தானே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த படம் பார்த்ததுக்கு பேசாம...வேணாம் பப்ளிக்

பெருங்காயம் said...

Warning: Visiting this site may harm your computer!
The website at adrasaka.blogspot.com contains elements from the site ulavu.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for ulavu.com.
Learn more about how to protect yourself from harmful software online.
உங்க பிளாக்கை ஓப்பன் பண்ணும் போது ஸ்பேம் வார்னிங் மெசேச் வருகிறது. உலவு.காம். கெட்ஜெட் இணைந்திருந்தால் அகற்றவும். மற்ற பதிவர்களும் உலவு.காம் கெட்ஜெட் இணைத்திருந்தால் உடனடியாக அதை அகற்றவும்.

எல் கே said...

//ஓஹோ விமர்சனம்தான் சரி இல்லைனு சொல்றீங்களா //

அதை யாரு படிச்சா ??? ஹஹஅஹா

ILA (a) இளா said...

Warning: Visiting this site may harm your computer!
The website at adrasaka.blogspot.com contains elements from the site ulavu.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for ulavu.com.
Learn more about how to protect yourself from harmful software online.
I understand that visiting this site may harm my computer.
-------------------
Virus Due to Tool added in ur blog boss- identify

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கரும்பை கையில் வச்சுட்டு வேடிக்கைப் பக்கற பாப்பாவுக்கு அதை எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்க சார். யோவ்... யோவ்... தப்பா நினைக்காதேய்யா. அதை எப்படி உரிச்சு சாப்பிடரதுன்னு தான் சொல்லித் தரச் சொன்னேன். புரின்சுதா?

இந்த மெசேஜை உங்க முத மனைவிக்கு ஃபார்வர்ட் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.---இந்த வரிகள் என் தலைவனின் புகழ் பாடிய அற்பத வரிகள். இதை சாருக்கு ஃபார்வார்டு செய்திருக்கிறேன்.

அப்படியே ரெக்கமெண்டும் பண்ணுங்க

October 16, 2010 7:38 PM
Delete
Blogger Riyas said...

விமர்சனம் படிச்ச எங்களாலயே தாங்க முடியல்ல நீங்க எப்பிடித்தான் தாங்கினிங்களோ.. u are great c.p

வெறும் மசாலாவை மட்டும் நம்பி படம் எடுப்பவர்களில் வெங்கடேஸ் முதன்மையானவர்.. சுந்தர் சி சொல்லவே வேண்டாம்.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

பாக்கக்கூடாத படங்களில் இதுவும் ஓன்று அப்பை தானே...

அதே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த படம் பார்த்ததுக்கு பேசாம...வேணாம் பப்ளிக்

தனி மெயிலில் திட்டவும்

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

//ஓஹோ விமர்சனம்தான் சரி இல்லைனு சொல்றீங்களா //

அதை யாரு படிச்சா ??? ஹஹஅஹா

கைப்புள்ள,இதுக்கப்புறமும் நீ விமர்சனம் எழுதனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

Warning: Visiting this site may harm your computer!
The website at adrasaka.blogspot.com contains elements from the site ulavu.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for ulavu.com.
Learn more about how to protect yourself from harmful software online.
I understand that visiting this site may harm my computer.
-------------------
Virus Due to Tool added in ur blog boss- identify

நன்றி சார் ,உலவு டூல் பார் எடுத்தாச்சு,இப்போ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் யாருய்யா, மசத்தனமா இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரும்பு இன்னமும் நல்லாத்தான் இருக்கும்போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது எப்பிடி தல வரிசையா மொக்கப் படமா பாத்துக்கிட்டே இருக்கறீங்க? இதுல கதை(?), சீன், டயலாக்க வேற ஞாபகம் வெச்சி எழுதறீங்க, புல்லரிக்குதுய்யா ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.///

ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............ம்ம்மூதேவி...! டபுள்மீனிங்கா நானா, நான் எப்பவுமே சிங்கிள் மீனிங்தான், இதுக்குத்தான் கபாலத்துல கொஞ்சமாவது மூளை வேணும்ங்கறது!!!

சி.பி.செந்தில்குமார் said...

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

ookee ஓக்கே வந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் யாருய்யா, மசத்தனமா இருக்கா?

ஃபோன் நெம்ப்ர் இருக்கு வேணுமா/

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது எப்பிடி தல வரிசையா மொக்கப் படமா பாத்துக்கிட்டே இருக்கறீங்க? இதுல கதை(?), சீன், டயலாக்க வேற ஞாபகம் வெச்சி எழுதறீங்க, புல்லரிக்குதுய்யா ...!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரும்பு இன்னமும் நல்லாத்தான் இருக்கும்போல?

ஜூனியர் எஸ் ஜே சூர்யா/

சி.பி.செந்தில்குமார் said...

அது எப்பிடி தல வரிசையா மொக்கப் படமா பாத்துக்கிட்டே இருக்கறீங்க? இதுல கதை(?), சீன், டயலாக்க வேற ஞாபகம் வெச்சி எழுதறீங்க, புல்லரிக்குதுய்யா ...!

October 17, 2010 3:15 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.///

ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............ம்ம்மூதேவி...! டபுள்மீனிங்கா நானா, நான் எப்பவுமே சிங்கிள் மீனிங்தான், இதுக்குத்தான் கபாலத்துல கொஞ்சமாவது மூளை வேணும்ங்கறது!!!

நீங்க தான் கடன் தர்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் யாருய்யா, மசத்தனமா இருக்கா?

ஃபோன் நெம்ப்ர் இருக்கு வேணுமா/////

என்னது போன் நம்பர் இருக்கா? மெயில் பண்ணுங்க (இங்கே போட்டா எனக்கு முன்னாடி போயி நிப்பானுங்க திருட்டுப் பசங்க), ஆமா மத்தவிஷயமெல்லாம் எப்படி, முன்னடியே பேசிக்கனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

நான் உங்களை அண்ணனா நினைக்கறேன்,நீங்க என்னை மாமாவா நினைக்கறீங்க?

karthikkumar said...

சீக்கிரம் அந்த நம்பர எனக்கு பாஸ் பண்ணுங்க செந்தில் சார்

முத்துசிவா said...

//இனி எந்த ஹீரோவாவது பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றால் அதற்கு மினிமம் குவாலிஃபிகேஷன் 50 படம் முடித்திருக்க வேண்டும்,10 சூப்பர் ஹிட்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என யாராவது கோடம்பாக்கத்துக்கு ரூல்ஸ் போட்டாதான் தமிழ் சினிமா உருப்படும்.//

ஹா.. ஹா.. கரெக்ட்ணே...

//இந்தப்படத்தில் ரஜினியே இதுவரை செய்யாத காட்சி ஒன்று உண்டு.வில்லன் குரூப்பில் 5 பேர் நிற்கிறார்கள்.அவர்கள் எதிரே படுத்தபடி அடிபட்டிருக்கும் ஹீரோ தன் தோளில் கிடக்கும் ஈரல் துண்டால் சாய்ந்து கிடக்கும் ஒரு பனை மரத்தையே இழுத்து அதை அவர்கள் மேல் விட்டெரிகிறார்//

அது என்னண்ணே ரஜினியே... ரஜினி பண்ண இதுமாதிரியான கேவலமான காட்சிகள் எது எதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களாண்ணே.. atleat oru மூணு...

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சீக்கிரம் அந்த நம்பர எனக்கு பாஸ் பண்ணுங்க செந்தில் சார்

யோவ்,காலேஜ் அரியரை பாஸ் பண்ற அழியப்பாருய்யா,ஃபிகரோட நெம்பரை அப்புறம் பாஸ் பண்ணலாம்

சி.பி.செந்தில்குமார் said...

முத்துசிவா said...

//இனி எந்த ஹீரோவாவது பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றால் அதற்கு மினிமம் குவாலிஃபிகேஷன் 50 படம் முடித்திருக்க வேண்டும்,10 சூப்பர் ஹிட்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என யாராவது கோடம்பாக்கத்துக்கு ரூல்ஸ் போட்டாதான் தமிழ் சினிமா உருப்படும்.//

ஹா.. ஹா.. கரெக்ட்ணே...

//இந்தப்படத்தில் ரஜினியே இதுவரை செய்யாத காட்சி ஒன்று உண்டு.வில்லன் குரூப்பில் 5 பேர் நிற்கிறார்கள்.அவர்கள் எதிரே படுத்தபடி அடிபட்டிருக்கும் ஹீரோ தன் தோளில் கிடக்கும் ஈரல் துண்டால் சாய்ந்து கிடக்கும் ஒரு பனை மரத்தையே இழுத்து அதை அவர்கள் மேல் விட்டெரிகிறார்//

அது என்னண்ணே ரஜினியே... ரஜினி பண்ண இதுமாதிரியான கேவலமான காட்சிகள் எது எதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களாண்ணே.. atleat oru மூணு...

1.நாட்டுக்கு ஒரு நல்லவன்

2.மாவீரன்

3.பாபா

சி.பி.செந்தில்குமார் said...

முத்து சிவா ,இன்னொரு மேட்டர்,அந்த வரிகள் சுந்தர் சி யை கிண்டல் பண்ணீ எழுதப்பட்டவை,ரஜினியை அல்ல.