Saturday, February 18, 2017

சிம்ம ராசியை சிதைத்திட்ட சிங்கம்

தீபாவை சந்திக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார் அவர் கணவர் # சம்சாரம்னா அப்டித்தான் எல்லா ஊர்லயும்


=============2 எங்களை யாரும் கடத்தவில்லை: அதிமுக எம்.எல்.ஏக்கள் - இப்டிச்சொல்லியே எத்தனை நாட்களைக்கடத்துவீங்க?=============3 நாளை மெரீனாவில் அம்மா சமாதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு - சசிகலா

# கலைஞரை விட பெரிய தில்லாலங்கடியா இருக்கும் போல

============

4 சொத்துகுவிப்பு வழக்கில் 14ம்தேதி தீர்ப்பு
டே அன்னைக்கு நடராஜன் வெளியே சசி உள்ளே.அதான் சங்கடமா இருக்கு

==============

5 ஓரளவுக்கு பொறுமை காப்போம். அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்: சசிகலா- ஆனா கவர்னர் அப்போலோ வர ஒத்துக்கனுமே?

=============

6 அதிமுகவின் உட்கட்சி அரசியலில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை!
-விஜயகாந்த்! # நல்ல வேளை.நோஸ்கட் ஆகாம தப்பிச்சீங்க


================

7 தற்போதைய பிரச்சினையால் பாமக எழுச்சி அடைகிறது!
-அன்புமணி # மற்றவர் பலவீனம் உம் பலம் எனில் அதுதான் உமது பெரிய பலவீனம்

==============

8 முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ராமராஜன் ஆதரவு # ராம ராஜ்யம் + கிராம ராஜ்யம்


===================


9 ஆளுநர் மீது வழக்கு போடுவேன்' -சு.சுவாமி! # டிராபிக் ராமசாமி ,சு சுவாமி 2 பேருக்கும் இதே வேலை.போதுமடா சாமி

=================

10 'சசிகலா, ஜெ போல வேஷம் போட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா?'-் லதா # கபட வேட தாரிகளை எப்டி ஏத்துக்கமுடியும்?


======================

11 சூழ்ச்சிகளை முறியடிக்கும் சுனாமியாக செயல்படுபவர் ஓ.பன்னீர்செல்வம் - நடிகர் ராமராஜன் # சு சுவாமி யை ஓவர் டேக்கும் சூ சு ஓபிஎஸ்

===================

12 ஆளுநர் சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்து கொள்கிறார்: தமிழிசை # எக்சாம்னா கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் எழுதனும்.

=====================

13 திமுகவால்தான் நிலையான ஆட்சி தரமுடியும் -கனிமொழி # சரி.அதை 2021 ல சொல்லுங்க.இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாம ஆஜர்?


===============

14 இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார்...ரோசய்யா கவர்னரோட மனசு இன்னொரு கவர்னருக்குத்தான் தெரியும் மொமெண்ட்

===============

15 ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா # அதுக்குதான் நாம அப்பவே ஜனகனமன பாடிட்டமே?


================

16 பெண் ஒருவர் அரசியலில் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்: சசிகலா # ஆமா.கூட இருந்தே குழி தோண்டிடறாங்க

===============

17 பெரும்பான்மை உள்ளவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்: கவர்னருக்கு திருமாவளவன் கோரிக்கை # அய்யாவே சொல்லிட்டாரு.ஆக வேண்டியதைப்பாருங்க

================

18 நான் ஒரு சிங்கம் - சசிகலா # சிம்ம ராசியை சிதைத்திட்ட சிங்கம்


================

19 அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சசிகலா செயல்பட்டுவருகிறார் - OS மணியன் # உங்க பதவியைக்காப்பாற்றவேண்டும் எனும் உணர்வோட நீங்க?

================

20 சென்னை ஜெயிலையும் பாத்துருக்கோம் ,பெங்களூர் ஜெயிலையும் பாத்துருக்கோம் -சசிகலா.# ஹாட்ரிக் ஹிட் அடிக்க ஆசை போல.நிறைவேத்திடுவோம்

================

0 comments: