Thursday, February 16, 2017

அம்மாப்பேட்டை ல அட்டர்பிளாப், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ல செம ஹிட்!!!!

மன்னா! அமைச்சர்களை நியமிக்கும் முன் அறிவு உள்ளவர்களா தேர்ந்தெடுப்பீங்களாமே?

 ஆமா, வளர்மதி, அறிவுமதி, மதிமாறன் இப்டி பேர்லயே மதி இருக்கு, நம்மை மதிச்சு நடப்பாங்க

=====================

சார், முத நாள் வசூலே 30 கோடி ரூபா வருமாமே?

 இப்டி சொல்லி சொல்லியே காம்பென்சேசன் அமவுண்ட்டை ஏத்தி விட்ருவாங்க போல

===================

 குருவே! நான் என் சுயநலத்துக்காக ஒருவருக்கு  மாபெரும் துரோகமும் பாவமும் செஞ்சுட்டேன், என்ன பரிகாரம்?

குழந்தைகளுக்கு அவர் பேர் வை, கடவுள் ஏமாந்துடுவாரு

====================


தலைவரே! இன்னோவா கார் கிடைக்குமா?ன்னு கை ரேகை ஜோசியம் பார்ப்போமா?

ம்ம், அதோ பாரு அல்லக்கை ரேகை  ஜோசியம் பார்க்கப்படும் போர்டு


===================

போன்ல சார்ஜ் ஏறது மட்டும் பொறு மையா ஏறுது.. ஆனா இறங்கறது வேகமா இறங்குது.:/ ஏன்?

மலை ஏறும்போது மெதுவா, இறங்கும்போது வேகமா இறங்கிடறமே, அது போல
==============

6

சார்,Comparison மட்டும் இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப அழகான ஒரு பயணம்னு சொல்றாங்களே?

அது தெரில, ஆனா காம்பென்சேசன் மட்டும் தரவேண்டியதில்லைன்னா எவ்ளோவ் நல்லா இருக்கும்

=====================

7 சார், லட்சக்கணக்கான கூட்டம் மெரீனாவில் இருந்தது.வெறும் 100 பேர்னு நியூஸ் போட்டிருக்கீங்க?

அப்டி போட்டா 100 ரூபா தர்றதா சொன்னாங்க

==============

8 டியர், உனக்கு மட்டும் எப்டி நான் இவ்ளோ அழகா தெரியுறேன்😜?

அட்டு ஃபிகரா இருந்தாலும் லட்டு ஃபிகர்னு சொல்லி பழக்கம் ஆகிடுச்சு


==================

 சார், உங்க சேனல்ல வெயிட் பார்க்கும் மிஷின் வெச்சிருக்கீங்களே, எதுக்கு>?

அரசியல் தலைவர்களின் எடை மேடை நிகழ்ச்சிக்காக


==============


10 டியர், சேலை கட்டினா நான் அழகா இருப்பேனா?

 நீ மட்டும் இல்லை, எல்லா பொண்ணுங்களும் சேலை கட்டும்போது அழகுதான், ஆனா ஜன்னல் கதவை மூடிடறாங்க

====================

11 டாக்டர், க்ளினிக் பிளஸ் ஷாம்பு தடவிக்கிட்டா கொசு கடிக்காதாமே? நிஜமா?

இது அந்த ஷாம்பு கம்பெனிக்காரன் கிளப்பி விட்ட வதந்தியா இருக்கும்


=====================


12  குர்ரான், பைபிள் படிச்ட்டு தூங்கறவங்க இருக்காங்க,ஆனா கீதோபதேசம் படிச்ட்டு தூங்கறவங்க இல்லையே?அதை படிச்சா விழிப்புணர்வு வரும்,எப்டி தூங்க?

==============

13 என் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க.கடைசி ட்வீட்டை நான் போடலை.

மேடம்.ஹேக் பண்ணிட்டா நீங்க எப்டி இப்போ ட்வீட்டமுடியும்?

=============

14 த்ரிஷாவோட அக்கவுண்ட்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்களாம்.நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்.


ஷாக்கைக்குறை.பாஸ்வோர்டை மறை.அடுத்து நீங்க தான்


=============

15 முதல் நாள் கலெக்சனை விட 2 வது நாள் கலெக்சன் குறைஞ்சதுக்கு என்ன காரணம்?


சனம்
விமர்சனம்


=============

16 சார்.முத நாள் வசூல் 16.61கோடி னு எதை வெச்சு சொல்றீங்க?


16 றை த்திருப்பிப்போட்டா 61 தானே?அதானே?அதேதான்


=============

17 சார்.ஜல்லிக்கட்டுக்கு எதிரா கருத்து சொன்னதால இனி உங்க படத்தை ஓட விட மாட்டோம்.


எப்பய்யா என் படம் ஓடி இருக்கு?==================

18 தலைவரே! தமிழர்களை பொறுக்கிகள் னு சொன்னீங்களா?


ஆமா
ஓட்டு பொறுக்க அவங்க வீட்டு படி ஏறி பிச்சை எடுத்தீங்களே அப்போ நீங்க யாரு? சுவாமி==============

19 யார் கிட்டேயும் இல்லாத கெட்ட பழக்கம் 1 என் கிட்டே இருக்கு.


என்னங்ணா அது?
படம் பிளாப் ஆனாலும் 100 கோடி வடை சுடுவது


===============

20 சார்.அம்மாப்பேட்டை ல அட்டர்பிளாப், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ல ஹிட்,எப்டி?


அடிச்சு விடறதுதான்.எவன் போய் பார்க்கப்போறான்?


===============


0 comments: