Monday, February 20, 2017

ஊழல் கட்சி ,ஜாதிக்கட்சி ,மதவாதக்கட்சி ன்னு எத்தனை ஆபத்துகள்?

எம்எல்ஏக்கள் நலமாக இருக்கிறார்கள் -சி.ஆர் சரஸ்வதி
# இட்லி சாப்பிட்டார்கள் .உப்புமா கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் மிஸ்டு

============

2 பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது
- மு.க.ஸ்டாலின் # தினகரன் மேட்டர் எப்பவோ நடந்துச்சு.இப்போ ஏன் ?

=============

3 குழந்தைகளை கடத்திவிடுவதாக மிரட்டல்கள் வந்ததாக MLAக்கள் புகார் தெரிவிக்கின்றனர்- சசிகலா# சரி.ஏன் அப்டி மிரட்னீங்க?

================

4 மக்களுக்கு ஜெ என்ன செய்தாரோ அதனை நாங்கள் செய்வோம்:சசிகலா # சொந்தமா எதும் செய்ய மாட்டீங்க?அட்டக்காப்பி அடிப்பீங்க?எதிர்ப்பவரை அடிப்பீங்க

===================

5 கழக வெற்றியை ஜெ_வின் பாதத்தில் சமர்ப்பிப்பேன் _சசி
# அப்போ ஜெ காலை கட் பண்ணி பாடம் போட்டு வெச்சிருக்கறதை ஒத்துக்கறீங்க?

=================

6 தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தேவை இல்லை -விஜயகாந்த் # நல்ல வேளை.கவர்னரே தேவை இல்லைனு சொல்லலை

==================

7 சுதந்திரமாக இருக்கிறார்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை -சசிகலா # அடை காத்து வைப்பது ஏனோ?


===============

8 MGR, ஜெ சந்தித்த சோதனைகளை நான் இப்போது அனுபவிக்கிறேன்- சசிகலா # உங்களையும் அப்போல்லோல அட்மிட் பண்ணப்போறாங்களா?

=================

9 OPS க்கு பெருகும் ஆதரவு; எம்.பி.க்கள் எண்ணிக்கை 11.# லேடி க்கு போட்டியா வருவார்னு பார்த்தா மோடிக்கு போட்டியா வந்துடுவார் போலயே

================

10 அம்மாவும், நானும் சென்னை மற்றும் பெங்களூரு சிறையையும் பார்த்து உள்ளோம்.-சசிகலா#சுதந்திர்ப்போராட்ட தியாகியாவா போனீங்க?திருடுனதாலதானே?

===============

11 ஆளுநர் தாமதப்படுத்துவது சட்ட விரோதமல்ல: சோலி சொராப்ஜி # அவரு ஸ்கூலுக்கே லேட்டா போனவராம்

==================

12 “சசிகலா என்ற பெரிய தீமையோடு ஒப்பிடும்போது OPSசிறிய தீமை!” – தமிழருவி மணியன்
# தென் கிழக்கு சீமையிலே
தமிழகம் என்றும் தீமையிலே

================

13 தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது: சசிகலா - இருக்கும் வரை என திருத்தி வாசிக்கவும்

==============

14 சட்டமன்றம் என்றுக்கூட சொல்ல தெரியாத சசிகலா... மக்கள் கிண்டல்# சட்டம்னாலே அலர்ஜியாம்

===============

15 அரசியல்வாதிகள் ஊழல் செய்ய கூடாது -ஸ்டாலின் # இந்த அட்வைஸ் உங்க வீட்டுக்கா?நாட்டுக்கா?

=========
10 ஆண்டுகள் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது # இதுக்குள்ள.என்ன என்ன ஆட்டம் போட்டீங்க? எத்தனை இன்னல்?வாம்மா மின்னல் ஜெயிலுக்கு

==============

17 சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தப்பியது தமிழகம்.-ராமதாஸ் # ஊழல் கட்சி ,ஜாதிக்கட்சி ,மதவாதக்கட்சி ன்னு எத்தனை ஆபத்துகள்?

================

18 சசிகலாவிற்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து சன், ராஜ் TVபங்குகள் அதிரடியாக உயர்ந்தன! # ரமணா பார்முலா இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்

==============

19 அதிமுக நிலையான ஆட்சி அமைக்காது எனில் திமுகவைஅழைக்க வேண்டும்: கி.வீரமணி கிடக்கட்டும் கலைஞரைத்தூக்கி மனைல வை?

===============

20 எந்த தீர்ப்பை எதிர்த்து காவடி எடுத்து, மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்பை இன்று கொண்டாடுவது வேடிக்கை: ஸ்டாலின் # வேடிக்கை அரசியல்வாதி வாடிக்கை

==================

0 comments: