Wednesday, February 08, 2017

புது இந்தியா நல்லா ஏமாந்தியா?

மேடம்.அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் 400 கிராம் இருந்தது.இப்போ 175கிராம் தான் தர்றாங்களாம்
இது சின்னம்மாவுது.அப்டிதான்

==============

2 சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்


கெட்ட வார்த்தை பேசுவதே தப்புங்க்ணா


=============

3 ஜோசியரே! அடுத்தவங்க அட்வைஸ் கேட்டு முடிவெடுக்கலாமா கூடாதா?

மேடம், புருசன் பேச்சை மட்டும் கேட்றாதீங்க,கண்டவன் பேச்சை கேளுங்க


=================


4 டியர், பீச்சுக்கு தனியா வர்றேன், உங்க சுண்டு விரல் என் மேல படுதா?ன்னு பார்ப்போம்

சுத்தம், அதுக்கு நீ வீட்லயே இருந்துக்கோ,டவுன் பஸ்ல நான் போய்க்கறேன்


===================

5  டாக்டர், சொன்ன சொல்லை காப்பாத்துவீங்களா?

எஸ் மேடம், பேஷண்ட்டை மட்டும் காப்பாத்த மாட்டோம்


==================


6 உன்னை ஜோக்கராக மட்டும் யாராவது பயன்படுத்தினால்,
அவர்களிடமிருந்து நீ, விலகிவிடு!

முடியாதே,லைப்ரரி போனா எல்லா வீக்லி புக்சும் படிப்பேனே?


===================

7
இந்த கிராமத்துல பிறந்த பொண்ணுங்களுக்கு குழந்தையே பிறக்காது

குழந்தையே பிறக்கலைன்னா எப்டி பொண்ணுங்க பிறந்திருப்பாங்க? #கங்கம்மா சீரியல்


==================


8 புது வருச பரிசு என்ன தலைவரே?

பெட்ரோல் டீசல் விலை 1/1/17 முதல் ஏத்தறோம்

===============
9 புதுசா பிறந்த இந்தியா வுக்கு என்ன பேரு

புது இந்தியா நல்லா ஏமாந்தியா?


============

10  மிஸ். ஃபர்ஸ்ட் நைட்க்கு வாழ்த்து

யோவ் , எனக்கு மேரேஜே இன்னும் ஆகலை

புது வருசத்தின் முதல் இரவு இன்னைக்கு

==============
11 நீ விஜய் ரசிகன் கிடையாது, உன் பேக்ல குஷி பட டிவிடி வெச்சிருக்கே, எதுக்கு?


எதிரியைப்பழி வாங்க சிறந்த வழி “குஷி”யுடன் இருத்தல்னு சொன்னீங்களே?


==============


12 டியர், உங்களை கவர செய்யும் சேஷ்டைகள் எப்டி?
நீ நார்மலா இருந்தாலே சுமார் ஃபிகர்தான், அஷ்டகோணலா முகத்தை வெச்சுக்கிட்டா வெகு சுமார் ஃபி கர்


================

13 நாளைய தலைமுறை

தமிழக முதல்வர் யார்?
-------
சொல்லவே நா கூசுது டீச்சர்
ஏண்டா? தெரியாதா?

=================


14 யுவர் ஆனர், தெரியாத்தனமா நான் 1000 கோடி ரூ திருடிட்டேன்

 ஓஹோ, சரி, 28 கோடி ரூபா அபராதம்

 ஐ ஜாலி அப்போ லாபம் 972 ரூ கோடி


=====================

15 யுவர் ஆனர் மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டா என்ன தண்டனை?

குற்றவாளி ஏழையா இருந்தா 10 வருசம் ஜெயில், பணக்கார ன்னா 10% பணம் அபராதம்


=====================


16  நான் சொன்ன சொல்லை காப்பாத்தறவன்

 ஆனா, உங்க படத்தை மட்டும் காப்பாத்த முடியறதில்லையே , அது ஏன்?


======================

17 மிஸ்! உங்க காதலனை கழட்டி விட மோடி தான் காரனமா? புரியல.

 கேஷ் பழக்கத்தை மாத்துங்கன்னாரு.அதான் ம”கேஷ்” உடனான பழக்கத்தை கட் பண்ணிட்டேன், இப்போ சுரேஷ்


==================


18  சார், லைசன்ஸ் வேணும்னா 8 தானே போடனும், எதுக்கு 48 போட்டு காட்டச்சொல்றீங்க?

 கட்டணம் 6 மடங்கு ஏறிடுச்சு. 8*6 =48 தானே?=====================
டீச்சர் = காட்டு பன்றி க்கு இங்க்லீஷ்ல என்ன?

 லொள் மாணவன் 1 -    ஃபாரஸ்ட் பிக் (FOREST PIG)


 லொள் மாணவன் 2 = SHOW PIG


19 

======================

20 பசு என்பதற்கான ஆங்கிலச்சொல் OY யா? எப்டி?

டீச்சர், காளை க்கு இங்க்லீஷ்ல OX, அப்போ பசு =OY தானே?

===============

0 comments: