Saturday, February 25, 2017

4 வது சி எம்மா தினகரன் ஆன் த வே, தமிழகம் தப்பிக்க நோ வே

1  2,000 ரூபாய் நோட்டுகளை, எதிர்காலத்தில் அரசு கட்டாயம் திரும்பப் பெற வேண்டும்.-யோகா குரு பாபா ராம்தேவ் # இப்டி எல்லாம் பண்ணிட்டே இருந்தா பாஜக அரசு திரும்ப வர்றது பிரம்மப்பிரயத்தனம்

==================

காங்கிரஸ், தாய் - மகன் கட்சி; சமாஜ்வாதி, தந்தை - மகன் கட்சி. ஆனால், பா.ஜ.,வோ தொழிலாளர்களின் கட்சி-நிதின் கட்கரி #  அப்போ பாஜக கம்யூனிஸ்ட் ஆதரவா?

====================

3  ஸ்டாலின் நாளை டில்லி பயணம் : ஆப்ரிக்கா சென்றார் கனிமொழி # ஆளாளுக்கு மோடி ஆக ஆசைப்படறாங்க, ரவுண்டிங்க் த வோர்ல்ட்

==================

4  மதிமுக ஒருநாள் ஆட்சியைப்பிடிக்கும்- வைகோ.# புது கிரகங்கள் கண்டுபிடிச்சிருக்காங்களே அந்த கிரகத்துல இந்த கிரகம் வரலாம்

====================

5


 இடைப்பாடி பழனிசாமி, பால்வளத் துறையில் இருந்தபோது, விவசாயிகள் பணத்தை கொள்ளை அடித்ததற்கு, அளவே இல்லை.-கோபாலகிருஷ்ணன் #பால் எல்லாம் பாழாப்போச்சு போல


=====================

ஜெ மரணத்தில் நீதி விசாரணை நடத்தினால்,4ஆண்டு சிறையில் இருக்கும் சிலர், ஆயுள் கைதியாக மாறுவர்.-ஸ்டாலின் # அப்போ தமிழகம் தலை நிமிரும்

===================

7 தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடக்கும் சூழலில்சசிகலாவை, அங்குள்ள சிறைக்கு மாற்றினால், சரியாக தண்டனை அனுபவிப்பாரா என்பது சந்தேகமே- ஆச்சார்யா # திகார் ஜெயிலுக்கு அனுப்பிட்டா புகார் ஏதும் வராது

==================

8  ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம் #  வை கோ லெவல்ல விசிட்டிங் கார்டெல்லாம் வாங்கி வைப்பார் போல


===================


9  3 மாதத்தில் 3 முதல்வர் - தமிழகத்தில் மட்டுமே சாத்தியம் : காங்., எம்.எல்.ஏ., கிண்டல் # 4 வது சி எம்மா தினகரன் ஆன் த வே, தமிழகம் தப்பிக்க நோ வே

========================

10 ஆட்சியை கவிழ்க்க தி.மு.க., சதி : பண்ருட்டி பரபரப்பு குற்றச்சாட்டு # தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் ஊழல் யானை அதிமுக, இதில் திமுக வுக்கு வேலை இல்ல

==========================
====================

12 

இந்திய குழந்தைகள் வங்கி என்ற பெயரில் டெல்லி எஸ்பிஐ ஏடிஎம்மில் போலி ரூ.2,000 நோட்டுகள் விநியோகம்: வங்கி வாடிக்கையாளர் அதிர்ச்சி # சைல்டிஷா இருக்கே?


==================

13  உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் உணர்வு வெளிப்படும்-
உதயநிதி ஸ்டாலின் # அதிக காசு கொடுத்த கட்சிக்கே ஓட்டளிக்கனும் என்ற நன்றி உணர்வு தானே?

====================
14 இரண்டு கட்சிகளுக்கு இடையில் விளையாட்டு பொருளாகிவிட்டேன்'- விஜய் மல்லையா # மொத்தத்தில் பேங்க் பணத்துல விளையாடிட்டீங்க

===============

15 சிறையில் இருக்கும் சசிகலா அ.தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம்! # புதுசா கண்டுபிடிச்ச 7 கிரகத்துல 4 கிரகத்தை வளைச்சுபோடப்போறாராம்

================

16 53 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தபால் அலுவலகம் திறப்பு... மெல்ல மெல்ல உயிர் பெறும் தனுஷ்கோடி! # தனுஷ்கோடி கொடி பறக்குதா

===============

17 வழிநெடுக பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்த கூடாது:CM பழனிச்சாமி வேண்டிய மரியாதை தன் பினாமிக்கு கிடைச்சா சசிக்கு பிடிக்காது

==================

18 தமிழகத்தில் பல மாதங்களாக அரசாங்கம் செயல்படவில்லை: பொன்.ராதா # நல்ல வேளை செயல்படலை.செயல்பட்டிருந்தா ஊழல் மிகுந்திருக்கும்


==================

19 தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின்.#122 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருக்க கவலை எதுக்கு?


===================

20 வெள்ளையர் அரசால் தண்டிக்கப்பட்ட காந்திபடத்தை வைக்கும்போது ஜெ படத்தை வைக்கக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி- 1008 பெரியார் வந்தாலும் ம்ஹூம்

============