Sunday, February 12, 2017

சசி க்கு ஏழரை

மக்கள் மீன்களை சாப்பிட பயப்பட வேண்டாம் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் # பயத்தை அகற்ற எண்ணூர் மீன் கறியை இவரே சாப்பிட்டு தினமும் டெமோ


================2 அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு வருகிறேன் - தீபா# நீங்க டீசர் விடறதுக்குள்ள அங்கே மெயின் பிக்சரே ரிலீஸ் ஆகிடும் போல
================3 திமுகவும் அதிரடி.. அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கிறது .. மண்டலவாரியாக 'ஆபரேஷனில்' குதித்தது! #,திமுக ஈஸ் பேக் டூ ஃபார்ம் டூ ஃபார்ம் நியூ கவர்மெண்ட்=============4 எனக்கு தாயாக இருந்தவர் சசிகலா என்று வாஜ்பாயிடம் கூறினார் ஜெ- செங்கோட்டையன் # மாற்றாந்தாயாக மாறி கொடுமைப்படுத்தினாராமே?=============5 பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினார் சசிகலா # நேற்று வரை பன்னீரு.இனி அவர் சசிகலாவுக்கு வெந்நீரு


=================

6 முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் # எதிரிக்கு எதிரி நண்பன் பார்முலா.

==============

7 ஜெ மரணம் குறித்து சசிகலா விடம் விசாரணை நடத்த வேண்டும்: வலியுறுத்தல்

$இப்போதான் திரைக்கதைல ட்விஸ்ட். சசி கைதுநெக்ஸ்ட்

===============

8 ஸ்டாலினை பார்த்து சிரித்தது ஒரு குற்றமா?சசிகலாவிற்கு ops கேள்வி #,சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ன்னு MGR பாட்டே இருக்கே

===============

9 100-ல் பத்து சதவிகிதம் தான் வெளியே பேசியிருக்கிறேன் -OPS.# அப்டியே அப்போலோ சீக்ரெட்சையும் உடைச்சுட்டா மக்கள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்

=============

10 ஸ்டாலினை பார்த்து OPS சிரித்தார்.எனவே பின்னணியில் திமுக உள்ளது-சசி

# ஏம்மா.உங்களைப்பாத்து ஊரே சிரிக்குது.அப்போ அதுக்கு

==============

11 அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள் : சசிகலா நள்ளிரவில் பேட்டி # குடும்பத்தை மிரட்டி வெச்சிருக்கீங்களோ என்னவோ?

===============

12 என்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது =OPS # கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்காம இப்டி சொல்லி இருந்தா இன்னும் கெத்தா

==============

13 OPSக்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது - சி.ஆர்.சரஸ்வதி $ இப்பவே அவர் முதல்வர்தானுங்க.சசிகலாவுக்கு சிஎம் வெறி வந்திடுச்சுனு சொல்லுங்க

==============

14 பா.ஜ., ஆட்சி காலத்திற்குள், தமிழகத்தில் நிச்சயம், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும்.-தமிழிசை # இன்னும் அப்போலோ வுக்கே விடை சரியா தெரியலை, அதுக்குள்ள இன்னொண்ணா?

==================


15 தீபா என்னுடன் வந்து அரசியல் பயணத்தை தொடரவேண்டும் - ஓபிஎஸ்.# சபாஷ்.இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.பெஸ்ட் மூவ்

=============

16 100% நான்தான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பேன்... சசிகலா திட்டவட்டம் # 1% மக்கள் ஆதரவு கூட இல்லையே?

==============

17 அம்மாவுக்கு அளிக்கப்பட்ட ட்ரீட்மென்ட் ஒரு திறந்த புத்தகம் -சசிகலா # ஆனா கேமரா எதுவும் இல்லை.சாட்சி இல்லை.பிளாங்க் புக்

=============

18 அதிமுக வுக்கு துரோகம் செய்துவிட்டு எவராலும் தூங்ககூட முடியாது : சசி# சரி.நீங்க மட்டும் எப்டி தூங்கறீங்க?

================

19 ஓபிஎஸ்க்கு ஆதரவு தர மிஸ்ட் கால் கொடுங்க - 9289222028
-- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவிப்பு # இந்த மிஸ்டு கால் பார்முலா பிஜேபி ஆரம்பிச்சதாச்சே?

===============

20 சென்னை வந்தார் ஆளுநர்: மாலை 5 மணிக்கு ஓபிஎஸ்; 7.30 மணிக்கு சசிகலாவுடன் சந்திப்பு # அதாவது சசி க்கு ஏழரை.டைமிங்.குறியீடு

=============


0 comments: