Saturday, February 18, 2017

"பன்னீர்"புஷ்பங்கள்.

மேடம்.ஜெயில்ல ஊதுபத்தி சுத்தும் வேலை


ஐ ஜாலி.இது என்ன கேள்விப்படாத ஊரா இருக்கு?ஒரு டைம் சுத்தி முடிக்க எவ்ளோ டைம்?


==============

2 யுவர் ஆனர்.ஜெயிலர் என் கிட்டே தப்பா நடந்துக்கப்பார்த்தார்.அதனால என்னை ரிலீஸ் பண்ணனும்


ஏம்மா.இது லேடி ஜெயிலர்


===============

3 தலைவரே! "தில்லுமுல்லு"கூட்டாளி னு உங்க கட்சியைப்பத்தி அவர் சொல்லி இருக்காரே?


அது வந்து.. ஆங்.ரஜினி + கே பி பத்தியா இருக்கும்

==================

4 என்னை மீம்ஸ் போட்டு கிண்டல் பண்றவங்களை கைது செய்யனும்


ஏம்மா.நீ ஊரை அடிச்சு உலையில போட்டு சாப்ட்டு உள்ளே போன ஆளு.


==============

5 தலைவரே! இனி தினகரன் தான் ஆல் இன் ஆல் அப்டினு பேசிக்கறாங்களே?


விரைவில் முரசொலியும் இடம் பெறும்


===================

6 DR, ஹார்லிக்ஸ்ல பவர் இருக்கு குடிச்ச உடனே தெம்பா இருக்கேன் .
மிஸ்,கம்மங்கூழ், ராகிக்கூழ், மோர் குடிச்சுப்பாருங்க,செம்புச்சொம்பா இருப்பீங்க

====================

7 யுவர் ஆனர், கோடிக்கணக்கில் கொள்ளை அடிச்சிருக்கோம்

 ஆமா

 ஆனா கைதி நெ - 9000 + போட்டு கேவலப்படுத்திட்டாங்க. 15 டிஜிட் நெ வேணும்


==================

8   டைரக்டர் சார், சிங்கம் 4 வருமா? வராதா?

 நேத்து வரை சிங்கம் க்கு ஒரு இமேஜ் இருந்தது, இப்போ டேமேஜ் ஆகிடுச்சு, அதான் யோசிக்கேன்

===================

9   எம் சசிகுமாருக்கும் , வி கே சசிகலா வுக்கும் என்ன வித்யாசம்?

 அவரு குட்டி புலி , இவரு குட்டி சிங்கம்(னு சொல்லிக்கிட்டாரு)


======================

10 காபந்து முதல்வர்னா தெரியும், அதென்ன கால் பந்து முதல்வர்?

அடிக்கடி இடம் மாறிட்டே இருக்கே?


===============================

11 மேடம்.ஜெயில்ல எல்லாரும் டி வி ல சினிமா பார்க்கறாங்க.நீங்க பார்க்கல?


ம்க்கும்.டைட்டில் "பன்னீர்"புஷ்பங்கள்.

==================

12 மிஸ் அஞ்சனா என்னை பிளாக் பண்ணிடுச்சு.


விடுய்யா.இப்போ தான் அணா வுக்கு மதிப்பில்லயே.சும்மா அஞ்சணா ,எட்டணா ன்ட்டு

==================

13 மிஸ்! என் கையெழுத்து பத்தி ஒரு கமெண்ட் ப்ளீஸ்


அது பத்தி தெரில.ஆனா தலை எழுத்து மட்டும் 24 மணி நேரமும் ட்விட்டர்ல


===================

14 குருவே!பணம் 10ம் செய்யும் என்பது இந்த கலி காலத்திலும் பொருந்துமா?


அதிகார மமதை வர்க்கம் ஜெயில் ல களி தின்னும் காலத்திலும் பொருந்தும்


================


15 மதன்,உங்க கார்ட்டூன் நல்லாருக்கு.ஆனா எதும் புரியல


தாங்க்ஸ் கமல் சார்.கடந்த 25 வருசத்துல உங்க பேச்சுல இதான் புரிஞ்சுது


==============

16 சட்ட சபைக்குள்ளே எதுக்கு புக்கை கிழிச்சீங்க?

 சபைக்குப்போய் என்னத்தைக்கிழிச்சீங்க?னு யாராவது கேட்டா?


======================

17 வாக்கெடுப்புக்கு இன்னும் 20 நாள் டைம் இருக்கில்ல? என்ன அவசரம்?

யோவ், ரிசார்ட்க்கு செலவு யார் பண்ணுவாங்க?

===============

18 தலைவரே! சர்ட் பாக்கெட்டை மட்டும் கரெக்டா தனியா அப்டி கிழிக்க முடியுமா?

 ஆல்ரெடி பிளான் பண்ணி லூஸ் ஸ்டிச் ல தெச்ச சட்டைதான் அது, சாணக்கியத்தனம் 

=======================

19  தலைவரே! சர்ட் பாக்கெட்டை அவங்க கிழிச்சாங்களா? நீங்களே கிழிச்சுக்கிட்டீங்களா?

 நமக்கு நாமே திட்டம் தான்.

=====================

20  ஷூ கால்களால்  அவங்களை நீங்க உதைச்சீங்களா?

 ஆமாங்க. வெறும் காலால உதைச்சா எங்களுக்கு தான் வலிக்கும்


=======================

0 comments: