Friday, February 03, 2017

ஆதாயம் இல்லாம உதய சூரியன் ஆத்தோட போகாதே?

சீமைக்கருவேல மரங்களை அகற்றாத ராமநாதபுரம் கலெக்டருக்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ்
# ஆரோக்யமான தொடக்கம்

================

2 விதவை மருமகளை பராமரிக்க மாமனாரை கட்டாயப்படுத்த முடியாது: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு # நேத்துத்தான் ஜட்ஜ் "சிந்து சமவெளி" பார்த்தாராம்

================

3 பட விழாவில் ஹன்சிகா வை புகழ்ந்த பிரபுதேவா$ இவரு ஏன் சிம்பு வோட ஆளா செலக்ட் பண்ணி கரெக்ட் பண்ணிட்டு இருக்காரு?எதுனா விரோதமா இருக்குமோ?

==============

4 என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: ஸ்டாலின் # தலைவரே! இதான் சாக்குன்னு சொந்தக்கட்சிக்காரங்களே திட்டி விட்றப்போறாக

================

5 முன்னேற்றத்திற்கான பட்ஜெட் - தமிழக முதலமைச்சர் OPS பாராட்டு
# ஜி நீங்க சொன்னபடியே புகழ்ந்துட்டேன் ஓவர் ஓவர் ரைட் ரைட் ஓவர் ஓவர்

=================

6 ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை!! # பணம் பத்தும் செய்யும்,பணம் பாதாளம் வரை பாயும்

==============

7 ஏழை-பணக்காரர் இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது" - ப.சி# அதனால் தன் கோடிக்கணக்கான சொத்துக்களில் 1% ஏழைக்கு தருவார்


===============

8 பட்ஜெட்டில் வரவேற்கத் தக்க அம்சங்கள் பல இருந்தாலும், குறைகளும் உள்ளது" - சசிகலா # ரோஸ்ட் பிரமாதம் ,மாவுதான் ஓவரா புளிச்சிடுச் மொமெண்ட்

===============

9 2,50,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற நடைமுறையில் மாற்றம் இல்லை. # இனி இன்சென்ட்டிவை அக்கவுண்ட்ல போடாம கைல வாங்கிக்குவாங்க

==============

10 பண மோசடிகளை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என அருண் ஜெட்லி அறிவிப்பு-இனி புதிய சட்டத்துக்கு ஏற்றாற்பொல் புதிய மோசடி - திருடர்கள் அறிவிப்பு

==================

11 ஒழுக்கமான, நேர்மையான காமராஜரை பெற்றுத் தந்தது, காங்., இயக்கம். அவர் பெயரை பயன்படுத்துவோம்; கட்சியை பலப்படுத்துவோம்.-திருநாவுக்கரசர்: # அப்போ சோனியா. ராகுல் பேரை வெச்சு வேலைக்கு ஆகாதுங்கறீங்க?

================

12 புதிய கல்வி கொள்கைக்கு, நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது; அதற்கு நிதி ஒதுக்கியிருப்பது, கவலை தருவதாக உள்ளது-கனிமொழி # எப்பவும் உங்க கவலை எல்லாம் நிதி சார்ந்ததாவே இருக்கே? அது ஏன்?

======================


13   எதிர்காலத்தில், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நல்ல பட்ஜெட்.-இல.கணேசன் # அப்போ நிகழ் காலத்துல முன்னேற்றம் டவுட்ங்கறீங்களா?

==================


==================

15  ஸ்டாலினை புகழ்ந்த ராதார விவிரைவில் தி.மு.க.,வில் ஐக்கியம் #  ராதா”ரவி” உதய சூரியனை சேர்வதில் வியப்பென்ன?

===================


16  'ஜல்லிக்கட்டு நடப்பதற்கு, மத்திய அரசு தான் காரணம்,- விஜயகாந்த் .# நானே ராஜா நானே மந்திரி  படத்துக்குப்பின் இப்போ தான் கேப்டன் நம்மை சிரிக்க வைக்கறாரு

=====================

17  தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனையை தடை செய்ய, வணிகர் சங்கங்கள் முன்வந்துள்ளன # இனி இளநீர் , பதநீர் , நுங்கு , மோர் விற்பனை அதிகரித்து விவசாயிகள் நலன் பெருகட்டும்

=================


=================

19  

OPS க்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல் # எப்டி? அன்னைக்கு விஎன் ஜானகிக்கு உதவின மாதிரியா?


===============

20  

எண்ணூர் கடல் பகுதியில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக கடற்கரையில் திரண்ட மாணவர்கள் # விவேக”மாணவர்கள்”  போராட்டத்துக்கு மட்டுமல்ல பாராட்டுக்கும் உரியவர்கள்


======================


0 comments: