Thursday, February 09, 2017

,தமிழகத்தில் 12,ராசிக்கும் 7 1/2

ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது: ராதாரவி # ஏன்? அதிமுக வில் சேரப்போறாரா?


==============2 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தயாநிதிமாறன் !-நீதி வென்றது # நிதி வென்றதுன்னும் சொல்லலாம், ஐ மீன் கருணா”நிதி” ஃபேமிலி============3 ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தியதே தீயசக்திகள்தான் - H.ராஜா # எது? எண்ணூர் கடல் பகுதிகளில் சேவை செஞ்சுட்டு இருக்காங்களே அந்த தீய சக்திகளா?============4 சிபிஐ கேட்டால் ஜெ. சிகிச்சை விவரம் அனைத்தையும் கொடுக்க ரெடி: பிரதாப் ரெட்டி # இதைச்சொல்லவே கால அவகாசம் இவ்ளோ தேவைப்பட்டிருக்கு================5 ஜெ வின் கால்கள் அகற்றப்படவில்லை - பிரதாப் ரெட்டி ஹால் ல கேள்வி கேட்டா அங்கேயே அப்பவே பதில் சொல்லனும்.2 மாசம் கழிச்சு சொன்னா ?

==============


6 தமிழக அரசுக்கு ஒரு வாரம் டைம் தர்றேன்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி! # திட்டங்களை அதுக்குள்ள நிறைவேற்றலைன்னா மீண்டும் 1,வாரம் டைம் தருவார்

==================


7 செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம்- லோக்சபாவில் மசோதா தாக்கல் # அபராதத்தை பழைய 1000 ரூ நோட்டா தந்தா?===============8 ஆன்லைனில் கிளிக் செய்தால் பணம்...6 லட்சம் பேரிடம் ரூ.3700 கோடி சுருட்டிய கும்பல் கைது ஜோசியத்தை நம்பாதவங்க க்ளிக் ஹேஸ்யத்தை நம்பிடறாக===================9 தமிழ் ராக்கர்ஸை ஆறு மாதத்தில் பிடித்து உள்ளே போடுவோம்" - ஞானவேல் ராஜா ஆவேசம் # சோல்டரை இறக்குங்க.1000 ரூபா கொடுத்தா போலீஸ் ரிலீஸ்==============10 ’ஓபிஎஸ் என்னை முதல்வராகும்படி வலியுறுத்தினார்..’ : சசிகலா # அப்டி வலியுறுத்தும்படி நீங்க வலியுறுத்துனதா ஜனங்க பேசிக்கறாங்களே?==================

11 கடலில் மிதப்பது கச்சாஎண்ணெய் அல்ல. கப்பலின் எரிபொருள்தான் பொன்-ராதா # தப்பு நடந்ததைக்கூட மன்னிச்சிடலாம்.அப்டி எதும் நடக்கலைனு சமாளிப்பதை?

================

12 பணிவு காட்டுவதில் திமுக புகழேந்தி என்னை விஞ்சிவிட்டார்-ops# இவரு இன்னும் தனுஷ் ஸ்டேஜ் ஆக்டிங் பாக்கல போல.தன்னடக்க திலகம்


================

13 ஒருமனதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக வி.கே.சசிகலா தேர்வு.#,தமிழகத்தில் 12,ராசிக்கும் 7 1/2

==============

14 தீர்ப்பு எழுதும் பணி நிறைவு.
சொத்துகுவிப்பு
வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு.!
#7 நாள் டைம் இருக்கு.பேரம் பேசுபவர்கள் அணுகலாம்


===================

15 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதம்”
மத்திய அரசு அறிவிப்பு ,99,999 வீதம் டெய்லி செஞ்சா?

======================

16  மாயாவதி: உ.பி.,யில், பா.ஜ., ஆட்சிக்கு வரும் பட்சத்தில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான, தாக்குதல் அதிகரிக்கும்#  அப்போ பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் அப்படி தாக்குதல் நடந்த லிஸ்ட் கொடுங்க பார்ப்போம்

=================

17  எச்.ராஜா: கேரளா, ஆந்திராவில், ஆற்றில் மணல் அள்ள முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை யடிப்பதால், பாலைவனமாக மாறியுள்ளன. # ஆமா , மணல் கொள்ளை அடிக்க “ வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்”னு அவங்க நினைச்ட்டாங்க

======================

18   . 'சின்னம்மா' என்ற வார்த்தை தான், ஆளுங்கட்சி தரப்பில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது.  -ஸ்டாலின் # இது தான் அரசியல்வாதிகளின் அடையாளச்சின்னம் மா

======================


19   சுதர்சன நாச்சியப்பன்: 2019ல், லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறும். அப்போது, தேர்தலில் குஷ்பு போட்டியிட மாட்டேன் என, சொல்லக் கூடாது. அவர் வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும். # கூட இருந்தப்பவே சீட் தராத திமுக கூட்டணீக்கட்சில இருக்கும்போது தந்துடுமா?

========================


20  ஜெ., அண்ணன் மகள் தீபா: முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், என்னை, காவல் துறையினர் மிரட்டுவதற்கும் தொடர்பு கிடையாது. சசிகலா குடும்பத்தினர் தான், இச்செயலில் ஈடுபடுகின்றனர். # போலீஸ் இலாகா  ஓபிஎஸ் கட்டுப்பாட்டிலா?சசிகலா  கட்டுப்பாட்டிலா?ன்னு கேட்க வர்றார் போல

0 comments: