Saturday, February 25, 2017

மன்னார்குடி பின் போ ன்னு மன்னாதி மன்னன் சொன்னாரா?

சபாநாயகர் இருக்கையை அடித்து உடைத்தனர் திமுக எம்எல்ஏக்கள்

மைக்கை பிடுங்கி தூரமாக வீசினர் # கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு தமிழகத்தில் தட்டுப்பாடு================

2 சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்தார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் # அடுத்தவங்க சொத்துன்னாலே அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல்

===============

3 எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது: தனபால் #வேற எங்கே?கர்நாடகா தான் கதி


===================================


4  தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை கருத்து # ஏற்கனவே தமிழகத்தை ஆண்டவர் கலைஞர் தான். அப்போ அவர் தான் காப்பாத்தனுமா?

========================

5  தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை கருத்து #  இந்த பஞ்ச் டயலாக்கை ரஜினி  எப்பவோ சொல்லிட்டாரே?

====================

6  

பேரவையில் ஸ்டாலின் திட்டமிட்டு வன்முறை: அன்புமணி # ஒரு திருத்தம், கலைஞர் அன்றே காட்டிய வழிகாட்டுதல்படி


=================

 என் சட்டையை கிழித்து விட்டார்கள் - ஸ்டாலின் # சட்டசபைல  கிழியாத சட்டை எங்கே இருக்கு? நமக்கு இதெல்லாம் புதுசா? என்ன?

===================

சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக்கொண்டார்: மு.க.ஸ்டாலின் # பழையது.வேணாம்னு கூட கிழிச்சிருக்கலாம்


=============9 ஆளுநரை சந்தித்து முறையிட புறப்பட்டார் மு.க.ஸ்டாலின் # அடி வாங்குனது நானு. கப் எனக்குத்தான் மொமெண்ட்===============10 ஜாதி அடிப்படையில்தான் என்னை திமுகவினர் இழிவுபடுத்திவிட்டனர்-சபாநாயகர் # அரசியல்வாதி ஜாதி எல்லாரும் ஒரே கேட்டகிரி தானே?இதுல ஏது உயர்ஜாதி?===============11 மெரீனா காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்திமுக எம்எல்ஏக்களும் # மாலை 4 டூ இரவு 7வரை?

================
12 தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்-எடப்பாடி பழனிச்சாமி # கேவலம் பதவிக்காக எப்படி அடிச்சுக்கறாங்கனு தெரிஞ்சுக்க உதவுனீங்களே அதான்

=============

13 MGR. ஜெ கண்ட கனவை நினைவாக்குவது தான் எங்கள் லட்சியம்’’; -எடப்பாடி பழனிசாமி# மன்னார்குடி பின் போ ன்னு மன்னாதி மன்னன் சொன்னாரா?

================

14 சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தமிழகத்தில் தொடர கூடாது- ஜெ.தீபா # கர்நாடகா ஜெயிலிலும் அவங்க ஆட்சிதானாமே?

==================

15 கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின் # எவிடனஸ் ,விட்னஸ்,பிட்னஸ்

====================

16 நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை .அவரது முன்னாள் கார் டிரைவர் குற்றவாளி # கார் டிரைவர் ,வாட்ச்மேன்,தோட்டக்காரன் எப்போதும் ஆபத்து

===============

17 திமுகவுக்கு சசிகலா பரவாயில்லை: சுப்ரமணியன் சுவாமி # இந்தப்பக்கம் பண முதலை ,அந்தப்பக்கம் பண திமிங்கலம்.பாவம் பொதுஜனம்

=============

18 சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி # சொத்து சேர்க்கனும் என்ற KNOTக்காக போராடி

===================

19 காங்கிரஸ் MLA க்களையும் அடித்தனர் - திருநாவுக்கரசர் # கை மேல் கை வெச்சா கை மேல் பலன் கிடைக்கும்னு நினைச்ட்டாங்களா?

================

20 அதிமுக - திமுக இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்-விகாந்த் # என் கனவு சாம்ராஜ்யத்தில் என்றும் நானே ராஜா நானே மந்திரி

=================

0 comments: