Wednesday, February 01, 2017

தீய சக்திக்கு கல்யாணம் பண்ணிவெச்ச தீய சக்தி எது? அது!

என் கட்சில இணைய , மெம்பர் ஆக 500 ரூபா கட்டனும்

தலைவரே! மார்க்கெட் நிலவரம் தெரியாதா?நீங்க தான் ஒரு ஆளுக்கு 1000 ரூபா வெட்டனும்

===================

தலைவரே! எங்கே ஒரு கெட்டது நடந்தாலும் நம்மையும் அறியாம அதுக்கு நாம காரணம் ஆகிடறோம்

எப்டி?

புதிய தீய சக்திக்கு கல்யாணம் பண்ணிவெச்சதே நாமதானாமே?

=====================

3 எங்க தலைவிக்கு நோபல் பரிசு வேணும்


சாரி, உயிரோட இருப்பவர்களுக்குத்தான் அது

தெரியும், நாங்க கேட்டதே இப்போ உயிரோட இருக்கும் தலைவிக்குதான்


=====================

4 யுவர் ஆனர் , கொலை செய்தவரை கண்டுபிடிப்பது ஈசி

 எப்டி?

 கொலைசெய்யப்பட்ட நபரின் மறைவால் யாருக்கு அதிக பலாபலன்னு பாருங்க


====================


5 மேடம், நிஜங்கள் நிகழ்ச்சில நீங்க கலந்துக்கத்தயாரா?

 சாரி, நிஜத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம், நான் நிழலா இருந்தே பழக்கப்பட்ட ஆளு===================


எங்க தலைவி பேசி யாருமே கேட்டதில்லை, கமுக்கமான ஆளு

இருக்கட்டும்ங்க, அதுக்காக அமைதிக்கான நோபல் பரிசு கேட்டா எப்டி?


===================

7  சார், நீங்க ஜோக் எழுதும்போது அந்த போஸ் ஃபோட்டோ எடுக்கனுமா? எதுக்கு?

நகைச்சுவையா எழுதி நான் பார்த்ததே இல்லைனு புலம்பறாங்க பாவம்


======================


8 சார், வெறும் 10 ரூபாய்க்காக பத்திரிக்கைக்கு ஜோக் எழுதறீங்களாமே?

ஆமா, சொந்த உழைப்பு. பொண்ணுங்க கால்ல விழுந்து பிச்சை எடு த்து பேக்கரி வைக்கலையே?


======================

9 நான் ஜோக் எழுதி நானே பார்த்ததில்லைனு இனி யாரும் சொல்ல முடியாது

ஏன்?

கண்ணாடி முன்னாடி உக்காந்துதான் ஜோக்கே எழுதறேன்


======================


10  சார், உங்களை கிண்டல் பண்ணி ட்வீட் போட்டிருக்காரே?

 என்னை வெச்சு ஒரு ட்வீட் தேத்துனா அதை வெச்சு 10 ட்வீட் தேத்துவேன்====================

11  யுவர் ஆனர், சமாதிக்கு மிலிட்ரி பாதுகாப்பு வேணும்

எதுக்கு?

 போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ட்ரை பண்றதுக்குள்ளே சமாதிக்கே சமாதி கட்டிடுடுவாங்க 


===================


12 தமிழக அரசியலை மையமா வெச்சு படம் எடுக்கறேன்


என்ன டைட்டில்?


அலிபாபாவும் 234 திருடர்களும்


====================

13 மொத்த காதலையும் அனுபவித்த பரவசம், கிடைக்கனும்னா ஹிந்திப்பாட்டு கேட்பேன்
ஓ,அப்போ ஒல்லி காதலைஅனுபவிக்கனும்னா தனுஷ்/அனிரூத் பாட்டு கேட்பீங்களா?


===================

14 கூழைக்கும்பிடு போடறவங்களை நம்பக்கூடாது

 குருவே! ஒரு எம் எல் ஏவையும் நம்பாம எப்டி இருக்க?234 பேர் இருக்காங்க


===================15 தமிழ் மிஸ் தன்யா = தமிழ் நெடில் எழுத்துக்கள் ல கால் போட வராதா உனக்கு?


டீச்சர்.காலை கட் பண்ணிட்டா பதவி கிடைக்கும்னு சொல்றாங்களே?

===============

16 சாப்பிடறதுக்கு என்ன செய்ய?


.நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்குக் கட்டுப்படறோம்
அப்டியா?இன்னைக்கு விரதம்.ஓக்கேவா?

============

17 சார், நியூ இயர்க்கு எங்கே போவீங்க?


நீங்க ஆன் லைன் ல இருந்தா உங்க டி எம் போவேன்=================

18 மொதலாளி.அட்வான்ஸ் 1000 ரூபா வேணும்


ஸாரி.நோ அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்

==================

19 யுவர் ஆனர்.அவங்க தமிழை கொலை பண்ணிட்டதா ஊருக்குள்ளே பேசிக்கறாங்களே?


முட்டாள் ஜனங்கய்யா.எப்பவும் மெயின் மேட்டரை மறந்துடுவாக===================

20 சார்,குரல் கேட்டீங்களே?எப்டி?

சனீஸ்வரனுடைய உருவத்தைப்பார்த்தாலும் ,குரலைக்கேட்டாலும் அபசகுனம் தானே?

==============

0 comments: