Sunday, February 26, 2017

ஸ்டாலின் இன்னொரு சட்டை ரெடி பண்ணனுமா?

தமிழகத்திற்கு இது மோசமான கருப்பு நாளாக அமைந்திருக்கிறது: ஸ்டாலின் # நம்ம கட்சிக்கொடிலயே கறுப்பு ,சிவப்பு இருக்கே?இதுக்கெல்லாம் பயந்தா எப்டி


================2 ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. டி.டி.வி.தினகரனும் உடனிருந்தார் # ரிமோட் கன்ட்ரோல்-===============3 காஷ்மீரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல்!

"CASH"மீர்?

=============

4 தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை - கர்நாடகா
# பொழச்சுப்போங்க.சின்னம்மாவை ஜெயில்ல தள்ளுன ஒரே ஒரு நல்ல காரியத்துக்காக மன்னிச்சு விட்டுட்டோம்

=============

5 உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை - பதிலடி கொடுத்த மாயாவதி
# "தத்துப்பிள்ளை" தேவை இல்லைன்னா SV சேகர் லேட்டஸ்ட் "அல்வா" DVD?

===============

6 சசிகலா சபதத்தை நிறைவேற்றிவிட்டோம்.
-டி.டி.வி.தினகரன் #,அப்டியே மக்களோட சாபத்தையும் ஏற்றுக்கொள்ளவும்

=============

7 திமுக ஒரு தீவிரவாத கட்சி: சு சுவாமி # அப்போ பாஜக மிதவாதக்கட்சியா?

==============

8 அதிகாரப் போட்டியில் அதிமுக, அதிகார வேட்கையில் திமுக, புறக்கடை முயற்சியில் பாஜக-ஜி.ரா நலனில் அக்கறை உள்ளோர் யாரும் இல்ல

==================

9 அதிமுக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது" - பொன்.ராதா # மாசக்கணக்கு கூட இல்ல?நாள் கணக்கு?அப்போ மேலிட சிக்னல் கிடைச்சிருக்கு போல

==================

10 ஸ்டாலின் சட்டையை அவரே கிழித்துக் கொண்டார் -எம்.பி. நவநீதிகிருஷ்ணன் # அது அவரோட சட்டை.கிழிச்சுக்க உரிமை உண்டு

==================

11 பிப். 22ல் தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம் - ஸ்டாலின் # 22/2/2017 ,இத்தனை2 இருக்கே?இரட்டை இலைக்கு சாதகமா ஆகிடுமோ?

==============

12 பழனிசாமி பதவி வாடகை சேர் தான்': பொன் ராதா # சேரிடம் அறிந்து சேர் னு பெரியவங்க சொன்னதைக்கேட்காம சேறிடம் சென்ற வாடகை சேர்?

================

13 திமுக எம்.எல்.ஏக்கள் கண்ணியம் காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் # முக்கியமா அடுத்தவங்க இருக்கைக்கு ஆசைப்படக்கூடாது

================

14 மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல் # ஸ்டாலின் இன்னொரு சட்டை ரெடி பண்ணனுமா?

==============

15 சசிகலாவுக்கு சிறையில் முதல் வகுப்பு மறுப்பு # ஏன்னு கேட்டா சிறை துறை அதிகாரி சசி ஒரு சாதா கைதி தானே?னு வகுப்பு எடுப்பாரு

===================

16 அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை திடுக்கிடும் தகவல்.. சு.சாமி .# ராஜேஷ் குமார் நாவல் போல அங்கங்கே ட்விஸ்ட் வைக்கறாரே?

================

17 சபாநாயகர் இருக்கையில் DMK MLAக்கள் அமர்ந்ததை ஏற்கவில்லை: ஸ்டாலின் # கட்சி ல கடமை கண்ணியம் கட்டுப்பாடு க்கு தட்டுப்பாடுனு ஒத்துக்கறீங்க

==================

18 MLA ஆக மக்கள் அனுமதிக்காதோர் சட்டமன்ற ஜனநாயகம் பற்றி பேச தகுதி இல்லை-ஜெ அன்பழகன் # அப்போ சிஎம் ஆக மக்கள் அனுமதிக்காத கட்சியினர் பேசலாமா?

================

19 நாகலாந்து முதல் மந்திரி திடீர் ராஜினாமா# வெயிட்.2 நாள் கழிச்சு நானா ரிசைன் பண்ணலை.மிரட்னாங்கன்னு சொல்வார்

=================

20 திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் - கி.வீரமணி# முதல் டைம் களங்கம் ஆகும்போதுதான் சங்கடமா இருக்கும்.


பின்?

அதுவே பழகிடும்

==================

0 comments: