Wednesday, February 22, 2017

பழனி ன்னா மொட்டை பேமஸ்

காதலிக்காக 2000 ரூபாய் நோட்டால் காரை அலங்காரம் செய்து போலீசில் சிக்கிய காதலன்
# காதலி பேரு ரூபா வா?

===============

2 பொன்.ராதா-: தமிழகத்தின் எதிர்காலத்துக்கு, திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்கான தகுதி, பா.ஜ.,விடம் மட்டுமே உள்ளது. # பிள்ளையார் சுழி போடும் முன் நமக்கு தமிழகத்தில் ஆதரவு சுழி அளவில் என்பதை நினைவில் கொள்க

=================

அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்: சசிகலா அறிவிப்பு # இவர் எப்டி?பொதுச்செயலாளர் சசிக்கு துணையா கூடவே ஜெயிலுக்கு வருவாரா?

========================


4 ஜெ.சமாதியை 3 முறை ஓங்கி அடித்து ' சபதமேற்ற சசி .இதை எல்லாம் 25 வருசம் முன் SAC +விகாந்த் காம்போ ல பாத்தாச்=============5 தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த ஒரு கருத்தும் கூற விரும்பவில்லை: வைகோ

#,கூறித்தான் பாருங்க.என்ட்டர்டெயின்மெயின்ட்க்கு நாங்க எங்கே போவோம்?
=============

6 முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நடிகை கவுதமி! # கமலம் பாதக்கமலம் பிஜிஎம்

============

7 ஜெ வின் சொத்துக்களை பறிமுதல் செய்கிறது தமிழக அரசு: பறிமுதலாகும் சொத்துக்களில் முக்கியமானது கொடநாடு எஸ்டேட்
# மத்திய அரசு கிட்டே தரனும்

============

8 தேர்தல் வந்தால் பி.ஜே.பி ஆட்சியமைக்கும்.
-தமிழிசை "மரை" கழண்ட பேச்சு

================

9 சசிகலாவுக்கு ஜூலை வரை தசாபுத்தி நேரம் சரி இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு..# ஜூ"LIE" போய் ஆகஸ்ட் வந்தா டாப்பா வருவாப்டி மொமெண்ட்

===============

10 நான் தூக்கி வளரத்த
பொண்ணு தீபா - வைகோ..# அப்போ சரி.நம்ம ராசி அப்டியே அங்கன ஷிப்ட் ஆகிக்கும்

=============

1 1 சசிகலாவுக்கு தண்டனை கிடைத்த நிலையில் நான் என்ன பேசினாலும் அது சரியாக இருக்காது-வைகோ
எப்போ எது பேசினாலும் நமக்கு சரிவாத்தானே ஆகும்?

================

12 சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி # காவேரி நீரை தமிழ் நாட்டுக்கு தரவும்னு போராடற மாதிரி போராடறாரே?

=================

13 அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் நடவடிக்கை எடுப்பார்: ஜெட்லி # ஆனா எப்போ எடுப்பார் எப்படி எடுப்பார்னு யாருக்கும் தெரியாது , பிஜேபி தவிர அதானே?


================


14 தீர்ப்பு கொண்டாடுவதற்கல்ல...ஸ்டாலின் அறிவுரை #  ஆமா, பின்னாலயே 2 ஜி ஊழல் வழக்கு தீர்ப்பு வேற வருது, அடக்கி வாசி அண்ணாத்தே


==============

15 'எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது கேவலம்' : மத்திய அமைச்சர் பொன் ராதா  வேதனை # தராதரம் தெரியாமல்  ஓட்டுப்போட்ட ஜனங்களின் அவலம்

====================

16  சொத்துக்குவிப்பு வழக்கிற்கு கை காசை செலவு செய்த கர்நாடகா! தமிழகத்திடம் திருப்பி கேட்கிறது 1.,2,3,4 பேர்ட்டயும் உள்ள சொத்தை டேக்

================

17 காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் திமுக வரவேற்கிறது- ஸ்டாலின்
# நாம.1 நினைச்சா தெய்வம் 1 நினைக்குது என்ன செய்ய?

=============

18 நமது தர்மயுத்தம் தொடரும்" - ஓ.பன்னீர்செல்வம் # தர்மர் பார்முலான்னா காடாறு மாசம் நாடாறு மாசம்?

===================

19 ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு. # பழனி ன்னா மொட்டை பேமஸ்.ம்ம்

====================

20 15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்'' - ஸ்டாலின் # எம் எல் ஏ க்கள் வருமானத்தை பெருக்கும்

==========================

0 comments: