Tuesday, February 28, 2017

போராட்டக்காரர்களிடம் அனுஷ்கா

1  மேடம்.உங்க கணவருக்கு நீங்க என்ன முறை வேணும்?


லூசா நீ?மனைவிதான்
இல்ல.யாருக்கும் நான் சொந்தம் இல்லைனு பயோ ல போட்டிருக்கீங்களே?


=============

2 7நாள்ல 100 கோடி வசூல் தாண்டிடும்னு எப்டி சொல்றீங்க?
முத நாள் வசூல் 16.61 கோடி.அப்போ 16.61 *7 = 116.27 கோடி.எப்பூடி?

==========

3 சார்.எங்க புதுப்படம் புலியை கிராஸ் பண்ணிடுச்சு.

26 /1/17 வரை பொறுங்க.சிங்கம் கிராஸ் பண்ணப்போகுது

===================


4 16 கோடி *4 = 64 கோடி தானே?எப்டி 100 கோடி வரும்?


தப்பா கூட்டினா வரும் டீச்சர்


=============

5 என் ஒவ்வொரு படமும் 100 கோடி வசூல்.எப்பூடி?


ஸ்ரீ தேவி = அதெப்டியோ போகட்டும்.புலி யில் நடிச்சதுக்கு சம்பளம் எப்போ தருவாக?


===========

6 ஆல்பா,பீட்டா.காமா கதிர்கள் -சிறு குறிப்பு வரை


டீச்சர்.தயவு செஞ்சு பீட்டா பற்றி மட்டும் எதும் கேட்காதீங்க


=============

7 ஜர்தா பீடா வை தடை செய்வது பற்றி ஆலோசனை நடக்குது


தலைவரே!அது அப்புறம்.ஜல்தியா பீட்டா வை தடை பண்ணுங்க.அவசியம்.அவசரம்.


==============

8 போராட்டத்துக்கு வித்திட்டதே எங்க கட்சி தான்

 தலைவரே! நல்லா யோசிச்சு சொல்லுங்க, வித்து இட்டீங்களா? வித்துட்டீங்களா?


====================


9 தலைவரே! ஸ்கூல் , காலேஜ் நாளை முதல் இயங்கும்னு எப்டி சொல்றீங்க? ஸ்டூடண்ட்ஸ் வருவாங்களா?

 தெரில, டீச்சர்ஸ் வருவாங்க.புன்னகை மன்னன் பட சீன் போல் ஆள் வந்தாலும் வர்லைன்னாலும் ஸ்கூல் நடக்கும்


=========================

10
போலீஸ் இண்ட்டர்வ்யூல “கடல் நீச்சல்” தெரியுமா?ன்னு ஏன் கேட்கறாங்க?

கடல் கன்னிகள், கடல் கண்ணன்கள் அதிகம் ஆகிட்டாங்களே?


=====================


11 ஜட்ஜ் = இந்த மாணவர் சமூக விரோதின்னு எப்டி சொல்றீங்க?போலீஸ் = நாங்க குடிசைக்கு தீ வைக்கும்போது வீடியோ எடுத்துட்டான் யுவர் ஆனர்

===========

12 பிரபல இசைஅமைப்பாளர் =இன்டஸ்ட்ரில நம்மைப்பத்தி என்ன பேசிக்கறாங்க?


சாமான்யன்=பெண் ஆதிக்கத்தை விரும்பும் ஆண் அதிக்கலவாதின்னு சார்=============

13 DR.நீண்ட நேரம் வறுத்த உணவை சாப்பிட்டா கேன்சர் வருமா?

ஆமா.இனிமேலாவது நர்ஸ் கிட்டே கடலை வறுப்பதை குறைச்சுக்குங்க

===============

14 டியர்.வலைப்பின்னல் ஜாக்கெட் டிசைன் எப்டி?

அடிக்கடி நெட் கட் ஆகும் சீசன் இது.ஜாக்கிரதை


===============

15 சார்.பொண்ணுங்க ஏதாவது எழுத்துப்பிழையா எழுதுனா உடனே அதை கரெக்ட் பண்ண வந்துடறீங்களாமே?
யோவ்.நானாவது பிழையை கரெக்ட் பண்றேன்


=================

16 சார்.உங்க படத்தில் பணி ஆற்றிய 60 பேருக்கும் தங்க செயின் பரிசா தந்தீங்களாமே?

ஆமா.1 கண்டிஷன்.அதை அடகு வைக்கக்கூடாது

==============

17 டாக்டர்.பால்ல மஞ்சள் தூள் கலந்தபின் அது சிவப்பாகிட்டா ரசாயனம் கலந்த பாலாமே?

ஆமா.மஞ்சள் ஆகலைன்னா மஞ்சள் டூப்ளிகெட்

=================

18 இன்ஸ்பெக்டர்.பாண்டி விளையாடிட்டு இருந்த அப்பாவிப்பொடிப்பசங்களை எதுக்கு அரெஸ்ட்?

பாக்கெட்ல ஒசாமா,வீரப்பன் போட்டோ இருந்துச்சு.எப்பூடி

===================

19 டேய்.ட்யூட்டில இருந்த நர்ஸ் கிட்டே சில்மிஷம் செஞ்சியா?

ஆமாங்க எஜமான்.ஹிஹி
மனசுக்குள்ளே பெரிய கவர்னர்னு நினைப்பா ?

===============

20 இன்ஸ்பெக்டர்.போராட்டக்காரர்களிடம் அனுஷ்கா போட்டோ இருக்கு.என்ன செய்ய ?ஓவர் ஓவர்

அதை ரிமூவ் பண்ணிட்டு ஒசாமா போட்டோ வை

===============0 comments: