Thursday, February 23, 2017

சிங்கம் சிங்கிளா.வந்தா இப்போ யூஸ் இல்லையே?

முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி:் # வழக்கம் போல் "சாமி"க்கு எதிரான அரசியலில் திமுக இறங்கும்


==================2 பலாத்காரம் செய்தவரைக் காதலிப்பதாக கூறிய பெண்: குஜராத் உயர் நீதிமன்றம் திகைப்பு # அடிக்கடி பலாத்காரம் பண்ணி கரெக்ட் பண்ணிட்டான் போல==============3 திராவிட கட்சி சகாப்தம் முடிந்தது

-பொன்.ராதா # திராவிட கட்சி ன்னு ஏதோ நாவல் படிச்ட்டு இருப்பார் போல

================

4 தேர்தலுக்கு தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
# தலைவரே .2021 க்கு இப்ப இருந்தே தயார் ஆகி என்ன பிரயோஜனம்?

===============

5 சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன் கணவருக்கு ஆறுதல் கூறிய சசிகலா மைன்ட் வாய்ஸ் "அய்யய்யோ.வந்துடுவியா?"

===============

6 சசிகலாவின் சுமைகளை பகிர்ந்து கொள்ள தகுதியான நபர் தேவை. அதனால், துணை பொதுச்செயலராக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.-நாஞ்சில் சம்பத் # எடப்பாடி பழனிச்சாமியின் சுமையை விரைவில் இவர் சுமப்பார்னு பேசிக்கறாங்களே?


====================7  அன்புமணி;  தான், மக்களின் தலைவர்.-ராமதாஸ் # கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுன்னு சொன்னா இவரு கேட்க மாட்டேங்கறாரு
==========================முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் # இப்படி ஒரு கண்டம் வேற முதல்வர் பதவிக்கு இருக்கா?==================9   மோடிக்கு, பேசுவதில் தான் விருப்பம் உள்ளது; வேலையை செய்வதில் இல்லை.-ராகுல் # பாராளுமன்றத்தில் ‘”ஸ்பீக்கர்” ஆக விருப்பம் போல


=====================

10   


'ஜெ., உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': EVKS #  வாட்சப் பார்த்து அறிக்கை விடும் வாஞ்சிநாதன்

========================


11 

தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு # 21 வருசமா நடந்த வழக்கின் தீர்ப்பு டக்னு வந்ததும் மேலிட பிரஷர் தானா?


====================

12 பெங்களூரு சிறை ஆலோசனைகளைப் புறக்கணித்து செயல்படுவீர்: புதிய முதல்வருக்கு ஸ்டாலின் அறிவுரை # பதவிக்கு ஆப்பு வெச்சுடுவார் போலயே - பழனிசாமி மைண்ட் வாய்ஸ்


==============================

13 

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்: க.அன்பழகன் கணிப்பு # ஆமா, 2021 மே மாசம் தேர்தல், உங்களுக்கு அறிவோ அறிவுங்கண்னா

====================

14 

அதிமுகவின் இரு அணிகளாலும் நல்லாட்சியை தர முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து # அப்போ அதிமுக வில் 3 வது அணியை உருவாக்கப்போறீங்களா?=========================


15  பெண்ணாக பல சோதனைகளை கடந்தும், சிரித்துக் கொண்டே சிறை சென்றார் சசிகலா-சி.ஆர் சரஸ்வதி # கோடிக்கணக்கா கொள்ளை அடிச்சும் 4 வருசம் தானா?ன்னு சிரிச்சிருப்பாரோ?

========================


16 ரிசார்ட்டில் உள்ள 18 எம்எல்ஏக்கள் பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு # பேமண்ட் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பாங்க போல

===============\
17 சசிகலா ,தினகரனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிப்பு # எம் டி யை டிஸ்மிஸ் செய்த அக்கவுண்ட்டண்ட்

================

18 அதிருப்தியில் உள்ள 40MLA.க்களுடன் தம்பிதுரை சமரச பேச்சுவார்த்தை
# 10 கோடி 1 தரம் ,15 கோடி 2 தரம் ,20 கோடி 3தரம்.பைசல்

=================

19 எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க போவதாக மயிலாப்பூர் M.L.A நடராஜ் அறிவிப்பு # சிங்கம் சிங்கிளா.வந்தா இப்போ யூஸ் இல்லையே?

==================

20 தமிழகத்தை அமைதிப்பூங்காவாக ஜெ மாற்றி வைத்திருந்தார்: OPS # அதனாலதான் அப்போல்லோ ரகசியம் வெளிலயே வர்ல.கப் சிப் அமைதி சமாதி

=================


0 comments: