Tuesday, November 18, 2014

அஞ்சனா தங்கச்சி பேரு நாலணாவா? என்ன கொடுமை நயன் தாரா இது?

1

சார்.இனி வரும் எல்லாப்படத்துலயும் நீங்க டூயல் ரோல் தானா?ஏன்?


 அதுக்கு
டபுள் சம்பளம் வாங்கிக்கலாம்னு ஒரு  ஐடியா


==============

2

கைதி = பேங்க் ல 100  கோடி தாங்க கொள்ளை அடிச்சேன்.ஏன்
நம்பமாட்டேங்கறீங்க.

 ஜட்ஜ் =நீயே ஒரு திருடன்.நீ சொல்றதை எப்டி நம்பறது?


=====================

3 லேடிdr லேகா = ஏப்பா.என்னைப்பார்த்ததும் தொபுக்கடீர்னுவிழுந்துட்டே?லொள் பேசண்ட் லிங்கா = புரியல?.இதான் காதலில் விழுதல் ,காதலி முன்
விழுதல்


======================
 

4  ஈஸ்வரா! மேக்கப் போடாத பொண்ணு எங்கே கிடைக்கும்?


பக்தா! பொறு.பியூட்டி
பார்லர் போய் இருக்கும் பார்வதி வந்ததும் கேட்டு சொல்றேன்


====================
நீங்க ஒரு ட்ரெண்ட் செட்டர் ட்வீட்டர் னு பேசிக்கறாங்களே?என்ன செஞ்சீங்க?டெய்லி ஏதோ ஒரு டேக் கை ட்ரெண்ட் பண்ணுவேன்


===============

6


சார்.ஹிந்திப்படம் பண்றேன்.முதல் கட்டமா என்ன செய்யனும்?


 உங்க
தமிழ்ப்படம் 100   கோடி வசூல் பண்ணிடுச்சுனு அடிச்சு.விடுங்க.சம்பளம்
எகிறும்


==========================

7  எடிட்டர் = என்ன சார்?   5  பக்க கதையை இவ்ளவ் துக்ளியூண்டு எழுத்தில்
நுணுக்கி நுணுக்கி எழுதி இருக்கீங்க?


ரைட்டர் = இதான் நுணுக்கமான எழுத்து


======================
சார்.படத்தோட ஸ்டண்ட் மாஸ்டர்நீங்க எப்டி பட கலெக்சன் ரிப்போர்ட்
சொல்றீங்க?


 ம்யூசிக் டைரக்டரே ஸ்டண்ட் அடிக்கும்போது நான் அடிச்சா என்ன?


======================
நாசிக் ல வந்து அச்சடிச்ச ரூபாய் நோட்டு மேல கத்தி யை வெச்சு போட்டோ
எடுக்கறீங்களே,எதுக்கு?கத்தி  100  கோடியை டச் பண்ணிடுச்சுனு FB ல போட


======================


10 

இவர் தான் என் லைப் பார்ட்னர்.


ஓ.எவ்ளவ் பிராபிட் கிடைச்சது?


 வாட்?


எத்தனை குழந்தைகள்?===================


11 


அன்பே! உன்னை சும்மா தான் நோக்கினேன்.நீ ஏன் நோக்கியா நிறுவனம் போல்
இழுத்து மூடினாய்?====================


12 


சார்.லேடீஸ் நிறைய பேரு இருக்காங்க.கொஞ்சம் எந்திரிச்சு இடம் தர
முடியுமா?


கொஞ்சம் தள்ளி உக்காந்து வேணா இடம் தரேன்
 

===============


13 


 


பேங்க்ல லோன் வாங்கி  வருசம் ஆச்சு.எதுவுமே கட்டலையே?

 போன வருசம் கூட
என் மாமா பொண்ணை க்கண்ணாலம் கட்னேனே?

=====================


1410   ரூபாக்கு வித்த பீர்பால் கதைகள்  30   ரூபாக்கு
விக்கறீங்களே,ஏன்?பேப்பர் விலை ஏறிடுச்சா?


 நோ.பீர் விலை பால் விலை
ஏறிடுச்சு.


====================15  
 


15  மிஸ்! உங்க பேர் என்ன?


அஞ்சனா.

ஓஹோ.உங்க தங்கச்சி பேரு நாலணாவா?===================16 

சார்.ரீ மேக் படம்னா உடனே ஓக்கே சொல்லிடறீங்களே.ஏன்?


எப்டி நடிக்கனும்
?னு டைரக்டர் கிட்டே கேட்கத்தேவை இல்லை.டிவிடி யைப்பாத்து அடிச்சுடலாம்

========================


17 


மிஸ். நாளா மழை.அதனால வாசல் தெளிக்கலை.இன்னைக்குத்தான் மழை வர்லையே?ஏன்
தெளிக்கலை?


 மதியம் வருமாம்.ஐ ஆம் வெய்ட்டிங்

===================
 


 

18  கமல் = படம் ரெடி பண்ணிட்டேன்.ஒன் பை ஒன் ரிலீஸ் பண்ணப்போறேன்.

ரஜினி =
ஒரே ஒரு படம் தான் நம்ம சைடுல.நான் ஒரு படம் நடிச்சா..

======================
 


19  ஸ்டாலின்=காத்து இந்தப்பக்கம் அடிக்குது?


வைகோ = 20  வருசம் முன் வாரிசு
அரசியல் வந்துடுமோனு பயந்தேன்.  அதுக்கு வாய்ப்பே இல்லைனு இப்பதான் புரிஞ்சிது


====================


20 மேனேஜரோட சட்டை ல எதுக்கு சின்னப்பையனாட்டம் இங்க் தெளிச்சு விட்டீங்க?


என்  வருச சர்வீஸ்ல என் மேல ஒரு பிளாக் மார்க் கூட விழலைன்னாரு====================

 
0 comments: