Friday, November 14, 2014

திருடன் போலீஸ் - சினிமா விமர்சனம்

 

 போலீஸ் கதைன்னாலே நமக்கு இது தாண்டா போலீசில் டாக்டர் ராஜசேகர்  கம்பீர நடிப்பும் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ் கோப மிடுக்கும்  நினைவு வரும். சிங்கம்  சூர்யா போல் அதிரடி சாகசம் ஏதும்  செய்யாத ,ஆனா விறுவிறுப்பான  கதை.  புலன்  விசாரணை கேப்டன்  போல் என்கொயரியில்  மிளிரும்  போலிஸ் ஆஃபீசர் கதைகள்  பலது பார்த்தாச்சு. இது  ஒரு சாதா  கான்ஸ்டபிளின்  எதார்த்தக்கதை , சுவராஸ்யமாகக்கொடுத்திருக்காங்க. ஹிட் அடிக்கும்  இந்தப்படத்தைப்பத்தி  பார்ப்போம்.

போலீஸ் குவாட்டர்சில்  அசிஸ்டெண்ட் கமிஷனரின்  பையனுக்கும் , ஹெட் கான்ஸ்டபிள் பையனுக்கும் அடிக்கடி மோதல்  நடக்குது.நேர்மையான  ஹெட் கான்ஸ்டபிள்  அசிஸ்டெண்ட் கமிஷனரின்  பையனோட  தில்லுமுல்லுகளை சாட்சியோட அம்பலம் ஆக்கப்போறதா சவால் விடறார். பையன்  பொறம்போக்கா  இருக்கான்னு அப்டியே  மேம்போக்கா  விட்டுட முடியுமா?அதனால  பையனைக்காப்பாத்த  அப்பா  வான அந்த  ஏசி  ஹெட் கான்ஸ்டபிளை அடியாள்  வெச்சு போட்டுத்தள்ளிடறார்.


கருணை அடிப்படையில்  கான்ஸ்டபிள் பையனான  ஹீரோவுக்கு அதே வேலை  கிடைக்குது. அவர்  போலீசா  படும் கஷ்டங்கள் , அப்பா செண்ட்டிமெண்ட்ஸ் , கொலை  செய்யப்பட்ட அப்பாவின் சாவுக்கு   பழி வாங்குவது  என ஜனரஞ்சகமா  திரைக்கதை  பயணிக்குது. 
அட்டகத்தி , குக்கூ  நாயகன்  தினேஷ்  தான் இதிலும் நாயகன். இவருக்கு இது  ஒரு திருப்புமுனைப்படமா  இருக்கும். ஏன்னா  இதுவரை இவர்  படங்கள்  2ம்   விமர்சகர்களால் பலத்த பாராட்டைப்பெற்றும்   கமர்ஷியலா  சக்சஸ் காட்ட  முடியலை . இந்தப்படம் அதுக்கு  பிள்ளையார் சுழி  போட்டுடுச்சு . பி சி  செண்ட்டர்களில்  நல்லா  போகும் 


குக்கூ பட  விழி ஒளி இழந்த  கேரக்டர்  பாதிப்பில்  இருந்து இவர்  இன்னும் வெளி வர்லை .பாடி  லேங்குவேஜ் அப்டியே  சில  சீன்களில் இருக்கு. இது  பெரிய  குத்தம்  இல்லை. ஆனானப்பட்ட  ராஜ பார்வை  கமல்க்கும்  , காசி விக்ரமுக்குமே  அந்த  பாதிப்பு  இருந்தது . 

வழக்கமான  தாடி  கெட்டப்  தினேஷை  விட  போலீஸ் கட்டிங்க் அடிச்ச  தினேஷ்  கை தட்டலை அள்ளறார்.அப்பாவை  நினைத்துக்கலங்கும்  இடங்கள்   அருமை . காதலியுடனான ரொமான்ஸ் காட்சிகளில்   பாஸ் மார்க் .  டூயட்  காட்சியில்  சமாளிக்கிறார் .


வில்லனின் அடியாளாக  வரும்  நான் கடவுள்  மொட்டை பாஸ்  ராஜேந்திரனுக்கு  இது மறக்க முடியாத  படம் . சமீப காலத்தில்  வில்லனுக்கு  கை  தட்டல்  கிடைத்த  வெகு சில  நடிகர்களில்  இவரும்  ஒருவர் . அதுவும்  அவர்  பெண் வேடத்தில்  அந்த  குத்தாட்டப்பாட்டில்   செய்யும் சேஷ்டைகள்  கலக்கல்  ரகம் . க்ளைமாக்ஸில்   என்னை  விஷம் வெச்சுக் கொன்னுடு, ஆனா  பேசிக்கொல்லாதே   என  புலம்பும் காட்சி அற்புதம்


ஹீரோவின் நண்பராக  வரும்  பால சரவணன்   கலக்கல் நடிப்பு . பண்ணையாரும் பத்மினியும்  , குட்டிப்புலி  2 படங்களில்  வந்ததை விட  இதில் நல்ல வாய்ப்பு . அவரது  கேரக்டரை ஒட்டிய   டயலாக்குகள்  அப்ளாஸ் அள்ளுது  (  மொக்கை  போடும்  சூரி வகையறாக்கள்  கவனிக்க ) 


ஜான்  விஜய்    அவர் பங்குக்கு காமெடியில் அள்ளறார். ஆனா அவருக்கு வாய்ப்பு கம்மி 


 அப்பாவாக வரும்  ராஜேஷ் நல்ல  குணச்சித்திர  நடிப்பு .


நாயகியாக  வரும்  ஐஸ்வர்யா ராஜேஷ்   இதம் . அவரைக்கிளாமராகக்காட்டாமல்   கண்ணியமாகக்காட்டிய இயக்குநர்க்கு ஒரு சபாஷ்  ( நீங்க  எல்லாம் நல்லா வருவீங்க  பாஸ் . நற நற ;-)) )


நிதின் சத்யா  வில்லன்  நடிப்பு  சுமார்  தான்.  அவர்  பல  பெண்களை  ரேப்  பண்ணி இருக்கார்  என்பது  வெறும்  வசனமாத்தான்  வருது . காட்சியா வெச்சாதான்  கேரக்டர்  கொடூரம்  புரியும் (  மாமியார்  வீட்டுக்கு  விசிட் அடிச்சது  மாதிரியும்   இருக்கனும் , மச்சினியை சைட் அடிச்சது மாதிரியும்  இருக்கனும் ) 


ஆடுகளம்  நரேன்  நடிப்பும்  கன கச்சிதம் 

 படத்தின்   பெரும் பலம்  யுவனின்  பின்னணி  இசை . பாட்டும்  ஓக்கே  ஒளிப்பதிவு  பக்கா . எடிட்டிங்க்  செம  


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1
அம்மா.தயவு செஞ்சு பாகற்காய் குழம்பு மட்டும் வைக்காதேம்மா.அதுக்கு அப்பா வோட அடி உதையே பெட்டர் # தி போ


2
அடேய்.அதெப்பிடிடா அப்பா கிட்டே அடி வாங்கிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தியேட்டர்ல காமெடி ஸீன் க்கு விழுந்து விழுந்து சிரிக்கறே? # தி போ


பிச்சைக்காரன் கூட பிச்சையை பணிவாத்தான் கேட்பான்.இந்த போலீஸ் தான் அதிகாரமா பிச்சை கேட்குது # தி போ

4
இவன் யார்றா?கண் இருக்கற இடத்துல 2 குண்டு பல்பை மாட்டி இருக்கான்? #,தி போ


5 போலீஸ் வேலை எல்லாம் ஒரு வேலையா? ஒரு பய மதிக்க மாட்டேங்கறான்.எடுபுடி வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு #,தி போ


6

அம்மா கிட்டே கோபம் இருக்கும்.ஆனா அதிகாரம் இருக்காது.அப்பா கிட்டே கோபம் ,அதிகாரம் இந்த 2 மட்டும் தான் இருக்கு # தி போ


7
அப்பா இல்லாத வீடு எப்படி இருக்கும்?னு அப்பா இல்லாதவங்க கிட்டே கேட்டுப்பாருங்க # தி போஎந்த முயற்சியும் செய்யாம ஓ சி ல வேலை கிடைச்சா அவன் பர்பார்மென்ஸ் இப்டி பெப்பரப்பேன்னுதான் இருக்கும் # தி போ


9
எந்த வேலையையும் நேசிச்சு செய்யனும் கடனுக்கு செய்யக்கூடாது # தி போ


10 என்ன மாப்ளை.ஹெல்மெட்டெல்லாம் போட்டிருக்கே? நாம ரூல்சை பாலோ பண்ணாத்தான் மத்தவங்க பண்ணாதப்ப தட்டிக்கேட்க முடியும் # தி போ


11
அதெப்பிடி இந்த ஹையர் ஆபீசருங்க மட்டும் டிசைன் டிசைனா டார்ச்சர் பண்றானுங்க #,தி போ


12
A C = எதுக்குடா என்னைக்கட்டிப்போட்டிருக்கே?


 P C = சார்.ப்ளீஸ்.பொத்திக்கிட்டு உக்காருங்க # தி போ13
பப்ளிக் சர்வீஸ் ல நாம இருந்தாலும் நம்மை பெரும்பாலான பப்ளிக் கிற்கு பிடிக்காமப்போவதே உன்னை மாதிரி சில ஆளுங்களால தான் #,தி போ
 

 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1
யூனிபார்மில் இருக்கும்போது போலீஸ் தம்/தண்ணி அடிக்கும் காட்சி வருவதை சென்சார் எப்படி அனுமதிக்குது?


2
அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் ஆக்சன் த்ரில்லர் # தி போ


3
நேத்து வந்த அட்டக்கத்தி தினேஷ் கூட 3 கெட்டப் ல வர்றாரு.நம்ம ஆளு 55 படம் தாண்டியும் ;-))))
4 படம் போட்ட 3 வது ரீல் ரிசல்ட் = திருடன் போலீஸ் = இன்னொரு கடமை கண்ணியம் கட்டுப்பாடு # கை தட்டல் பறக்குதுவிறு விறுப்பான திரைக்கதை.நச் வசனங்கள் .அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் இடை வேளை # தி போ


6
மிரட்டல் (விடுக்கப்பட்ட ) நாயகன் விஜய் சேதுபதி ஒரு குத்தட்டப்பாட்டுக்கு என்ட்ரி #,தி போ

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  காக்கிச்சட்டை  படங்களில்  ஒரு மாறு பட்ட  படம்  தந்த  விதம் 


2  திரைக்கதையில்  பழி வாங்கும்  சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டு  அதில்  எந்த அளவு  காமெடியை  மிக்ஸ்  பண்ணலாம் என்ற அனுபவ அறிவு கை யாண்ட  விதம் 


3   விஜய்  சேதுபதியை  ஒரு குத்தாட்டத்துக்கு   மட்டும்   நடிக்க  வெச்சுட்டு சாரி ஆட வெச்சுட்டு போஸ்டரில்   பிரம்மாண்டமாக அவர்   ஃபோட்டோவைப்போட்ட   மார்க்கெட்டிங்  தந்திரம் 


4 திரைக்கக்தைக்கு   நாயகன்  - நாயகி    காதல்  காட்சிகள்  [பெரிதாகத்தேவை  இல்லை என்பதால்   அதிக அளவில்  நாயகியைக்காட்டாமல்  விட்டது. வழக்கமாக  தமிழ்  சினிமா  நாயகிகளை   லூஸ்  போல் காட்டும்  இயக்குநர்  நடுவில்  யதார்த்தமாகக்காட்டிய விதம்


5 கடைசி 20  நிமிட  காமெடிக்காட்சிகள் . க்ளைமாக்சில்  ஒரு  ஆக்சன் படத்தில்  இப்படி காமெடி  சீன்  வைக்க  ஒரு தில்  வேண்டும்

6  போலீஸ்  யூனிஃபார்முக்கு  கிடைக்கும் மரியாதையைப்பார்  என  ஹீரோவிடம்  அவர் நண்பர்  பண்ணும் அலப்பறை   கலக்கல்  ரகம் .
இயக்குநரிடம்  சில கேள்விகள்

1

ஒரு போலீஸ் ஆபீசர் இன்னொரு போலீஸ் ஆபீஸரைக்கொல்லச்சொல்லி ரவுடிக்கு அரசு தரப்பில் கண்காணிப்பில் இருக்கும் போனில் பேசுவாரா?


2  ராஜேஷ்  இறந்ததும்  இழவு  வீட்டுக்குப்போகும் கமிஷனர் ஆன் த ஸ்பாட்டிலேயே   அவர் பையனான  ஹீரோவிடம்  யூ ஆர் அப்பாயிண்ட்டட் என சொல்ல வேண்டிய தேவை என்ன?4


3   நரேன்  என்ன  சிம்ம  ராசியா?  இல்லை  முன்னாள்  சி எம்மா?  கமர்மெண்ட்  பார்த்துத்தரும்  வேலையை  இவரே   பிச்சை  போட்டது  மாதிரி  ஹீரோ  கிட்டே  மூச்சுக்கு  மூச்சு  நான்  தான்  உனக்கு  இந்த  வேலையை  சிபாரிசு  செஞ்சேன் கறார்? அப்பா இறந்தா  கருணை அடிப்படையில்  அரசு  அதே  வேலையை  வாரிசுக்குத்தருவது   மரபு  தானே?

4  போலீஸ்  ஆஃபீசர்   இன்னொரு  போலீசை  கொலை  பண்ண  இப்படி  அல்ப சொல்பையாக நடப்பது ஏன்? கிரிமினலாக அல்லவா  காட்டி  இருக்கனும் ?

சி  பி  கமெண்ட் - திருடன் போலீஸ் - விறுவிறுப்பான  முன் பாதி திரைக்கதை , நச்  வசனங்கள்,பின்பாதி  கலகலப்பு - விகடன் மார்க் = 44 ,
 ரேட்டிங் = 3 /5.இந்தப்படம்   செலவான  தொகையைப்போல் 4மடங்கு   சம்பாதிக்கும்  என கணிக்கிறேன் . பி & சி செண்ட்டர்களில்  பிரமாதமாப்போகும்,ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -44குமுதம்  ரேங்க் ( கணிப்பு)- சூப்பர் ரேட்டிங் = 3 / 5


டிஸ்கி -  அப்புச்சி  கிராமம் - சினிமா  விமர்சனம்  -

1 comments:

jananiantonyraj said...

இந்த பட விமர்சனம் தான் நீங்களும் விமர்சனம் ஓவர் மேதாவித்தனமா (ம்ன்னிக்கனும்)இல்லாம யதார்தமா சூப்பரா இருந்தது ந்ண்பரே
அட்டகத்தி , குக்கூ 2 பஙலும் வெட்ரிப்படங்கல் தான் 55 படங்கள் நடிச்ச ஹீரோ பங்களைவிட கூட்டம் அதிகமா தான் இருந்தது நான் படம் பார்த்தப்ப...