Friday, November 07, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (7 11 2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை


 1 ஜெய்ஹிந்த் -2 -ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2. இந்தப் படத்தின் கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார்.
புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அர்ஜுன் கூறியதாவது…..
இன்றைய கல்வி முறையை நாட்டுப்பற்று மற்றும் ஆக்ஷன் கலந்து அதிரடி படமாக உருவாக்கி இருக்கிறோம். கல்வி இப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற பொதுவான ஒருவனின் கருத்தை இதில் சொல்கிறோம்.
ஒவ்வொரு பெற்றோரின் ஆசை, தங்களது வாரிசுகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே. அந்த கனவு எங்கே? எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை இதில் பிரதிபலிக்கிறோம்.
சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னை மற்றும்  பெங்களூரில் ஒரு பாடல் காட்சி படமாகப்பட்டது.
“ அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ஜுனரே
கல்விக்கண் தொறக்கவந்த
காமராசு வகையறாவே”
 
 
 2  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
 
விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.
'ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை’,'வந்தான் வென்றான்',  ‘சேட்டை’ படங்களை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது. கிராமத்து பின்னணியில் காதலுடன் நகைச்சுவை கலந்து படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இப்படம் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் செய்யும் திட்டமிட்டத்தில் இருக்கிறார்களாம்.
காரணம் கடந்த வெள்ளியன்று வெளியான ‘மெட்ராஸ்’, ‘ஜீவா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும் அதோடு அக்டோபர் 2-ஆம் தேதி ‘யான்’ படம் வெளியாகவிருப்பதாலும் தான் இந்த மாற்றமாம். ஏற்கெனவே தீபாவளி போட்டியில் ஐ, கத்தி, பூஜை என மூன்று பெரிய படங்கள் உள்ளன. ஆக, இந்தப் போட்டியில் இப்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படமும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவததிற்கில்லை.


 3

Interstellar'


 
வசூல்களின் அரசன் என அழைக்கப்படும் ‘பேட் மேன்’ படங்களின் உருவாக்கமும் சரி, திரைக்கதை அமைப்பும் சரி உலகின் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வரவேற்படைந்தவை. அதற்கு முக்கியக் காரணம் அப்படங்களின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
'பேட் மேன்’ பாகங்கள் மட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவித்த ‘ மேன் ஆஃப் ஸ்டீல்’, ’இன்செப்ஷன்’, ‘இன்ஸ்டெல்லர்’ போன்ற படங்களும் இவரது படைப்பே.
மும்பை ஐ.ஐ.டி வரும் டிசம்பர் 28ம் தேதி ‘மூட் இண்டிகோ’ என்னும் பெயரில் திரைப்பட விழாவை நடத்த உள்ளனர். சினிமா கலையை கற்று வரும் பல மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

பல வருடங்களாக வெவ்வேறு தீம்களில் விழா நடத்தும் மும்பை ஐ.ஐ.டி  இந்த வருடம் கிறிஸ்டோபர் நோலன் படங்களை தீமாகக் கொண்டு நடக்க உள்ளது.
இந்த விழாவில் கிறிஸ்டோபர் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் மாணவர்கள் கேட்கும் சினிமா குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார் கிறிஸ்டோபர் .

4
ஜி.எஸ். டெவல்லபர் பட நிறுவனம் சார்பில் பி.குணசேகரன் தயாரிக்கும் படம் பண்டுவம். இதில் நாயகனாக சித்தேஷ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் மைதானம், சாட்டை படங்களில் நடித்தவர். ஆண்டனி, கார்த்திக், பகதூர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கீட்டன் இயக்குகிறார். இவர் நடிகர் வாகை சந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன் ஆவார். ராம. நாராயணனிடம் உதவியாளராகவும் பணியாற்றியவர். படத்தில் முக்கிய கேரக்டரிலும் இவர் நடிக்கிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

மருத்துவம் சம்பந்தப்பட்ட பின்னணியை கொண்ட படமாக உருவாகிறது. கல்லூரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படமாகவும் இருக்கும். பண்டுவம் என்றால் சுத்த தமிழில் ரணசிகிச்சை என்று பெயர். பண்டைய காலத்தில் ரணசிகிச்சையை பண்டுவம் என்று அழைப்பர்.

ஒளிப்பதிவு: முத்ரா, இசை: நீரோ, பாடல்: பத்மாவதி, எடிட்டிங்: யோகாபாஸ்கர், ஸ்டண்ட்: விஜய், நடனம்: ராதிகா.
 thanx - dinamani

0 comments: