Friday, November 21, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21 / 11 / 2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 நாய்கள் ஜாக்கிரதை 2 வன்மம் 3,காடு 4 NINJA 2, 5 விழி மூடி யோசித்தால் 6 சின்னஞ்சிறிய வண்ணப்பறவை # 21 11 2014



1 நாய்கள் ஜாக்கிரதை -
சத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் 'நாய்கள் ஜாக்கிரதை' படப்பிடிப்பு இன்று முதல் கோயம்புத்தூரில் துவங்கியது.
பிரபுசாலமன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த 'லீ' படத்தினை நாதாம்பாள் ஃபிலிம் நிறுவனம் மூலம் தயாரித்தார் சத்யராஜ். அதனைத் தொடர்ந்து படம் எதுவுமே தயாரிக்கவில்லை.
அதே நிறுவனத்தின் சார்பில், தற்போது சிபிராஜ் நடிக்கும் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் சிபிராஜ், அருந்ததி, மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நாய் ஒன்று நடிக்கவிருக்கிறது. இதுவரை இந்திய திரையுலகில் நாயகனுக்கு இணையான வேடத்தில் நாய் நடித்ததில்லை. இதற்காக ராணுவத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ நாய் ஒன்றை நடிக்க வைக்கவிருக்கிறார்கள்.
படத்தின் பல காட்சிகளில் நாயின் நடிப்பு மிரட்டலாகவும், வியக்க வைக்கும் அளவுக்கும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 ஆம் தேதி கோவையில் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. கோவையைத் தொடர்ந்து ஊட்டி, சென்னை, பாலக்காடு, பெங்களூரு, லடாக் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
'நாணயம்' படத்தினை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தினை இயக்கி வருகிறார். 




2   வன்மம் - விஜய் சேதுபதி நடிக்கும் வன்மம் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் ஆரம்பமாகிறது.
புறம்போக்கு, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், காவியத்தலைவன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அத்துடன் அவர் நடிக்கும் இன்னொரு படம்தான் வன்மம். நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபன் தயாரிப்பு.
 
விஜய் சேதுபதியின் படங்களில் பிரதானமாக இருக்கும் நட்புதான் இந்தப் படத்துக்கும் அடிப்படை. விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறவர் கிருஷ்ணா. யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் அதே கழுகு கிருஷ்ணா.
 
ஒரு தனி நபரின் மீது நாயகனுக்கு ஏற்படும் கோபத்தை நட்பு கலந்து சொல்லியிருக்கிறோம் என படம் குறித்து கூறினார் அறிமுக இயக்குனரான ஜெய் கிருஷ்ணா. இவர் கமல்ஹாசன் தொடங்கி சிம்புவரை பலரிடம் உதவி இயக்குனராக இருந்தவராம்.
 
வன்மத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது. கிருஷ்ணாவுக்கு உண்டு, சுனைனா.
 
 
3  காடு- 
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் விதார்த்.
அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆள் படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த மகத்தான வரவேற்பு விதார்த்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. ‘இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்த ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், தற்போது இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.
சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிப்பில், ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காடு’ என்ற படம் தான் அது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மலைகிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது.
அந்த மலைக் கிராமத்தில் உள்ள வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு காடு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அது இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம் சொந்த ஊர்.
காடு பற்றி விதார்த் என்ன சொல்கிறார்?
”இந்தப் படம் என் லைஃபில் திருப்புமுனையைத் தரப்போகிற படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மைனா, தற்போது ஆள் படங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள், காடு படத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
காடு படத்தில் கதாநாயகியாக சமஸ் கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கேரள வரவு. கேகே இசையமைக்கிறாராம்.
காட்டை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படம் வெளிவந்தால் காட்டை அழிக்க வேண்டும் என்று எவருக்கும் மனம் வராது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 


 4   விழி மூடி யோசித்தால் -
கொலிவுட்டில் திகில் நிறைந்த காதல் படமாக உருவாகி வருகிறது விழி மூடி யோசித்தால். டுவிஸ்டர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் விழி மூடி யோசித்தால் என்னும் தமிழ் திரைப்படத்தை திரு.K.G.செந்தில் குமார் என்பவர் தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமி யுனிவர்சல் ஸ்டுடியோவில் இயக்குனர் மற்றும் நடிப்பிற்கான கல்வி பயிற்சி பெற்றவர். 25ம் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி, நடித்துள்ளார் செந்தில் குமார். குறிப்பாக இவர் இயக்கிய Simplicity மற்றும் Dewdrop என்னும் இரண்டு குறும்படங்களுக்கு அமெரிக்காவில் Accolade International Film Festival-ல் இருந்து சிறந்த இயக்குனர், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழில் தற்போது இயக்கி வரும் படத்திற்கு வித்தியாசமான களத்தினை தெரிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் அகாடமியில் பயின்ற முகமது ஆதிப் என்பவர் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாதி மிகவும் காதல் களமாகவும், இரண்டாம் பாதி திகில் களமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பயிற்சி பெற்றிருந்தாலும், தாய் மொழியான தமிழில் முதல் படம் இயக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கிறாராம் செந்தில் குமார்.

 



 5  சின்னஞ்சிறிய வண்ணப்பறவை  -
பிளஸ்-2' படிக்கும் ஒரு மாணவி தன் எதிர்காலத்தை பற்றியோ, தாய்-தந்தை குடும்பம் பற்றியோ யோசிக்காமல் ஒரு தவறு செய்து விடுகிறாள். அதனால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. அதில் இருந்து அவள் மீண்டாளா? என்பதை கருவாக வைத்து, 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை'என்ற படம் தயாராகிறது.

'நர்த்தகி'படத்தில் நடித்த அஸ்வின்குமார் கதாநாயகனாகவும், அனு கிருஷ்ணா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கராத்தே ராஜா, ராஜேந்திரன், ரமேஷ், திருமுருகன், மகாலட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜெனிபர் (நந்திதா) ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சைமன் ஆப்ரகாம் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி டைரக்டுசெய்திருக்கிறார்


 



  1. Ninja: Shadow of a Tear
  1. Ninja: Shadow of a Tear
    2013 Film
  2. 6.2/10-IMDb
  3. After his wife is brutally murdered, a martial-arts master (Scott Adkins) teams up with an old friend (Kane Kosugi) to sharpen his battle skills and seek revenge.

  4. Initial release: September 20, 2013
  5. Running time: 94 minutes
  6. Genre: Action Film
     
     
    நன்றி - வெப்துனியா , தினமணி , தினத்தந்தி

0 comments: