Sunday, November 09, 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - சினிமா விமர்சனம்ஹீரோயின் ஒரு டாக்டர். ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ். அவரோட ஃபிரண்ட் இன்னொரு
வெட்டி ஆஃபீசர். இவங்க  2 பேரும் எப்படி  ஹீரோயினை கரெக்ட்
பண்றாங்க.இதான் கதை.சாரி.ஹீரோ ஹீரோயினை  கரெக்ட் பண்ண  ஹீரோ ஃபிரண்ட்
எப்படி உதவி செய்யறார்?இதான்  கதை.

இதை  இப்படியே சொன்னா  மொக்கைப்படம்னு தமிழன் ஈசியா  சொல்லிடுவான். அவன்
மனசை மாத்தனும்.இதுக்கு என்ன வழி? கூப்பிடுய்யா அந்த  அசிஸ்டெண்ட்
டைரக்டர்சை.எல்லா  பெரிய  டைரக்டர்களும்  சில  புத்திசாலி அசிஸ்டெண்ட்சை
வெச்சிருப்பாங்க. முருகதாஸ்க்கு  ஒரு  கோபி மாதிரி,எஸ் ஏ சந்திரசேகருக்கு
, பவித்ரனுக்கு ஒரு ஷங்கர் மாதிரி ( சூரியன்)வில்லன்  ஒரு கெமிக்கல் கம்பெனி வெச்சிருக்கார்.அது போக
சம்சாரத்துக்குத்தெரியாம  ஒரு கில்மாசமாச்சாரம் வெச்சிருக்கார்.(கதைக்கு
ரொம்ப  முக்கியம்)அந்த  கம்பெனில  சரியான  விதிமுறைகள்  பின்பற்றப்படலை.
பாதுகாப்பு சாதனங்கள்சரியா  இல்லை.

ஹீரோயினோட தோழி அந்த கம்பெனில  வேலை பார்க்கும்போது கை சிக்கிக்குது (
அதெப்பிடி  ஒரு டாக்டருக்குத்தொழி  சாதா கம்பெனில ஹெல்ப்பரா வேலை
பார்க்கும்?னு  எல்லாம் லாஜிக் பார்க்ககூடாது )


அந்த மெசினொட  விலை கோடிக்கணக்குல.மிசினை  உடைச்சா தோழியகாப்பாத்திடலாம்.
ஆனா  வில்லன்  உடைக்கலை.ஹீரோயின்  உடனே அந்த  கம்பெனிக்கு சீல்
வைக்கச்சொல்லி  கோர்ட்ல  கேஸ் போடறா.


வில்லனின் அடியாட்கள்  துரத்தறாங்க. கேஸ்  என்ன ஆச்சு ? என்பது  மீதிக்கதை.


 கதையைப்படிச்சதும்  தமிழன்  என்ன  யோசிப்பான்னா இது  ஹீரோயின்
ஓரியண்ட்டட் சப்ஜெக்ட் ஆச்சே? இதுல எப்படி  மானம்  ரோஷம்  உள்ள  ஹீரோ
நடிப்பார்?

 அதுக்குத்தான்  கைக்காசு  செலவு  பண்ணி ஒவ்வொரு படத்துக்கும்   ஹீரோவா
நடிக்க  தமிழ் நாட்டில் உள்ள  ஒரே  ஹீரோ நம்ம  விமல்  இருக்க  பயம்  ஏன்?இவர்  வசனம்  பேசும்  ஸ்டைல் அடடா!! ஓங்கி  1  கொடுக்கலாமா?னு  தோண
வைக்கும்  உச்சரிப்பு. அந்த்க்க்கால   ஒரு  தலை ராகம்  சுதாகர்  மாதிரி.


இவர்  ஃபைட்  எல்லாம்  போடறாரு. நல்லகாமெடி


 சூரி  செம மாடர்ன்  லுக்கில் அசத்தறார்.வழக்கமா   போடும்  மொக்கையை
குறைச்சுட்டார். குட்.பல  சீன்களில் அப்ளாஸ் அள்றார்


நாயகி  ப்ரியா ஆனந்த். விட்டில்  த்ண்ணி  தெளிச்சு  ஃப்ரீயா  விட்டுட்டாங்க  போல

 சுடி போட்டா   துப்பட்டா பத்தி கண்டுக்கவே  இல்லை. வெரிகுட்  ஹீரோயின்.
இந்த   மாதிரி ஏனோ  தானோ ஏஞ்சலைத்தமிழன்  ரொம்பவே  ரசிப்பான்.


நாசர்  வில்லன். சும்மா வந்துட்டுப்போறார்.தம்பி  ராமையா  கொஞ்ச நேரம்  வர்றார், ஓக்கே ரகம்.

இனியா  , லட்சுமிமேனன் கு  எல்லாம்  டைட்டில்ல நன்றி கார்டு  போடறாங்க.


சபாஷ் இயக்குநர்


1.   பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவரும்படி   சுமாரான  நகைச்சுவையை
ஆங்காங்கே  தெளித்து  போர் அடிக்காமல் நகர்த்திய விதம்


2  ஹீரோயினை  டீசண்ட்டாக  டாப் ஆங்கிள் , சைடு ஆங்கிள் , அப்பர் பர்த்
ஆங்கிள் , மிடில் பர்த் ஆங்கிள்களீல்  காட்டியது


3    இமான் -ன் இசையில்  செம  குத்துப்பாட்டு
  ஒண்ணு  ரெடி  பண்ணது


இயக்குநரிடம்  கேள்வி1.   ஓப்பனிங்  சீன் ல  பேக்டரி  லேபர்   சைக்கிளில்  வரும்போது   ஹார்ட்
அட்டாக் வரும்  சீனில்  தும்மல் வருவது  பொல்  முகத்தை ஏன்
வெச்சுக்கறார்?


2  ஹீரோயின்  ஏன்  பேக்கு மாதிரி எவிடன்ஸ்  ஃபைலோட  வில்லன்  வீட்டுக்கு
போகுது? ஏதோ  நாசர்  வயசான  வில்லனா வர்றக்தால  எதுவும்  செய்யலை. ரேப்
பண்ணி  இருந்தா  என்ன ஆகும் ?


3 படத்துக்கே  முக்கியமான  சீனான  ஃபேக்டரி   மிசினில்    கை அடிபட்டு
ரத்தம்  வரும்  சீனில்  ரத்தம்  சிவப்பா இல்லாம வாடா மல்லிக்கலர்ல
இருக்கு. தியேட்டர்ல  எல்லாரும்  சிரிக்கறாங்க( மன்னிக்க வேண்டுகிறென்
படத்தில் டாக்டர் ராஜ சேகர்  உண்மையான  ரத்தம்  யூஸ் பண்ணி  இருந்தார்
.அது மாதிரி  டெடிக்கேட்டா  ஒர்க் பண்ணலைன்னாலும்
L� Uͅopڣ � �z�வாவது  ஒர்க் பண்ண வேணாமா?


4  கூலி வேலையாளா  மாறுவேசத்தில் (!!) போகும் நாயகி  அந்த
தங்க்ச்சங்கிலியைகழட்டாமல்  போனது ஏனோ?5  லேபரிடம்  ஐடி கார்டு   போகும்போதும்  வரும்போதும்  கேட்  கீப்பர்
கேட்பாரே? (  புலன்  விசாரணை யில் கேப்டன் இந்த  சினில்  கலக்கி
இருப்பார்)


6  வில்லி  ஃபோன்  பண்ணும்போது   அடியாள்க்குப்பதிலா  போலிஸ் ஆஃபிசர்
எடுக்கார். எதிர்  முனையில்  ஹலோ சத்தம்  கேட்காமலேயே அந்த்   பேக்கு
வில்லி  எல்லாத்திட்டத்தையும்  உளறுது7  சந்தேகப்பட்டு அடியாளை  போலீஸ்   விசாரிக்கும்போது

அவன்  தான்  ஒரு டாக்டர்ங்கறாஆன். ஐ டி கார்டு காட்டுன்னு கேட்கவே  இல்லையேபோலீஸ்
மனதைக் கவர்ந்த  வசனங்கள்


மழைங்கறது இயற்கை கொடுத்த வரம்.பெய்யும்போதே நனைஞ்சு அனுபவிச்சுக்கனும்.விட்டாஅதுக்கும் டாக்ஸ் போட்டுடுவாங்க # ஒரு ஊர்ல 2 ராஜா (1C2K)


கூட்டம் சேர்ப்பது தான் கஷ்டம்.பிரிக்கறது ரொம்ப ஈசி #1c2k


எங்க ஊர்க்குன்னு தனியா ஒரு ஒயின் ஷாப் ஓப்பன் பண்ணிக்குடுத்துட்டா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்.

டேய்.அவர் கலெக்டர்டா .இவனுங்களுக்கு கலெகருக்கும் ,கவுன் சிலருக்குமே வித்தியாசம் தெரிய மாட்டேங்குது#c2k


டீ யில் நனைஞ்ச பன்னும் ,தானாக்கிடைச்ச பொண்ணும் ரொம்ப நேரம் நிலைச்சு நிக்காது #1c2k

5   
என் ஆளுக்கும் எனக்கும் 2வயசு வித்தியாசம். பார்த்தா 2தலைமுறை வித்யாசம் மாதிரி தெரியுது?#1C2K


6  
அவ மட்டும் என் கூட வந்திருந்தா லோயர் பெர்த் ல தாலியைக்கட்டி அப்பர் பர்த் ல முதல் இரவை முடிச்சிருப்பேன் -சூரி # 1C2K


7  
டாஸ்மாக்கில் ஹீரோயின் = 1 குவாட்டர்.


 கடைக்காரர் = எல்லாரும் ஒதுங்குங்கப்பா.லேடீஸ் பர்ஸ்ட் #1C2Kசிங்கமுத்து = நாங்க எல்லாம் அன்னப்பறவை மாதிரி.எந்த சரக்குல தண்ணி கலந்து தந்தாலும் அதைப்பிரிச்சு சரக்கை மட்டும் சாப்டற ஆளு


சூரி = என்னது 4 பேரா? என்னடா இவ ஆட்டோ னு நினைச்சா ஷேர் ஆட்டோ வா இருப்பா போல #1C2K


10  
நம்ம ஊர் ல ஏடிஎம் மெசினுக்குக்கூட பாதுகாப்பு இருக்கு.ஆனா மனுசனுக்குப்பாதுகாப்பு இல்லை #1c2k


11 

தம்பிராமையா = எனக்கு FACE ரீடிங் தெரியும்.


சூரி = ஆளைப்பார்த்தா ஈ பி ரீடிங் எடுக்கறவனாட்டம் இருக்கே? #1c2k


12   
சூரி =மிஸ்! எனக்கு ஒரு ஊசி போடனும்.

 உள்ளே ஓ பி டாக்டர் இருக்காரு.அவர் போடுவாரு

. ஓஹோ.நீங்க ஓ பி அடிக்கற டாக்டரா?#1c2k


13  
சாமக்கோடங்கி ஜாமத்துல வேட்டைக்குப்போகும்போது யாரும் குறுக்கால போகக்கூடாது #1C2K

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


1. 
கவர்ச்சி நாயகன் விமல் க்கு ஓப்பனிங் சீன் ல ஒரு குத்தாட்டம் + மழைல நனையும் சீன்.


2  
ஹீரோயின் ஒரு டாக்டர்.ஹீரோ வெட்டாபீஸ்.எப்டி கரெக்ட் பண்றார் .இதான் ஒன் லைன்.அய்யோ ராமா#1c2k3ஹீரோயின் ,ஹீரோயின் தோழி 2 பேருமே எல்லா சீன் லயும் சுடிதார் ல துப்பட்டா வை ஒரு பொருட்டாவே மதிக்கல #1c2k


கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு மனித உயிரோ மனிதமோ முக்கியம் இல்லை.அவங்க தேவை எல்லாம் டர்ன் ஓவரும் டார்கெட்டும் தான் #1c2k


படம் போட்டு முக்கா மணி நேரம் கழிச்சு உள்ளே வந்தவன் இடை வேளை ல பக் சீட் லேடி கிட்டே கதை கேட்டுட்டு இருக்கான்.#,புதுசா இருக்கே


6  
இந்தப்படத்துல அடிக்கடி ஹீரோ மழையில் நனையற சீன் வருதே.என்னா மேட்டர்?#1c2k


மொக்கைப்படத்தில் சக்க பாட்டு # மழைக்காத்தா நீ சுத்தி அடிக்க .செம குத்தாட்ட சாங் #1c2k

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
இயக்குநரிடம்  சில கேள்விகள்

சி  பி  கமெண்ட் = 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா = ஒரு ஊர்லயும் 2 வாரம் தாண்டாது.மொக்கைப்படம்.விகடன் எதிர்பார்ப்பு மார்க் = 40 ,ரேட்டிங் = 2.5 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40குமுதம்  ரேங்க் ( கணிப்பு)-சுமார் ரேட்டிங் = 2.5 / 5


விழுப்புரம் கல்யாண் டீலக்ஸ் ஏசி ல படம் பார்த்தேன். ஈரோடு மாதிரி இல்லாம  படம்  முடியும்  வரை ஏசி  ஓடுச்சு. குட்

1 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்