Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..

68 comments:

சக்தி கல்வி மையம் said...

Vadaya?

சக்தி கல்வி மையம் said...

Today friday?!!! மறந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

இருங்க படிச்சுட்டு வரேன்..

சக்தி கல்வி மையம் said...

வடைய ஏம்பா எடுத்துட்டீங்க?

சக்தி கல்வி மையம் said...

படிக்காம கமென்ட் போடரது ரொம்ப கஸ்ட்ம்பா...

சக்தி கல்வி மையம் said...

ஆன்லைனில் இருக்கிங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

கருண் முதல் 3 கமெண்ட்டுக்கும் எனக்கு அர்த்தமே புரியல

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வடைய ஏம்பா எடுத்துட்டீங்க?

அப்படின்னா?

சக்தி கல்வி மையம் said...

இந்த ஈரோட்டு காரர்களுக்கு உடனே பதில் சொல்லனும்ன்னு தோனமாட்டேங்குதே ஏன்?

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வடைய ஏம்பா எடுத்துட்டீங்க?

அப்படின்னா? --- வடைன்னு கமென்ட் போட்டேன் அது வரல...

சக்தி கல்வி மையம் said...

வெளிநடப்பு செய்யலாம்ன்னு பார்த்தேன்.. உடனே வந்துட்டீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

o..ஓ.. நான் எதும் பண்ணலை..

>>இந்த ஈரோட்டு காரர்களுக்கு உடனே பதில் சொல்லனும்ன்னு தோனமாட்டேங்குதே ஏன்?

கேள்வி கேட்கரது ரொம்ப ஈஸி.. பதில் சொல்லறதுக்கு ரொம்ப யோசிக்கனுமே..

உணவு உலகம் said...

இதோ நானும் வந்திட்டேன்!

சி.பி.செந்தில்குமார் said...

>வெளிநடப்பு செய்யலாம்ன்னு பார்த்தேன்.. உடனே வந்துட்டீங்க..

கருண் ரொம்ப கோபக்காரர் போல.. எல்லாத்துலயும் இணைக்க வேணாமா?

சக்தி கல்வி மையம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

படிக்காம கமென்ட் போடரது ரொம்ப கஸ்ட்ம்பா...---

நான் இன்னும் விமர்சனம் படிக்கவெயில்லை ... படிச்சா கமென்ட் போட வசதியா இருக்கும்ல அதசொன்னேன்.

உணவு உலகம் said...

//அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.//
மிக சரியா சொல்லிருக்காங்க! பகிர்விற்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

>>Blogger FOOD said...

இதோ நானும் வந்திட்டேன்!

வாங்கய்யா.. உங்க லோகோவுல கூட செல் ஃபோன் பேசறப்ப இடது காதுலதான் ஃபோனை வைக்கனும்னு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தறீங்களே.. வெரிகுட்.. ஐ லைக் இட்

சக்தி கல்வி மையம் said...

FOOD said...

இதோ நானும் வந்திட்டேன்! --- தல வந்துட்டாரு... நான் விமர்சனம் படிச்சுட்டுவரேன்.. வெயிட் பண்ணுங்க.. எங்கையும் போயிராதீங்க..

ரஹீம் கஸ்ஸாலி said...

m....m...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரகசிய கனவுகள் ஜில் ஜில் என் இமைகளைத் தழுவுது சொல் சொல்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்?

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
FOOD said...
இதோ நானும் வந்திட்டேன்!
வாங்கய்யா.. உங்க லோகோவுல கூட செல் ஃபோன் பேசறப்ப இடது காதுலதான் ஃபோனை வைக்கனும்னு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தறீங்களே.. வெரிகுட்.. ஐ லைக் இட்//
இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
FOOD said...
இதோ நானும் வந்திட்டேன்! --- தல வந்துட்டாரு... நான் விமர்சனம் படிச்சுட்டுவரேன்.. வெயிட் பண்ணுங்க.. எங்கையும் போயிராதீங்க..//
காத்திருக்கிறோம் நண்பரே! ஆமா, அது ஆரு அந்த தல?

Ram said...

இவ்வளவு சீரியஸான படத்தின் விமர்சனத்தில் கூட இப்படியொரு புகைபடம் அவசியம் தானா???????

'அழகி' படத்திற்கு பிறகு மோனிகாவை எனக்கு கொஞ்சம் பிடிக்கும்.. ஆனால் 'சிலந்தி' படத்திற்கு பிறகு அவரை சுத்தமாக பிடிக்காமல் போனது.. இதில் அவர் சிறப்பாக நடித்திருப்பது வரவேற்கதக்கது..

உணவு உலகம் said...

என்ன படிச்சிட்டீங்களா? கருன் சார்?

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

இவ்வளவு சீரியஸான படத்தின் விமர்சனத்தில் கூட இப்படியொரு புகைபடம் அவசியம் தானா???????


நண்பா.. மருந்தை தேன் தடவி தர்ற மாதிரி.. ஓவர் செண்ட்டிமெண்ட் படத்தில் இது ஒரு ரிலேக்சேஷன்.. அவ்வளவுதான்

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்?

ம் சொல்லுங்க நண்பா.. அல்லது கேளுங்க

சக்தி கல்வி மையம் said...

மோதிர கையால் குட்டு வாங்கின படமா? ரொம்ப நாளைக்கப்புரம் ஒர் பாசிடிவ் விமர்சனம்...

பதிவிற்கு நன்றி..

சக்தி கல்வி மையம் said...

FOOD said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
FOOD said...
இதோ நானும் வந்திட்டேன்! --- தல வந்துட்டாரு... நான் விமர்சனம் படிச்சுட்டுவரேன்.. வெயிட் பண்ணுங்க.. எங்கையும் போயிராதீங்க..//
காத்திருக்கிறோம் நண்பரே! ஆமா, அது ஆரு அந்த தல?
--- இதிலிருந்து என்ன தெரியுதுன்னா நீங்க அஜித் படம் பார்த்ததில்லைனு தெரியுது..

சி.பி.செந்தில்குமார் said...

என் கைல மோதிரமே இல்லை.. வெறும் வாட்ச் மட்டும் தான்

தனி காட்டு ராஜா said...

//ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..//


அய்யோ....அம்மா..... அம்மா..... அழுகையை அடக்க முடியல ....

சி.பி.செந்தில்குமார் said...

>>அய்யோ....அம்மா..... அம்மா..... அழுகையை அடக்க முடியல ....

இதுக்கே இப்படி...தியேட்டர்ல கதறி அழுதவங்களை நான் நேரடியா பார்த்தேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை..

இனிமேல் ப்ளாக் ல ஓவியா படம் போடமாட்டேன்!

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
FOOD said...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காத்திருக்கிறோம் நண்பரே! ஆமா, அது ஆரு அந்த தல?
--- இதிலிருந்து என்ன தெரியுதுன்னா நீங்க அஜித் படம் பார்த்ததில்லைனு தெரியுது..//
ஆமா இல்ல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்?

ம் சொல்லுங்க நண்பா.. அல்லது கேளுங்க

நீங்கள் ஆன் லைன்ல இருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

இதுல என்ன டவுட்?

தனி காட்டு ராஜா said...

//இதுக்கே இப்படி...தியேட்டர்ல கதறி அழுதவங்களை நான் நேரடியா பார்த்தேன்//

நான் விஜய்யோட சுறா படம் தியேட்டர்ல பார்த்துட்டு எப்படி கதறி கதறி அழுதேன் தெரியுமா .....
அழுகை அடங்குவதற்கு அரை மணி நேரம் ஆகி விட்டது ...

சி.பி.செந்தில்குமார் said...

நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.. நீங்க காமெடி பண்றீங்களா?

Ram said...

//நண்பா.. மருந்தை தேன் தடவி தர்ற மாதிரி.. ஓவர் செண்ட்டிமெண்ட் படத்தில் இது ஒரு ரிலேக்சேஷன்.. அவ்வளவுதான் //

நண்பரே.! இது மருந்தில் தேனல்ல.. தேனில் மருந்து.. மெய் சிலிர்க்கும், கண் கலங்கும் நேரத்தில் இயக்குனருக்கு கிளுகிளுப்பு கேக்குதா.?

இயக்குனர்களே!! எல்லா சாரரையும் கவர நினைப்பது தவறில்லை.. ஆனால் ஒரு சாரரை கவரும் விதத்தில் கதை கருவை அமைத்துவிட்டு அச்சாரர் விரும்பாத ஒன்றையும் அதில் இணைத்து தான் மற்றவரையும் உங்கள் படத்துக்கு அழைக்கவேண்டுமா.?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

good

Thirumalai Kandasami said...

ஐயையோ,,செண்டிமெண்ட் படமா..??எனக்கு இது ரொம்ப அலர்ஜி..ஆளை விடுங்க சாமி..
வோட்டும் போடலை..

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

>>நண்பரே.! இது மருந்தில் தேனல்ல.. தேனில் மருந்து.. மெய் சிலிர்க்கும், கண் கலங்கும் நேரத்தில் இயக்குனருக்கு கிளுகிளுப்பு கேக்குதா.?

170 நிமிடம் ஓடும் படத்தில் 3 நிமிட டூயட் சாங்கில் 2 செகண்ட் வரும் சீன் அது.. நோ பிராப்ளம்

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

ஐயையோ,,செண்டிமெண்ட் படமா..??எனக்கு இது ரொம்ப அலர்ஜி..ஆளை விடுங்க சாமி..
வோட்டும் போடலை..


ஆனா நீங்க நல்லவர் ஆச்சே.. ஓட்டு போடாம போனா உங்க மனசாட்சி கேள்வி கேட்காது?ஹிஹி

தனி காட்டு ராஜா said...

//நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.. //

என்ன அண்ணே ...படம் பார்த்துட்டு சவிதா Hospital ல admit ஆகி விட்டீங்க போல .....


//நீங்க காமெடி பண்றீங்களா?//

சரிங்க அண்ணே ..நான் இன்னொரு நாளைக்கு வரேன் .....நீங்களும் என்னை மாதிரி காமடி மூடுக்கு வரும் போது.....


எனக்கு ஒரே ஒரு டவுட் அண்ணே...

படத்துல்ல ஒரு சீனுல இந்த மாதிரி செண்டி மென்ட் இருக்கும்.....அடுத்த சீனே ...heroine &&&&& காட்டிட்டு டான்ஸ் ஆடா அரம்பிச்சுருவாங்க.....

படம் பாக்கறவனுக்கு பைத்தியம் பிடிக்காதா அண்ணே ....:)

சக்தி கல்வி மையம் said...

இங்க வரவங்க எல்லாரையும் நம்ம பக்கம் திருப்பி அனுப்புங்க... ஒரு புது பதிவு போட்டிருக்கேன்...
அதுதான் ஒர் பதிவு சுனாமி வந்திருக்கு இப்பபோயி பதிவு போடரையேன்னு சொன்னாங்க.. கேட்டனா? அதனால்தான் காத்து வாங்கிட்டு இருக்கேன்..

Ram said...

//170 நிமிடம் ஓடும் படத்தில் 3 நிமிட டூயட் சாங்கில் 2 செகண்ட் வரும் சீன் அது.. நோ பிராப்ளம் //

கருத்தை தெரிவித்தேன்.. தப்பா நினச்சுகிடாதீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>எனக்கு ஒரே ஒரு டவுட் அண்ணே...

படத்துல்ல ஒரு சீனுல இந்த மாதிரி செண்டி மென்ட் இருக்கும்.....அடுத்த சீனே ...heroine &&&&& காட்டிட்டு டான்ஸ் ஆடா அரம்பிச்சுருவாங்க.....

படம் பாக்கறவனுக்கு பைத்தியம் பிடிக்காதா அண்ணே

ஹா ஹா எனக்கு பைத்தியம் பிடிக்கலை.. ஓவியா டான்ஸ் ஆடறப்ப ஓவியாவை பிடிச்சது,.. மோனிகா ஆடரப்ப மோனிகாவைப்பிடிச்சது..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>தம்பி கூர்மதியன் said...

//170 நிமிடம் ஓடும் படத்தில் 3 நிமிட டூயட் சாங்கில் 2 செகண்ட் வரும் சீன் அது.. நோ பிராப்ளம் //

கருத்தை தெரிவித்தேன்.. தப்பா நினச்சுகிடாதீங்க..

நண்பா.. நான் தப்பா எதுவும் நினைக்கலை.. யார் வேண்டுமானாலும் என்ன கருத்தும் சொல்லலாம். அதனால் தான் என் பிளாக்கிற்கு கமெண்ட் மாடரேஷன் கூட வைக்கலை.. திட்டுபவர்கள் கூட திட்டலாம்.ஹா ஹா இது என்ன போயஸ் தோட்டமா?வாய் மூடி மவுனமாக இருக்க..மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,,

தனி காட்டு ராஜா said...

//ஹா ஹா எனக்கு பைத்தியம் பிடிக்கலை.. ஓவியா டான்ஸ் ஆடறப்ப ஓவியாவை பிடிச்சது,.. மோனிகா ஆடரப்ப மோனிகாவைப்பிடிச்சது..ஹி ஹி //

அண்ணனா ...அண்ணன் தான் ....உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நெறைய இருக்குது...
ஹா ..ஹா




//திட்டுபவர்கள் கூட திட்டலாம்//

*****&&&&&&&&&^^^^^^^
********&&&&&&&&&&&&&&&

ஹா ..ஹா ....எங்க வரிசையா அண்ணன திட்ட ஆரம்பிங்க பார்க்கலாம் ...

Ram said...

// இது என்ன போயஸ் தோட்டமா?வாய் மூடி மவுனமாக இருக்க.//

சிபின்னா சிபிதான்.. இதுலயும் அரசியல் பஞ்ச்-ஆ.??? கலக்கல்.. :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>
ஹா ..ஹா ....எங்க வரிசையா அண்ணன திட்ட ஆரம்பிங்க பார்க்கலாம் ...

தமிழ்ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை என்னை அண்னானு கூப்பிடறது தான்.. ஹி ஹி

உணவு உலகம் said...

சரி சார்.

Unknown said...

அண்ணே வணக்கம்

Unknown said...

எப்படி சுகம்??

Unknown said...

தன்னுடைய பதிவுக்கு 50 ஆவது கமெண்டு அடிச்ச முதல் ஆள் நீங்க தான் என?

Unknown said...

உங்களுக்கு வார்னிங்!!
தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!

http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

Senthil kumar said...

விமர்சனம் எல்லாம் நல்லா தான் எழுதுறீங்க ஆனால் சில விசயங்களை கோட்டை விட்டுடீங்களே பாஸ்!!!!!
முத்துக்கு முத்தாக ராசு மதுரவனின் மூன்றாவது படம் அல்ல, நான்காவது. 1 பாண்டி, 2 மாயாண்டி குடும்பத்தார், 3 கோரிப்பாளையம், 4 முத்துக்கு முத்தாக..

ராஜி said...

நல்ல படத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி

shanmugavel said...

ஆக,படம் பார்க்கலாம்.நாளைக்கே! நன்றி

ராஜி said...

இந்த வாரக் கடைசியில் குடும்பத்துடன் செல்ல ஒரு நல்ல படத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
இப்ப லாம் சிபி சார் பிளாக் ல விமர்சனம் பார்த்துட்டுதான், குடும்பத்தோடு போகலாமா? இல்லை வேணாமா? னு முடிவெடுக்கிறதே.

Unknown said...

எப்போதும் போல அருமையான.. நக்கல் கலந்த விமர்சனம் சி.பி.. ரசிச்சு படிச்சேன்.. நன்றி..

jothi said...

விள‌க்க‌மான‌ தெளிவான‌ ப‌திவு,.. ப‌ட‌த்தைப்போய் பார்க்கிறேன்

செங்கோவி said...

ஓவியா வேஸ்ட்..மோனிகா தான் பெஸ்ட்!..மோனிகா மன்றத்துலயும் என்னைச் சேத்துக்கோங்கண்ணே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 3 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும்///

பூமகள் ஊர்வலம்
பாண்டி
கூடத்தான் ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படம். அதுவும் ராசு மதுரவனின் படம்தான்

geethappriyan said...

நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
மாயாண்டி குடும்பத்தார் எனக்கு மிகவும் பிடித்த படம்.

Riyas said...

ராசு மதுரவன் படங்கள் பார்க்கலாம்.. என்ன கொஞ்சம் செண்டிமெண்ட் அதிகமாகயிருக்கும்

Unknown said...

விமர்சன சிறுத்தையே.......
நல்லாத்தான் சுத்தியும் பாத்திருக்கே.................

விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பா

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..நான் இதை ஆமோதிக்கிறேன்