Tuesday, June 20, 2017

நிஜமான அஞ்சாதவர் அடங்காதவர் அசராதவர்

1  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சிய திமுகவால் மட்டுமே நிரப்ப முடியும்-டி.ஆர் # நிஜமான அஞ்சாதவர் அடங்காதவர் அசராதவர் இவர் தான்

==========

2 தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும். - ஸ்டாலின் போர்க்கொடி.
# எந்தக்கட்சி ஆட்சி.அமைச்சாலும் 420 தான்.அப்போ 356 தான்


==========

3 அதிமுக அரசை மீதமுள்ள 4வருடம் ஆட்சிசெய்ய விடவேண்டும்-திருமா
# இதை யார் கிட்டே சொல்றீங்க?மோடி கிட்டேயா?ஸ்டாலின் கிட்டேயா?OPS ,TTVD கிட்டேயா?


==========


4 முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும் - பாரதிராஜா புத்திசாலிதான்,ஆனா பேச்சு ,கருத்து மட்டும் முட்டாள் தனமானது


===========

5 திருப்பூர்: டாஸ்மாக் போராட்டத்தில் பெண்ணை தாக்கிய ASP பாண்டியராஜன் SPயாக பதவி உயர்வு ஆனா பிரமோஷன்=============

6 என்னை முதல்வராக்குங்க நான் நிறைய செய்வேன் - தீபா
வெச்சுக்கச் சொல்றீங்க எங்களை?


============


7 பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரே கட்சி பாமகதான் -அன்புமணி!# பெரியார் யார்?னு கேட்கற கால கட்டம் இது


===========

8 பொதுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவதை நீக்க மத்திய அரசு முடிவு
மாணவர்கள் மீதும் கருணை இல்லைனு சொல்லிடுவாங்களே?


============

9 மாநில சுயாட்சிக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்:அமைச்சர் ஜெயக்குமார் ரூம்ல உக்காந்து தானே?


==========


10 அ.தி.மு.க. அரசு பி.ஜே.பி.யின் அடிமை அரசாக ஆனது மகாவெட்கக்கேடு! கி.வீரமணி # வெளில சொன்னா தானே வெட்கக்கேடு?மூடி மறைச்சுட்டா?


===========


11 திருப்பத்தூரில் தூய்மையாக இருந்த இடத்தில் குப்பையை கொட்டி சுத்தம் செய்த BJP் # தூய்மை இந்தியா டெமோ வீடியோவா?விளங்கிடும்


=============


12 பொன்.ராதா முன்னிலையில் நடிகர் பொன்னம்பலம் பாஜகவில் இணைந்தார் # ரஜினி,கமல் ,க்கு குறி வெச்சா கவுதமி,கவுதாரி னு மாட்டுது


=============

13 தமிழகஅரசு கவிழ்க்கப்பட வேண்டும் கலைக்கப்பட வேண்டும்-ஸ்டாலின்
# ஆட்சியைக்கலைக்க முயல மாட்டோம்னு ஒரு மானஸ்தர் சொன்னாரே?


=============


14 ஜெ கொல்லப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது - தீபா பற்றிய ஆதாரம் கிடைத்தும் போலீசிடம் சொல்லாமல் இருப்பதே ஒரு குத்தம் ஆச்சே?

============

15 கழகங்கள் இல்லாத தமிழகம்
கவலைகள் இல்லா தமிழகம்
-பொன்ராதா # கலகங்கள் இல்லாத தமிழகம் வேணும்.அதுக்கு திலகங்கள் ,காவிகள் வேணாம்


==============


16 என் நெஞ்சை பிளந்து காண்பிக்கிறேன்
-தமீமுன்அன்சாரி # CBI ரெய்டு வரும்.பேங்க் லாக்கர் ,வீட்டு பீரோ திறந்து காட்டுங்க போதும்


============

17 தமிழகஅரசு கவிழ்க்கப்பட வேண்டும் கலைக்கப்பட வேண்டும்-ஸ்டாலின்
# ஆஹா!என்ன ஒரு உயர்ந்த உள்ளம்? இந்த நல்ல மனசுக்காகவே உங்களுக்கு பதவி தேடி வரும்


============


18 MLAக்கள் 10கோடி வாங்கியதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை தருகிறது - வைகோ # இதுக்கே ஜெர்க் ஆனா எப்டி? சிலர் 500 கோடி1500கோடி வாங்கினதா பேச்சு


===========


19 MLAவீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது - சபாநாயகர் # டீக்கடை ,சலூன் கடை முதற்கொண்டு சந்தி சிரிச்சுக்கிடக்கு


=============

20 பனை மரங்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்தேவை- ராமதாஸ் # மரம் வெட்ற குப்"பனை",சுப்"பனை"எல்லாம் கட்சியை விட்டு விலக்கினாலே பனை வளருமே?


============

0 comments: