Thursday, June 01, 2017

சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீங்க.எப்டி இவ்ளோ சொத்து சேர்த்தீங்க?

சார்.பிளாக் ல விமர்சனம் போட்டா கூகுள் அட்சென்ஸ் ல3000 ரூ கிடைக்குமில்ல?ஏன் போடலை?


போடலைன்னா 5000 ரூ தர்றதா.சொன்னாக


================

2 மிஸ்! மே 1ந் தேதி காமன் டிபி வைப்பீங்களா?


அய்யய்யோ.நான் மாட்டேன்.என் மாமன் டிபி வேணா வைக்கறேன்


=================

3 ஜட்ஜ்-குற்றவாளியை லாக்கப் ரூம்ல.வெச்சு.விசாரிக்காம எதுக்கு கொச்சின் ,டெல்லி,எர்ணாகுளம்னு கூட்டிட்டுப்போறீங்க


CBI -நாங்க எப்போ ஊர் சுத்த?

=================

4 டியர்.நமக்கு கல்யாணம் ஆன நாளை வருசா வருசம் ஏன் மறந்துடறீங்க?


அவனவன் கல்யாணம் பண்ணின ஆளையே மறந்துடறான்

=================


5 பால் 2PKT ,தயிர்.1 PKT வாங்கிட்டு வரச்சொன்னா என் புருசன் பால் 1 PKT தயிர் 2 PKT வாங்கிட்டு வந்துடறார் DR


எப்டியோ டோட்டல் ல சரியா வருதே


==============
6 ரஜினி விஜய் ஆகறார்.விஜய் ரஜினி ஆகறார்.இதான் பாகுபலி கதை


புரில
மன்னன் தளபதி ஆகறார்.பின் தளபதி மன்னன்

==================

7 மலேசியா வந்து 4 வருசம் ஆச்சு.

இன்னைக்கி கம்பெனில பேப்பர் போட போறேன் அடுத்த மாசம் இந்தியாவுக்கே வந்துருவேன்
வந்து?
இங்கயும் பேப்பர் போடனும்


=============

8 சார்.உங்க படத்தை தெலுங்குல டப் பண்ணி வெளியிட ஏன் லேட்?தயக்கம்?


பெரும்பாலும் நாம தெலுங்குல இருந்துதானே கதையை உருவறோம்?


=================


9 உங்க பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ல பூங்கொடியைப்போர்த்தினாப்டி போஸ் தந்திருக்கிங்ளே?


SJ சூர்யா-தேசியக்கொடியை கமல் போர்த்திட்டாரே==================

10 சார்.எனக்கு ஆன காயம் அது தன்னால ஆறிடும்னு குணா ல சொன்னீங்க


ஆமா
ஆனா 4,வருசம்.ஆகியும் இன்னும் ஆறலைபோல? விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


=============

11 இந்த காலேஜ்ல படிக்கற 1200 பொண்ணுங்க போன் நெ என் கிட்டே இருக்கு.


பாதி ய இங்க குடு
பாதின்னா 5 digit கொடுத்தா போதுமா?


================


12 இந்த உலகம் பெண்களை லட்சுமியா பாக்குது.பின் ஏன் பாலியல் குற்றங்கள்?
அப்பப்ப லட்சுமிராய் ஆகவும் பார்க்கும்

================


13 தலைவரே! எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கூடாது ன்னு ஏன் சொல்றீங்க?
நமக்குக்கிடைக்காத.வெற்றி வேற யாருக்கும் கிடைக்க ்ப்படாது

====================


14 முதல் குற்றவாளி செத்துட்டதால என்னை ரிலீஸ் பண்ணிடுங்க
முதல் குற்றவாளியை இதுக்காகத்தான் போட்டுத்தள்ளுனீங்களா?

=================15 மிஸ்! எல்லா சப்ஜெக்ட்லயும் ஜீரோ மார்க்.ஏன்?
சைஸ் ஜீரோ அழகி னு பேர் எடுக்க ஆசை

=================


16 சர்வர்.மினி பானி பூரி ஒரு செட்
சார்.பானி பூரியே பூரியோட மினி வெர்சன் தான்.அதுலயும் மினி பானி பூரி கேட்டா

=================


17 அமைச்சரே! கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என்ற மக்கள் பேச்சை திசை திருப்ப என்ன வழி?
தெர்மாக்கோல் ஆட்சி ன்னு பேச வெச்சிடுவோம்

==================

18 ஜட்ஜ் = சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீங்க.எப்டி இவ்ளோ சொத்து சேர்த்தீங்க?

 கைதி - அதான் சொன்னேனே? லாட்டரி அடிக்கறேன்னு,ஆல் கேரளா டிஸ்ட்ரிபியூசன்


====================

19 ஒரு நல்ல ஜோக் நாம் எழுதும் போதே சிரிக்க வேண்டும் அந்த ஜோக்கை இன்று தான் நான் எழுதினேன்.

சரி சொல்லுங்க

சாரி, ஊரே சிரிப்பா சிரிக்கும்


===================

20 சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் ( மியூச்சுவல் ஃபண்ட் ) பார்மை படிக்கிறேன் என்பதன் சுருக் சொல்

வாSIPபு


===================

0 comments: