Monday, June 12, 2017

விஜய் படமும் ,அமீர் நடிச்ச படமும் கின்னசில் இடம் பெற்றிருக்காமே?

என்னைய ஏன் பாலோ ”பன்றி”ங்க.?
please

மிஸ்! உங்களை மட்டுமா ஃபாலோ பண்றோம்? பொண்ணுங்க பேர்ல வர்ற ஃபேக் ஐடிக எல்லாரையும்தான்

=============

2 ஜட்ஜ்= முதல்வரா இருக்கும் நீங்க 2,கோடி ரூ லஞ்சம் வாங்குனது தப்புதானே?


கைதி=1 3/4 லட்சம் கோடி ,60000 கோடி ஊழலை எல்லாம் விட்டுடுங்க.

=================

3 மிஸ்.எக்சாம்க்கு வரும்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டு வந்திருக்கீங்களே ஏன்?


புல் ஸ்லீவ் க்கு அனுமதி இல்லையாமே?


==================

4 சொந்த டிபி வைக்கப்போறென்

என் ஓன் போட்டோ காட்டப்போறேன்
என்ன மேடம்.புலி வருது புலி வருது 100 கோடி வசூல் தருது கதையா இருக்கு?


==================


5 இன்ஸ்பெக்டர்.தீவிரவாதியை செக் பண்ணியாச்சா?
அதுவா முக்கியம்?நீட் எக்சாம் எழுத வர்றான்.அவனை தரோவா செக் பண்ணனும்

==============


6 யாரை நம்பி பாலோ பண்ணுறது தெரியல ,பாலோ பண்ண உடனே டிஎம் வராங்க.

மிஸ், ஃபாலோ பண்றதே அதுக்குத்தானே?அங்கேயும் கேட்டைப்போட்டா எப்டி?

===================

7 சார், உங்க சீரியல் இடைவேளை ல காண்டம் விளம்பரம் வருதே?

இது என்ன பிரமாதம்? சீரியல்லயே டெய்லி ரேப் சீன் , கில்மா சீன் வருதே?


====================

8 பிரபாஸ்க்கும் , என் புருசனுக்கும் ஒரே வித்யாசம் தான்


என்ன?
அவரு பாகுபலி , இவரு ஆகாவளி

=======================

9 ஜட்ஜ்- அமைச்சர் கண் முன்னால  2 கோடி ரூ லஞ்சம் வாங்குனீங்களா?

யுவர் ஆனர், நான் என்ன கேனையா? அரசியல்வாதி ஆதாரம் இல்லாமதான் தப்பு செய்வான்

======================

10  உன் புருசன் டெய்லி கள் குடிக்கறாரே? ஏன் தடுக்கலை?

 கேட்டா கள்ளழகர்னு பேர் எடுக்க ஆசைங்கறார்


====================


11   தலைவரே! குஷ்பூ வைவிட நக்மாவுக்கு தான் வாய்ப்பு அதிகம்னு எப்டி சொல்றீங்க?

நக்மா, ராகுல் 2 பேருக்கும் மேரேஜ் ஆகலைங்கற ஒற்றுமை இருக்கே?


===================


12 நீட் தேர்வு எழுதனும்னா முழுக்கை சட்டை போடக்கூடாது.


கமல் -,தெரியும்.நல்லா பாருய்யா.நான் சட்டையே போடலை


===================

13 சினிமா தியேட்டர்ல வந்து சிவாய நமஹ சிவாபுகழ் ஓங்குக ்னு சொல்றாங்களே?சிவ பக்தர்கச்ளா?


அஜித் ரசிகர்களா இருக்கும்.விவேகம் டீசர் மாஸ் ஹிட் ஆகிடுச்சில்ல?

==============

14 சார்.உங்க எல்லா படத்துலயும் பைக் சீன் வருதே ஏன்?


சைக்கிள் ஓட்டத்தெரிஞ்சவங்க சைக்ளோட்ரான் சீன் வைக்கறாங்க

================


15 முக்காலா முக்காபுலா னு ரசிகர்கள் ஏன் கொண்டாடறாங்க?
மூணுமணி நேரத்துல அவங்க முக்கி முக்கி செஞ்ச சாதனையை முக்கா மணி நேரத்துல முறியடிச்ட்டாகளே

=================

16 தலைவரே! தேர்தல்ல நீங்க தோத்துட்டீங்க.

தோல்வியை நானா ஒத்துக்காத வரை நான் ஜெயிக்கறவன் தான்.இதுதான் அரசியல் விவேகம்

=================

17 சார்.உங்க பேங்க் ல பணம் போடனும்.ஒரு செலான் குடுங்க.
10,ரூபா குடுங்க எதுக்கு?
எதை எடுத்தாலும் காசு

===================

18 ஜட்ஜ் = எத்தனையோ பேங்க் இருக்கும்போது ஏன் SBIல கொள்ளை அடிச்சே?
கொள்ளைக்காரன் கிட்டேயே கொள்ளை அடிச்சாதானே தில்லு?


==================

19 தலைவரே!ஜெ வழியில் ஆட்சி நடத்துவோம்னீங்க?
ஆமா.
ஆனா ஜெ ஆட்சியில் உதயநிதி படத்துக்கு கிடைக்காத வரிவிலக்கு இப்போ எப்டி கிடைச்சது?

====================

20 விஜய் படமும் ,அமீர் நடிச்ச படமும் கின்னசில் இடம் பெற்றிருக்காமே?
யோவ்.அது ஆதியோகி சிலை.ஆதி ,யோகி கிடையாது


==================

0 comments: