Friday, June 02, 2017

ரஜினி யின் புதுக்கட்சியுடன் இப்போதே பந்தக்"காலா"?

ராமரை நம்பி இருந்தவர்கள் ரஜினியை நம்பும் சூழ்நிலைக்கு வந்து விட்டார்கள்" சுப.வீரபாண்டியன்
# தனுஷைநம்பறதுக்கும் கூட ஒரு கூட்டம் இருக்கு.

================

2 அதிமுக அரசு யாருக்கும் பயப்படவில்லை; ஜெ வின் அரசாகவே செயல்படுகிறது : சி.வி.சண்முகம் # பாஜக சாதனை மலரை இதுக்கு முன் ஜெ வெளியிட்டிருக்காரா?


================

3 ரஜினி பாமகவை ஆதரிக்க வேண்டும்: அன்புமணி # பாபா படப்பெட்டியைத்தூக்கிட்டுப்போனதை ரஜினி மறந்தாலும் ரசிகர்கள் மறக்க மாட்டாங்க


=================

4 வைர விழாவிற்கு வருபவர்கள் அனைவரும்ஊழலில் திளைத்தவர்கள் தான் -தமிழிசை # குமரி அனந்தன் கூட வர்றாராம்
எங்கே?இன்னொரு முறை சொல்லுங்க

==================

5 கருணாநிதியின் விழா, அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் - ஸ்டாலின் அரசியல் விழா இல்லை,பொது னு நேத்து தான் யாரோ சொன்னதா ஞாபகம்.


================


6 தமிழனின் வீரமும், விவேகமும் துருப்பிடித்து விட்டது- பாரதிராஜா # இல்லையே.வீரம் படம் விவேகம் டீசர் 2ம் ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கே?


==================
ஒரு மருத்துவராக சொல்கிறேன், மாட்டுக்கறி ஆரோக்கியமான உணவல்ல ; தமிழிசை # இனி சைவம் சாப்பிடறவங்களுக்குமட்டும் தான் ஆதார்.அட்டை னு சொல்லாம இருந்தா சரி


======================

பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் -வைகோ டார்கெட் ல கலைஞர்.ஜெ,கேப்டன்.இனிமிச்சம் மீதி இருப்பது மோடியும் ரஜினியும்


================


9 மாடு விற்கத் தடை: தமிழகத்தில் 4நாளில் 100 கோடி நஷ்டம் #அப்போ ஷேர் மார்க்கெட் ல காளையின் ஆதிக்கம் னுவர்றதெல்லாம் இதை வெச்சுத்தானா?


==================

10 ரஜினி பாமகவை ஆதரிக்க வேண்டும்: அன்புமணி #ரஜினி யின் புதுக்கட்சியுடன் இப்போதே பந்தக்"காலா"?


===============

11 வைர விழாவிற்கு வருபவர்கள் அனைவரும்ஊழலில் திளைத்தவர்கள் தான் -தமிழிசை # திடீர்னு மோடியே வந்துட்டார்னா என்ன சொல்வீங்க?


====================

12 ஒரு மருத்துவராக சொல்கிறேன், மாட்டுக்கறி ஆரோக்கியமான உணவல்ல ; தமிழிசை #ஆரோக்யம் இல்லாத உணவைஏற்றுமதி மட்டும் பண்ணலாமா?


===================

13 பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் -வைகோ #- பம்பரம் திடீர்னு தாமரை க்குகுடைபிடிக்குதே?


=====================

14 மாட்டுக்கறிக்காக உயிரையும் கொடுப்போம்..விசிக போராட்டம்..#நாட்டுக்காக உயிர் கொடுப்பதெல்லாம் அவுட் ஆப் பேசன். மாட்டுக்காக உயிர் தருவதே பேஷன்


====================


15 ராமரை நம்பி இருந்தவர்கள் ரஜினியை நம்பும் சூழ்நிலை- சுப.வீரபாண்டியன் # ராமர் ரஜினி மூன்றெழுத்து.இவர்களை நம்பு வது தமிழகத்தின்தலை எழுத்து


==================

16 16தமிழகத்தில் எதிர்க்கட்சியாக, தி.மு.க., சிறப்பாக செயல்பட்டு வருகிறது.-   நக்மா # ஆளுங்கட்சியா திமுக இருப்பதை விட எதிர்க்கட்சியா இருப்பதுதான் நல்லதுங்கறீங்களா?

==========

17  திண்டிவனம் அருகே ஒரு சட்டக் கல்லுாரியைத் துவக்க, தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும், அங்கீகாரம் தர மறுத்துவிட்டன.-DR  ராம்தாஸ் # அதுக்குப்ப்ழி வாங்கத்தான் இனி திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லைன்னீங்களா?

===================

18  : தமிழகத்தில் தற்போது, ஊழல் மலிந்துவிட்டது-அன்புமணி # இல்லையே, எப்பவும் போல காஸ்ட்லியாத்தானே லஞ்சம் வாங்கறாங்க?

=================
19 அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் இடையே, பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்வதாக, ஸ்டாலின் கூறி வருகிறா
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோருக்கு மத்தியஸ்தம் செய்தது யார்?-தம்பிதுரை # அவங்களுக்கு அவங்க டாடி , உங்களுக்கு மோடி
  
==================

20 ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால், அவர் பிரதமரை சந்திக்க, நானே நேரம் வாங்கி தருகிறேன்.-எச்.ராஜா # அதுக்காகவெல்லாம் எங்க கொள்கையை நாங்க மாத்திக்க முடியாது

====================

0 comments: