Thursday, June 08, 2017

ஆறுமுகம்ஏறுமுகம்

1 தமிழகம், அதிகளவில் பொருட்களை உற்பத்தி செய்கிற மாநிலம் என்பதால், ஜி.எஸ்.டி., வரியால் பாதிப்பு ஏற்படும்.-தம்பிதுரை: # இப்படி ஓப்பனா மத்திய அரசை எதிர்த்தா உங்க பதவிக்கு பாதிப்பு ஏற்படும்

===============

2   'கெட்டிக்காரன் புளுகு 8  நாளைக்கு' என்பதை போல், EPSன் மேட்டூர் அணை துார்வாரும் திட்டம், 8 மணி நேரத்தில் முடங்கி இருக்கிறது. -அன்புமணி # ஏழரையைக்கூட்டிட்டாரு

இப்போ EPS கெட்டிக்காரர்னு ஒத்துக்கறீங்களா?

=================

3  இஸ்லாமியர் வீட்டில் பிரியாணி உண்பவர் உண்மையான இந்துவே அல்ல - எச்.ராஜா # அப்போ இஸ்லாமியர் வீட்டு படி ஏறி ஓட்டு கேட்டவங்க?

================

4 மதுவுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: செய்தி - அன்புக்கு அடிமை னு ஒரு காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க


==============


5 மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடாது-பாஜக
# ஆறறிவு ஜீவன் கள் கிடக்கட்டும் அஞ்சறிவுஜீவனை முதல்ல பார்ப்போம் மொமெண்ட்

==============


6 வேலூரில் கல்யாண கலாட்டா..! அண்ணனைத் தள்ளிவிட்டு மணமகளுக்குத் தாலி கட்டிய தம்பி # அண்ணன் கள் ஓரங்கட்டப்படுவது தமிழ்நாட்ல பழகிடுச்சு

==================


7 சினிமாவை விட்டு விலகுவேன்-கமல்
# சினிமாவில் சம்பாதித்ததை அதில்தான் முதலீடு செய்கிறேன்.என் மூச்சு இருக்கும்வரைசினிமாதான்னு சந்த்ருசொன்னாரே?


==============

8 அடித்தவன் பீஹாரி,
அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் -SV.சேகர் மட்டுமல்ல.மத்தவங்களுக்காகவும் போராடுபவன் தமிழன்

=============

9 இந்தியாவில் முதலீடு செய்ய வானமே எல்லை-மோடி # முதல்ல பூமியைப்பாருங்க.விவசாயத்தைப்பாருங்க.


=================

10 மத்திய அரசு தமிழகத்தில் மறைமுக ஆட்சி நடத்துவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை-தினகரன்.
# முன்பு மு.க ஆட்சி ,இப்போ மறைமுக ஆட்சி னு பேசிக்கறாங்க

==============

11 ரஜினி அரசியலுக்கு வரலாம் எனக்கூறிய அமைச்சர் ரா பாலாஜி தமிழனே இல்லை: சீமான் # வரக்கூடாதுன்னு ஒரு பாரீனர் சொன்னாரு
அவரு தமிழனா இருக்குமோ?

===============

12 சசிகலாவை சந்தித்த பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுப்பேன்- தினகரன் சந்தித்து ஜாமீனுக்கு வழி செய்னு சொல்லப்போறாரு


===============

13 தூர் வாரப்படும் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாகத்தர வேண்டும்-விகாந்த்#விவசாயிகள் வாழ்வில் மண்ணள்ளிப்போடாதீங்க.உதவி செய்ங்கறாரு

================

14 வங்கி
கணக்கை வேறு வங்கிக்கு மாற்றும் வசதி வருகிறது - RBI சர்வீஸ் சார்ஜ் போட்டு தாளிச்சுடுவீங்களேனு அசதி வருகிறது


================

15 "கட்சிப் பணியாற்ற தினகரனுக்கு முழு உரிமை உண்டு" -திண்டுக்கல் சீனிவாசன்
# அதிமுக கட்சிக்காரங்க வாய்க்கு ஒரு திண்டுக்கல் பூட்டு போடனும்

================

16 தன்னை எதிர்த்தவர்களையும் இடித்தவர்களையும் அரவணைத்த தலைவர் கலைஞர்; திருமா # வை கோ வை மட்டும் ரிசைன் லெட்டரை வை.GO.ன்னு அனுப்பிட்டாரு

=================1

17 தமிழக கட்சிகள் இரட்டை வேடம் :பொன்.ராதா.#,தமிழ் சினிமாலயும் சரி.தமிழக அரசியல்லயும் சரி.டபுள் ஹீரோ டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் ஹிட் தான்

================

18 மு.க ராஜதந்திரி, இலக்கியவாதி: வைகோ புகழாரம்
என்பதால்தான் வை கோ வின் இலக்கு என்ன?னு தொலைநோக்கில் அறிந்து நைஸா கழட்டிவிட்டுட்டார்

=================

19 இந்தியாவில் தாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி.# லேடி யை வெச்சிருந்தா தப்பு.தாடி வெச்சாலுமா தப்பு?

================

20 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா கீழிறக்கம்
# என்ன ஆறுமுகம்?ஏறுமுகம் காட்றோம்னு ஏர்முகத்தை போராட வெச்சீங்க.ஒரே இறங்குமுகமா இருக்கே?

=================

0 comments: