Saturday, June 24, 2017

ரஜினி சிஎம் ஆக தகுதி இருக்கா?எப்டி?

கமல்,ரஜினி-வித்தியாசம்?


கமல்-ஒரே கருத்தை100 தடவை சொன்னாலும் நமக்குப்புரியாது ரஜினி- அரசியலுக்கு வருவேன்னு 1 தடவை சொன்னதையே 100 டைம் ரிப்பீட்

==============

2 மாப்ளை.ஜாக்கிரதை.சின்ன பிரச்னைன்னாக்கூட என் பொண்ணு ஊரையே கூட்டிடுவா.
ஓஹோ.வீட்டை கூட்ட ஆள் போடத்தேவை இல்ல?

=============

3 சார்.உங்களுக்குப்பிடிச்சது நிகழ் காலமா?கடந்த காலமா?
SJ.சூர்யா - ஹூம்.அது ஒரு நிலா காலம்

============

4 குல தெய்வம் கோவிலுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் நமக்கு அக்கா, தங்கச்சியாமே?
ஆமா.அதனாலதான் அங்கே ஆம்பளைங்க கூட்டம் ஆர்வமா வர்றதில்ல

===========

5 தேன் கூட்டில் கை வைத்தால் என்ன ஆகும்?
மிஸ்! மருதாணியோ,மெஹந்தியோ,நெயில் பாலீஷோ போடாமயே கை எல்லாம் சிவக்கும்.ட்ரை

===============

6 மனைவிக்கு முதல் முத்தம் எங்க தர ஆசை அல்லது எங்கே தந்தீர்கள் ?
ஊட்டிதொட்டபெட்டா

================
7 தலைவரே! உங்க சின்ன வீடு விஜி கூட லென்ஸ் படத்துக்குப்போனீங்களா?
ஆமா. தலைவர்.விஜி லென்சில் மாட்டிக்கொண்டார் னு நியூஸ்


=================


8 டாக்டர். நடு நிசியில் பசி வருவதே சர்க்கரை நோய்க்கான அறிகுறி தானாமே?நிஜமா?
ஏம்மா.நைட் 9க்கு சாப்ட்டா 1மணிக்கு ஜீரணம் ஆகிடும்

================


9 ஸார்.உங்க ஹோட்டல் ல " ஆல் கார்டு அக்செப்டெட்"னு போர்டு. யா. புல் மீல்ஸ் சாப்டுட்டேன்.இந்தாங்க என் விசிட்டிங் கார்டு


======================

10 உங்கள் முன்னாள் காதலியின் திருமணத்திற்கு சென்ற அனுபவம் உண்டா? எப்படி பீல் பன்னுனீங்க? நாம போற பாதி கல்யாணம் முன்னாள் காதலிகளுதுதான்.


==================

11 சங்கமித்ரா படத்துல நம்ம தளபதி கெஸ்ட்.ரோல் ல வருவாரா? டைட்டில் சங்கவிமித்ரா ன்னா ட்ரை பண்ணலாம்


================

12
சார்.எந்த ஊருக்குப்போறதா இருந்தாலும் ஈரோடு டச் பண்ணிட்டுதான் போவீங்களா?அது ஏன்? பெரியார் பாதையில் தான் போவேன் னு சொன்னேனே?


==================


13 தலைவரே!2021 மே ல போர்.வரும்.என்ன செய்வீங்க?

அந்த.டைம்ல நம்ம படம் ரிலீஸ் ஆனா ப்ரமோ வுக்கு எதுனா பிரேக்கிங் நியூஸ்


==============

14 சாண்டில்யன் நாவல்களான கடல் புறா ,யவண ராணி ரெண்டும் வேணும்.கிடைக்குமா?

 வெயிட் பண்ணு.சங்கமித்ரா ரிலீஸ் ஆகட்டும்

=============


15 சார்.தாய் வீடு போன உங்க சொந்த சம்சாரம் எப்போ திரும்பி வருவாங்க?


தெரில.அக்கப் "போர்",வரும்போது பார்த்துக்கொள்ளலாம்


=================


 16 சுந்தர் சி க்கும் பாமக வுக்கும் பாபா,நரசிம்மா போல் ஒரு பைட் வரப்போகுது

எப்டி சொல்றே?

 சங்கமித்ரா ங்கற டைட்டில் அன்புமணி பொண்ணை குறிக்குதாம்

=================

17 நான் பிரதமரை சந்திச்சபோது பாகுபலி 2 பத்தி பேசிட்டிருந்தேன்.

 ஓஹோ. என்ன சொன்னாரு?


எதும் சொல்லலை.அவருக்கு தமிழ் தெரியாது.


=================


18 சார்.ரஜினி அரசியலுக்கு வருவாரா?


 வரமாட்டார்னு சொல்லலை.வராம இருந்தா நாட்டுக்குநல்லதுன்னு சொல்றேன்.

==================

19 ரஜினி சிஎம் ஆக தகுதி இருக்கா?எப்டி?

 ஜெ.வும் போயஸ் இவரும் போயஸ்.2,பேரும் மேடைல குட்டிக்கதை சொல்வாங்க.

====================

20  தலைவரே! எதுக்கு டிவி யை ஆன் பண்ணச்சொல்றீங்க?

போர்.வரும்போதுபார்த்துக்கொள்வோம்னேனே?3ம் உலகப்போர் வருதாமே?நியூஸ் கேட்போம்


=================


==================

=================
 

0 comments: