Saturday, June 03, 2017

கொடி பறக்குது

 பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 % பொருட்கள் தரக்குறைவானவை-ஆய்வில் தகவல் # அப்போ அதுக்கும் சீக்கிரம் அஞ்சலி செலுத்திடுவாங்க?

================

'யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை -தம்பிதுரை # எதுக்கு சுத்தி வளைச்சுட்டு? நாங்கள் செயல்படவில்லைனு சொல்லிடுங்க

==================

3  ரஜினி பாமகவை ஆதரிக்க வேண்டும்: அன்புமணி # ரஜினி ஒரு பக்திப்பழம்தான், ஆனா அதுக்காக மாம்பழத்தை ஆதரிப்பார்னு எதிர்பார்க்க முடியாது, அவர் வழி தனி வழி

=================

4   தமிழக எல்லையே தெரியாதவர்களிடம் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கிறார்கள்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பாரதிராஜா # இப்போ கபாலி, காலா தான் ட்ரெண்ட், அவர் கொடி பறக்குது

===============

5 தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு! # மக்கள் “வெள்ளம்” எப்பவும் இருந்துமா தீ விபத்தை தடுக்க முடியலை?

=================

6 இந்தியாவில் பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமா? மத்திய அரசுக்கு சட்ட கமி‌ஷன் கேள்வி # ஆக்கலாம்னு பதில் வரும்
என்ன பந்தயம்?

================

7 ஜெர்மனியில் மோடியுடன் பிரியங்கா சோப்ரா சந்திந்து அவர் முன் கால் மேல் கால்போட்டு போட்டோ க்கு போஸ் # கை மேல் பலன்.பிரேக்கிங் நியூசில்


==============


8
8  மக்களுக்கு பிடிக்காத ஒன்றை, அ.தி.மு.க., திணிக்காது.  -தம்பிதுரை:  # விதி விலக்கு மதுவிலக்கு என்பதையும் சொல்லவும்

=============

யாருக்கும், நாங்கள் பயந்து இருக்கவில்லை -தம்பிதுரை: #  வார்த்தைகள் எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கு, ஏன் கால் மட்டும் கிடு கிடுனு ஆடுது?

===============


10  மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், திட்டங்களை பெற முடியும்; -ஜெயகுமார் # சரி, அப்படி இணக்கமா இருந்து பெற்ற பலாபலன்களை பட்டியல் போடுங்க, படிப்போம்

===========================

11 பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை!
அரசுக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் பரிந்துரை # போற போக்கைப்பார்த்தா பசுவதைஞர்களுக்குன்னு தனி ஜெயிலே கட்டிடுவாங்க போல

-------------------------

12 OPS ,EPS ஆகியோரை சந்திக்க, மோடிக்கு நேரம் இருக்கிறது.,விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை - நக்மா # லேட்டஸ்ட்டா ப்ரியங்கா சோப்ராவை சந்திச்சாரே, அதை விட்டுட்டீங்க?
====================

13 ஹிட்லர் செய்ததையெல்லாம், மோடி இப்போது செய்து கொண்டிருக்கிறார்-EVKS # ஹிட்லர் எப்போ கவுதமி , ப்ரியங்கா சோப்ரா மாதிரி நடிகைகளை சந்திச்சாரு?இவரு அதுக்கும் மேலே

====================14  ரஜினி என்னை, சிறந்த நிர்வாகி என, குறிப்பிட்டு உள்ளார்,எனவே, தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடக்க ரஜினி, பா.ம.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- அன்புமணி # அவரு ஸ்டாலின், கங்கை அமரனைக்கூடத்தான் புகழ்ந்தாரு, அதுக்கு?

==================


15  ஜெட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு # நாங்க அரசியல் பேசலை, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் அப்டினு அறிக்கை வரனுமே?

========================16 
இஸ்லாமியர் வீட்டில் பிரியாணி உண்பவர் உண்மையான இந்துவே அல்ல - எச்.ராஜா
# அவங்க வீட்ல பிரியாணியைபார்சல் கட்டி நம்ம வீட்டுக்குவந்துசாப்ட்டா?

==============

17 4 மாடி கட்டடத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு 8 மாடி கட்டடம் கட்டியுள்ளனர் -பொன் ராதா. # கட்டி முடிச்சு இத்தனை நாளா கலெக்டர்.வேடிக்கை பாத்தாரா?


==============


18 மாட்டிறைச்சி தடையால் சிவில் போர் மூளும்-திருமா எச்சரிக்கை# போர்.வரும்போது பாத்துக்கலாம்னு ரஜினி சொன்னது இதைத்தானா?

=============


19
ஆண் மயிலின் கண்ணீர் துளிகளை பருகி தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - ராஜஸ்தான் நீதிபதி
சட்ட புக்க படிக்க சொன்னா பேஸ்புக்ல./whatsapp எதையாவது படிச்சுட்டு  தீர்ப்பு சொல்ல வேண்டியது..
===============

20    ஜனாதிபதி தேர்தலில், சரத்பவார் போட்டியிட விரும்பினால், அவர், பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும். அவருக்கு, எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.-ராம்தாஸ் அத்வாலே:# இதுக்கு அவர் ஆதரவா பதில் சொல்வார்?எதிர்த்து சொல்"war?

================

0 comments: