Monday, June 19, 2017

வீடியோல இருக்கறது நான்தான்.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க துளியளவும் முயற்சிக்கவில்லை: ஸ்டாலின்.

# முயற்சி செஞ்சாலும் முடியாது என்பதை உணர்ந்துட்டதால முயற்சிக்கலை போல


===========

2 EPSஅணி பணம் கொடுத்து ஆட்சியை தக்க வைத்தது ஊரறிந்ததே: நத்தம் விஸ்வநாதன் # 2 அணியும்அடிச்சுக்கிட்டாMLA க்களுக்கு கொண்டாட்டம்.ரேட் எகிறுதில்ல?


===========

3 GST இந்திய பொருளாதாரத்தை மாற்றிஅமைக்கும்- ராஜ்நாத்சிங்

# 1000 ரூ ,500ரூ செல்லாதுனு அறிவிச்சப்ப மாற்றி அமைச்ச மாதிரியா?


=============

4 தர்ம யுத்தம் தொடரும் - OPS
2ம் பழைய படங்கள். காலா விவேகம் தான் லேட்டஸ்ட்


==============

5 பொதுமக்கள் வீடு தேடி மணல் வரும்.-எடப்பாடி பழனிசாமி

# மணல் கயிறு பாகம் 1 ,2 வந்தாச்சு.இப்போ பாகம் 3


============

6 சி.பி.ஐ. மீதான அச்சத்தில் அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின் - # 2ஜி வழக்கில் ,நமக்கு பயமே இல்லை?ஜூலைல தீர்ப்பு

============

7 உள்ளாட்சி தேர்தல் எப்போது? 30ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு அரசிடம் கேட்டு பதில் தருவோம்


============


8 மின்தடை பற்றி முன்கூட்டியே எஸ்எஸ்எம்.. தங்கமணி அதிரடி # அதுதான் நியூஸ் பேப்பர்ல போட்டுடறாங்களே?திரும்ப எப்போ வரும்?னுதானே தெரியறதில்ல?

============

9 தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன - தங்கமணி.# ஏர்போர்ட் கூரையை மட்டும் பராமரிக்க மாட்டீங்க?


============

10 கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 100% மின்சாரத்தை தமிழகத்திற்கே கேட்டுள்ளோம் - அமைச்சர் தங்கமணி.
கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க-மோடி


==============


11 சஞ்சய்தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

# எதையும் நாங்க முன் கூட்டியே செஞ்சிடுவோம்.அட்வான்ஸ்டு டைப்

=============

12 எண்ணூர் துறைமுகம் அருகே சந்தேகப்படும் வகையில் நடுக்கடலில் நீச்சலடித்த வங்கதேச நபர் கைது # சந்தேகப்படாத மாதிரி எப்படி நீச்சல் அடிக்கனும்?


===============

13 பொதுமக்கள் வீடு தேடி மணல் வரும்.-CM EPS # தமிழக மக்கள் வாழ்வில் மண்ணள்ளிப்போட்டு விட்டார் னு எதிர்க்கட்சிகள் பிளேட்டை திருப்பிப்போடும்.OKவா?

============

14 3 மாதத்தில் தமிழக அரசியல் சூழலை மாற்றுவோம் - தமிழிசை தமிழகம் பிறக்கப்போகுதுனு சொல்லிடாதீங்க.கிருஷ்ணசாமி சண்டைக்கு வந்துடுWAR


============

15 அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் தகவல் தொழில்நுட்பம் செயல்படுகிறது:EPS # குதிரை பேரம் மேட்டர் லீக் ஆனதை சொல்றாரோ?


=============

16 அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் டிடிவி தினகரன் தான் - நாஞ்சில் சம்பத்..#10 கோடி ஒரு தரம் 10 கோடி 2 தரம் 10 கோடி 3 தரம்


============

17 குதிரை பேரம் குறித்து பேசியதாக வெளியிடப்பட்ட வீடியோ பொய்யானது - சரவணன் பல்டி அடிக்க தனியா பேரம் நடந்திருக்கும் போல============


18 போயஸ் கார்டன் சொத்து ஜெ.வின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம்.-.தினகரன் ரத்தத்தின் ரத்தமே னு அவரால் அழைக்கப்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு உரிமை


=============

19 நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடந்ததாக உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு.# உள்ளே எந்தக்குதிரையும் இல்லையே?னு வாதம் செய்வாகளோ?

============

20 வீடியோல இருக்கறது நான்தான். குரல் என்னோடது இல்லை.OPS இடம் MLA சரவணன் விளக்கம்#மாப்ளை நான் தான்.நான் போட்டிருக்கற சட்டை என்னுதில்ல மொமெண்ட்


=============

0 comments: