Friday, June 30, 2017

மகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை?

ஜட்ஜ் அய்யா, கமல் கோர்ட்டில் ஆஜர் ஆக தேவை இல்லைனு ஏன் சொல்லீட்டீங்க?ஆஜர் ஆனா அவர் ஸ்டேட்மெண்ட் விடுவாரு,புரிய 5 வருசம் ஆகும்===============

2 படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் போடுங்க, இல்லாவிட்டால் 3 நாட்கள் கழித்து போடுங்க

படம் போட்ட 3 வது ரீல்ல தமிழன் முழு ஜாதகத்தையே சொல்லிடறான்

=================

3 யுவர் ஆனர் ,முதல் குற்றவாளி செத்துட்டதால சட்டப்படி 2 வது குற்றவாளியான என்னை ரிலீஸ் பண்ணனும்

அவர் எப்டி செத்தாரு?

நான் தான் போட்டுத்தள்ளினேன்


==================

4 உங்க தலைவர் திருடுனாரா?ஆதாரம் இருக்கா? தண்டனை பெற்றாரா?
கேள்விக்கு இது பதில் இல்லையே?ஆமா.அவர் யோக்கியர்தான் சொல்ல முடியல==================

5 தலைவரே! உங்க சுற்றுப் பயணத்தால் யாருக்கு நன்மை?கார் டிரைவருக்கு.டெய்லி 2000 ரூ சம்பளம்.200ரூ பேட்டா


==================

அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது...

த;லைவரே!  பிரச்சாரத்தின்போது அசைவர்கள் ஓட்டு தேவை இல்லைனு கெத்தா சொல்லுங்க பார்ப்போம்


=================

7 சார்.உங்க படத்தோட டைட்டிலை மே12 அறிவிப்பீங்களா?ஏன்?மே 11 தானே உங்க பட டீசர் வருது ?அதுல இருந்து உருவிடுவோமில்ல?==================

8 தலைவரே! நீங்க பகுத்தறிவுவாதிதானே?அப்போ ஆத்திகவாதி ஓட்டு வேணுமா?வேணாமா?பகுத்தறிவை உடைப்புல போடு.நமக்கு ஓட்டு ,பதவி தானே தேவை?


==============

9 டைட்டானிக் நாயகி படத்துல வக்கீலா நடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்?டைட்டில்ல அட்வ”கேட் வின்ஸ்லேட்” -னு போட்டிருப்பாங்க================

10 குறிஞ்சி ,முல்லை,மருதம் ,நெய்தல் ,பாலை இதில் எது பெஸ்ட்?மருதம்தான் டீச்சர்
எப்டி?
அது நல்ல இலக்கிய புத்தகம் ஆச்சே?

=======================

11 சார்.நீங்க அரசியலுக்கு வருவீங்களா?இல்லீங்க.உழைச்சு சாப்பிடனும்னு நினைக்கறேன்.ஊரை அடிச்சு உலையில போட பிடிக்கலை


====================

12 நீ என்ன செஞ்ச?

நான் என்ன செய்தேன் னு மறக்காம இரு
சரி.நீ செஞ்சது உப்புமா.அதை நான் குறை சொன்னது தப்புமா.==================

13 தலைவரே! பாகுபலி படத்தை பார்த்து ஏன் பெருமூச்சு விடறீங்க?1 3/4 லட்சம் கோடி சம்பாதிக்க 50 வருசம் ஆகுது, 10 நாள் கூட ஆகலை 1000 கோடி வசூல்


=================

14 குருவே! எனக்கு ஞாயிற்று கிழமை கூட புடிக்கல,எதனால?

சிஷ்யா! “சன்”டே வே பிடிக்கலைன்னா நீ இரட்டை இலை ஆளா தான் இருக்கும்


====================

15 பாகுபலி ல அனுஷ்கா கேரக்டரை நயன் தாரா செஞ்சிருந்தா எப்டி இருந்திருக்கும்


அவரு ஒத்துக்க மாட்டாரு
ஏன்?
கடைசி வரை ஒரு லவ்வர்தான்

===================

16 சோகங்களையெல்லாம் சோறு தின்னே மறப்போர் சங்கம் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.


புல் சோகத்தையும் புல் கட்டு கட்டி கரெக்ட் பண்ணுவோர் சங்கமா?


===================


17 சார்.உங்க கார் பேக்டரியை ஏன் தமிழ்நாட்ல தொடங்கலை?லஞ்சம் அதிகமாகேட்டாங்களா?

லஞ்சம் கேட்டிருந்தா தந்திருப்பேன்.பார்ட்னர்ஷிப்பே கேட்டா?=================

18 உருண்டு சுழலும் உன்கண்களை படிக்க முடிவதே இல்லை .


அதெப்டி முடியும்?அஞ்சாங்கிளாஸே படிக்க முடியல.ஆறு அரியர்ஸ்================


19 தலைவர் பச்சைத்தமிழர்னு எப்டி சொல்றே?


வாயைத்திறந்தா,மைக்கைப்பிடிச்சா பச்சைபச்சையா பேச ஆரம்பிச்சிடுவாரு


================

20 மகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை?


கோடிக்கணக்கில் வசூல் பண்ணிணா மகிழ்மதி,ஊழல் பண்ணினா வளர்மதி=================

0 comments: