Sunday, June 18, 2017

சின்னம்மா (ஜாமீனில்)வெளியே வரும் வரை காத்திரு


1 தினகரனை ADMKநிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள்:ஜெயக்குமார் - அங்கே என்ன சத்தம்?
சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் சின்னம்மா
==============2 ஜெயக்குமார் தலைமையில் 17அமைச்சர்கள் திடீர் ரகசிய ஆலோசனை #43 நியூஸ் சேனல்லயும் வந்தாச்சு.7 1/2 கோடி ஜனங்க பாத்தாச்.இதுல என்ன ரகசியம்?


==========


3 நேருவுக்குப் பிறகு கலைஞர் தான் மிகப் பெரிய தலைவர்-அன்பழகன்
#2 பேருமே குடும்ப அரசியலுக்கு வித்திட்டவங்க னு பூடகமா சொல்றாரு


============

4 டெல்லியில் என்.டி.டி.வி இணை நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை # எதிர்த்து குரல் கொடுத்தா ரெய்டு ,ஆதரவுக்குரல் கொடுத்தா ஜாமீன்


===============

5 சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சனைகளுக்குDMKகுரல் கொடுக்கும்:ஸ்டாலின் # வெளிநடப்பு பண்ணாம இருந்தா குரல் கொடுப்போம்.ஆனா வெளிநடப்பு பண்ணிடுவோம்


============


6 ஜிஎஸ்டி வரி பற்றி கமல் கருத்து இங்கே எடுபடாது:அருண் ஜெட்லி
னு சொல்லுங்க ஒத்துக்கறோம்.எடுபடாதுனு சொல்லாதீங்க.ஒத்துக்க மாட்டோம்


============

7 என்.டி.டி.வி. நிறுவனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை மாயவேட்டை-தொலைக்காட்சி நிறுவனம் # ராமாயணம் னா மாயமான் ஹைலைட் போல்

============

8 ADMK(அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமா (ஜாமீனில்)வெளியே வரும் வரை காத்திரு


==============

9 ADMKஆட்சி அகற்றப்படவேண்டும் என்பது மக்களின் விருப்பம்- ஸ்டாலின் # இவர் விருப்பப்படறதையே மக்கள் விருப்பமா நினைக்கறார் பாருங்க இந்த மனசு தான்


===============

10 குப்பையில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்: அன்புமணி # கவிதை,தமிழ் சினிமா,அரசியல்வாதி களை திடீர்னு ஒழிக்கமுடியாதே?


=============


11 கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை; 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை - விஜிலா சத்யானந்த் எம்.பி. # இனி 4 வது அணி தான் .ஆல்ரெடி 3 இருக்கே?


============

12 2021க்குப் பிறகும் அதிமுக ஆட்சிதான் நீடிக்கும் - ஜெயக்குமார் # ஓஹோ.பட்டா போட்டுக்கொடுத்துட்டாங்களா?தேர்தல் செலவு மிச்சம்


============

13 தேர்தல் வாக்குறுதிகளை மறைக்கவே மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது - ஸ்டாலின் # 2G ஊழலை மறைக்க நாம ஹிந்தியை எதிர்ப்பதுபோல்


==============

14 தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடப்பது உறுதி- ஸ்டாலின் # அப்டியே நடந்தாலும் அதுக்கு முன் 2Gவழக்கு தீர்ப்பு நமக்கு பாதகமா வருவது உறுதி


===============

15 கணவன் இல்லாமலே கட்சி நடத்துவேன் -தீபா # இந்தக்காலத்துல பொண்ணுங்க புருசன் உதவி இல்லாம சட்னி கூட அரைக்கறதில்லை


=============

16 எடப்பாடி ஆட்சிக்கு எந்த தொல்லையும் தரக்கூடாது என MLAகளுக்கு தினகரன் உத்தரவு
# அரசியல்வாதி அகராதில தொல்லை தராதேன்னா தா ன்னு அர்த்தம்


=============

17 அதிமுக தலைமையிலான ஆட்சி கலையாது, சட்டப்பேரவை தேர்தல் வராது - தம்பிதுரை # அண்ணாதுரையே வந்து சொன்னாலும் ஜனங்க நம்பமாட்டாங்க


==============

18 ஆளுங்கட்சி குளங்களை தூர்வாராமல், கட்சியை தூர்வாரும் நிலையில் உள்ளது - ஸ்டாலின்.# யாரு எப்போ காலை வாருவாங்கன்னு தெரியாம இருக்கு


===============

19 புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை ஆளுநர் மாளிகை கண்காணிக்கும்: கிரண்பேடி மாளிகையை சிஎம் கண்காணிப்பாரா?அட போங்கப்பா


=========


20 விவசாயிகள்கடனைத் தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்- ரிசர்வ்வங்கி # தொழில் அதிபர்கள் கடன் மட்டும் கோடிக்கணக்கில் தள்ளுபடி ஆகுதே?

===============

0 comments: