Saturday, June 10, 2017

ஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-

 1 அதிமுக அழிந்து விட்டது... திமுக அழியப்போகிறது.- பொன். ராதா # எல்லார்க்கும் அல்பாயுசு.எனக்கு மட்டும் தீர்க்காயுசு னு சொன்னானாம் ICU பேஷண்ட்

==============

2 கலைஞர் இந்திரா,vpசிங், தேவகவுடா,IK குஜரால் என பலரை பிரதமராக்கினார்: ஸ்டாலின் உங்களை மட்டும் CM ஆக்க விடலை


=============

3 நாடகங்கள் முடிவுக்கு வந்தால் தான் அதிமுக அணிகள் இணைவது சாத்தியம்-OPS# அய்யோ ராமா.இதெல்லாம் டிராமா?

==============

4 தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் பாஜக முதல் நிலை கட்சி ஆகும்- பொன்னார்# அதெப்டிங்க?கடைசி நிலைல இருந்து முதல் நிலைக்கு 6 மாசத்துல வர முடியும்?

================


5 இந்திய கிரிக்கெட்டை 'சூப்பர் ஸ்டார்' நோய் பீடித்துள்ளது-ராமச்சந்திர குஹா# FOUR வரும்போது பாத்துக்கலாம்னு சிங்கிள் ரன் நிறைய தந்துட்டாங்களா?


==============

6 சத்குருன்னு சொல்லிகிட்டு இருக்கவங்கலாம் சத்குரு கிடையாது': இளையராஜா
# கங்கைஅமரன் சசி க்ரூப் கிட்டே நிலத்தை விட்ட மாதிரி இவரு இவர்ட்ட


===============

7 ஸ்டாலின்.cm.ஆவார்-பீகார் CM நிதீஷ்குமார்#அதுக்கு தமிழக ஜனங்க.40% பேராவது மனசு.வைக்கனும்.அதை விட முக்கியம் கலைஞர் வழி விடனும்.அத்தைக்கு மீசை?

===============

8 நாட்டில் காவிகள் இருக்கலாம்.பாவிகள் தான் கூடாது - தமிழிசை # பாதி காவிங்க நித்யானந்தா ,பிரேமாமனந்தா போல் பாவிகளாத்தானே இருக்காக


==============

9 திரைப்பட_இயக்குனர் வேலு பிரபாகரன்(60)நடிகை ஷெர்லி(30) திருமணம் இன்று நடைபெற்றது
# நீ பாதி நான்டபுள் கண்ணே


===============

10 கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்வர்: OPS # குண்டர்கள் தான் இப்போ டாமினேட் பன்றாக


==================


தமிழகத்தை மீண்டும் 50 ஆண்டுகள் இருளில் தள்ள திராவிட கட்சிகள் முயற்சி: பொன்.ராதா # முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்


====================11

=
12 வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா வெளியேற்றம்
# வளரும் மாடுகள் பட்டியல்ல டாப் 10 ல வந்துடுவோமில்ல?

================
13 ரூ.500 மேலுள்ள காலணிகளுக்கு 18% வரி-அருண் ஜெட்லி#இனி எதிர்க்கட்சிகள் காலணிஆதிக்கம் னு போராட்டம் பண்ணுவாங்க

=============

14 குடியரசு தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும்- சு.சாமி# ஆதரவுஅளிக்கனும் னு கட்டளை வாக்கியம் போல் தெரிகிறதே?


===============

15 நடந்தது வைரவிழாவல்ல வயதானோருக்கான விழா-பொன் ராதா# இதென்ன கூத்தா இருக்கு?வைர.விழா.வை யூத்துக்கா வைப்பாங்க?அகராதி தெரியாம அகராதியா பேசக்கூடாது

==================

16 ரஜினி அரசியலுக்கு வந்தால் கலாச்சார சீரழிவு ஏற்படும் - நாஞ்சில் சம்பத் # காலில் விழும் கலாச்சாரம் ஒழிஞ்சா நல்லது தானே?


====================

17 ஸ்டாலின் முதல்வராக முடியாது ராகுல் பிரதமராக முடியாது. - தமிழிசை # ஜோசியத்துல டாக்டரேட் வாங்கி இருப்பாரோ?


================

18 அரசியல் குழப்பத்தால் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாய்ப்பு-ராகுல்# குழம்பிய குட்டைல மீன் பிடிக்கலாம்.ஆனா வாக்காளர்களை பிடிக்க முடியாது


=============


அதிமுகவில் எனக்கு எதிரியே கிடையாது" - தினகரன் # எதிரியே இல்லாத உதிரியே னு யாராவது கட் அவுட் வெச்சுடப்போறாங்க

==============


ஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்- தமிழிசை # தாமரை சின்னம் என்பதால் கமல் மாதிரியே பேசறாரு


====================

0 comments: