Thursday, June 01, 2017

சுத்த “சோப்”ளாங்கி அரசு

1 வரும் தேர்தல்களில் I.J.K தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்- பச்சைமுத்து# IJK = இடையிடையே ஜெயிலுக்குப்போய்ட்டு வரும் கழகம்?

===================


2  விஞ்ஞானபூர்வ ஊழல் நடத்தியவர்களுக்கு வைர விழா நடக்கிறது- தமிழிசை  # எங்களையும் விழாவுக்கு அழைக்கனும்னு அறிவுப்பூர்வமா பேசினது யாருங்கோ?


================

3 விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. - ஜிகே வாசன் # முதல் கட்டமா  விவசாயிகளை தீர்க்க முடிவு , ஆட்டோமெடிக்கா விவசாயப்பிரச்னை தீர்ந்துடும் இல்ல?

==================

 கருணாநிதியின் பிறந்த நாள் விழா, சட்டசபை பணி வைர விழா, தேசிய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்.-ஸ்டாலின் # விழாவில் கார்த்திக் நடிச்ச திருப்பு முனை படம் போடுவாங்க போல

====================

 மத்திய அரசு, விவசாயிகளை வாழவைக்க வேண்டும்.-அய்யாகண்ணு  # எல்லா  விவசாயிகளுக்கும் ஒரு வாழை இலை வெச்ட்டு வாழ(வாழை) வெச்ட்டோம்னு சொல்லப்போறாங்க

========================

6   உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து, இதயக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதுமாட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும் -புதிய தமிழகம்  கிருஷ்ணசாமி # மோடிக்கு ஆமாம் சாமி போடும் கிருஷ்ணசாமினு சொல்லப்போறாங்க

====================

7  உ.பி: மது பார் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை # மதுக்கடையை மாது திறந்து வைப்பது மாதுவின் புகழுக்கு கேடுஅமிழ்

=================

கருணாநிதி விழா அழைப்பிதழ்: கனிமொழி பெயர் இல்லை # தமிழ் மொழிக்கு குரல் கொடுக்கறாரு, கனிமொழிக்கு மட்டும் அல்வா குடுக்கறாரு

==================

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல் # யார் யார் சொத்து எந்த அணிக்கு?ன்னு 4 அணிகளும் இன்னும் அடிச்சுக்கலையா?


==================

10  

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு # மருத்து அமைப்பின் கூற்றுப்படி மக்கள் உடல் நலனுக்கு நல்லது


=======================


==============

12  மாட்டிறைச்சி விற்பனை அரசாணையிலிருந்து எருமை மாட்டிற்கு மட்டும் விலக்கு: மத்திய அரசு பரிசீலனை # எருமை எமதர்மராஜாவின் வாகனம்னு யாராவது கிளப்பி விட்டுட்டாங்களா?

================

13 

மோரா புயல் வங்கதேசத்தில் கரையைக் கடந்தது # ஒன்ஸ்”மோரா” வராம இருந்தா சரி


=====================14 பாஜக-வுடன் மோதுவது பாறையுடன் மோதுவதற்கு சமம்
-ஹெச்.ராஜா # ஆனா கடப்பாரை மோதுனா பாறை உடையுமே?

====================

15 கமலஹாசன் புத்திசாலி...அவர் அரசியலுக்கு வரட்டும் ... ராம. கோபாலன் முழு ஆதரவு # சபாஷ், ரஜினி -கமல் போட்டி அரசியலிலுமா?இதிலும் ரஜினிதான் ஜெயிப்பாரு


===================

16 ஒரு மருத்துவராக சொல்கிறேன், மாட்டுக்கறி ஆரோக்கியமான உணவல்ல ; தமிழிசை # இப்பவெல்லாம் இவரு எதுசொன்னாலும் முன்னால "நான் ஒருDRரா சொல்றேன்"கறாரு

================

17 பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் -வைகோ # இதை சொல்றதுக்கா.ஜாமீன் ல வெளில வந்தீங்க?


=================

18 மாட்டுக்கறிக்காக உயிரையும் கொடுப்போம்..விசிக போராட்டம்.. மாடும் உயிரைக்கொடுக்குது மனுசனும் உயிரைக்கொடுக்கறான்


=================


19 மாடு விற்கத் தடை: தமிழகத்தில் 4நாளில் 100 கோடி நஷ்டம் $,என்னய்யா இது?ஆளாளுக்கு100 கோடி நட்டம் 100 கோடி லாபம் னு கிளம்பிட்டாக?


=================

20 மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தவே சட்டம்- தமிழிசை புது விளக்கம் # அதாவது அரசு ஏற்றுமதி செய்யும்

உள் நாட்டு.வியாபாரத்துக்குத்தடை?

==================

0 comments: