Monday, June 19, 2017

அண்ணன் எப்போ எந்திரிப்பாரு திண்ணை எப்போ காலி ஆகும்?

எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தால் கவர்னரை சந்திப்போம்:.ஸ்டாலின்.# அண்ணன் எப்போ எந்திரிப்பாரு திண்ணை எப்போ காலி ஆகும்?மொமெண்ட்=============2 அதிமுக அணிகள் ஒன்றுகூடி செயல்பட வேண்டும்:வெங்கய்யா நாயுடு...# ஜனாதிபதி தேர்தல்ல ஓட்டுப்போடும்போது மட்டுமாவது ஒத்துமையா இருங்கறாரா?
============3 பல மாநிலங்களில் BJP வளர்ந்து உள்ளது; ஒரே பிரச்னை தமிழகம்தான்: நிதின்கட்கரி # தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தமிழகத்தில் தாமரை வளராது.4%தா
==============4 தமிழை விட ஹிந்தி கற்பதற்கு 70% மக்கள் ஆதரவு -தந்தி டிவி # தமிழ் தான் ஆல்ரெடி எங்களுக்கு தெரியுமே?புதுசா எதுக்கு கத்துக்கனும்?
==============
5 கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்கள் தனியாருக்கு ஏலம்#அரசின் சாதனைவிளக்கத்தில் தனியாருக்கு தாரை வார்த்த தானைத்தலைவர் வாழ்க னு போட்டுடாதீங்க.
=============
6 சாலையோர.கடையில் டீ குடித்த CM EPS # டீ கடைக்கு ஆதரவு ,டீ கடை முன்னாள் ஓனர் மோடிக்கு ஆதரவு.குறியீடு
=============
7 பாஜக அரசு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறது - ஸ்டாலின்

# 2 ஜி ஊழல் ல நாம உண்மையை குழி தோண்டி புதைச்ச மாதிரியா தலைவரே?


=============

8 இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் ஏற்படும்- நாராயணசாமி
# வழக்கமான 15 நாள் பார்முலா வை விட்டுட்டீக?


==============


9 ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு.
-தேவஸ்தானம்# ஆதார் இல்லாம வாங்கிட்டா திருப்பதிக்கே அல்வா குடுத்துட்டான்னு பாராட்டலாமா?


==============

10 60% இந்தியா காவி மயமாகிவிட்டது, தமிழகம் விரைவில் காவிமயமாகும் - தமிழிசை # அப்போ பெயிண்ட்டர்சுக்கு வேலை வாய்ப்பு அதிகமாகும் போல


=============


11 சுடுகாட்டில் படுக்க பயமில்லை.. சுதந்திர நாட்டில் தான் பயம்- சகாயம்IAS # பேய்ப்படங்கள் எப்போ காமெடி கலந்து எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே

============

12

எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் அனைத்து MLA.க்களும் ராஜினாமா -AKபோஸ் # அதெப்டி?நம்ம எய்ம் பதவி + அதிகாரம் தானே?அதை இழக்க முன் வருவாங்களா?

==============

13 யானையை வைத்து காசு வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் - கோர்ட் # கோயில் ல வைப்பது போல் யானை கழுத்துல ஒரு உண்டியல் கட்டி தொங்க விட்டா ஓகேவா?


===========

14 தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை
# ஒளிப்பது ஈஸி.ஒழிப்பது ரொம்ப கஷ்டம் மேடம்


=============

15 செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி ஏற்றியே தீருவோம்-தமிழிசை # மனக்கோட்டை கட்டாதீங்க.கோட்டை விட்டுடுவீங்க


=============

16 உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயார்-தமிழிசை
ரெடி போர்டு ரெடி.இனி ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் வந்தா போதும்.


==============

17 பிளாஸ்டிக் அரிசி விற்பவர்கள் தேசதுரோகிகள்.SV.சேகர் # ஆனா பிளாஸ்டிக் அரிசி பற்றி வதந்தி கிளப்பறவங்களை கைதுசெய்வோம்.விற்பனையாளரை விட்டுடுவோம்


=============

18 ரஜினியை எதிர்க்கவில்லை,பணிவுடன்தான் கேட்டோம்-பாமக# புலி பதுங்குதுன்னா பாயப்போகுதுனு அர்த்தம்.பூனை பதுங்குது்னா பால்பாத்திரத்தைஉருட்டப்போகுது


=============

19 வல்லரசாக மாறுவதை விட விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும் - விஜய்.# பெப்சி விளம்பரத்துல நடிக்காம இளநீர் /மோர்/நல்லதுனு சொல்லி இருக்கலாம்


=============

20 தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று முதல் வழக்கம் போல் பஸ் இயங்கும் -செய்தி ?இன்னைக்கு தான் கர்நாடகாவில் பந்த் ஆச்சே? ( 12/6/17)

=================

0 comments: