Showing posts with label சிவா. Show all posts
Showing posts with label சிவா. Show all posts

Saturday, September 21, 2013

யா யா - சினிமா விமர்சனம்

கோடம்பாக்க  காமெடி சினிமா ஃபார்முலாப்படி  ஹீரோ  ஒரு வெட்டாஃபீஸ், அவருக்கு ஒரு முறைப்பொண்ணு , முறைச்சிட்டு இருக்கற ஃபிரண்ட்.ஹீரோயினை  பார்க்கறாரு , பார்த்ததும் லவ் , ஹீரோயின் ஹேண்ட் பேக் ல  தன் ஃபிரண்ட்டோட செல் ஃபோனை போட்டுட்டு வேணும்னே  ஃபிரண்டுக்கு  ஃபோன் பண்ற மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு ( இதைப்பார்த்து யாரும்  ட்ரை பண்ணாதீங்கய்யா , நிஜ வாழ்வுல சிம்மை கழட்டி வீசிட்டு ஃபோனை யூஸ் பண்ணிக்குவாங்க உதார் பார்ட்டிங்க பொண்ணுங்க ) 


ஒரு கம்ப்பெனியோட 45 வயசு  கன்னி ஆண்ட்டிக்கு ஹீரோ மேல லவ் . இண்ட்டர்வ்யூவுக்கு வநதவரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ண  பிளான் போடறாங்க . ஹீரோவின்  ஃபிரண்ட்டை விலைக்கு வாங்கிடறாங்க . புரட்சித்தலைவி கேப்டன் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குனதைப்போல . ஹீரோவின் ஃபிரண்ட்  கருணா மாதிரி கூட இருந்துட்டே குழி பறிக்கறாரு . ஹீரோ  , ஹீரோயின்  காதல் எப்படி என்ன ஆச்சு என்பதை  ரெண்டரை மணி நேரம்  சிரிக்க சிரிக்க  சொல்லி  இருக்காங்க . 


படத்தின் ஹீரோ கம் வில்லன் சந்தானம்  தான் .ஹீரோவின் காதலுக்கு ஆப்பு வெச்சு  தன் வாழ்க்கையை வளப்படுத்தும் கேரக்டர் . சும்மா அசால்ட்டா  ஊதித்தள்ளிடறார்.அவர் படம்  பூரா 55 ஜோக்ஸ்  சொல்றார்/  அதுல 12  ஜோக்ஸ்  ட்விட்டர்ல இருந்து சுட்டது . 8  ஜோக்ஸ் எஸ்  வி சேகர் காமெடி டிராமாக்களில் அடிச்சது . 6  ஜோக்ஸ் ஏர்செல் கம்ப்பெனி எஸ் எம் எஸ் ஜோக்ஸ், மீதி  29  சொந்த சரக்கு .  எப்படியோ   சிரிப்பு வருது , அதான் முக்கியம் , சுட்டாரா? சுடலையா?ன்னு எந்த சுடலைமுத்தும் உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க டைம் இல்லை .  இந்தப்படம் ஆல்ரெடி எகிறி இருக்கும் சந்தானத்தின் சம்பளத்தை  இன்னும் உயர்த்தும் ( இப்போ  ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் ரூபாயாம் ) 
 படத்தின் 2 வது  ஹீரோ  சிவா .  டக் டக் என  டைமிங்க்  விட் அடிப்பதில் ஆள் கில்லாடி . கொஞ்சம் முகத்தில் பாவனைகள் கொண்டு வந்தால்  தேவலை . சந்தானத்தினுடனான காம்பினேஷன் காட்சியில் டம்மியாகிறார் சில காட்சிகளில் தாக்குப்பிடிக்கறார் . ரொமான்ஸ் காட்சிகளில் அவருக்கு  எந்த வித  ஃபீலிங்கும் கை கொடுக்கவில்லை 

 பவர் ஸ்டார்  மூணாவது காமெடி . படத்தில்  இவருக்கு  பல காட்சிகளில் பல ஹீரோக்களை கிண்டல் பண்ணி டூயட் பாடும் வாய்ப்பு . அந்தக்காலத்தில் எஸ் எஸ் சந்திரன் , எஸ் வி சேகர் ஆல்ரெடி எம் ஜி ஆர் படங்களை கிண்டல் செய்து இதே போல் அப்ளாஸ் அள்ளீ இருக்கிறார்கள் . ஆனால் இந்த டைப் காமெடி  ரொம்ப நாள்  நிலைக்காது . அழகே அழகே பாட்டுக்கு ( ஓக்கே ஓக்கே ) அவர் போடும் உதயநிதி ஸ்டெப் கலக்கல் ரகம் . இவருக்கு  ஒரு அட்வைஸ் , ஆல்ரெடி  நீங்களே சொன்ன மொக்கை காமெடியை ரிப்பீட் பண்ணாதீங்க .  போர் . 


 ஹீரோயின்   தன்ஷிகா .விஷால் , அஜித் மாதிரி ஜைஜாண்டிக் ஹீரோக்களுடன்  ஜோடி சேர வேண்டியவர் காலத்தின் கட்டாயத்தால்  சிவாவுடன்  ஜோடி சேர்கிறார். காதல் காட்சிகளில்  இன்னும் கெமிஸ்ட்ரி தேவை .  கலா மாஸ்டரிடம்  ட்யூஷன் போகவும் . ஹீரோவுடன் நெருக்கமாக  இருக்கும் காட்சிகளில் காட்டாத  நவரசத்தை பவர் ஸ்டாருடனான டூயட்டில் காட்டுகிறார். பவருடன் இவர் வரும்  17 செகண்ட்ஸ் லோ கட்  ஷாட் செம ஹாட் . தியேட்டரில்  விசில் 
காதல் சந்தியா  சந்தானத்துக்கு  ஜோடி . ஹீரோயினை விட இவர் அழகாகத்தெரிவது ஆச்சரியம். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமா ?  மேக்கப் விமன் பர்சனலா வெச்சிருக்காரா? தெரியலை , கலக்கல் பிரசண்ட்டேசன் . சந்தானத்துடனான  முதல் இரவுக்காட்சிகள்  செம கிளு கிளு .


 டி வி புகழ் தேவதர்ஷினிக்கு  ஓல்டு லேடி கெட்டப்  அந்த  கல்யாண ராமன் பல் கெட்டப் எரிச்சல் . மற்றபடி அவர் நடிப்பு செம கலக்கல் , அவர் போர்ஷனை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம் , சந்தானம் , சிவா வின் தலையீட்டால் எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும் என அவதானிக்கிறேன் . 


இளவரசு சிவாவுக்கு அப்பா  கேரக்டர் ,  பெரிய வாய்ப்பில்லை  என்றாலும் வந்தவரை  ஓக்கே

 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படம்  முழுக்க  யாரையும் சிந்திக்க  விடாமல்  ஒவ்வொரு சீனுக்கும்  ஜோக்ஸ் மழையைத்தூவி விட்டுக்கொண்டே  திரைக்கதைப்பந்தலை அமைத்தது .  தியேட்டரில் ஆடியன்ஸ்   சிரிச்சுட்டே  இருக்காங்க . 


2.  படத்தில் வரும்  தன்ஷிகா , சந்தியா , ஸ்டெபி ( சிவாவின் தங்கை )  என எல்லாருக்கும்  உடை அலங்காரங்கள் அருமை . மிக ஆடம்பரமாக அதே சமயத்தில் கண்ணியமான கண்ணைக்கவரும் டிசைன்களீல்  சுடி , மிடி கள் கலக்கல் .  ஆடை வடிவமைப்பாளருக்கு  ஒரு ஷொட்டு 


3. படத்தில்  3 பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன . பவர் ஸ்டாருக்கான காமெடி டூயட் செலக்‌ஷன் அருமை . அப்ளாஸ் அள்ளுது  

இயக்குநரிடம்  சில  கேள்விகள் 1. ஹீரோ பிளான் பண்ணித்தான்  ஹீரோயினின்  ஹேண்ட் பேக்கில் நண்பனின் செல்ஃபோனை   போடறார்செல்ஃபோனை  ஹீரோயின் செக் பண்ணா கேலரியில் இமேஜஸில் சந்தானம் , சிவா  ஃபோட்டோஸ் இருக்கும் என இவருக்கு தெரியாதா? அதை எரெஸ் பண்ணிட்டு போட்டிருக்கலாமே? 


2. ஓல்டு  லேடி எம் டி  யாக வரும் தேவதர்ஷினி யின் கெட்டப்பை சந்தானம் யூத்தாக மாற்ற ஐடியா தருவது ஓக்கே, அது சிவாவை கவர , ஆனால் கூடவே வரும் அந்த எடுபுடிகள் 3 பேர் எதுக்கு ?எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா? அவங்களுக்கும்  கெட்டப் மாத்துவது எல்லாம் ஓவர் . அந்த  3 கேரக்டரும் தேவையே இல்லை . ஏகப்பட்ட  கூட்டம் 3. ஹீரோயினுக்கு  ஹீரோ மேல் எப்போ காதல் வந்ததுன்னு  மனம் தொடும்படி சொல்லவே இல்லை இயக்குநர். ஹீரோயின் எப்பவும்  ஒரே மாதிரி முகத்தை வெச்சிட்டுஇருக்கார் .

 ( ஹீரோவும் அப்படித்தான்  இருக்கார் ,ஆனால் அவர் சுபாவமே அபப்டி , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வராது , ஆனால் ஹீரோயின் ஆல்ரெடி அரவானில் கலக்கியவர்தானே , ஏன் அவருக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை ) 


4. ஹீரோ  ஹீரோயினைப்பற்றி  உயர்வாகப்பேசுவது, அதை  ஹீரோயின் ஒளிஞ்சிருந்து கேட்பது எல்லாம்  கே பாக்யராஜ்ன் டார்லிங்க் டார்லிங்க் கால டெக்னிக்குகள் . இதெல்லாம்  இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன். 


5. போலீஸ் காண்ஸ்டபிளாக வரும்  சந்தியா  ஓப்பனிங்க் சீன்ல  ஒரு காமெடிக்காக போலீஸ் ஸ்டேஷன்ல  யூனிஃபார்ம் ல இருக்கார்  மீதி எல்லாக்காட்சிகளிலும் பகல் டைம் ல  ஹீரோயின்  கூடவோ , சந்தானம்  கூடவோ சுத்திட்டு தான்  இருக்கார் .  வேலைக்கே போக மாட்டாரா? 


6 .ஓல்டு லேடி எம் டி   வேலை இல்லாத  சிவாவுக்கு தன் கம்ப்பெனியில்  வேலை  போட்டுக்குடுத்துட்டா இந்திர விழாவில் நமீதா ஸ்ரீகாந்த்தை கரெக்ட் பண்ணியது போல் ரொம்ப ஈசியா   தன் கண்காணிப்பில் , கட்டுப்பாட்டில் சிவாவை “ வெச்சிருக்கலாமே? *  எதுக்கு அவர் நாக்கை சுத்தி மூக்கைத்தொடனும் ?  சந்தானம் மாதிரி ஒரு ஆள் சப்போர்ட் எதுக்கு ? மனம் கவர்ந்த வசனங்கள்


1. நைட் 12 மணிக்கு மேல டாஸ்மாக் ல சரக்கு கூட ஈசியா கிடைக்குது.ஆனா கட்டிக்கப்போற பொண்ணு கிட்டே ஒரு கிஸ் கிடைக்க மாட்டேங்குது


2. நட்பும் காதலும் கொரியன் போன்ல இருக்கும் டூயல் சிம் மாதிரி.ஒரு சிம் க்கு கால் வரும்போது இன்னொரு சிம் வெய்ட்டிங் ல தான் இருக்கனும்


3. பியூச்சர் ல பி எம் ஆகப்போற என்னை பியூன் வேலைக்குப்போகச்சொல்றாங்க. என்னது? அப்போ நீ பியூன் வேலைக்குப்போற அளவு படிச்சிருக்கியா?


4. போலீஸ் கான்ஸ்டபிளையே லவ் பண்ணுவியா? அழகா இருந்தா கான்ஸ்டபிள் ,எஸ் ஐ னு பார்க்க மாட்டோம்


5. எங்க ஏரியா பொண்ணுக்கு உன் பிரண்ட் ஏன் லெட்டர் குடுத்தான்? 

 6.  வருசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்கான்.ஏன்னா அவன் போஸ்ட்மேன்   ( எஸ்  வி சேகர்  டிராமா  ஜோக் ( வால் பையன் ) 


7. செல்லுல பேலன்ஸ் இல்லைன்னா லவ்வை பேலன்ஸ் பண்ண முடியாது8. ஸாரி சொன்னா எல்லாம் சரி ஆகிடுமா? சந்தானம் - அப்போ ஆளுக்கு ஒரு செட் பூரி சொல்லட்டா? 9. பழகுன பொண்ணை புள்ளத்தாச்சி ஆக்கும் பசங்களைக்கூட நம்பிடலாம்.ஆனா புள்ளப்பூச்சி மாதிரி இருக்கும் பொண்ணுங்களை நம்பக்கூடாது.10. சிவா - எதுக்காக என் பிரண்ட்சை அடிச்சே? சந்தானம் - காசு கொடுத்தா நான் என் பிரென்ட்ஸையே அடிப்பேன்  
11.  உனக்காக உன் பேரை என் கைல பச்சை குத்தி  இருக்கேன் 


 யாராவது  வெள்ளைக்கலர்ல  பச்சை குத்துவாங்களா? சாக்பீஸ் ல எழுதி வெச்சுக்கிட்டு  சீன் போடறியா? 12/  உனக்கு வேலை  கிடைக்கனும்னா இண்டர்வ்யூவுல ஒயின் ஷாப் எப்போ திறப்பாங்க ? எந்த எந்த டாஸ்மாக்ல எந்தந்த சரக்கு கிடைக்கும்? இந்த மாதிரி கேள்விகளா கேட்கனும் 


13. எப்பேர்ப்பட்ட ராஜாவா  இருந்தாலும் அவங்களை ஆண்டி ஆக்க இந்த பொண்ணுங்களால மட்டும் தான்  முடியும்  


14.  காதலியை எப்பவும்  தேவதையாப்பார்க்க   ஆசைப்படுவோம் , ஆனா அவங்க  நம்மை தேவதாசாப்பார்க்க ஆசைப்படுவாங்க  ( ட்விட்டரில் சுட்டது ) 


15. சந்தானம்  - இவன் எதுக்கு எச்சி தொட்டு முஞ்சி கழுவறான் ? 16. சந்தியா - வாவ் !!!

 சந்தானம் - யார் இங்கே இப்போ வாமிட் எடுத்தது ? 


17.   ஏய்  மிஸ்டர் . உனக்கு எப்படி கண் போச்சு ? 

  பக்கத்து  வீட்டுப்பொண்ணு குளிச்சுட்டு இருந்தது . அதை பார்த்தேன் கண்ணு போயிடுச்சு 

 அது எப்படி ? 


 அந்தப்பொண்ணு தீக்குளிச்சுட்டு இருந்தது . என்னன்னு கிட்டே போய் பார்த்தேன் , கண் அவுட்   ( எஸ் வி சேகரின்  டி வி டிராமா  வண்ணக்கோலங்கள் -ல் சுட்டது  ) 


18.  சந்தானம்  டூ சந்தியா  - டைனிங்க் டேபிள் ஹைட்  இருந்துட்டு   உனக்கெல்லாம் எப்படி போலீஸ் கான்ஸ்டபிள் வேலை  கிடைச்சது ? 19 . சந்தியா  டூ சந்தானம்  - இந்த வாசல் உங்களுக்காக எப்பவும் திறந்தே  இருக்கும்  ( டபுள் மீனிங்க் ) 
20  சந்தானம் - அந்தப்பொண்ணு மேல உனக்கு என்ன  கோபம் டா ? கோயில் பிச்சைக்காரி மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கே? 21,   புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணுங்க  பின்னால போன ஆணும்  உயிர்  பிழைச்சதா சரித்திரமே  இல்லை ( எஸ் எம் எஸ் ஜோக் , இது ஆல்ரெடி  ஒரு கல் ஒரு கண்ணாடி ல சந்தானமே சொல்லிட்டாரு ) 22. இந்தக்கால பொண்ணுங்க கிட்டே மொபைல் நெம்பர் வாங்கறதும்  , கர்நாடகாவுல தண்ணீர் வாங்கறதும் ஒண்ணு , அவ்வளவு  சீக்கிரம் நடக்காது 


23. சந்தான்ம்  - என் மொபைலை ஏண்டா  அவ ஹேண்ட் பேக்ல போட்டே?  


 சிவா - என் மொபைலை போட்டா எங்கப்பா  திட்டுவாரு


24.  அது என்னாங்கடி உங்களுக்கு மட்டும் லவ் லாண்டரித்துணி மாதிரி இவ்ளவ்   லேட்டா   வருது ?25. நான் மப்புக்காக பழகறவன் இல்லை , நட்புக்காக பழகறவன் , சரக்கு குடுத்து  என்னை  விலைக்கு வாங்க  முடியாது 

 இந்தா  3 லட்சம் 


 ஹி ஹி  இது ஓக்கேங்க 


26.  எக்ஸ்க்யூஸ் மீ லேடீஸ் , மே ஐ கம் இன்  டூ மை ஓன் ஹவுஸ் ? 27. மாப்பி , இந்த  ஃபோனை வெச்சு  ஒரு  டிராமா பண்ணனும் 

 ஃபோனை வெச்சு கால் தான் பண்ன முடியும் , எப்படி  டிராமா பண்ன ? 


28. பவர் ஸ்டார் - கான்செப்ட்  ரொம்ப சின்னதா  இருக்கே?  அதான் நடிக்கலாமா>? வேணாமா?ன்னு யோசிக்கறேன்  

 சந்தானம்  - கல்கியின் பொன்னியின் செல்வன்  இருக்கு பண்றியா?  மணிரத்னமே பண்ண யோசிக்கறாராம் 


29 . சந்தானம்  டூ சிவா  - டேய் , நீ எல்லாம் சீரியசாப்பேசாத , காமெடியா  இருக்கு 


30 பிப்ரவரி 14 ல யாரோட காதல் புட்டுக்கிச்சுன்னாலும் கவலைப்படாதீங்க , அதுக்குப்பிறகு  பிப் 15 இருக்கு , வேற பொண்ணுங்களும் இருக்காங்க 

31. சிவா - என்னை யாராலும் ஏமாத்த  முடியாது

 சந்தானம் - டேய் , சீதா டா 


 சிவா - எங்கேடா? 

 சந்தானம் - இப்போத்தான்  யாராலும் ஏமாத்த முடியாதுன்னே? கி கி 


32. மாடு புல் சாப்ட்டாலும்  பால் தருது, பாம்பு  பால் சாப்ட்டாலும் விஷம் தான் தருது   ( ட்விட்டரில்  சுட்ட லைன் ) 33. உனக்கு செலவுக்குப்பணம் வேணும்கறதுக்காக  நான் ஏண்டா  வேலைக்குப்போகனும் ? 


 எவனோ பாட்டு கேட்க நாம காசு கொடுத்து காலர் ட்யூன் வைக்கறதில்லையா>  அந்த மாதிரி 


34. எதுக்கு இத்தனை செக்யூரிட்டி ? அவர் என்ன ஃபிளைட்டா ஏறப்போறாரு ? முதல் இரவுதானே நடக்கப்போவுது ? 


35. அவதார் படம் எடுத்தவனுக்கும், அஜால் குஜால் படம் எடுத்தவனுக்கும்  ஒரே மூளை  தான் , யூஸ் பண்ணிக்கற விதம்  தான் வேற 


36.  விடிஞ்சா  எனக்கு கல்யாணம் , அதுவும்  முடிஞ்சா எனக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்  


37.  உன்னால என்  மேரேஜை நிறுத்தவே  முடியாது 

 ஏன் ? 

 ஏன்னா  கல்யாண முகூர்த்தம்  காலைல 7 மணிக்கு  , அவ்ளவ்  சீக்கிரம் நீ எழுந்துடுவியா?  நீ எப்பவும்  10 மணிக்குத்தானே எந்திரிப்பே? 


38. நீ  உடனே  என் கிட்டே சாரி சொல்லனும் 


 சாரி , என் வாயால சாரி  சொல்லவே மாட்டேன் 

 அடடா, இப்போ சொல்லிட்டியேடா? 39. இது என்ன கல்யாண மடமா?  மசாஜ் செண்ட்டரா> வரிசையா பொண்ணுங்க  3 பேரு வந்து தடவிட்டு போறாங்க  ? 40  பவர் ஸ்டார் -  சின்னப்பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டீங்க 


தன்ஷிகா   - யோவ் ,  நீ சின்னப்பையனா?  பாக்க தாத்தா மாதிரி இருக்கே 


 நீ  கூட ஆயா  மாதிரி தான் இருக்கே  , நான் ஏதாவ்து  சொன்னேனா? 


41. சந்தானம்  - டேய்  தகப்பா , முதல்  இரவு கட்டில்ல  பூவை டக்னு தூவிட்டு கிளம்பாம  எதுக்கு டா  புறாவுக்கு தீனி  போடற மாதிரி பண்ணிட்டு  இருக்கே? 

 மவனே , உன் கிட்டே மனம்  விட்டுப்பேசுவதற்காக வெயிட்டிங்க் 

  டேய் நாயே  உன் கிட்டே பேசறதுக்கா  மெனக்கெட்டு மேரெஜ் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்  வரை வந்திருக்கேன் ? 


42 . என் மாமா பையனை காணோம் , தேடனும் , எபப்டின்னு நான் திங்க் பண்ணிட்டு இருக்கேன் , தொந்தரவு பண்னாதீங்க  


 சரி வா , படுத்துட்டே 2 பேரும்  திங்க் பண்ணலாம் 

 ச்சீய் 


43 . அடியேய் , நகருங்கடி 2 பேரும் , அவன் என்ன புயல்ல  விழப்போற  கரண்ட் கம்பமா? 2 பேரும் ஆளுக்கொரு பக்கம்  தாங்கிட்டு நிக்கறீங்க  தள்ளுங்கடி

 
 


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =  3 / 5


சி பி கமெண்ட் -  ஏ செண்ட்டரில்  இது  ஹிட் ஆகிடும் . இந்தப்படத்தை  விட அழுத்தமான கதை அம்சம் , மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா  இருந்த 6 படத்துக்கு  கூட்டமே இல்லை . இதுக்கு செம கூட்டம் . படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்கொடுத்துடும் . ஜாலியா கல கலன்னு ஒரு டைம் பாஸ் படம் , எல்லாரும் பார்க்கலாம் . ஈரோடு அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன் 

diski -

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/6.html

Saturday, July 27, 2013

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

 

 
 மாதவன் ஜோதிகா ஜோடி நடிச்ச டும் டும் டும் படக்கதை முன் பாதி பூரா , இடைவேளைக்குப்பின் கொஞ்சம் ஹேங்க் ஓவர் ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் உருவி க்ளைமாக்ஸில் சொந்தச்சரக்கு 2 ரீல் சேர்த்தால் ஒரு புது படம் தயார்


மேரேஜ் பண்ணிக்கிட்டா டெய்லி ஒரே வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடனும் , மேரேஜ் பண்ணலைன்னா டெய்லி விதம் விதமா வெளீல சாப்பிடலாம் , யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நல்ல கொள்கை உள்ளவன் ஹீரோ . இவன் தண்ணி அடிப்பான் , பொண்ணுங்களோட சுத்துவான், ஆனா தமிழ் சினிமா பாரம்பரியப்படி நல்லவன்


இப்படிபட்ட  ஆளுக்கு அவனை மாதிரியே  மேரேஜ் பண்ணிக்க பிடிக்காத சரக்கு அடிக்கும் சந்திரிகா வை  எதேச்சையா பொண்ணு பார்க்கறாங்க , 2 குடும்பமும் சேர்ந்து  ஏற்பாடு செய்யும் அந்த மேரேஜை எப்படி 2 பேரும் சேர்ந்து தடுக்கறாங்க? பின் எப்படி அவங்க 2 பேரும் லவ்வறாங்க என்பதை எவ்வளவு நிதானமா கதை சொல்ல முடியுமோ அவ்வளவு நிதானமா சொல்றாங்க . உஷ் அப்பா ஜவ்வுன்னா ஜவ்வு அப்டி ஒரு ஜவ்வு


சிவாவுக்கு ஓப்பன்பிங்க்லயே ஒண்னே ஒண்ணு சொல்லிக்கறேன். கே பாக்யராஜோ , எஸ் வி சேகரோ , கமலோ அவர் கிடையாது . எல்லா சீன்லயும் தானே டாமினேட் பண்ணனும் , எல்லாரையும் மட்டம் தட்டி தான் கை தட்டல் வாங்கிக்கனும் என்ற எண்ணத்தை மாத்திக்கனும். 10 சீன்ல அப்டின்னா பரவாயில்லை , சீனுக்கு சீன் அப்டின்னா? மத்தபடி அவர் டைமிங்க் விட் , எல்லாரையும், கலாய்க்கும் ஹியூமர் சென்ஸ் , சோக சீன்களில் கூட காமெடி பண்ணுவது எல்லாம் ஓக்கே . காமெடி நடிகர்னா முகத்தில் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் காட்டனும் , நாகேஷ் , வடிவேல் இதுக்கு நல்ல உதாரணம், அதே போல் பாடி லேங்குவேஜ் க்கு கவுண்டமணி , செந்தில் நல்ல உதாரணம் . சிவாவுக்கு  இந்த 2ம் வர்லை . டெவலப் பண்ணிக்கனும் , நல்லா வருவார் 


ஹீரோயின் வசுந்த்ரா .சூரியகாந்திப்பூவை நல்லெண்னெய் பாட்டில்ல போட்டு வெச்ச மாதிரி அவ்வளவு தெளிவு அவர் முகம் . பீட்ரூட்டை வெய்யில்ல காய வெச்சது மாதிரி  ஒரு இளஞ்சிவப்பு உதடு , மயில் தோகைல  ஐ டெக்ஸ் மை தடவிய மாதிரி ஒரிஜினல் கூந்தல் ( இழுத்துப்பார்த்தியா? ) ஆஹா . இவர் தமிழ் சினிமாவில் நல்லா வளர வாய்ப்பு  இருக்கு. இன்னும் காம்ப்ளான் , பூஸ்ட் எல்லாம் சாப்பிட்டா அபாரமா வளர்ச்சி வரலாம் .இப்போதைக்கு இது போதும்

 இவருக்கு  நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு . குஷ்பூ எப்படி தி முக கட்சியை தன் வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கிட்டாரோ அதே போல் மிகச்சிறப்பா நடிச்சிருக்கார் . பின் பாதியில்  ஹீரோ மேல் காதல் வந்ததும் அவர் முகத்தில் வரும் வெட்கம் குங்குமப்பூ சிவப்பு , லவ்வை சொல்லலாமா? வேணாமா? என பரிதவிப்பது அபாரம் 


மனோபாலா  காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார் , ஹீரோவின் அம்மாவாக  வருபவர் நல்ல குணச்சித்திர நடிப்பு 
 
இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர் பார்த்திபன் கவுண்டமணி நடிச்ச வீ ஆர் நாட் டாட்டா பிர்லா மாதிரி ஜேம்ஸ் பாண்ட் டைப்  காமெடி ஆக்‌ஷன் படம் போல் ஒரு போஸ்டர் டிசைனை உருவாக்கியது 2. பத்திரிக்கை, டி வி , மீடியா பேட்டிகளீல் இது டும் டும் டும் படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதை மூச்சு விடாதது 

3. ஹோம்லியான ஃபிகரை ஹீரோயின் ஆக்கியது .தேவையான இடங்களில் அவரை ஸ்லோமோஷனில் ஓட விட்டு , குதிக்க விட்டு  கேமரா மேனை  மொட்டை மாடிக்கு அனுப்பி சரியான கோணத்தில் படம் ஆக்கியது ( 6 சீன் ) 


4. ஹீரோ சிவாவின் டைமிங்க் விட் , காமெடி சென்ஸ் , ஹீரோயினின் முக வசீகரம் அழகான நடிப்பு 


5. உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாது , படத்தை பார்த்தாதான் பட்டுத்தெளிவீங்க என்னும் அர்த்தம் வரும் விதத்தில் டைட்டில் வைத்தது6. மேரேஜை வலியனா நிறுத்த ஹீரோவுக்கு அந்த இடத்தில் அடிபட்டு பல்பு ஃபியூஸ் போன விதத்தை காமெடியாக்கி அடிக்கடி அது போல் சீன் வைத்தது சபாஷ் , ஆடியன்ஸ் செம ரசிப்பு 


 இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. மேரேஜ்க்கு பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரர் வரும்போது பாரம்பரியம் மிக்க பண்பாடு மிக்க குடும்பப்பெண்ணாக வருபவர் ஸ்லீவ் லெஸ் ட்ரான்ஸ்பெரண்ட் ஜாக்கெட் தான் போட்டுட்டு வருவாரா?லோ ஹிப் வேற . தர்ம தரிசன தேவியா அவரு? 


2. படத்தில் ஹீரோயின் யார் கிட்டே பை பை சீ யூ  சொன்னாலும் இடது கையால தான் சொல்றார். அதுதான் நாகரீகமா? 


3. ஹீரோயின் மஞ்சள் பூசி மங்களகரமாக இருக்க வேண்டாம் , அட்லீஸ்ட் குங்குமப்பொட்டு வைத்தாவது நீட்டாக இருக்க வேண்டாமா? ஒரு சீனில் கூட அப்டி இல்லை , ஆல் ஸ்டிக்கர் பொட்டுதான் ( மாடர்ன் கேர்ள்ஸ்ன்னா பெண் பார்க்கும் படலத்தில் கூட அப்டி இருக்கக்கூடாதா? 


4. பொண்ணு சரக்கு அடிக்குது , எல்லாம் பண்ணுது , ஆனா  பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போகுதா? இல்லையா? என்பதில் தெளிவு இல்லை 


5. அதே போல் ஓப்பனிங்க்கில் ஹீரோ கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கில்மா மன்னர் என காட்டி விட்டு தொபுக்கடீர் என்று அவருக்கு எல்லாம் ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்ஸ் தான் என பம்முவது 

 
6. ஹேங்க் ஓவர் காப்பி சீன்கள் படத்துக்குத்தேவை இல்லை . இடைவேளை ட்விஸ்ட்டுக்கு வலியத்திணிக்கத்தேவை இல்லை . இன்னொரு முக்கிய பாயிண்ட் , திரைகக்தையில்  தேவை இல்லாமல் ஒரு காமெடி படத்துக்கு இடைவேளை ட்விஸ்ட் தேவை இல்லை ( வலுவந்தமா) 


7. லவ் வந்த பின் ஹீரோயின் ஆக்டிங்க் அபாரம், ஆனா ஹீரோ ஏன் முகத்தில் ஃபீலிங்கேஎ காட்டலை ? ஹீரோயின் மாதிரி அவர் அளவுக்கு கிளாமர் தான் காட்ட முடியாது , உணர்ச்சி காட்ட ஏது தடை?


8. பட முதல் பாதியில் பி ஜி எம்மே ( பின்னணி இசை) போடலை , ஒய் ஜி மகேந்திரன் டிராமா மாதிரி மொக்கையா போகுது 


9.  க்ளைமாக்சில் வரும் டி வி போட்டி மகா மொக்கை , கடந்த 20 வருட சினிமா வரலாற்றில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ் ராமராஜன் படத்தில் கூட இல்லை 10 . வசனகர்த்தா கம் இயக்குநர் பெரிதும் நம்பியது போல் ஹீரோ டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட்டாய் வந்து ஹாலிவுட் படங்களை நக்கல் அடிக்கும் காட்சிகள் எடுப்டலை . இது எல்;லாம் டி வி ஷோக்களீல் ஆல்ரெடி பார்த்தாச்சு . இது எப்படி இருக்குன்னா பில்லா  படத்துல நயன் தாரா காட வேண்டிய எல்லாத்தையும் காட்டிய பின்  சீதையா நடிச்சது மாதிரி இருக்கு , எடுபடலை 
மனம் கவர்ந்த வசனங்கள் 1. ஸாரி சார்.நோ கட்டிங் .


1லார்ஜும் ,ஒரு ஸ்மாலும் சேர்ந்தா அது தான் ஒரு கட்டிங்.இது கூடத்தெரியாம.உன்னை யார் வேலைக்கு சேர்த்தது ?


2. தமிழ் நாட்டு மானத்தை நீங்க தான் காப்பாத்தனும்.


 ரோசா ஹை தில் மே ரோசா ஹை.மை தேரே பி ுரேக் பாஸ்ட் தோஸா ஹை.3. மிஸ்.இங்க நாய்ஸ் ஜாஸ்தி.வாய்ஸ் நாஸ்தி. பீச்க்கு போய்ட்டா வசதி4. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.


நீ என்ன பேசப்போறேனு எனக்குத்தெரியும்.நீ பாட்டுக்கு பேசிட்டு இரு.இதோ வந்துடறேன்5. இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ.


ம்க்கும்.இப்டி சொல்லி சொல்லியே ஆல்ரெடி 4 டைரி புல் ஆகிடுச்சு6. டேய்.அதுக்குள்ளே எப்டிடா அவளை கரெக்ட் பண்ணே? விட்றா.அழகா இருந்தாலே இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்7. டெய்லி குடிக்கலாமாடா ?க்ரியேட்டிவ் பியூப்பிள்னா அப்டித்தான் # சொ பு ( தவறான கருத்து)8. என் பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.ஆனா டெய்லி நைட் வீட்டுக்கு வரும்போது கொய்யாப்பழம் சாப்டுட்டு வருவான்


9. கோயில்ல ஆந்திரப்பிரதேசமா? அய்யோ அது அங்கப்பிரதட்சணம்.உருண்டு உருண்டு வருவாங்க்ளே


10  உன் கல்யாணத்தன்னைக்குதான் பிளான் பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தப்போறேன். எப்டியோ என் மேரேஜை நிறுத்தாம இருந்தா சரி

11. எங்க ஊர்ல சரக்கடிச்சா ஊரை விட்டுத்தள்ளி வெச்சுடுவோம்.நாங்கதான் உங்க ஊரே இல்லையே?


அப்போ இதே ஊர்ல தங்க வெச்சுடுவோம்


12  இதை நம்பாதீங்க.போட்டோ ஷாப் ல ஒர்க் செஞ்ச போட்டோ.


பின்னே மெக்கானிக் ஷாப்லயா ஒர்க் செய்வாங்க?


13. பெரிய பெரிய படைப்பாளிகளுக்கு சரக்கு அடிச்சுட்டு டக் ஆனாத்தான் ஐடியாவே வருமாமே? உண்மையா ?14. மேட்டரே இல்லை.அதான் மேரேஜை நிறுத்திட்டோம்


15. சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடும்போது ஒருத்தன் புல்டாஸ் பால் போட்டான்.அதை அடிக்க பேட்டை ஓங்கினேன்.பால் (BALL) மிஸ் ஆகிடுச்சு.ஹி ஹி16. 3 தடவை அந்த சம்பவம் நடந்துச்சு.


 ஓஹோ.பட்ட கால்லயே படும் பாங்க்ளே.அப்டி ?


17. ஸ்வேதா வண்டில போய் அவளை டிராப் பண்ணிட்டு அப்டியே என்னையும் டிராப் பண்ணிக்கவா ?


 வேனாம்.அவளே அவளை டிராப் பண்ணிக்கறாளாம் #


18. இப்போ தான் வரும் ,இப்போ தான் போகும்னு கணிச்சு சொல்ல இது கரண்ட் இல்லை.காதல்.அது எப்போ வேணாலும் வரும்


19  அவன் எவ்ளவ் பீல் பண்ணி தன் சோகத்தை கொட்டிட்டு இருக்கான்.ஆப் பாட்டில் வாங்கிட்டு வரவா? னு கேட்கறியே? எப்டிடா பத்தும்? புல் வேணும்20. என்னடா சொல்றே? கடைசில அவன் உன் ஆள் பிளேட்ல்யே கை வெச்சுட்டானா?


21. எனக்காக நீங்க 2 பேரும் ஏன் 1 சேரக்கூடாது ? எனக்காக நீ ஏன் சாகக்கூடாது ?
 ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - ஏ செண்ட்டர்ல மட்டும் சுமாரா போகும் , காமெடி ப்ரியர்கள் சிவாவுக்காக டி வி ல போடும்போது பார்த்துக்கலாம் ,மத்த படி படம் தேறாது a
 
 
 
 
 
 அடங்கோ மேங்கோ
 

Saturday, June 15, 2013

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

ஆ ராசாவை விட பக்கா ஃபிராடு ஹீரோ , கம்ப்பெனி ஓனர் கிட்டேயே முருக பக்தரா வேஷம் போட்டு வேலைக்கு சேர்றான், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா  தனக்கு ஒரு அண்ணன் இருப்பதா டபுள் கேம் ஆடி அண்ணனாவும் ஆக்ட் குடுக்கறான். கம்பெனி  ஓனர் பொண்ணுக்கு கராத்தே சொல்லித்தரும்போது எதேச்சையா காதலையும் சொல்லித்தர்றான். இந்த உண்மை எல்லாம் ஓனருக்குத்தெரிய வரும்போது என்ன நடக்குது என்பதைத்தான் முடிஞ்ச வரை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க .

கே பாக்யராஜ் சாயல்ல யோகராஜ்னு ஒருத்தர் ஒரு ஹிட் படம் கொடுத்தார். அத்தோட சரி ஆள் அட்ரசே இல்லை. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான். அது மாதிரி தான் . கே பாலச்சந்தர் டைரக்‌ஷன்ல ரஜினி நடிப்பில் வந்த படத்துக்கும் , இதுக்கும் ஏணி யைக்கொண்டாந்து வாணி வெச்சாலும் எட்டாது .

ஹீரோ அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ( டைட்டில்ல அப்டித்தான் போடறாங்க) . இவரோட டைமிங்க்சென்ஸ் அட்டகாசம் . ரொம்ப அசால்ட்டா டயலாக் டெலிவரி பண்றார். ஆனா முக பாவனைகள் சுத்தமா வர்லை . இப்படியே போனா போர் அடிச்சிடும் , உஷார் . 
ஓனராக பிரகாஷ் ராஜ். இப்படி ஒரு கேனத்தனமான கேரக்டர் இந்தக்காலத்திலா என நாம் வியக்கும்போது அதே கேள்வியை க்ளைமாக்ஸில் சந்தானத்தை விட்டே கேட்க வைத்து நம் வாயை அடைப்பது இயக்குநர் சாமார்த்தியம் . பிரகாஷ் ராஜுக்கு நவரச நடிப்பு , சந்தோஷ் சுப்ரமணியம் படத்துக்குப்பின் நல்ல ரோல் . 


ஹீரோயின் இஷா தல்வார்.  பார்த்தவுடனே தள்ளிட்டுப்போகத்தூண்டும் அளவுக்கு எல்லாம் இல்லை , வெறும் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த உடம்பு போல எடுபடலை ( அட எடு பட்ட பயலே, படத்தை விமர்சனம் பண்ணசொன்னா.. ) இவருக்கு ஒரு நல்ல டிப்ஸ் , டெய்லி காலைல 2 பூரி சாப்பிட்டா  உடம்புக்கும் நல்லது ..... டூயட் காட்சிகளில் லோ ஹிப்பில் 8 காட்சிகளில் வ்ருகிறார். ( அப்போகூட நாங்க ஹிப்பைப்பார்க்கலை , கவுண்ட்  பண்ணிட்டு தான் இருந்தோம், கடமை வீரன் கந்த சாமி )


கோவை சரளா எதிர்பாராத ஆச்சரிய காமெடி கலக்கல் . அவர் நாக்கில் வேல் குத்தி மெட்ராஸ் பாஷையை மறைப்பது செம காமெடி .  இடைவேளை ட்விஸ்ட்டில் அவர் கார் முன் பல்டி அடிப்பது அதகளம் . 

இளவரசு குணச்சித்திர காமெடி நடிப்பு இதம் . க்ளைமாக்சில் நட்புக்காக சந்தானம் வரும்போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படுது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஆர வாரம். சிவா கூட சந்தானம் காம்பினேஷன் காட்சிகளில் அடக்கி வாசித்து இருப்பது ஆச்சரியம் . 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த திரைக்கதை என்றாலும் காட்சிகளில் முடிஞ்சவ்ரை புதுப்புது ஐடியாக்கள் புகுத்திய விதம் , படம் 70 % காமெடியாகவே கொண்டு சென்றது 


2. வசனகர்த்தாவை தாண்டி சிவாவின் சொந்த டயலாக்குகள் , டைமிங்க் விட்டுகள் படத்துக்குப்பெரிய பிளஸ்


3.  கோவை சரளாவின் ஆர்ப்பாட்டமான காமெடி காட்சிகள் பி சி செண்ட்டர் ரசிகர்களை நிச்சயம் கவரும் 


4. கடைசி 15 நிமிடங்கள் சந்தானத்தின் போர்ஷன் பெரிய ரிலீஃப். கொஞ்சம் போர் அடிக்கற மாதிரி தெரியும்போது மிகச்சரியாக டிரம்ப் கார்டை யூஸ் பண்ணிய விதம் 


5. ஹீரோயின் தோழிகள் 5 பேர் வரிசையாக வரும் ஒரு காட்சியில் ரோஸ் கலர் டி சர்ட் போட்ட பக்கா ஃபிகரை போகிற போக்கில் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியது 


6. புரோட்டா சூரியின்  காதல் கிளைக்கதை ஓரளவு காமெடிக்கு கை கொடுத்தது 
இயக்குநரிடம் சில கேள்விகள்1. ஹீரோ டபுள் ஆக்ட் , ஹீரோவின் அம்மா டபுள் ஆக்ட் அதாவது ட்வின்ஸ் எனும்போது ஒரு முறை கூட இரு ஜோடியையும் ஒரு சேர என் கண்ணால் பார்க்க வேண்டும் என ஓனர் சொல்லவே இல்லையே? அது ஏன்? 


2. அவ்வளவு பெரிய கம்ப்பெனி ஓனர் எப்போ பாரு சிவா பின்னால் அவர் குடும்பம் பின்னால் சுத்திட்டு இருக்காரே , பிஸ்னெசை யார் கவனிப்பா? 


3. ஓனருக்கு ஹீரோவோட டபுள் கேம் தெரியல , ஓக்கே ஆனா ஒரு காதலிக்கு தன் காதலன் யாரு? என்ன?னு தெரியாதா? காதலனின் வாசம் ஒரு காதலிக்குத்தெரியாம இருக்காதா?  அவளுக்கு ஏன் டவுட்டே வர்லை? ( இதை ஏன் கேட்கறேன்னா பொண்டாட்டிங்க எப்பவும் புருஷன் வீட்டுக்கு வந்ததும் போலீஸ் நாய் மாதிரி மோப்பம் பிடிச்சு என்ன  புது வாசம் அடிக்குது? தம் அடிச்சீங்களா? ஆஃபீஸ்க்கு புதுசா லேடி ஸ்டாஃப் ஜாயின் பண்ணி இருக்காங்களா?னு கேள்வியா போட்டுத்தாக்குவாங்க ) 


4. கண்ல லென்ஸ் போட்டிருந்தா கண்ணை உறுத்தும் . அந்த லென்ஸ் கண் ல இருந்து கழண்டு விழுந்ததும் கன்னத்துல இருப்பதும் ஹீரோவுக்கு தெரியாம இருப்பது எப்படி? உணரவே முடியலையே ஏன்? 


5. புகழ் பெற்ற தொழில் அதிபரான பிரகாஷ் ராஜ் கண் முன் கோவை சரளா கைது செய்யப்படறாங்க . அப்போ சிவா வந்து சமாளிக்கிறார். பிரகாஷ் ராஜ் ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோனை போட்டு உண்மை என்ன?னு கேட்கலை? 


 


6. அவ்வளவு பெரிய பணக்காரர், அடிக்கடி வெளிநாடு போகிறவர் பாஸ்போர்ட் , விசா ஏன் புதுப்பிக்காம இருக்கார்? 


7. துபாய்ல இருக்கும் தன் மகளை கண்காணிக்க இங்கே இருந்து ஒரு ஆளை அனுப்பும் நேரத்தில் துபாய்லயே ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாமே? ஏன்னா இவருக்குத்தான் இன்னும் டவுட் இருக்கே? சிவா 2 ஆள் இல்லை, ஒரே ஆள் தான் என. ஏன் வாலண்ட்ரியா சிவாவையே அனுப்பனும்? 


8. கராத்தே என்பது ஓப்பன் கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணுவாங்க , சிவா ஹீரோயினை அவர் ரூமுக்கு தள்ளிட்டுப்போய் கராத்தே சொல்லித்தர்றேன் என அப்பா முன்னாலயே சொல்வதும் அவர் அதை வேடிக்கை பார்ப்பதும் ஓவர் 


9. ஹீரோ - ஹீரோயின் காதல் மலரும் தருணம் சரியாக சொல்லப்படவே இல்லை 


10 . தன் காதலன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று தெரிந்ததும் ஹீரோயின் சாமியாட்டம் ஆடுவார் என பார்த்தால் அவர் 2 செகண்ட்டில் கேனம் மாதிரி சிரிக்கிறார். நிஜ வாழ்வில் பொண்ணுங்க 1000 மன்னிப்பு கேட்டாலும் அதப்பு காட்டுவாங்க , இப்படி எல்லாம் ஈசியா மடங்கிட மாட்டாங்க 

 


11. பிரகாஷ் ராஜ் சிவாவின் மோசடியை நேருக்கு நேராக பார்க்கும்போது அப்பவே தட்டிக்கேட்காமல் சன் டி வி நித்யானந்தா வீடியோ எடுத்தது  மாதிரி மெனக்கெட்டு செல் ஃபோனில் வீடியோ எடுத்துட்டு இருக்கார். ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? 

12.  கோடிக்கணக்கான சொத்து போய்டுச்சு. அதுக்கான கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஏன் சுப்ரீம் கோர்ட்க்கு ஹீரோ போகலை? 


13 . சத்யன் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு அடிக்கடி சிவா போறார். சினிமா இண்டஸ்ட்ரி வேலைக்கு போகாம ஏன் ஒரு கம்ப்பெனி வேலைக்கு ட்ரை பண்றார்? சினி ஃபீல்டுல லட்சக்கணக்குல சம்பாதிக்கலாமே? 


14. சிவா மேல செம காண்டா இருக்கும்   தேவ தர்ஷினி திடீர்னு சிரிச்சுப்பேசுவது எப்படி?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓவர் ஆக்டிங்க்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க ,அந்த மாதிரி ஃபேமிலில நான் பொறக்கலை 


2. ஒரு பழத்துல எத்தனை விதை இருக்குன்னு எல்லாரும் பார்த்தபோது ஒரு விதைல எத்தனை பழங்கள் இருக்கும்னு பார்த்தவன் நான் 3. பசுபதின்னா என்ன நினைச்சீங்க? 


ப = பழநி மலை , சு = சுவாமி மலை , ப = பழமுதிர்ச்சோலை , தி = திருப்பரங்குன்றம் , திருத்தணி , திருச்செந்தூர் , அறுபடை வீடு 4. நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? 


இல்லை சார், நான் மயிலாப்பூர்ல இருக்கேன்


5. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? சேட்டு வீட்டு கல்யாணத்துல எப்பவும் ஜிலேபி நல்லாருக்கும் ;-))


6.  சட்டைக்குப்பணுவேண்டா அயனு, என்னை சட்டை பண்ணலைன்னா ஆகிடுவேண்டா லயனு , எப்படி பஞ்ச் டயலாக் ?7. ஹீரோக்களோட டார்ச்சர் தான் தாங்க முடியலைன்னா இப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டார்ச்சரும் தாங்க முடியலை 8. 20- 20 மேட்ச் பார்க்கறீங்க, இதுலயே ரெண்டு 20 இருக்கும்போது ஏன் வாழ்க்கைல 2 ட்வின்ஸ் இருக்கக்கூடாது?9. உங்க புக் விக்க ஒரு ஐடியா , நம்ம கம்பெனி மினரல் வாட்டர் பாட்டில் ஒண்னு வாங்குனா ஒரு புக் ஃப்ரீன்னு சொல்லிடுவோம் ? 


 அப்புறம் வாட்டர் பாட்டில் பிஸ்னெஸ் படுத்துக்கும் 10.  பொழுது போகாம ஏதாவது ஒரு பொன் மொழியை சொல்லிட்டு போயிட வேண்டியது , இருக்கறவன் மண்டையை உடைச்சு யோசிக்கனும்
 

11  பெண்கள் போடற துணி குறைஞ்சாலும் அவங்க துணிச்சல் குறையக்கூடாது 


12. ஒரு ஃபயரே இன்னொரு ஃபயரைகாப்பாத்த முடியாது 13. கராத்தாலே முதல் ஸ்டெப் டிராயரை கழட்டனும்


 வாட்? 


 மேஜை டிராயரை 
14.  உங்க வீட்ல எத்தனை பேரு?


 நான், எங்கண்ணன் , 2 பேரு 


 ஓஹோ, நீ , உங்கண்ணன் 2 பேரு மொத்தம் 3 பேரா? 15.  கர்ட்டரை மூடு , பெட்ஷீட்டை போர்த்து - இதுதான் கராத்தேவின் முத ஸ்டெப் 16.  என் அவசரம் உனக்குப்புரியல, உடனடியா இப்போ நான் ஒரு பொண்ணை அம்மா ஆக்கனும்


 வாட்? 

 அம்மாவா நடிக்க வைக்கனும் 


17.  எமனுக்கு இவன் பினாமி , எனிமிக்கு சுனாமி 18. எப்போ ஒரு பொண்ணு தயிர் வடை வேணாம்னு சொல்றாளோ அப்போ அவ லவ்ல விழுந்துட்டான்னு அர்த்தம் 


19.  கைக்கு எட்டுன கடாய் சிக்கன் வாய்க்கு எட்டலை 


20. சின்ன வயசுல இருந்தே மத்தவங்க உதவி இல்லாம நான் எந்த டெஸ்ட்டும் பாஸ் பண்ணதே இல்லை21.  சார், துபாய்ல உங்களுக்கு டேட் ( பேரீச்சை ) வாங்கி வரவா? 


 அவன் டேட் வாங்க போகலை , டேட்டிங்க் பண்ண போய் இருக்கான்


22.  ரீம் நெம்பர் 309 ஓக்கேவா? 

 அய்யய்யோ 

 ஏன்? உனக்கு அது பிடிக்கலைன்னா வேற ரூம் மாத்திக்கலாம்23. என்ன? உங்க வீட்ல ஏ சி இல்லையா? 


 இன்னும் கொஞ்ச நேரத்துல கரண்ட்டே போகப்போகுது 24.  தாலிப்பிச்சை தரனும் 


 பிச்சை எல்லாம் கோயிலுக்கு வெளீல எடுக்கனும் 25.  என்னப்பா ? கைல வேலை வெச்சிருக்கியே? 

 ஏம்ப்பா , உன் பொண்டாட்டியையே வெச்சிருக்கேன்கறேன் , வேலை வெச்சிருந்ததுக்கு  இப்படி ஜெர்க் ஆகறே? 26. கும்முனு இருப்பானு சொன்னிங்க , குங்ஃபூ பாண்டா மாதிரி இருக்கா 27.  என்னப்பா , இவ்ளவ் பெரிய பிரச்ச்னை ஓடுது , டென்சனே இல்லாம  சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கே? 

 அப்போ பூரிக்கிழங்கு சாப்ட்டா ஓக்கேவா? 28. என்ன? எல்லாரும் சேர்ந்து என்னை தேடறாங்க, நான் என்ன புதையலா?


29. இந்த வீணாப்போனவன் கூட வாழறதை விட நீ விதவையாவே வாழலாம் 30. வாரா வாரம் டி வி ல தில்லு முல்லு படம் போட்டுட்டே இருக்கான் , அதைப்பார்த்தும் இந்த டபுள் ரோல் கதையை உங்க  முதலாளி நம்பறான்னா அவன் எவ்ளவ் பெரிய கேனயனா இருப்பான் ? ( படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கும் இது பொருந்துமா? ) 

சி பி கமெண்ட் - சிவா ரசிகர்கள் , காமெடி பிரியர்கள் பார்க்கலாம், ஜாலியாப்போகுது , அங்கங்கே கொஞ்சம் இழுவை போடுது சிவாவின் டைமிங்க்சென்ஸ் மட்டுமே பிளஸ் - , க்ளைமாக்ஸ் சந்தானம் பார்ட் கலக்கல்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  2.75 / 5 


டிஸ்கி -

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/06/blog-post_14.html