Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் - சினிமா விமர்சனம்

ஒரே ஒரு கிராமத்துல மில்களுக்குச்சொந்தமான   கோவை சரளாவோட பசங்க  2 பேரு. அவங்க  தான் ஹீரோ வும் ,இன்னொரு ஹீரோவும் .ஹீரோயினைப்பார்க்கறாரு. உடனே  லவ்வில்  விழறாரு.அது பின்னாலயே  நன்றியுள்ள  ஜீவனா சுத்தறாரு. அதும்  போனாப்போகுதுன்னு லவ் பண்ணுது .

 2ம் ஊரெல்லாம்  சுத்துதுங்க . பொண்ணு  வீட்ல தெரிஞ்சு  பெரிய  பிரச்னை ஆகிடுது .  ஹீரோவை அடிச்சுடறாங்க . உடனே  ஹீரோவோட  சகோதரர் பொங்கி  பொண்ணோட அப்பா மேல கையை  வெச்சுடறாரு. ஊர் ஜனங்க  முன்னால அவமானப்படுத்திடறாரு . 


உடனே  ஹீரோயினுக்கு  செம  கோபம் வந்து  ஹீரோ கிட்டே   உன் தம்பி  வேணுமா? நான்  வேணுமா?ங்கற அந்த அரதப்பழசான  கேள்வியைக்கேட்க இடைவேளை வருது . 


அதுக்குப்பின்   ஹீரோ எப்படி ஹீரோயின் கையைப்பிடிக்கறார் என்பதே  மிச்ச மீதிக்கதை . 


ஹீரோவா  கழுகு  , யாமிருக்க பயமே   ஹீரோ கிருஷ்ணா . நல்லா தான் பண்ணி இருக்கார் . அவர் சகோதரரா வர்றவர்  தான்ன்  சுமார் நடிப்பு  . அவர் குரலும்  , டயலாக்  டெலிவரியும்  இயக்குநர்  சிங்கம்  புலியுதுடையது போல் காப்பாத்திடுது . 


ஹீரோயினா  மோனல் காஜ்ஜிர் .வில்லேஜ்  கேர்ளாக  சுமாராத்தான் இருக்கார் . அழுகைக்காட்சியில்  அம்மணி முகத்தை  க்ளோசப்ல பல டைம்  காட்டுன  கேமரா மேனுக்கு என்ன  ரசனையோ ? அழகான  பொண்ணு அழும்போது  கேமராவை  என்ன ஆங்கிள் ல் வைக்கனும்னு கத்துக்கனும் . 


படத்துல  சந்தானம் ஆரவாரமான   கை தட்டலுடன் எண்ட்ரி ஆகறார் . ஆனா கெஸ்ட்  ரோல் தான் .  கிடைச்ச  13  நிமிச  கேப்ல  11  கவுண்ட்டர்  டயலாக். சபாஷ் 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   போஸ்டர்  டிசைன்  , தியேட்டர்கள் புக் செய்தது  எல்லாம்  குட் . படம்  முழுக்க   சி செண்ட்டர்  ரசிகர்களைக்குறி  வைத்து   இறங்கி    அடிச்சிருக்கார்


ஹீரோயின்  எதுக்கும்  துணிஞ்ச ஆந்திரா  ஊறுகாயா  இருந்தும்    கண்ணீயமா அவரைக்காட்டியது . சாரி  எதுவும்  காட்டாதது  


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   ஒரு  சீன்ல  “நல்ல வேளை  லோக்கல்  சேனல்  ல  தான்  அந்தப்பையன் நம்ம மானத்தை  வாங்கிட்டான் அப்டினு வருது . 20 நிமிசம் கழிச்சு ஒரு பெருசு “ அதான் சன்  டி வி லயே மானத்தை வாங்கிட்டானே?னு வருது . அப்போ சன் டி வி  லோக்கல்  சேனலா?  


2  படம்  முழுக்க   கேவலமான  டபுள்  மீனிங்க்  டய்லாக்குகள்  . விரசம் 


3   பெண்களை மதிக்க வேணாம் . அவங்களை கவுரப்படுத்த வேண்டாம் . சும்மா கை தட்டலுக்கு ஆசைப்பட்டு இப்படியா அவங்களைக்கேவலப்படுத்தனும் ?

4   வீட்டில்  இருக்கும் பாட்டியே  ஹீரோ கிட்டே  “  ஹீரோயினை  “முடிச்சிருந்தா உன் பின்னாலயே அலைவா “ என டயலாக்  பேச விட்டிருப்பது  ஆபாசத்தின்  உச்சம்  



மனம் கவர்ந்த வசனங்கள்

மிஸ்! ஐ லவ் யூ
சாரி.எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு.
பரவால்லை.மேரேஜ் ஆகும் வரை லவ்வுவோம்

வந்தாரை வாழ வைக்கும் சேர நாட்டு சீமை இது

பாஸ்மார்க் வாங்காம டாஸ்மாக் ல சரக்கு விக்கற நீ கவர்மென்ட் ஊழியன் னா அப்போ நான் யாரு? சரக்கு சாப்டர  எல்லாரும் கவர்மென்ட் ஊழியர்கள்தான்

ஒரு  பொண்ணு கிட்டே என்ன தைரியத்துல லவ்  சொல்றீங்க?
எல்லாம் நீங்க வயசுக்கு வந்திருப்பீங்கனு நம்பிக்கைல தான்

நம்ம லவ் மேட்டர் என்னாச்சு?
லவ்வையே மேட்டர்ங்கறே.உன்னை எவ லவ் பண்ணுவா?
சரி.லவ்  வேணாம்.ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கே போய்டுவோம்

நான் இப்போ செம MOODல இருக்கேன்.பேசலாம் வா னு கூப்டறான்டி.
மூட் ல இருக்கும்போது ஏன் பேசிட்டு இருக்கனும்?

காதல் வந்துட்டா ஆத்துத்தண்ணி கூட அக்வாபீனா மாதிரி தெரியும்

இப்பவெல்லாம் பசங்க மனசைப்பாத்து எங்கடி லவ் பண்றானுங்க?மனசு இருக்கும்  இடத்தைப்பார்த்துதான் லவ்வறாங்க

நீ எல்லாம் என்னடா லவ்வரு? ஒண்ணு பொண்ணைத்தூக்கிட்டு வந்திருக்கனும்.இல்ல.பொண்ணை "குடுத்துட்டு"வந்திருக்கனும்

இந்தப்பொண்ணுங்க்ளே இப்டித்தான்.லவ்பன்ற்ப்ப விண்ணைத்தாண்டி வருவாங்க.பிரச்னைனு வந்துட்டா வெண்ணெய் தடவிட்டு போய்டுவாங்க

நாளைக்கு நான் விரதம் இருக்கேன் னு பொண்ணுங்க சொன்னா இன்னைக்கு வேஸ்ட் பண்ணாதே னு அர்த்தம்

மாப்ளை.என்னைப்பாத்து ஊரே சிரிக்குது
சந்தானம் = அவ்ளவ் பெரிய காமெடியா செஞ்சீங்க?

மாப்ளை.என்னைப்பாத்து ஊரே சிரிக்குது
சந்தானம் = அவ்ளவ் பெரிய காமெடியா செஞ்சீங்க?

தம்பிராமையா = நீங்க யாருக்குமே மரியாதை தர மாட்டீங்ளா?
சந்தானம் = மாப்ளையை மண்டபத்துல மாத்திடறவங்களுக்கு எதுக்கு மரியாத?

சந்தானம் = மாலையும் கழுத்துமா மணமேடைல இருக்கும்போதுதான் புதுப்புது மாடலை கண் எதிர்ல காட்டுவாங்க


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

தக்காளிக்கு தாவணி போட் நான் வரட்டா செம குத்தாட்ட்ப்பட்டு.நாயகி மோனல் காஜ்ஜர் ஜூனியர் அஞ்சலி மாதிரி இருக்கு

வேணாம் இந்தப்பொண்ணுங்களே வேணாம்.சக்கரைப்பேச்சுல  சயனைடைத்தடவிடுவாங்க  பாட்டுக்கு  செம  ரெஸ்பான்ஸ்

ஆரவாரமான கைதட்டலுடன் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி


சி பி கமெண்ட் -
வானவராயன் வல்லவராயன் = சி சென்ட்டர் ரசிகர்களுக்கான லோ க்ளாஸ் காமெடி படம். விகடன் மார்க் = 39,ரேட்டிங் = 2.25 / 5 ( சந்தானம் கெஸ்ட்ரோல்)



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =   2.25 /  5 


சிகரம் தொடு  -  சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/09/blog-post_79.html
  1. Vanavarayan Vallavarayan is an upcoming Tamil comedy film written and directed by Rajmohan. It stars Krishna Kulasekaran, Monal Gajjar, Ma Ka Pa Anand and Niharika Kareer. The film is set in the backdrop of rural Coimbatore. Wikipedia

  2. Director: Rajmohan
  3. Music composed by: Yuvan Shankar Raja
  4. Screenplay: Rajmohan
  5. Producer: B. Pandian
  6. Cinematography: M.R. Palanikumar

   


a







a







monal gajjar 



a







a






a







Miss Gujarat Monal Gajjar



a



a


a







0 comments: