Monday, March 05, 2012

சாருநிவேதிதாவின் எக்செல் நாவல்- ஒலக மகா எலக்கியம்- புத்தக (!!) விமர்சனம்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு அவர்கள் இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்செல்.. அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும்.. விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க .. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான்.. கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் ஸ்டோரி ஓடும்.. நாவலோட கடைசி அத்தியாயத்துல எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து தேரை நிலை சேர்த்துவாரு.. 

அந்த டெக்னிக்ல அண்ணன் சாரு 6 வெவ்வேற டிராக்ல கதையை ஓட்டறாரு.. அதாவது

http://images.indiaplaza.in/books/9788/1849/9788184932041.jpg

1. முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்.. ( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு... )

2. ரெண்டாவது டிராக் - குமுதம் பத்திரிக்கைல ” கதவைத்திற காயத்ரி, கவிதா யாராவது வரட்டும்”னு ஒரு ஆன்மீகக்கட்டுரை எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றாலும்  ஜஸ்ட் லைக் தட் 3 நிமிட குறும்படம் சன் டி வி ல வந்ததால அகில உலக ஃபேமஸ் ஆன உலகம் போற்றும் உத்தமர், ஒழுக்க சீலர், கலியுக ராமர், சந்நியாசி மத்தியானந்தா, சாயங்காலனந்தா, நைட்டானந்தா, மிட் நைட்டானந்தா  அவர்கள் ரஞ்சிதா என்ற குணச்சித்திர நடிகையுடன் ஆன்மீகப்பணி ஆற்றும் நிலை பார்த்து பக்தர்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைஞ்சாங்களே.. அந்த மேட்டர்ல சாருவின் மனைவி சாமியார்க்கு ஒரு லெட்டர் எழுதியதை சாமியார் மீடியாவிடம் பப்ளிஷ் பண்ணி சாருவின் மானத்தை டைட்டானிக் ஏத்துனாரே அதுக்கு பதில் அடி + தன்னிலை விளக்கம்.. ( இதுல ஒரு காமெடி என்னன்னா என் மனைவி அப்படி எல்லாம் லெட்டரே எழுதலைன்னு சொன்னவர் அப்புறம் ராம்தாஸ் விட கேவலமா ஒரு பல்டி அடிச்சு அப்படியே அவர் தான் லெட்டர் எழுதுனார்னே வெச்சுக்குவோம்அதை அவர் பப்ளிஷ் பண்ணுனது நியாயமா?ன்னு அனுதாப ஓட்டு வாங்கும் எம் எல் ஏ மாதிரி பம்மறாரு)

3. மூணாவது டிராக் - ஆ ராசா ஒரு லட்சம் அண்ட் சொச்சம் கோடி  அடிச்சாரே அவர் அந்தரங்க காரியதரிசி  சாதிக் பாட்சாவின் ஆவி தன்னிலை விளக்கம் சொல்ற மாதிரி கொஞ்சம் பக்கங்கள்.. ( அநேகமா அவை ஜூ வி, நக்கீரன் கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்)

4. நான்காம் டிராக் - இதுலதான் நாவலோட மெயின் மேட்டர்.. அண்ணன் எழுதுனதுல சைடு, பார்டர், எல்லாத்துலயும் மேட்டர் இருந்தாலும் மெயின் கதை இந்த டிராக்ல தான் வருது.. அதாவது அண்ணன் கணக்கு பண்ணுன லேட்டஸ்ட் ஃபிகர் பேரு அஞ்சலி.. அந்த பாப்பாவோட சுய சரிதையை பாப்பாவே சொல்ற மாதிரி  வருது.. அநேகமா நோகாம நோம்பி கும்பிட்டுட்டாருன்னு நினைக்கறேன்.. பாப்பாவையே அந்த கதையை டைப் பண்ணச்சொல்லி ஊடால விட்டுட்டாரு போல.. 

 அதாவது அஞ்சலி சின்ன வயசுலயே  திவாகர் அப்டிங்கற ஆளால பால் இயல், மோர் இயல், தயிர் இயல் பலாத்காரம் பண்ண முயற்சி செய்யப்பட்டு அதுல 50 % வெற்றி மட்டுமே அடைஞ்ச ஆள்.. அந்த திவாகர் வேற யாரும் இல்லை, அஞ்சலியோட அம்மாவுக்கு புது பாய் ஃபிரண்ட்.. மீன்ஸ் பாய்ல படுத்திருக்கும்போதும் நட்போட இருப்பாங்க.. 

அஞ்சலிக்கு திவாகர் என்னென்ன கொடுமை எல்லாம் செஞ்சார்னு சொல்றதையே சினிமால காட்டி இருந்தா 4 ரீல் வரும்.. அப்புறம் அஞ்சலி க்கு மேரேஜ் ஆகிடுது.. புருஷன் தண்டம்.. ( அப்டி கதையை கொண்டு போனாத்தானே கிளு கிளுப்பு வரும்?) 

உதயாவோட தூய நட்பு அஞ்சலிக்கு கிடைக்குது.. இந்த கதைல வர்ற உதயா அண்ணன் சாருதான்.. அஞ்சலியும், உதயாவும் பரிமாறிக்கொள்ளும் கில்மாக்கடிதங்கள், சேட்கள் இதைவெச்சே 60 பக்கங்கள் கிளு கிளுப்பா நகர்த்திடறாரு..

தமிழன் கேப்ல கெடா வெட்றவன் ஆச்சே.. அதை நிரூபிக்கும் விதமா அண்ணன் சாரு இந்த அஞ்சலி கதை ஊடால நைஸா தன்னோட பராக்கிரமங்களை அள்ளி விடறாரு.. அதாவது அண்ணனுக்கு வயசு 60 ஆனாலும் 20 மாதிரி அல்ல அல்ல உலக அளவுல தான் தான் கில்மா மன்னன்கறாரு.. 

இந்தக்காலத்துல வயக்காட்டுல, டிராக்டர்ல ஏர் ஓட்டறவனே அரை மணி நேரத்துக்கு ஒருதடவை ரெஸ்ட் எடுத்துக்கறான்.. ஆனா அண்ணன் விடாம 2 மணி நேரம்  நான் ஸ்டாப்பா உழைப்பேன்னு அடிச்சு விடறாரு.. கின்னஸ் சாதனையாளர் போல.. 

அஞ்சலி பாப்பா ஒரு ஃபிரான்ஸ் கேர்ள் போல.. அதனால ஆங்காங்கே ஆங்கில கவிதைகள், ஆங்கில உரையாடல்கள் எஸ் எம் எஸ் கள், சேட்கள் எல்லாம் வருது.. அதை எல்லாம் ஸ்கிப் ஆகி போனா சீக்கிரமா படிச்சுடலாம்.. 

இதை மட்டுமே தனி நாவலா கொண்டு போய் இருந்தா ஒரு வேளை மனம் கவரும் நல்ல நவீனமாக வந்திருக்கலாம்..

இந்த கதை டிராக்ல அண்ணன் சேலம் சித்த வைத்திய சாலை, பழநி டாக்டர்ஸ் ரேஞ்சுக்கு இறங்கி பல சித்த வைத்திய, கில்மா மருத்துவ உத்திகள், ஐடியாக்கள் எல்லாம் குடுக்கறார்.. 

5. ஐந்தாம் டிராக் - அண்ணன் சாருவுக்கு இலக்கிய உலகத்துல அராத்து (இவர் ட்விட்டர்லயும் இருக்கார்), மனுஷ்ய புத்திரன்,ஆர்னிகா நாசர் போன்ற எழுத்தாளர்கள் நண்பர்களா இருக்காங்க.. இந்த 3 பேரில் ஒருவரை அல்லது மூன்றும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கி  கொக்கரக்கோ அப்டின்னு ஒரு எழுத்தாளரோட பள்ளிப்பருவ நிகழ்வுகளை கொஞ்சம் சொல்றாரு.. இது கொஞ்சம் சுவராஸ்யமா இருக்கு.. 

ஆனா சர்க்கரை பொங்கல்ல கல்லா, பிரபு தேவா- நயன் தாரா தெய்வீகக்காதல்ல நுழைந்த ஹன்சிகாவா அண்ணன் தன்னையே ஒரு ஹோமோன்னு அறிவிச்சு பெருமைப்பட்டுக்கறாரே அதுதான் உறுத்துது.. சீரியசா கதை போய்ட்டு இருக்கும்போது நாம என்ன கேள்வி கேக்கனும்னு நினைக்கறோமோ அந்த கேள்வியை கொக்கரக்கோவை விட்டே கேக்கற மாதிரி கதை நடை செல்வது நல்ல யுக்தி.. 

6. ஆறாம் டிராக்  -சினிமால கோக்குமாக்கான சீன் உள்ள படமா இருந்தாலும் அறிவுரை சொல்ற மாதிரி சில சீன் வைப்பாங்க.. அது சென்சாரை கன்வின்ஸ் பண்ண உதவும்.. அந்த மாதிரி நாவலுக்கு சம்பந்தமே இல்லாம ஐயப்பன் சாமி 18 படிகள் பற்றிய விளக்கங்கள், தேவாரப்பாடல்கள் ,  சித்தர்கள் பற்றிய குறிப்புகள்  அப்டின்னு அண்ணன் அள்ளி விடறாரு.. அதை நாவல் படிச்ச ஆட்கள்ல 90% பேரு அப்டியே ஸ்கிப் ஆகித்தான் படிப்பாங்க.. ஆனாலும் அண்ணனுக்கு கவலை இல்லை../ ஏன்னா யாராவது நாவலை குறை சொன்னாக்கூட என் நாவல்ல யூஸ்ஃபுல் மேட்டர் இருக்குன்னு காட்டிக்கறதுக்காகவும் அது தேவைப்படுது போல.. 

 இதுல என்ன காமெடின்னா சித்தர்கள் ராஜ்ஜியம்னு ஒரு வலைப்பூ பற்றி குறிப்பிட்டு அண்ணன் லிங்க் குடுத்திருக்காரு.. தோழி என்ற புனை பெயரில் எழுதும் அவருக்கு இது நல்ல அங்கீகாரம் தான்.. . 

முதல் வசந்தம் குங்குமப்பொட்டுக்கவுண்டர் -ஹிட்ஸ் வந்ததுன்னு சந்தோஷமாவும் இருந்துக்குங்க, அதே சமயம்  சாக்கிரதையாவும் இருந்துக்குங்க.. அவரிடம் கேட்காமல் அண்ணன் 3 பதிவை அப்படியே சுட்டு போட்டிருக்காரு, அதுக்கு பிராயசித்தமா லிங்க் குடுத்துட்டார் போல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s640/Balu-mahendra-010808.jpg



 குப்பையில்  பொறுக்கிய மாணிக்கங்கள்


1. ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்... ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் அப்டினு யாரோ சொன்னாங்களாம்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை..


2.  தமிழிலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழின் ஆகச்சிறந்த  எழுத்தாளர்களெல்லாம்  எப்படி மறக்கடிக்கப்பட்டார்களோ அதே போல் நானும் மறக்கடிக்கப்படுவேன்

3. இரவு 7 மணிக்குள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் இந்தியர்கள் 50 வயதில் நோயில் விழுவதும், மிட் நைட்டில் 2 மணிக்கு சாப்பிடும் சீனர்கள் 90 வயது வரை ஆரோக்யமாகவும் வாழ்வது இயற்கையின் முரண்பாடு


4. வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிது பைத்தியக்காரத்தனம் வேண்டும்

5. சாமியாரின் பேச்சு நடைபெற்ற இடம் மிகச்சிறிய இடம்./.  ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறிய  இடத்தில் 16,000 பேர்  கூடுவதற்கு எப்படி அனுமதி அளித்தது?மேலும் ஒருவர் இடையில் வெளீயே போக நினைக்கும்போது அவர்களை அனுமதிக்கவில்லை, அப்படித்தடுப்பது சட்டத்துக்குப்புறம்பானது இல்லையா? ( WRONGFUL CONFINEMENT)

6.  உன்னை காதலிக்கும் பெண்கள் அனைவருமே எப்படி ஒரு கூடை சோகங்களை  கை வசம் வெச்சிருக்காங்க?நீ ஏதும் பண்ட மாற்று வேலை செய்கிறாயா?

7.  பெண்கள் அனைவரும் ஹீரோவைத்தேடி வாழ்க்கை முழுக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.. அவர்கள் பழைய வில்லன்களை எல்லாம் இன்றைய ஹீரோ ஆக்குகிறார்கள்

8. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சோகமாக ஆக்கிக்கொள்வது ஒரு வித மன நோய்.. அப்படிப்பட்ட பெண்கள் மன நல நிபுணரை பார்க்கலாம், அல்லது புது காதலரை காதலிக்கலாம்

ஓக்கே .. ஓவர் ஆல் நாவல் எப்படி இருக்கு? யார் எல்லாம் படிக்கலாம்?

கில்மா ரசிகர்கள், ஃபிகர்களை செட் பண்ணுவது எப்படி? சேட்டிங்கில் ஆண்ட்டிகளை மடக்குவது எப்படி?, வெறும் வாய்லயே மங்கலம் பாடி மங்களத்தை கரெக்ட் பண்ணுவது எப்படி? போன்ற பல அரிய கேள்விகளை மனதில் தக்க வைத்துள்ள ரசிக மகா ஜனங்கள் இதை படிக்கலாம்..

 யாரெல்லாம் படிக்கக் கூடாது?  தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்,கண்ணியமானவர்கள்,ஒரு இல் ஒரு சொல் என்று வாழ்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள்,இவங்க எல்லாம் படிக்கக்கூடாது..

நாவல் மொத்தம் 435 பக்கங்கள்.. அதுல ஆங்கில வசனங்கள், ஜோதிட பக்கங்கள், சபரிமலை சுலோகங்கள் போன்ற வெகுஜன மக்கள் ஒதுக்கும் பக்கங்கள் போக  403  பக்கங்கள்.. படிக்க மொத்தம் நாலரை மணி நேரம் ஆகுது.. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ள சராசரி வாசகனுக்கு 6 மணி நேரம் ஆகலாம்.. 


விகடன் மார்க் போட்டால் - 40

24 comments:

Unknown said...

அந்த இலக்கிய வாதி எப்படியெல்லாம் அஜால் குஜாலா இருக்கறதுங்கரதுக்கு ஒரு புக்கு போட்டு இருக்காரு..கொய்யால உனக்கு எம்புட்டு தெனாவட்டு.. அவரை கலாய்க்கறியா நல்லது இல்ல சொல்லி புட்டேன்...இலக்கியம் இலக்கியம்னு அந்த பொண்ணு இலக்கியா வீட்டுக்கு எப்படி போகனும்னு கேக்குற மோரை கலாய்த்ததை கண்டிக்கிரேன் ஹிஹி!

ராஜ் said...

பாஸ்,
நீங்க அந்த புக்கை வாங்குனேங்களா? அதுவும் காசு குடுத்து ?? வாங்குனதும் இல்லாம அத வேற படிச்சீங்களா ?? முழுசா படிச்சீங்களா ??
முழுசா படிச்சு முடிச்சு நீங்க இன்னும் இருக்கீங்களா ??
இருந்தா பெரிய ஆச்சிரியம் தான் போங்க.

முத்தரசு said...

அய்யோ.. அய்யோ... சூ சூச்..சூ சுப்பர் அப்பு

ராஜி said...

நல்லதொரு எலக்கியத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

வெளங்காதவன்™ said...

செமையான வெமர்சனம் அப்பு!!!!

மதுரை அழகு said...

தொடர்ந்து இது போன்ற அடாசு புத்தகங்களைக் கிழிக்க வேண்டுகிறேன். ஆனால் உங்கள் காசு வீணாகுமே...!

சமுத்ரா said...

;) good

சசிகுமார் said...

புத்தகத்துக்கு கூட விகடன் மார்க் போடுவாங்களா?????????

சென்னை பித்தன் said...

நல்ல எலக்கியப் பகிர்வு.இதுக்கு மதிப்பெண் வேறா?

shrek said...

எக்சைல் = எசிலே= எச்(ச)ல்(ல)= எச்சலை = எச்சகல
ஒரு வேளை இப்படி இருக்குமோ??? டவுட் :)

Marc said...

அம்மா வீட்டுக்கு போகனும்!!!!!!!





நல்ல பதிவு வாழ்த்துகள்

Ondipuli said...

சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது ..... ரொம்ப நன்றி அண்ணே...

மிக சிறந்த பதிவு:)

Kathiravan Rathinavel said...

எல்லாம் சொன்னிங்க சரி, என்ன விலை னு சொல்லலியே? நீங்க எவ்ளோ வீண் பண்ணிங்கனு நாங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஹாலிவுட்ரசிகன் said...

ஹி ஹி ... நம்ம மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட புத்தகம் தான் போல. அதுக்காக காசு கொடுத்தெல்லாம் படிக்க முடியாது. யாராச்சு ஸ்கான் பண்ணி போட்டாங்கண்ணா வாசிக்கிறேன்.

சேகர் said...

yerkanave padichuten..

KANA VARO said...

ஒரு புத்தகம் பார்ஷல் லண்டனுக்கு

சாகசன் said...

ஒய் தல இந்தாளு புத்தகத்துக்கு விமர்சனம் ?? ஹிஹிஹி

rajamelaiyur said...

முதல் முறையா ஒரு மொக்க புத்தகத்துக்கு விமர்சனம் போட்டுல்லேர்கள் ... அத கஷ்டபட்டு படிச்ச நீங்க ரொம்ப நல்லவர்

rajamelaiyur said...

இன்று

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

jroldmonk said...

குத்துங்க எசமான் குத்துங்க இந்த சாருவே இப்படி தான்... குத்துங்க :-))

கேரளாக்காரன் said...

Read the book twice the book was awesome.... Will write my review soon

மதுரை சரவணன் said...

எக்ஸைல் ஒரு கண்ணாடி மாதிரி …அதில எதை கொண்டு பார்க்கிறோமோ அது மட்டுமே தென் படும்.. உங்கள் மனம் என்ன என்பதை வெளி உலகிற்கு காட்டியுள்ளது … சாரி நண்பா…`!

தனிமரம் said...

படிக்கனும் என்று இருந்தேன் இனி அதுக்கு வாய்ப்பு இல்லை என்கிறது உங்களின் விமர்சனம்.

Anonymous said...

'யாரெல்லாம் படிக்க கூடாது' லிஸ்ட்... மிஞ்சி இருப்பது சாரு மட்டும்தான்..??